Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » முத்ஆ- தற்காலிக (தவணைமுறை) திருமணம் தடை

முத்ஆ- தற்காலிக (தவணைமுறை) திருமணம் தடை

887. அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) ‘எங்களுடன் துணைவியர் எவரும் இல்லாத நிலையில் நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் (ஒரு) புனிதப் போரில் கலந்து கொண்டிருந்தோம். எனவே, நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘நாங்கள் காயடித்து (ஆண்மை நீக்கம் செய்து)க் கொள்ளலாமா?’ என்று கேட்டோம். அதற்கு அவர்கள் அப்படிச் செய்யவேண்டாமென்று எங்களைத் தடுத்தார்கள். அதன் பிறகு துணியை (மஹ்ராக)க் கொடுத்துப் பெண்ணை மணந்துகொள்ள எங்களுக்கு அனுமதியளித்தார்கள்.” என்று கூறிவிட்டு பிறகு, “இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த நல்லவற்றை விலக்கி (ஹராமாக்கி)க் கொள்ளாதீர்கள்” எனும் (திருக்குர்ஆன் 05:87 வது) இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

புஹாரி :4615 இப்னு மஸ்ஊத் (ரலி).

888. நாங்கள் ஒரு போர் படையில் இருந்தோம். அப்போது எங்களிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வந்து, ‘அல்முத்ஆ’ (தவணைமுறை)த் திருமணம் உங்களுக்கு (தாற்காலிமாக) அனுமதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ‘அல்முத்ஆ’ திருமணம் செய்துகொள்ளலாம்’ என்று அறிவித்தார்.

புஹாரி : 5118 ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி).

889. கைபர் போரின்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘முத்அத்துன்னிஸா.”.. (கால வரம்பிட்டுச் செய்யப்படும் திருமணம்) செய்ய வேண்டாம் என்றும், நாட்டுக் கழுதைகளை உண்ண வேண்டாம் என்றும் தடை விதித்தார்கள்.

புஹாரி :4216 அலி (ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *