Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » ஜூம்ஆ தினத்தில் நறுமணம் பூசுவதும் மிஸ்வாக் செய்வதும்

ஜூம்ஆ தினத்தில் நறுமணம் பூசுவதும் மிஸ்வாக் செய்வதும்

490.”ஜும்ஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவருக்கும் கடமையாகும். மேலும் பல் துலக்குவதும் கிடைக்குமானால் நறுமணம் பூசுவதும் கடமையாகும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 880 அபூ ஸயீத் (ரலி)


491. ஜும்ஆ நாளில் குளிப்பது பற்றி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) கூறியபோது நறுமணப் பொருளோ எண்ணெய்யோ ஒருவரின் இல்லத்தில் இருந்தால் அதைப்பூசிக் கொள்ள வேண்டுமா?’ என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘எனக்குத் தெரியவில்லை’ என்று விடையளித்தார்கள்.

புஹாரி: 885 தாவூஸ் (ரலி)

492. ”ஏழு நாள்களுக்கு ஒரு முறை தலையையும் மேனியையும் கழுவிக் குளிப்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்.”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :897 அபூஹுரைரா (ரலி)


493.”ஜும்ஆ நாளில் கடமையான குளிப்புப் போல் குளித்துவிட்டுப் (பின்னர்) பள்ளிக்கு வந்தால் ஓர் ஒட்டகத்தை இறைவழியில் குர்பானி கொடுத்தவர் பாதையில் குர்பானி கொடுத்தவர் போலாவார். இரண்டாம் நேரத்தில் வந்தால் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். மூன்றாம் நேரத்தில் வந்தால் கொம்புடைய ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். நான்காம் நேரத்தில் வந்தால் ஒரு கோழியைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். ஐந்தாம் நேரத்தில் வந்தால் முட்டையைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். இமாம் பள்ளிக்குள் வந்துவிட்டால் வானவர்கள் ஆஜராகிப் போதனையைக் கேட்கிறார்கள்”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :881 அபூஹுரைரா (ரலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *