Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » ஒரு முஸ்லீமைத் திட்டுவது கொல்வது குறித்து..

ஒரு முஸ்லீமைத் திட்டுவது கொல்வது குறித்து..

ஒரு முஸ்லீமைத் திட்டுவது கொல்வது குறித்து..

43- நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊது(ரலி) கூறியதாவது: ஒரு முஸ்லிமை ஏசுவது பாவம், அவனுடன் போரிடுவது, கொலை செய்வது இறை நிராகரிப்பாகும்.

புகாரி 48 :அப்துல்லாஹ் பின் மஸ்ஊது (ரலி).

ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டு நிராகரிப்போராகாதீர்..

44- நபி(ஸல்)அவர்கள் தமது இறுதி ஹஜ்ஜின் போது (மக்களுக்கு உரையாற்றிய நேரத்தில்) என்னிடம் மக்களை அமைதியுடன் செவிதாழ்த்திக் கேட்கும்படி செய்வீராக! என்று கூறினார்கள்.(மக்கள் அமைதியுற்ற பின்னர்) எனக்குப் பிறகு நீங்கள் ஒருவர் கழுத்தை ஒருவர் வெட்டிக் கொள்ளும் காஃபிர்களாக மாறிவிட வேண்டாம் என்று சொன்னார்கள்.

புகாரி-121: ஜரீர்(ரலி)

45- நபி(ஸல்)அவர்கள்(தமது விடைபெறும் ஹஜ் உரையில்)  உங்களுக்கு கேடுதான் (வைலக்கும்) அல்லது உங்களுக்கு அழிவுதான் (வைஹக்கும்)  எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் இறைமறுப்பாளர்களாக நீங்கள் மாறிவிடாதீர்கள் என்று கூறினார்கள்.

புகாரி 6166 :இப்னு உமர்(ரலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *