Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » ஒருவர் மற்றவரை விட சிறந்தவராகயிருத்தல்

ஒருவர் மற்றவரை விட சிறந்தவராகயிருத்தல்

விசுவாசிகளில் ஒருவர் மற்றவரை விட சிறந்தவராகயிருத்தல். இவ்வகையில் எமன் தேசத்து மக்களின் சிறப்பு பற்றி…

31- நபி(ஸல்)அவர்கள்தமது கரத்தால் யமன் நாட்டுத் திசையை நோக்கி சைகை காட்டி இறைநம்பிக்கை அதோ அங்கிருக்கும் யமன் நாட்டைச் சார்ந்ததாகும். அறிந்து கொள்ளுங்கள் கல் மனமும்,(இறக்கமற்ற) கடின சுபாவமும், ஒட்டகங்களின் வால்களை பிடித்தபடி அவற்றை அதட்டிக் கொண்டே (நாடோடிகளாக)சென்று கொண்டிருக்கும் (பாலைவன) ஒட்டக மேய்ப்பவர்களிடையே காணப்படும். அங்கிருந்து தான் ஷைத்தானின் இரு கொம்புகளும் உதயமாகும் குழப்பங்கள் தலை தூக்கும்(அதாவது) ரபிஆ மற்றும் முளர் குலத்தவர் இடையே அவை தோன்றும் என்று சொன்னார்கள்.

புகாரி-3302: உக்பா பின் அம்ர் அபூ மஸ்வூது(ரலி)

32- யமன்வாசிகள் உங்களிடம் வந்துள்ளனர். அவர்கள் இளகிய மனம் படைத்தவர்கள். மென்மைளான நெஞ்சம் உடையவர்கள். மார்க்க ஞானம் யமன் நாட்டைச் சார்ந்ததாகும், விவேகமும் யமன் நாட்டைச் சேர்ந்ததாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி – 4390: அபூஹூரைரா(ரலி)

33- இறை மறுப்பின் தலைமைப் பீடம் கிழக்குத் திசையில் (நெருப்பை வணங்கும் மஜூஸிகள் வசிக்கும் பாரசீகத்தில்)உள்ளது. குதிரைகள் மற்றும் ஒட்டகங்களின் உரிமையாளர்களிடமும் (நாடோடி) பாலைவன வாசிகளான ஒட்டகம் மேய்ப்பர்(களிடமும் பண்ணை முதலாளி)களிடமும் தற்பெறுமையும் அகம்பாவமும் காணப்படுகிறது. ஆடுகளின் உரிமையாளர்களிடம்(அடக்கமும் கம்பீரமும் கலந்த)அமைதிக் காணப்படுகிறது என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.

புகாரி-3301: அபூஹூரைரா(ரலி)

34- பெருமையும் கர்வமும் கிராமவாசிகளான நாடோடிகளிடையே காணப்படும். ஆடு மேய்ப்பவர்களிடையே அமைதியும் பணிவும் காணப்படும். இறைநம்பிக்கை யமன் நாட்டைச் சேர்ந்ததாகும். மதி நுட்பமும் யமன் நாட்டைச் சேர்ந்ததாகும் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.

புகாரி-3499: அபூ ஹூரைரா(ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *