Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » நபி(ஸல்) அவர்கள் மீது பொய் கூறுவது பற்றி

நபி(ஸல்) அவர்கள் மீது பொய் கூறுவது பற்றி

அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் மீது பொய் கூறுவது பற்றி கடும் எச்சரிக்கை!

1- அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  ‘என் மீது பொய் சொல்லாதீர்கள்! என் மீது பொய் சொன்னவன் நரகத்தில் நுழையட்டும்!’ அறிவிப்பவர் : அலி (ரலி)

ஆதார நூல்கள் : புகாரீ -106, முஸ்லிம் 2)

2- ‘என் மீது, எவன் வேண்டுமென்றே பொய் சொல்கின்றானோ அவன் நரகத்தில் தனது இருப்பிடத்தை அமைத்துக்கொள்ளட்டும்’ என நபி(ஸல்) அவர்கள் கூறியிருப்பதனால்தான் உங்களுக்கு நான் அதிகமான நபிமொழிகளை எடுத்துரைக்காமல் என்னைத் தடுத்துக் கொள்கிறேன் என்று அனஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ்(ரலி)

நூல்கள் : புகாரீ 108, முஸ்லிம் 4

3- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘என்மீது யார் வேண்டுமென்றே பொய்யுரைப்பானோ அவன் நரகத்தில் தனது இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்’. அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரலி)

நூல்கள் : புகாரீ 110, முஸ்லிம் 4

4- அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘என் மீது கூறும் பொய் (உங்களில்) ஒருவரின் மீதும் கூறும் பொய்யைப் போன்றதன்று. யார் என் மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கின்றானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும்!’ அறிவிப்பவர் : முகீரா(ரலி)

நூல்கள் : புகாரீ 1291, முஸ்லிம் 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *