Featured Posts
Home » நூல்கள் » RSS ஊழியன் » RSS.முழு நேர ஊழியனின்.. பேட்டி – 1.

RSS.முழு நேர ஊழியனின்.. பேட்டி – 1.

இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு

உங்களைச் சந்திக்க வேண்டும், வருகின்றோம் என்றோம் காலை 10 மணிக்கு. பகல் 12 மணிக்கு நேரம் கொடுத்தார்.

எப்போதும் சிலர் அவரைச் சந்திக்க வந்து கொண்டேயிருந்தார்கள். அதனால் தான் அவரால் கேட்டவுடன் நேரம் தந்திட இயலவில்லை.

சென்றோம் நானும் தேஜஸ் என்ற மலையாளப் பத்திரிகையின் ஆசிரியரும். நாங்கள் அவரது வீட்டைத் தேடிக் கொண்டிருந்த போது….,

எங்கள் பின்னால் இரண்டு முஸ்லிம் சகோதரர்கள் வந்தார்கள். எங்களைப் புரிந்து கொண்டவர்கள் போல் கேட்டார்கள்: “பிலால் சாஹிப் அவர்களைப் பார்க்கவா?”

“ஆமாம்” என்றோம்.

அழைத்துச் சென்றார்கள்.

தொடராக இருந்த மூன்று சிறிய வீடுகளில் ஒன்றில் அவர் தன் இஸ்லாமிய வாழ்கையைத் தொடங்கியிருந்தார். அந்தச் சிறு வீட்டில் ஒரு சிறு பகுதி வரவேற்பறையாகச் செயல்பட்டது.

இந்த சின்னப் பகுதிக்கு “தாருஸ்ஸலாம”் எனப் பெயர் வைத்திருந்தார். பெயர் வைத்துக் கொள்ளத்தக்க அளவில் உள்ள வீடில்லை அது. ஆனாலும் இஸ்லாம் தனக்குத் தந்த மன அமைதியைப் பிரதிபலிக்க, “அமைதியின் வீடு” எனப் பெயர் வைத்திருந்தார். ஆமாம்.. பல ஆண்டுகள் அலைக்கழிந்த கடினமான வாழ்க்கைக்குப் பின் இஸ்லாம் தந்த அமைதி;

“பிலால் சாஹிப்”, எங்களுக்கு வழி சொன்னவர்கள் குரல் கொடுத்தார்கள்.

நியாயமான உயரம் கொண்ட சங்கையான தாடியுடன் சடுதியாக வந்தார் பிலால் சாஹிப். உடனே கண்டுபிடிக்க இயலாத அளவுக்கு ஒரு பரம்பரை முஸ்லிமை விஞ்சும் தோற்றமும், பார்வையும்; எங்களுக்கு வழிகாட்டிய சகோதரர்கள் புடை சூழ எங்களை அழைத்துக் கொண்டு போய் அந்தச் சின்னக் குடிலின் வரவேற்பு அறையில் அமரச்செய்தார். அமர்ந்தோம்.

தேஜஸ் ஆசிரியரை எளிதாகப் புரிந்து கொண்டார். நான் ஒரு வழியாக அறிமுகமாகி முடித்தேன்.

பிலால் சாஹிப்: உங்கள் ஊர்?

நான்: நாகர்கோவில்.

பிலால் சாஹிப்: நாகர்கோவிலில் எந்தப் பக்கம்?

நான்: நான் சென்னையிலிருக்கின்றேன்.

பிலால் சாஹிப்: நான் நாகர்கோவில், காயல்பட்டினம் ஆகிய இடங்களுக்கு வந்திருக்கின்றேன். மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கிய பேச்சாளராக இருந்தேன். காயல்பட்டினம் நிகழ்ச்சியில் பி.டி.பி.யின் தலைவர் அப்துல் நாசர் மஹ்தனியால் கலந்து கொள்ள இயலவில்லை. நான் தான் தலைமைதாங்கி தலைமை உரையாற்றினேன்.

நான்: மிக்க மகழ்ச்சி… நீங்கள் இஸ்லாத்தை ஏற்றக்கொண்ட வரலாற்றைச் சொல்லிட இயலுமா?

பிலால் சாஹிப்: நான் ஹிந்துத்துவா அமைப்புகளில் மிகவும் தீவிரமாகப் பணியாற்றியவன். அவர்கள் எங்களுக்குச் சொல்லித் தந்த பாடங்களின் வழி முஸ்லிம்களை வெறுக்கக் கற்றுக் கொண்டேன்.

என்னுடைய வெறுப்பு என்பது சாதாரணமாக இந்து தீவிர அமைப்புகளில் இருப்பவர்கள் கொள்ளும் வெறுப்பல்ல. நான் கொண்ட வெறுப்பு மிகவும் கடுமையானது.

முஸ்லிம்களைக் கண்டால் நான் அளவுக்கு மீறி வெறுப்பைக் கொட்டுவேன். நீங்கள் ஆட்சேபிக்கவில்லையென்றால் சொல்வேன்.

நான்: கொஞ்சமும் குறைக்காமல் சொல்லுங்கள்.

பிலால் சாஹிப்: எனக்கு சொல்லித் தந்த பாடங்களின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு இந்த நாட்டில் வாழ்ந்திட எந்த உரிமையும் இல்லை என்றே நான் நினைத்தேன்.

அவர்களை இங்கே வாழவிட்டவர்கள் மிகப் பெரிய தவறையே செய்து விட்டார்கள் என்று கருதினேன்.

தொடர்ந்து தந்த பயிற்சிகளால் என்னைப் போன்றவர்கள் இஸ்லாத்தைப் பற்றியும், முஸ்லிம்களைப் பற்றியும் வெறுப்பு மட்டும்தான் கொண்டோம் என்றில்லை; கோபமும், ஆத

2 comments

  1. this site is very use full to me.

    All user pls read ………

    this day i have a great excitment.

    that is hadish.

    pls ungaluku namas nadakum mun neengal tholuthu kollungal.

  2. assalamu alaikum vara….

    ALLAHO AKBAR, ALLAHO AKBAR, ALLAHO AKBAR

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *