Featured Posts
Home » பொதுவானவை » உங்கள் சிந்தனைக்கு » ஓர் இறை நம்பிக்கையாளரின் அன்றாட வாழ்கை

ஓர் இறை நம்பிக்கையாளரின் அன்றாட வாழ்கை

ஒரு முஃமினின் வாழ்க்கையில் எல்லா நாட்களும் சந்தோசமாகவும் இருக்காது, கவலையான நாட்களாகவுமிருக்காது.

ஒவ்வொரு நாள் சூரிய உதயத்தின் போதும் மனிதன் பல எதிர்பாப்புக்களுடன் காலை நேரத்தை அடைகிறான்.

அவன் மாலைப் பொழுதை அடையும் போது..

சில வேலை அவனின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறிய நாளாக அந்நாள் இருந்திருக்கும்.

பல சந்தர்ப்பங்களில் அவனின் எதிர்பார்ப்புக்கள் நிறை வேறாத நாளாக அன்றைய நாள் கடந்திருக்கும்.

இந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் எப்படி இருப்பான்?

நபி (ஸல்) அவர்கள் முஃமின்களுக்குக் கூறிய உதாரணம்.

இறைநம்பிக்கையாளரின் நிலையானது,

“?இளம் பயிர் போன்றதாகும்.”

காற்றடிக்கும்போது அதைக் காற்று (தன் திசையில்) சாய்த்துவிடும்.

“காற்று நின்றுவிட்டால், அது நேராக நிற்கும்.”

(காற்று, மழை, வெயில், கோடை என அனைத்தையும் சகித்து, வளைந்து கொடுத்து அது காலத்தை வெல்லும் )

சோதனையின்போது (இறை நம்பிக்கையாளரின் நிலையும் அவ்வாறே).

தீயவனின் நிலையானது :

உறுதியாக நிமிர்ந்து நிற்கும் தேவதாரு ( pine wood) மரத்தைப் போன்றவன்?.

(காற்றடிக்கும் போதும் அது நிமிர்ந்து நிக்கும்)

அல்லாஹ், தான் நாடும்போது (பெரிய காற்றொன்டு வரும்) அதை (ஒரேடியாக) உடைத்து (சாய்த்து) விடுகிறான்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(ஸஹீஹ் புகாரி 5644 அத்தியாயம் : 75. நோயாளிகள்.)

இங்கே இரண்டு விடயங்களை நபி ஸல் அவர்கள் சுற்றிக் காண்பிக்கின்றார்கள் .

1: சோதனைகளை ஏற்று அதற்க்கேற்ப நடந்துகொள்ள முயற்சிப்பது முஃமின்களின் பண்பாகும்.

2: சோதனைகளை ஏற்காமல் பெருமை பிடித்தவனாக இருக்க முயல்வது தீயவர்களின் பண்பாகும்.

சோதனைகளின் போது முலுமையாக சரிந்து உடைந்து போவதும், சந்தோசங்களின் போது அளவு கடந்து செயல்படுவதும் ஒரு முஃமினின் பண்பு கிடையாது.

சந்தோஷம் ஒரு முஃமினை மாற்றி விடாது சோதனைகள் ஒரு முஃமினை வீழ்த்தி விடாது.

வாழ்கையில் இன்பம், துன்பம் இண்டும் நிரந்தரமானதில்லை. இரண்டிலும் நடுநிலை பேணுகின்றவனே முஃமின்.

✍️நட்புடன்:
அல் ஹாபில் இன்திகாப் உமரீ
இலங்கை
2021/06/03

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *