Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » ஈமானின் அநேக கிளைகள்

ஈமானின் அநேக கிளைகள்

21- ஈமான் அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாக உள்ளது. வெட்கம் என்பது ஈமானின் ஒரு கிளையாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி-9: அபூஹூரைரா(ரலி)

22- அன்சாரிகளைச் சேர்ந்த ஒரு மனிதர் தமது சகோதரர்(அதிகம்) வெட்கப் படுவதைக் கண்டித்துக் கொண்டிருந்த போது அவ்வழியே நபி(ஸல்) அவர்கள் சென்றார்கள். உடனே,அவரை(க் கண்டிக்காதீர்கள்) விட்டு விடுங்கள். ஏனெனில் நிச்சயமாக வெட்கம் ஈமானின் ஓரம்சம் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.

புகாரி-24: அப்துல்லாஹ் (இப்னு உமர்(ரலி)

23- இம்ரான் பின் ஹூஸைன்(ரலி)அவர்கள், நாணம் நன்மையை மட்டுமே தரும் என நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று கூறினார்கள்.

புகாரி-6117: இம்ரான் பின் ஹூஸைன்(ரழி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *