Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » வாகனத்தில் அமர்ந்து தவாஃப் செய்தல்.

வாகனத்தில் அமர்ந்து தவாஃப் செய்தல்.

800. நபி (ஸல்) அவர்கள் தம் இறுதி ஹஜ்ஜில் ஒட்டகத்தின் மீதமர்ந்து வலம் வந்தார்கள். அப்போது தலை வளைந்த கம்பால் ஹஜருல் அஸ்வதைத் தொட்டார்கள்.

புஹாரி :1607 இப்னு அப்பாஸ் (ரலி).

801. என் உடல் நலக்குறைவு பற்றி நபி (ஸல்) அவர்களிடம் நான் முறையிட்டபோது ‘ஜனங்களுக்குப் பின்னால் வாகனத்தில அமர்ந்து கொண்டு நீ தவாஃப் செய்து கொள்!” என்று கூறினார்கள். நான் அவ்வாறு தவாஃப் செய்யும்போது நபி (ஸல்) அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமின் ஒரு பகுதியில் ‘தூர்’ என்ற அத்தியாயத்தை ஓதித் தொழுது கொண்டிருந்தார்கள்.

புஹாரி :464 உம்மு ஸலமா (ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *