Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » காலுறை மீது மஸஹ் செய்வதற்கு முன்…

காலுறை மீது மஸஹ் செய்வதற்கு முன்…

159- முகீரா பின் ஷூஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஒரு பயணத்தில் ஒரிரவு நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்கள் உம்மிடம் தண்ணீர் இருக்கிறதா? என்று கேட்டார்கள் நான் ஆம் (இருக்கிறது) என்று பதிலளித்தேன் . உடனே அவர்கள் தமது வாகனத்திலிருந்து இறங்கி இரவின் இருளில் என் பார்வையிலிருந்து மறையும் அளவுக்கு நடற்தார்கள். (இயற்கைத்தேவையை முடித்த) பிறகு அவர்கள் வந்தார்கள். நான் குவளை நீரை அவர்கள் மீது ஊற்றினேன். அவர்கள் தமது முகத்தையும் இரு கைகளையும் கழுவினார்கள். அப்போது கம்பளி நீளங்கி அணிந்திருந்தார்கள் இதனால் அங்கியிலிருந்து தம் முழங்கைகளை வெளியே எடுக்க அவர்களால் இயலவில்லை ஆகவே அவற்றை அங்கியின் கீழிருந்து வெளியே எடுத்துக் கழுவினார்கள். பிறகு தமது தலையை (ஈரக்கையால்) தடவி (மஸ்ஹ் செய்திடலா)னார்கள். பிறகு நான் அவர்களின் (மோஸா எனும்) காலுறைகளை இரண்டையும் கழற்ற முனைந்தேன். அதற்கு அவர்கள் அவற்றை விட்டு விடுவிராக! ஏனெனில் நான் (என் கால்கள்) இரண்டையும் தூய்மையான நிலையிலேயே (காலுறைகளுக்குள்) நுழைத்திருந்தேன் என்று சொல்லி (ஈராக்கையால் அவற்றைத்) தடவி (மஸ்ஹ் செய்து) கொண்டார்கள்.

புகாரி-5799: முகீரா பின் ஷூஃபா (ரலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *