Featured Posts
Home » நூல்கள் » RSS ஊழியன் » RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் – முன்னுரை.

RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் – முன்னுரை.

“கேரளத்தில் குறுப்பு இனத்தைச் சார்ந்த உயர்குல மாதவிக்குட்டியை பறையனான இந்த வேலாயுதன் ஒரு போதும் சந்திக்க வாய்ப்பே இருந்திருக்காது. ஆனால் இஸ்லாம் என்ற கோட்பாட்டின் கீழ் நாங்கள்(பிலாலும், சுரையாவும்) இணைந்ததால் எங்களுக்குள்ளே பேச வாய்ப்பு கிடைத்தது. ஆதலால் எனது சமூகமான தாழ்த்தப்பட்ட தலித் இனத்திற்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்: நீங்கள் எதற்கும் அஞ்சத் தேவையில்லை. நீங்கள் அடிமைத்தனத்திலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ள இஸ்லாமே நன்மருந்து. தைரியமாக அல்லாஹ்வின் இந்த அழகிய மார்க்கத்தில் பிரவேசியுங்கள். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் குர்ஆன் உங்களுக்கு மிகுந்த பாதுகாப்பை அளிக்கும் வாருங்கள்.” – வேலாயுதன் என்ற பிலால்.

முன்னாள் தாழ்த்தப்பட்ட தலித் சமூகத்தைச் சார்ந்த வேலாயுதனின் வாசகங்கள் இவை. ஆர் எஸ் எஸ்ஸில் முழு நேர ஊழியனாக பணியாற்றியதிலிருந்து எர்ணாகுளம் கவுன்சிலர் பதவிக்கு பாஜக வின் சார்பாக போட்டியிட்டது வரை முழுமையாக ஒரு இஸ்லாமிய எதிர்ப்பாளனாக இருந்து இன்று ஒரு முஸ்லிமாக இருக்கும் வேலாயுதன் தனது வாழ்க்கைப்பயணத்தில் தான் சந்தித்த சில முக்கிய கால கட்டங்களைக் குறித்து மனம்திறக்கும் நூல் இது.

ஆரம்பத்தில் வறுமை என்னும் அரக்கனின் கோரப்பிடியில் சிக்கித்தவித்து சின்னாபின்னமாகிப் போன தனது இளம் வயது குடும்ப வாழ்வைக் குறித்து அவர் விவரிக்கும் பொழுது நமது கண்களில் கண்ணீர் திரைமாலை இடுகிறது. பின்னர் ஆர் எஸ் எஸ்ஸின் வெளிப்புற செயல்பாடுகளால் கவரப்பட்டு ஆர் எஸ் எஸ்ஸில் இணைந்த காலகட்டத்திலும் பின்னர் அதனுள் தீவிரமாக செயல்பட்ட காலகட்டத்திலும் அவர் ஆர் எஸ் எஸ்ஸை நேசித்த வீரியத்தைக் குறிப்பிடும் போது கண்களில் நிற்கின்றார்.
ஆர் எஸ் எஸ்ஸிற்காக ஒருவரை கொலை செய்ய போய் அதில் காலை இழக்க வேண்டிய சூழ்நிலை வந்தபோது தன்னை கைகழுவிய ஆர் எஸ் எஸ், அதன் சுயரூபத்தை தொடர்ந்த நாட்களில் அனுபவப்பட நேர்ந்த போது தான் அடைந்த துன்பங்களை அவர் விவரிக்கும் பொழுது நெஞ்சடைக்கிறது.

பல்வேறு விதமான உண்மைகளை தங்களது படைப்புகளின் மூலம் வெளிக்கொணர்ந்த “இலக்கியச்சோலை” வெளியீட்டகத்தார் வேலாயுதன் அவர்களின் வாழ்க்கை அனுபவங்களின் மூலம் மீண்டும் சில உண்மைகளை இக்கைப்பிரதி மூலம் வெளிக்கொணர்ந்திருக்கின்றனர்.

தான் அனுபவித்த அனுபவங்களை தன் சக தலித் சகோதரர்களுக்கும், உலகுக்கும் கொண்டு சேர்க்க விரும்பும் வேலாயுதன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி “இலக்கியச்சோலை” வெளியீட்டகத்தார் பல்வேறு சிரமங்களுடன் கேரளத்திற்கு நேரடியாக சென்று வேலாயுதன் அவர்களிடமிருந்து தொகுத்த இக்கைப்பிரதியை வலையுலக அன்பர்களும் அறிந்து கொள்ள இங்கு வெளியிடுகின்றோம்.

நன்றி: இலக்கியச்சோலை.

வளரும் இறைவன் நாடினால்……

11 comments

  1. YOU PEOPLE GOT THE RIGHT TRACK!

    RSS என்கிற பார்ப்பனீய விஷச்செடியின் அரசியல் முகத்தை கிழிக்க முன்வந்திருக்கும் உங்களுக்கு வாழ்த்துகள் அபூ.
    ஆரியனும் திராவிடனே என்று மாய்மாலம் செய்கிற பார்ப்பனீய புரட்டர்களை இத்தகையப் பதிவுகளால் தான் அம்பலப்படுத்த முடியும்.நன்றி

  2. வாசகன்

    //”கேரளத்தில் குறுப்பு இனத்தைச் சார்ந்த உயர்குல மாதவிக்குட்டியை பறையனான இந்த வேலாயுதன் ஒரு போதும் சந்திக்க வாய்ப்பே இருந்திருக்காது. ஆனால் இஸ்லாம் என்ற கோட்பாட்டின் கீழ் நாங்கள்(பிலாலும், சுரையாவும்) இணைந்ததால் எங்களுக்குள்ளே பேச வாய்ப்பு கிடைத்தது.//

    இயல்பான பார்வையை சிக்கலாக்கிக் காட்டும் பிராமணக் கண்ணாடியை கழற்றிவிட்டுப் பார்த்தால் ஜெயராம ஜடவாயுகளுக்கும் விளங்கும் கருத்து தான்.

  3. அட்றா சக்கை

    சகோ அபூ சுமையா!

    இப்போது மிக நுண்ணிய தலைப்பைத் தொட்டிருக்கிறீர்கள். ஏற்கனவே RSS என்பது ஏதோ தேசபக்தி இயக்கம் போலவும் அதில் தான் மோட்சம் உள்ளது போலவும் சில நீலகுண்டர்களும் ஜடவாயுக்களும் புலம்புவதையும் RSS போன்ற பயங்கரவாத கும்பல்களை glorify செய்வதையும் சமீபகாலங்காளில் காணமுடிகிறது.

    இது போன்ற பாசிச கும்பல்களின் சுய ரூபத்தை அதன் முன்னாள் உறுப்பினர் வழியாகவே வெளிச்சம் போடுவது நல்ல பலன் தரும்.

    ஏற்கனவே ராஜவனஜ் என்னும் பதிவர் தான் RSS-ல் முன்னர் இருந்து தெரிந்து கொண்ட கோர முகங்களை அம்பலப் படுத்தி வருகிறார். தற்போது நீங்கள் இந்த நூலை வழங்கி RSS-ஐ சரியாக இனம் காட்டுங்கள்.

    முயற்சிக்கு நன்றி

  4. RSS என்ற சமூக கலாச்சார தேசிய இயக்கத்தை, இந்து இயக்கங்களின் ஆதரவில்லாத மத்திய மற்றும் மாநில அரசுகளே சமீபத்தில் பாராட்டியிருப்பதை மனதில் கொள்ளவும்.

  5. சாணான்

    //RSS என்ற சமூக கலாச்சார தேசிய இயக்கத்// தின் சமூகத் தொண்டு/தேசியப்பணி/கலாச்சார சுத்தீகரிப்பு –> //ஆர் எஸ் எஸ்ஸிற்காக ஒருவரை கொலை செய்//தல்.

    அதனை முழுநேர ஆர் எஸ் எஸ் ஊழியர் தான் மேலே கூறியிருக்கிறாரே.

  6. ஸிராஜ்

    //RSS என்ற சமூக கலாச்சார தேசிய இயக்கத்தை, இந்து இயக்கங்களின் ஆதரவில்லாத மத்திய மற்றும் மாநில அரசுகளே சமீபத்தில் பாராட்டியிருப்பதை மனதில் கொள்ளவும்//

    கொள்கையற்ற ஊழல் அரசியல்வாதிகளின் பாராட்டுக்கள் RSS போன்ற இந்திய தேசிய பயங்கரவாத இயக்கங்களுக்கு கிடைப்பதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.

  7. ஆறெஸெஸ் என்றால் அது சமூக கலாச்சார இயக்கம் என்று பொய்யால் மெழுகுவது
    இஸ்லாம் என்றால் அழிக்கப்படவேண்டும் என்று காழ்ப்பு உமிழ்வது. இந்த பார்ப்பனர்களால் மட்டும் ஏன் திருந்த முடிவதில்லை?
    குற்றச்சாட்டுகள் பார்ப்பன வேத, அவதாரங்கள் மீது சொல்லப்பட்டால் கல்வெட்டாக ஆதாரம் இருக்கிறதா என்று கேட்கிற நீல கண்டத் தனங்கள் டொய்யாலோ டிங்காலோ என்று இஸ்லாம் மீது சொல்லப்படுகிற அவதூறுகளை ஆதாராமாக்கிக் கொண்டாடுவதும் ஏன்? என்பதை யோசித்தால் ஆரெஸெஸ் கலாச்சார இயக்கமா? கேடுகெட்ட இயக்கமா என்பதும் விளங்கும்.

  8. ஜும்பலக்கா

    //RSS என்ற சமூக கலாச்சார தேசிய இயக்கத்தை//

    உங்க காமெடிக்கு ஒரு அளவே இல்லையா?

  9. // இந்த பார்ப்பனர்களால் மட்டும் ஏன் திருந்த முடிவதில்லை?
    குற்றச்சாட்டுகள் பார்ப்பன வேத, அவதாரங்கள் மீது சொல்லப்பட்டால் கல்வெட்டாக ஆதாரம் இருக்கிறதா என்று கேட்கிற நீல கண்டத் தனங்கள் டொய்யாலோ டிங்காலோ என்று இஸ்லாம் மீது சொல்லப்படுகிற அவதூறுகளை ஆதாராமாக்கிக் கொண்டாடுவதும் ஏன்?
    //

    அதையேதான் நானும் கேட்கிறேன். ஒரு இயக்கத்தை, ஒரு சில stray incidents களை மட்டும் வைத்து தீர்மானிக்க முடியாது. இவ்வளவு நடந்தும் SIMI யை விட்டுத் தர முடிந்ததா, இஸ்லாமியர்களால்? மலைவாழ் மற்றும் தலித்களின் வாழ்வில் rss ஆற்றிய பங்கு மகத்தானது. இது ஒரு கலாச்சார இயக்கம் இல்லை என்றும் வன்முறை அடிப்படைவாத முஸ்லிம் குழுக்களில் ஏதேனும் ஒன்றாவது இந்திய தேசிய இயக்கமாக உண்டு என்பதாக இங்கு ஆதாரபூர்வமாக எழுத முதுகெலும்புள்ள இணைய இஸ்லாமிஸ்டுகள் உள்ளனரா?

    நான ஒரு பிராமணர் இல்லை. என் கலாச்சாரம் மீது பெருமை கொண்ட ஒரு இந்து மட்டுமே.

    பரம்ஸ்

  10. அபூ சுமையா

    வாழ்த்துக்களுக்கு நன்றி கீர்த்தி அவர்களே.

  11. //ஒரு இயக்கத்தை, ஒரு சில stray incidents களை மட்டும் வைத்து தீர்மானிக்க முடியாது.//

    முஸ்லிம் பெயரில் இருந்தாலே….. தவறாகப் பார்க்கப்படும் தேசத்தில் ; காலத்தில் – முக்கியமான கருத்து இது.

    //இவ்வளவு நடந்தும் SIMI யை விட்டுத் தர முடிந்ததா, இஸ்லாமியர்களால்? //

    இதென்ன அபாண்டம்!சிமியாக இருந்தாலும், உமாபாரதிகளாக இருந்தாலும் தப்பு செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்பதே இஸ்லாமியர் நிலை.

    //மலைவாழ் மற்றும் தலித்களின் வாழ்வில் rss ஆற்றிய பங்கு மகத்தானது. //
    மகத்தான அந்த பங்கு குஜராத்தில் வெளிப்பட்டதே!

    //இது ஒரு கலாச்சார இயக்கம் இல்லை என்றும் வன்முறை அடிப்படைவாத முஸ்லிம் குழுக்களில் ஏதேனும் ஒன்றாவது இந்திய தேசிய இயக்கமாக உண்டு என்பதாக இங்கு ஆதாரபூர்வமாக எழுத முதுகெலும்புள்ள இணைய இஸ்லாமிஸ்டுகள் உள்ளனரா?//

    முதுகெலும்போடும் கூடவே மூளையை உபயோகித்தும் சொல்கிறேன்: RSS-க்கு கலாச்சாரம் ஒரு முகமூடியே!
    மற்றபடி, வன்முறை இயக்கம் வேறு தேசியநலன்நாடும் இயக்கம் வேறு என்பதை முஸ்லிம்கள் தெளிவாகவே புரிந்துவைத்துள்ளனர்.

    //நான ஒரு பிராமணர் இல்லை. என் கலாச்சாரம் மீது பெருமை கொண்ட ஒரு இந்து மட்டுமே.//

    நம்புகிறேன்: ராஜ்வனஜ் என்பவர் பதிவில் நான் படித்த ஒரு பின்னூட்டம் நினைவுக்கு வருகிறது . அங்கு வந்து ஜெயராமன் என்பவர் தான் பிராமணன் என்றும், ஆனால் ஆர் எஸ் எஸ்சில் இல்லை என்றும் கூறியிருந்தார்.

    *என்னதான் ஆர் எஸ் எஸ்சில் இல்லை என்று சொல்லிக்கொண்டாலும், இந்த பிராமணர்களால் ஆர்.எஸ்.எஸ்சுக்கு ‘பரிந்து’பேசாமல் இருக்க முடிவதில்லை.
    என்னதான் ஆர்.எஸ்.எஸ்சில் உறுப்பினராக இருந்தாலும், ஒருகாலகட்டத்தில் திராவிடர்களால் உண்மையை விளங்க முடியும்.* நான் பொறுமையாக இருக்கிறேன் – உங்களுக்கும் ஒருநாள் விளங்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *