Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோரும் விஷயங்கள்..

அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோரும் விஷயங்கள்..

344– நபி (ஸல்) அவர்கள் தமது தொழுகையில் தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் பாதுகாப்புத் தேடுவதை நான் செவியுற்றுள்ளேன்.

புஹாரி-833: ஆயிஷா (ரலி)


345– இறைவா! கப்ருடைய வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். வாழும் போதும் மரணிக்கும் போதும் ஏற்படும் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். பாவங்களை விட்டும் கடனை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் துஆச் செய்வார்கள். தாங்கள் கடனை விட்டும் அதிகமாகப் பாதுகாப்புத் தேடும் காரணம் என்ன? என்று ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது ஒரு மனிதன் கடன் படும் போது பொய் பேசுகிறான்; வாக்களித்து விட்டு அதை மீறுகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் விளக்கமளித்தார்கள்.

புஹாரி-832: ஆயிஷா (ரலி)

346– நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வே! நிச்சயமாக நான் மண்ணறை வேதனை, நரக வேதனை, வாழ்வின் சோதனை, மரணத்தின் சோதனை, மஸீஹுத் தஜ்ஜாலின் சோதனை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” எனப் பிரார்த்திப்பவர்களாக இருந்தார்கள்.

புகாரி- 1377. அபூஹுரைரா (ரலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *