Featured Posts
Home » நூல்கள் » RSS ஊழியன் » RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் – 13.

RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் – 13.

தலித் இனத்தவர்களை எப்படியேனும் அழிக்க வேண்டும் என்ற கூட்டு ஆலோசனைதான் ஆர்.எஸ்.எஸ். நடத்திக் கொண்டிருந்தது. அன்றைய நாள்களில் சவர்ணர்கள், தலித்துகளை வீதியில் போட்டுக் கொன்றார்கள். இன்றோ இந்த சவர்ணர்கள்தான் உயர்ஜாதியினர் ஆர்.எஸ்.எஸ். ரூபத்தில் அவர்களை சதி செய்து கொலை செய்கிறார்கள்.

ஒரு காலத்தில் நாசர் மஹ்தனி பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதை முன்னிறுத்தி மேடைப் பேச்சுக்களை தீவிரமாக பேசும் போது அது கேட்க கேட்க கோபம்தான் வந்து கொண்டிருந்தது எனக்கு. ஏனென்றால் சிறு வயதில் அம்மா சொல்லிக் கொடுக்கின்ற ஒரு ராம வசனம் நினைவுக்கு வரும்.

ராம ராம ராம ராம் பாஹிமாம் [ராமபாதம் சேரணே முகுந்தராம பாவரிமாம்].

இப்படி ராமபாதம் சேருவதுதான் மிகவும் உயர்ந்தது என்று அம்மா சிறு வயதில் எனக்குச் சொல்லிக்கொடுப்பார்கள்.

அந்த ராமன் பிறந்த இடத்தில்தான் திரும்பவும் பாபரி மஸ்ஜிதை நாங்கள் கட்டுவோம் என்று மேடையில் பேசுகின்ற மஹ்தனியை பார்க்கும் போதேல்லாம் எனக்கு வெறுப்பும், கோபமும் பொத்துக் கொண்டுவரும்.
மாலை நேரம் சுமார் 4 மணிக்குத்தான் பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட செய்தியை நான் அறிகிறேன். அன்று முழுவதும் நானும் எனது ஆர்.எஸ்.எஸ். நண்பர்களும் மிகுந்த சந்தோஷத்தில் இருந்தோம். எனது சாகாவின் எதிரொலி கேரளத்தில் நடக்கவில்லையென்றாலும், பைசாபாத்தில் நடந்தேறியது எனக்கு மிகுந்த சந்தோஷத்தையும், சாகாவின் மீது அதிக ஈர்ப்பும் ஏற்பட்டது.

இதற்கெல்லாம் மறுப்பாகவும், எதிர்ப்பாகவும் பாபரி மஸ்ஜித் திரும்பவும் கட்டப்பட வேண்டும் என்ற ஓரே எண்ணத்தோடுதான் பி.டி.பி. யின் பின் துணையோடு அயோத்தி சென்றேன் 1996 ல்.

1996 டிசம்பர் 30 -ம் தேதிதான் எர்ணாகுளத்திலிருந்து ரயில் ஏறினேன். அந்த இரண்டு நாள்களிலும் கடந்த நிகழ்வுகளைப் பற்றி சிந்தித்துக் கொண்டே சென்றேன்.

லக்னோவில் சென்றிறங்கினால் ஒரு பெரும் முஸ்லிம் சமூகம் எங்களை வரவேற்கும் என்ற எண்ணம் எனது மனதில் இருந்தது. அங்கு சென்று இறங்கும் போதுதான் தெரிகிறது. போலீஸ் பட்டாளம் தெரு முழுவதும் நிறைந்து நின்றது.

டிசம்பர் 6 முதல் அங்குள்ள முஸ்லிம்கள் பயத்தால் செத்துப் பிழைத்துக் கொண்டிருந்தார்கள்.

பாபரி மஸ்ஜித் என்று பேசுவதற்குக்கூட அவர்கள் அஞ்சி நடுங்கினார்கள்.
கேரளத்தின் மக்கள் தொகைக்கு சமமான உத்திரப்பிரதேசத்தின் முஸ்லிம் மக்களின் இந்த உள்ளத்தைப் பார்த்து எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது.

கேரளத்தில் தாழ்த்தப்பட்ட தலித் இனத்தாரும் உ.பி.யில் முஸ்லிம்களும் சங்கபரிவாரின் சக்திகளுக்கும் அவர்களது தந்திரங்களுக்கும் இரையாகி தரைமட்டமாக ஆகிவிடுகிறார்களே என்ற எண்ணம்தான் எனது உள்ளத்தில் வேதனையில் ஆழ்ந்து கொண்டிருந்தது.

இத்துணை எளிமையாகவும், இனிமையாகவும் பாசமும் காட்டுகின்ற முஸ்லிம் சமூகத்தையா மிகவும் கீழான இட்டுக்கட்டப்பட்ட அவதூறுகளைச் சொல்லி அழிக்கத் துடிக்கின்றார்கள். அவர்களின் சின்னங்களையும் பள்ளிகளையும் அவதூறு பேசுகிறார்கள் என்று எனது மனம் கவலையில் வாடிற்று.

அயோத்தி நோக்கி நாங்கள் மேற்கொண்ட பயணத்தில் நான் கலந்து கொள்ளவில்லையென்றால் இதையெல்லாம் நான் தெரிந்திருக்கவே முடியாது.

அயோத்தி அணிவகுப்பிற்காக சென்ற பிறகுதான் தெரிகிறது இந்த ஆர்.எஸ்.எஸ் வெறியர்கள் இல்லாத ஒரு பழியை முஸ்லிம்கள் மீது வேண்டுமென்றே போட்டு குற்றம் சுமத்தி அவர்களை அழிப்பதற்கு ஆயத்தமாகின்றார்கள் என்ற உண்மை. உத்திரப்பிரதேச மாநிலத்தில் இதனை நடத்திக்காட்டிவிட்டார்கள். இதனை நான் கண்கூடாகக் கண்டேன்.

அயோத்திக்கு மேற்கொண்ட பயணத்தில் நான் கலந்து கொள்ளவில்லையென
்றால் முஸ்லிம்களைப் பற்றி இன்னும் மிக கேவலமான கருத்துக்களைக் கொண்டவனாகவே வாழ்ந்திருப்பேன்.

இந்தியாவில் முக்கியமான இஸ்லாமிய கேந்திரங்கள் நிறைந்த உத்திரப்பிரதேசத்தில் முஸ்லிம்கள் இவ்வளவு பிற்போக்குவாதிகளாகவும் கிஞ்சிற்றும் விழிப்புணர்வு இல்லாதவர்களாகவும் போனது ஏன்? என்ற கேள்வி இப்போதும் எனது மனதை உறுத்திக் கொண்டே இருகின்றன.

இறைவன் நாடினால் வளரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *