Featured Posts
Home » நூல்கள் » RSS ஊழியன் » RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் – 15.

RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் – 15.

அன்வாருஷ்ஷேரியின் வாழ்க்கை எனக்கு இஸ்லாத்தைத் தெரிந்து கொள்வதற்கு முதலில் ஒரு வாய்ப்பாக அமைந்தது. ஒவ்வொரு நாளும் ஓர் புது அனுபவம் கிடைத்தது. என்னை இஸ்லாத்தின் பக்கம் கொண்டு சென்று கொண்டிருந்தது.

இதிலிருந்துதான் இஸ்லாத்தைப் பற்றி மேலும் தெரியவேண்டும் என்ற ஆர்வம் என்னுள் எழுந்தது. பல இஸ்லாமிய அறிஞர்களையும் நான் நாசர் மஹ்தனி மூலம் அறிந்து கொண்டேன். இந்தப் பழக்கவழக்கம் தான் வேலாயுதன் என்ற எனக்கு இஸ்லாத்தைத் தெரிந்திட வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்தது.

உயர்ந்த அந்த ஆலிம்கள் சாதாரண மக்களோடு காட்டுகின்ற அன்பு, பாசம் இவற்றைப் பார்த்து இஸ்லாம் அன்பினாலும் மக்களை அரவணைத்துச் செல்லக்கூடிய ஒரு நல்ல மார்க்கம் என்பதை நான் மேலும் புரிந்து கொண்டேன்.

முஹம்மது(ஸல்) அவர்களின் எதார்த்த அடியார்கள் இவர்கள்தான் என்பதை நான் உணர்ந்தேன். மேன்மையான நல்ல அன்பும் பாசமும் மிகுந்த அந்த முஹம்மது(ஸல்) அவர்களின் முன் மாதிரியைப் பின்பற்றும் அந்த நல்ல உள்ளத்தையா ஆர்.எஸ்.எஸ். வெறியர்கள், தீவிரவாதிகள் என்றும் இஸ்லாம் தீவிரவாதத்தின் மதம் என்றும் கூறினார்கள் என்று எனது மனதில் தோன்றி நான் மிகவும் வருத்தப்பட்டேன்.

அவ்வூரில் பிரார்த்தனை நடக்கும் போது நான் வெளியில் நின்று பார்த்தேன். பிறருக்காக பிரார்த்தனை செய்கின்ற அந்த அநாதை குழந்தைகளை பார்த்த பொழுது, எந்த ஆர்.எஸ்.எஸ்.காரர்களும் பிறருக்காக பிரார்த்தனை செய்வதை நான் பார்த்ததில்லை. அவர்களின் கீழ் இயங்குகின்ற எந்த அநாதை ஆலயத்திலும் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்பதுமில்லை. இவர்களது மத்தியில் நல்ல கலாச்சாரம் இருந்தால் தானே நல்ல குணங்கள் இருக்கும்?

நான் பி.டி.பியின் ஓர் அங்கமானதால் அதன் கீழுள்ள நாசர் மஹ்தனியின் தொண்டர்கள் அநியாயத்திற்காக எந்த ஒரு இன வேறுபாடுமில்லாமல் ஒன்றாய் நின்று போராடுவது எனது உள்ளத்தை மேலும் கவர்ந்தது.

இவ்வாறாக குன்னத்தூரில் தங்கிவிட்டு திரும்ப கிளம்பும் போதுதான் எனது மனது முழுவதும் அந்த அநாதை விடுதியின் நினைவுகளும் அங்குள்ள ஆலிம்களின் நல்ல பணிவான தோற்றமும் தான் இந்த தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த எனக்கு இஸ்லாத்தைப் பற்றி நன்றாகப் புரிய ஒரு வாய்ப்பைத் தந்தது.

முஸ்லிகளைப் பற்றி அந்த சங்பரிவார கும்பல்கள் கூறுவது:

நமது இனத்தைச் சார்ந்த ஒரு இந்து பெண்ணையும் இந்த முஸ்லிம்கள் விட்டுவைப்பதில்லை. இவர்களுக்கு ஆசைவரும் போதெல்லாம் நமது இனப் பெண்களைத்தான் இவர்கள் வெறும் போகப்பொருளாக பயன்படுத்துவார்கள். என்றெல்லாம் மிக மோசமாக முஸ்லிகளைப் பற்றி பேசுவார்கள்.

ஆனால் இப்போதுதான் எனக்கு தெரிகிறது, முஸ்லிம்கள் இத்துனை கண்ணியத்தோடும் ஒழுக்கத்தோடும் வாழக்கூடியவர்கள் என்று.

அன்னியப் பெண்களைப் பார்ப்பது கூட ஹராம்(தடுக்கப்பட்டது) என்று இஸ்லாம் போதிக்கின்றது. எனது வீட்டில் முஸ்லிம்கள் வந்தால், எனது மனைவியைப் பற்றியும், குழந்தையைப்பற்றியும் விசாரிப்பது மட்டும் தான் அவர்கள் செய்திருக்கிறார்கள். எனது மனைவியின் முகத்தைக்கூட அவர்கள் ஏறெடுத்துப் பார்ப்பதே இல்லை. நான் வீட்டில் இல்லாத நேரத்தில் எனது மனைவி உட்காரச் சொன்னால்கூட தலையை குனிந்தவண்ணமாக சலாம் கூறி விட்டு கண்ணியத்தோடு திரும்புவார்கள்.

இப்படி நல்லுள்ளம் கொண்ட அந்த சமுதாயத்தையா இந்த ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தவறாக சித்தரிக்கிறார்கள் என்று நான் பல நாளும் நினைத்து வருந்தியதுண்டு.

இறைவன் நாடினால் வளரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *