Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » ஹதீஸ்களில் தில்லு முல்லு செய்யும் ததஜ

ஹதீஸ்களில் தில்லு முல்லு செய்யும் ததஜ

எப்படியெல்லாம் ஹதீஸ்களில் தில்லு முல்லு செய்கின்றனர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-தும் அதன் தலைமையும்…

4 comments

  1. ஸலாம், உமரிடம் ஒருவர் அல்லாஹ்வின் தூதர் கூறியதாக குர்ஆனில் இல்லாத முரணான, ஒன்றை அறிவிப்பதாக வந்ததும் அதன் காரணத்தாலும் – கூடுதலான இன்னொரு சாட்சியில்லாததன் காரணத்தாலும் – அந்த ஹதீஸை அவர்கள் நிராகரித்தார்கள் என்பது குறிப்பிட்ட ஹதீஸின் செய்தி…

    சாட்சி பற்றிய இரண்டாவது செய்தி (‘ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா?’ எனும்)புத்தகத்தில் விடுபட்ட ஹதீஸ் பகுதி…(ஆனால் அப்புத்தகத்தில் பதியப்பட்ட ஹதீஸ் பகுதியில் இதுவும் குறிப்பாக இடம்பெற்றிருக்கிறது)

    புத்தகத்தில் இந்த ஹதீஸ் குர்ஆனுக்கு முரணாக வரும் ஹதீஸ்களுக்கு உதாரணமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது…இது அந்த புத்தகத்தின் முதன்மையான நோக்கம் மற்றும், ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படும் என்பது அப்புத்தகத்தின் அடிப்படைக் கருத்து மேலும் அதன் காரணத்தால் ஹதீஸ்கள் நபித்தோழர்களால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது என்பதும் அது தரும் அடுத்த செய்தி…

    குர்ஆனில் இல்லாத முரணான ஒன்றை ஹதீஸ் அறிவித்ததனால் (மட்டும்)தான் உமர்(ரலி) நிராகரித்தார்கள் என்பது முழுமையற்ற ஹதீஸ் அடிப்படையிலான அப்புத்தகத்தின் கருத்து.

    இங்கு வெளியிடப்பட்டிருக்கும் காட்சிப்பதிவில், இடம் பெறும் கருத்துகள்:

    (i) ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா?-என்ற புத்தகத்தில் குறிப்பிட்ட ஹதீஸ் முழுமையாக தரப்படவில்லை.
    (ii) விடுபட்ட பகுதியையும் தந்திருந்தால் “ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படும் என்பதும் அதன் காரணத்தால் ஹதீஸ்கள் நபித்தோழர்களால் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.” என்ற புத்தகத்தின் கருத்திற்கு அது இடமளிக்காது போயிருக்கும்.
    (iii) நபித்தோழர்களிடம் ‘குர்ஆனுக்கு முரணான ஹதீஸ்கள்’ என்ற அணுகுமுறை இருந்ததில்லை.
    (iv) தவிர தர்க்க அடிப்படையில், மேற்கண்ட அணுகுமுறை அவர்களிடம் இருந்ததாக கூறும் புத்தகத்தின் கருத்திற்கு உடன்படாததாலும், அந்த அணுகுமுறை நபித்தோழர்களிடம் இருந்ததாக ஏற்காததாலும், மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையில், நபிதோழர்களிடம் சாட்சிகளின் (எண்ணிக்கை) அடிப்படையில் ஹதீஸ்களை அணுகும்முறை இருந்தது என்றாகிறது.
    உமர் கூடுதலான இன்னொரு சாட்சியில்லாததை குறிப்பிட்டு அந்த ஹதீஸை நிராகரித்தார் இதுதான் விடுபட்ட செய்தி..இனி சிலவற்றை கவனிப்போம்.

    1. அந்த விடபட்ட செய்தியை இணைத்து மொத்தமாக பார்தால், கீழ்கண்ட நேரடியான கருத்துகள் கிடைக்கும்…

    (i) முதலில் குர்ஆனுக்கு முரணாகவும் ஹதீஸ்கள் இருக்கும் .

    (ii) குர்ஆனுக்கு முரணாக இருந்ததால் அதை ஒரு காரணமாக கூறி அந்த ஹதீஸை நபிதோழர் ஒருவர் – உமர்(ரலி) – நிராகரித்துள்ளார்கள் மற்றும் குர்ஆனுக்கு ஹதீஸ் முரண்படாது; முரண்படுவது ஹதீஸாகாது எனும் கருத்து அடிப்படையிலான அணுகுமுறையை நபிதோழர்கள் கொண்டிருந்தார்கள் எனும் செய்தியும் கருத்தும்.

    (iii) கூடுதலான இன்னொரு சாட்சியில்லாததையும் இரண்டாவது காரணாமாக குறிப்பிட்டு அந்நபிதோழர் அந்த சொல்லை முற்றிலும் நிராகரித்தார் மற்றும் சாட்சி அடிப்படையிலான அணுகுமுறையையும் நபிதோழர்கள் கொண்டிருந்தார்கள் எனும் செய்தியும் கருத்தும்.

    இன்னும் விளக்கமாக தர்க்கரீதியில் பார்த்தால் இன்னொரு தர்க்க கருத்தும் கிடைக்கும்.அது,

    (iv) உமரின் நிபந்தனையாக காட்சிபதிவில் இடம்பெற்றதின்படி, இருவர், தூதர் மீது குர்ஆனில் இல்லாததை சாட்சி கூறினால், குரானுக்கு முரண்பட்டாலும் உமர் ஏற்றுக்கொள்வார் மற்றும் சாட்சி அடிப்படையிலான அணுகுமுறையை மட்டும்தான் உமர் எனும் நபிதோழர் கொண்டிருந்தார் எனும் கருத்து.

    2. ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரணாக வரும் என்ற புத்தகதின் அடிப்படை கருத்துக்கும் செய்திக்கும் மேற்கண்ட எந்த கருத்தும் செய்தியும் மாற்றமாக அமையவில்லை…ஆகவே அடிப்படையில் ,கூடுதலான செய்தி வி(டுப)ட்டிருந்தாலும்,புத்தகம் எந்த தவறான செய்தியையும் தரவில்லை,அடிப்படை செய்தியையும் விடவில்லை… அடிப்படை கருத்திலும் மாற்றமில்லை.

    குர்ஆனுக்கு முரணாக இருந்ததால் அதை ஒரு காரணமாக கூறி அந்த ஹதீஸை நபிதோழர்கள் நிராகரித்துள்ளார்கள் எனும் புத்தகதின் செய்தியிலும் தவறில்லை.

    3. ஆனால் மேற்கண்ட ஹதீஸின் நான்காவது (iv)கருத்து , குர்ஆனில் இல்லாத முரணான ஒன்றை ஹதீஸ் அறிவித்ததனால் (மட்டும்)தான் உமர்(ரலி) நிராகரித்தார்கள் எனும் புத்தகம் தரும் இன்னொரு கருத்திற்கு மாற்றமாக உள்ளது…இது உண்மைதான்..இன்னிலையில் புத்தகம் தவறான கருத்தைதான் தந்திருக்கிறது.

    4. ஆனால் அந்த நான்காவது கருத்திற்கு அந்த ஹதீஸ் இடமளிக்குமானால் உமர்(ரலி) குர்ஆனுக்கு முரணானதையும் ஏற்றுகொள்பவராக இருந்தார் என்று முடிவெடுக்க வேண்டியிருக்கும் இதுவும் மெற்கண்ட ஹதீஸின் கருதாகவும் ஆக வேண்டியிருக்கும்-இது ததஜ வின் கருத்தல்ல ஸலபிகளின் (ஒளிப்பதிவு) கருத்து-இதனை சலபிகளும் ஏற்கமாட்டார்கள்.. ஹதீஸின் கருத்திற்குமுரண்பட வேண்டியிருக்கும்.

    5. மேலும் நான்காவது கருத்திற்கு அந்த ஹதீஸ் இடமளிக்குமானால் அதன் இரண்டாவது (ii) கருத்து அவசியமில்லாததாகி விடுவதுடன் இன்னொரு கோணத்தில் முரண்படவும் செய்கிறது…ஆனால் அதன் மூன்றாவது கருத்திற்கும் முதல் கருத்திற்கும் முரண்படவில்லை..

    சாட்சிகளின் அடிப்படையில்தான் உமர்(ரலி) குர்ஆனையும் ஹதீஸையும் அணுகினார் எனில் கருத்து அடிப்படையிலான அவருடைய அணுகுமுறை*(ii)யை அவசிய மற்றதாகி விடுகிறது… குர்ஆனிற்கு முரண்படுவதாக அவர் கூறிய காரணம் தேவையற்றதாகிறது…மேலும் சாட்சி அடிப்படையில் குர்ஆன், ஹதீஸை அணுகுபவருக்கு கருத்து அடிப்படையில் அணுகுவது அவருடைய முதல் அணுகுமுறைக்கு மாற்றமாகும் முரண்பாடாகும்…ஆகவே நான்காவது கருத்திற்கு ஹதீஸ் இடமளிக்குமானால் நேரடியான இரண்டாவது கருத்தும் செய்தியும் மற்றவையுடன் முரண்படுகிறது…ஆகவே நான்காவது கருத்து ஒரு செய்தியுடன்(ii) முரண்படுவதால், செய்தி கருத்துக்கு முதன்மையானது, என்பதன் அடிப்படையில், நான்காவது கருத்து ஹதீஸுக்கு முரணானதாகும்.

    6. ஆனால், இரண்டாவது கருத்து மூன்றாவது கருத்துக்கும் செய்திக்கும் இடமளிக்கிறது.. மேலும் கருத்து அடிப்படையில் குர்ஆன், ஹதீஸை அணுகுபவருக்கு சாட்சி அடிப்படையில் அணுகுவதானது அவருடைய முதல் அணுகுமுறைக்கு முரண்பாடாகாது மாற்றமாக முதல் அணுகுமுறைக்கு கூடுதல் வலுசேற்பதாகதான் அமையும்.…ஆகவே குர்ஆனுக்கு முரண்பட்டதால் தான் உமர்(ரலி) அவர்கள் அந்த ஹதீஸை நிராகரித்தார்கள் என்றாகிறது.. புத்தகமும் இக்கருத்தைதான் கூறுகிறது..தவறிழைக்கவில்லை..ஹதீஸை திரிக்கவும் இல்லை.

    7. அல்லாஹ் தனது திருமறையில் கற்றுத்தருவதின்படி..மூமின் ஒருவரிடம் ஒரு செய்தி வந்தால் முதலில் அதற்கான ஆதாரத்தைத்தான் அவர் கேட்க வேண்டும். அதன் பிறகுதான் அதுகுறித்து நீதியாக ஆராய்ந்து செயல்பட வேண்டும்…உமர்(ரலி) அவர்களும் அதையே பின்பற்றினார்கள்..சொல்லில் பெரியதை (குர்ஆனில் இல்லாததை,முரண்படுவதை) தூதர் (கூறியதாக அவர்) மீது ஒருவர் சாட்சி கூறும்போது , கூடுதலான இன்னொரு சாட்சியில்லாததை குறிப்பிட்டு அந்த சொல்லை உமர் (ரலி) நிராகரித்தார் என்பது குர்ஆனுக்கு முரண்படுவதற்கு சாட்சி கேட்டார் என்பதாகாது..மாறாக குர்ஆனுக்கு ஹதீஸ் முரண்படாது; முரண்படுவது ஹதீஸாகாது எனும் கருத்தில்தான் அதை உறுதிபடுத்துவதற்காக சாட்சி கேட்டார் என்றே ஆகும். இது குர்ஆனில் பல இடங்களில் அல்லாஹ் பின்பற்றிய முறைதான்…

    8. அல்லாஹ் குர்ஆனில் சத்தியத்தை கூறிவிட்டு, நிராகரிப்பவர்களிடம் அவர்கள் நிராகரிப்பார்களாயின் அதற்கான ஆதாரங்களை கேட்கிறான்…அவர்கள் கொண்டுவருவார்களெனில் அதற்கேற்ப சத்தியத்தை அல்லாஹ் அசத்தியமாக்குவதற்காக அல்ல..மாறாக ஆதாரமில்லாத அசத்தியத்தைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள் என்று தெளிவாக்குவதற்காகதான் அவ்வாறு கேட்கிறான்…உமரும் சத்தியத்திற்கு சாட்சி கேட்கவில்லை..அசத்தியதிற்குதான் சாட்சி கேட்டார்…

    9. மேலும் ‘விடபட்ட செய்தி’ எப்படி நபித்தோழர்களிடம் ‘குர்ஆனுக்கு முரணான ஹதீஸ்கள்’ என்ற (வெளிப்படையான*) அணுகுமுறை இருந்திருந்ததை இல்லாமல் ஆக்கும் என்பது தெரியவில்லை..

    10. ஆனால் ‘விடபட்ட செய்தியை’ பொருத்தளவில் அப்புத்தகத்தில் பதியப்பட்ட ஹதீஸ் பகுதியில் இது குறிப்பாகவும் இடம்பெற்றிருக்கிறது “ஒரு பெண்ணின் சொல்லுக்காக* நாம் அல்லாஹ்வின் வேதத்தையும், நபியின் வழிமுறையையும் கைவிடமாட்டோம்..”என்று ஓரிடதில் வருகிறது….இது விடப்பட்ட செய்தியை முழுமையாகவே விளக்கிவிடுகிறது.

    11. மேற்கண்ட நியாயங்களின் அடிப்படையில் பார்த்தால் புத்தகத்தில் எந்த தவறுமில்லை என்று புரிந்துகொள்ளலாம்…இருப்பினும் ஒளிப்பதிவில் இடம்பெறும் வீணான பயனற்ற தர்க்கத்திற்கு இடம் அளிப்பதை தவிர்க்குமுகமாகவும் அவர்களை திருப்தி செய்யும் முகமாகவும் அந்த விடுபட்ட செய்தியையும் மறுபதிப்பில் இணைத்து வெளியிடுவது இன்னும் நன்று…ஆனால் அது ஒருபோதும் அவர்களை திருப்தி செய்யாது என்பதுதான் உண்மை…அல்லாஹ்வே நன்கறிந்தவன்

    மனிதர்கள் தங்களுக்கிடையே நீதமாய் நடந்து கொள்வதுதான் இஸ்லாம்…அல்லாஹ் போதுமானவன்.

  2. i am comming islam

  3. dear brother imran vilakkam onnum puriyavillai.

  4. அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்.

    ஒரு ஹதீஸ், சனது சரியாக இருந்தாலும், குரானுக்கு முரண் என்றால் அதை நிராகரிக்க வேண்டும் என்ற கொள்கையில் பீ.ஜே-வாதிகள் இருக்கிறார்கள். இந்த கொள்கை பரிமாண வளர்ச்சி பெற்று இன்று, தன் புத்தி, நடைமுறை, அறிவியல் போன்றவற்றுக்கு முரண் என்றாலும் சனது சரியாக உள்ள ஹதீஸ்களை இவர்கள் நிராகரிக்க தொடங்கி விட்டார்கள். இந்த கொள்கையை இவர்கள் “நாங்கள் கண்டுபிடித்தது ” என்று சொல்லி கொண்டால், இவர்கள் உண்மையாளர்கள்.ஆனால் ஹதீஸ் கலையில் இவர்களின் போக்கு இருந்ததாக இட்டு கட்டுகிறார்கள்.

    குரானுக்கு ஒரு ஹதீஸ் தெளிவாக முரணாக தோன்றினால், அதில் சனதில் குறை நிச்சயமாக இருக்க வேண்டும். சனத்தில் குறை இல்லாமல் இப்படி பட்ட ஹதீஸ் வர வாய்ப்பில்லை. ஏன் என்றால் சனது மூலமாக தான் ஹதீஸ் வருகிறது. ஒரு செய்தி தவறாக இருக்குமேயானால் , சனத்தில் ஒரு நபர் , மறதியின் காரணமாகவோ, அல்லது பொய் சொல்லும் தன்மையினாலோ ,அந்த தவறை செய்து இருக்க வேண்டும். குரானுக்கு ஒரு ஹதீஸ் முரணாக இருக்கும் என்றால், அதில் சனத்தில் உள்ள எந்த நபர் தவறு செய்தார் என்பதை சுட்டி காட்ட வேண்டும். அந்த நபரை பலவீனமான அறிவிப்பாளர் என்று பிரித்து காட்ட வேண்டும்.

    ஒரு பெண் உமர் (ரலி) அவர்களிடம் ஒரு செய்தியை சொன்னபோது, அந்த செய்தி குரானுக்கு முரண் என்றும், “இந்த பெண் ” இதில் மறதியின் காரணமாக அல்லது புரியிதலின் காரணமாக தவறு செய்து இருப்பார் என்று , அந்த பெண்ணை பலவீனமான அறிவிப்பாளராக உமர் (ரலி) ஆக்குகிறார்கள். கூடுதலான இன்னொரு சாட்சியில்லாததன் காரணத்தாலும் , குரானுக்கு முரணாக சொல்லும் இந்த பெண் சொல்வதை ஏற்கக மாட்டேன் என்று உமர் (ரலி) அவர்கள் சொன்னார்கள். இதை போல தான் பீ.ஜே வாதிகள் சஹீஹ் ஹதீஸ்களை நிராகரிக்கிறார்களா?? பல பலமான அறிவிப்பாளர்கள் , பல சனதுகள் மூலமாக சொன்ன ஒரு முதவாசிர் ஹதீஸை கூட இவர்களின் புத்திக்கு முரணாக தோன்றினால் நிராகரிக்கிறார்கள். அதில் சனத்தில் உள்ல குறையை சுட்டி காட்டினார்களா? ஒவ்வொருவரும், அவர் புத்திக்கு முரண் என்றால் வெவ்வேரு ஹதீஸ்களை நிராகரித்து கொள்ளல்லாமா? அல்லது பீ.ஜே வாதிகள் தான் “குரானுக்கு முரண்” என்ற அளவுகோலை செய்ய வேண்டுமா என்று இவர்கள் தெளிவாக சொல்ல வேண்டும். குரானுக்கு முரண் என்று பல வழிகெட்ட கூட்டங்கள் பல ஹதீஸ்களை நிராகரித்து உள்ளார்களே, அவர்களின் அடிப்படையும், உங்கள் அடிப்படையும் ஒன்று தானே. அடிப்படைகள் ஒன்றாக இருக்கு. ஆனால் அவர்கள் நிராகரிக்கும் ஹதீசகளை நீங்கள் ஏற்றுள்ளீர்கள் என்றால், இந்த அடிப்படையின் மூலம் சமமான முடிவுகள் வராது என்று தெளிவாகிறது. ஏன் என்றால், அவர் அவர் புத்திக்கு வெவ்வேரு ஹதீஸ்கள் பிடிக்காமல் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *