Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » ருகூஉ ஸஜ்தாவில் என்ன கூறுவது…

ருகூஉ ஸஜ்தாவில் என்ன கூறுவது…

219- குனியும் போதும் நிமிரும் போதும் தக்பீர் கூறி அபூஹுரைரா (ரலி) தொழுவித்துவிட்டு நான் உங்களுக்கு நபி (ஸல்) அவர்களின் தொழுகை போலவே தொழுது காட்டினேன் என்றும் கூறினார்கள்.

புஹாரி-785: அபூ ஸலமா

220- நபி (ஸல்) அவர்கள் தொழுகையைத் துவக்கும் போது தக்பீர் கூறுவார்கள். ருகூவு செய்யும் போதும் தக்பீர் கூறுவார்கள். ருகூவிலிருந்து முதுகை நிமிர்த்தும் போது ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறுவார்கள். பின்பு நிலைக்கு வந்து ரப்பனா லகல் ஹம்து- மற்றொரு அறிவிப்பில் வலகல் ஹம்து என்பார்கள். பின்பு (ஸஜ்தாவுக்காகக்) குனியும் போதும் தக்பீர் கூறுவார்கள். பின்பு தலையை (ஸஜ்தாவிலிருந்து) உயர்த்தும் போதும் தக்பீர் கூறுவார்கள். பின்பு (இரண்டாவது) ஸஜ்தாச் செய்யும் போதும் தக்பீர் கூறுவார்கள். பின்பு அதிலிருந்து தலையை உயர்த்தும் போதும் தக்பீர் கூறுவார்கள். இவ்வாறே தொழுகையின் எல்லா ரக்அத்களிலும் செய்வார்கள். இரண்டாம் ரக்அத்திலிருந்து எழும்போதும் தக்பீர் கூறுவார்கள்.

புஹாரி-789: அபூஹுரைரா (ரலி)

221- நானும் இம்ரான் இப்னு ஹுஸைனும் அலி (ரலி)யைப் பின் பற்றித் தொழுதோம். அலி (ரலி) ஸஜ்தாச் செய்யும் போதும் தக்பீர் கூறினார்கள். ஸஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தும் போதும் தக்பீர் கூறினார்கள். இரண்டு ரக்அத்தை முடித்து எழும் போதும் தக்பீர் சொன்னார்கள். தொழுகையை முடித்து பிறகு என் கையைப் பிடித்துக் கொண்டு இவர் நபி (ஸல்) அவர்களின் தொழுகையை எனக்கு நினைவுபடுத்தி விட்டார் என்று இம்ரான் (ரலி) குறிப்பிட்டார்கள்.

புஹாரி-786: முதர்ரிஃப் (ரலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *