Featured Posts
Home » பொதுவானவை » ‘இல்லை’ என்பதா பகுத்தறிவு?

‘இல்லை’ என்பதா பகுத்தறிவு?

தீவிர கடவுள் மறுப்பாளராக இருந்த பெரியார். ஈ.வெ.ராமசாமி அவர்களிடம் ஒரு ஆத்திகர், “ஐயா! கடவுள் இல்லை என்கிறீர்களே! ஒருநாள் கடவுள் உங்கள் முன் தோன்றி நான்தான் கடவுள் என்றால் என்ன செய்வீர்கள்?” என்றதற்கு, பெரியார் “கடவுள் உண்டு என்பேன்!” என்றாராம்!

கடவுள் இல்லை எனும் நாத்திகர்கள் “லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரஸூலுல்லாஹ்” என்ற இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையான “வணக்கத்திற்குரிய கடவுள் இல்லை; அல்லாஹ் ஒருவனைத் தவிர!” என்ற நம்பிக்கையில் முதல் பாதியை நம்புகிறார்கள் என்றால் ஆச்சரியப் படுவீர்கள்! ஆம்! இஸ்லாமும் கடவுள் இல்லை; அல்லாஹ்வைத் தவிர! என்றே சொல்கிறது!!

நாத்திகர்களின் கடவுள் மறுப்புக்கு காரணம், அவர்களிடம் கடவுளாகச் சொல்லப்பட்டவை சாதாரண மனித இயல்புகளைக் கொண்டிருப்பதாலும், கடவுள் என்ற பெயரைச் சொல்லி பாமர மக்களை ஏய்த்துச் சிலர் பிழைப்பு நடத்தியதாலும் ஏற்பட்ட சலிப்பே ஆகும். கடவுள் என நம்பப்படும் சக்தி மனிதச் சக்தியை விடவும், அதேசமயம் பாமரரும் நம்பும் படியான வலிமைமிகு சக்தியாக இருக்கவே மனித மனம் விரும்பும். மனிதர்களின் பலவீனங்களைக் கொண்டவற்றை கடவுளாக ஏற்க பகுத்தறிவு விரும்பாது.

நாத்திகர்களின் கடவுள் மறுப்பு வலுப்பெறக் காரணம், அவர்களிடம் கடவுள் என்று போதிக்கப் பட்ட அவதாரங்கள் பெரும்பாலும் மனிதனின் கற்பனைக்குள் அடக்கக் கூடியப் பண்புகளைக் கொண்டு இருந்தன. அதனைவிட மிரட்சியூட்டும் அல்லது சக்தியுள்ளதாக சித்தரிக்கப்படும் இன்னொரு கடவுள் அறிமுகப்படுத்தப் படும்போது எழுந்த தொடர் சோர்வே கடவுள் மறுப்பு வலுப்படக் காரணமாக இருந்திருக்கும். இஸ்லாத்தில் கடவுளுக்கான இலக்கணம் மனித கற்பனைகளுக்கு அப்பாற்பட்ட சக்தியாகச் சொல்லப்பட்டுள்ளது. என்னதான் பகுத்தறிவுவாதம் செய்தாலும், இஸ்லாத்தின் கடவுள் பற்றிய குறிப்பில் குறை காண முடியாது!

ஆதிமனிதன் கடவுளாக வழிபட்ட பஞ்ச பூதங்கள், மனிதனுக்கு பயத்தை மட்டுமே ஏற்படுத்தி, தன்னை விட ஒரு சக்தி உண்டு என நம்பும் சூழலை ஏற்படுத்தின. தொழில் நுட்பங்களாலும் நாகரிகத்தாலும் வளர்ச்சியடைந்த மனிதன், பஞ்ச பூதங்களை அடக்கி ஆளும் வல்லமையை ஓரளவு பெற்றதன்பின் அவற்றின் மீதான பயம் விலகி கடவுள் இல்லை என்ற முடிவுக்கு வந்து விட்டான். அதனால்தான் சிலைகளை வணங்கும் தற்கால கடவுள் நம்பிக்கையாளர்கள் பயங்கர ஆயுதங்களுடன் வீற்றிருக்கும் கடவுள் சிலைகளுக்குப் பதில் மென்மையான முகம் கொண்ட சாகசக் கதாபாத்திரங்களையும் கடவுள் என்று ஏற்றுக் கொண்டுள்ளனர்.

தற்கால கோவில் சிற்பங்களில் வடிக்கப்பட்டுள்ள பெரும்பாலான கடவுள் சிலைகளின் பாவனைகள் மனிதனை பயம்கொள்ளச் செய்யும் வண்ணமே இருக்கின்றன.சிலை வழிபாட்டளர்கள் அச்சிலைகளின் முகபாவங்களுக்குப் பயந்து வழிபடுவதில்லை; ஈட்டி, அரிவாள், வேல், திரிசூலம் போன்ற பண்டைய ஆயுதங்களைவிட பேரழிவு ஆயுதங்களை தற்கால மனிதன் அனாயசிமாகக் கையாள்வதால் அத்தகைய ஆயுதங்களுடன் வீற்றிருக்கும் கடவுள் சிலைகள் மீதான பயம் அறவே இல்லை என்பது உறுதி.

கடலைப் பிளத்தல், காற்றில் மிதத்தல் போன்ற அற்புதங்களைச் செய்யும் கடவுள்களைவிட மனிதனின் சாகாசங்கள் மிகைத்து விட்டன. ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்தை அடைய நாட்கணக்கில் பயணம் செய்த மனிதன், தற்போது துரிதகதியில் அடைந்து விடுகின்றான். ஆக, அற்புதங்களைச் சொல்லி இறைநம்பிக்கை கொள்ளச் செய்வது முன்பை விட சற்று கடினம்.

அதேபோல், கிறிஸ்தவர்களின் கடவுள் நம்பிக்கையான இறைவனுக்கு மகன் உண்டு என்பது. கடவுளின் மகனால் முடியுமெனும் போது மகனின் தயவின்றி தந்தையால் அதைவிட அதிகமாக முடியும் என்பதும், அல்லது தந்தையை வி

3 comments

  1. மரைக்காயர்

    நாத்திகத்தை ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தில் அணுகியிருக்கிறீர்கள். புதிதாக இருக்கிறது.

    ஈ.வெ.ராமசாமி அவர்களின் கொள்கைகளை கவனித்துப் பார்த்தால் ஒரு உண்மை விளங்கும். அவர் கடவுள் மறுப்பை விட சாதி வேறுபாடுகளையும், கடவுள் பெயரால் போதிக்கப்படும் மூட நம்பிக்கைகளையுமே அதிகமாக எதிர்த்திருக்கிறார். இந்த இரண்டு சமூகக் கொடுமைகளையும் கைவிட முடியாதவர்கள்தான் ஈ.வெ.ரா அவர்களை கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள். இன்றும் எதிர்த்து வருகிறார்கள்

  2. நல்லடியார்

    மரைக்காயர்,

    சிந்திக்க மாட்டீர்களா? என்று இஸ்லாம் சொல்வதையே பெரியார் தனக்கேயுரிய பாணியில், ‘சிந்திக்க மறுப்பவர்களை மூடர்கள்’ என்று சொல்லி இருக்கிறார். பெரியாரின் குடும்பப் பின்னனி இந்து மதம் தொடர்புடையதாக இருந்ததாலும், முன்னோர்கள் தீவிர ஆத்திகர்களாக இருந்ததாலுமே அவரின் எதிர்ப்புகள் இந்து மதத்தை நோக்கியே அதிகம் இருந்தன.

    இந்து மதம் புத்துணர்வு பெறவேண்டும் என்று வரிந்து கட்டிக் கொண்டு வலைப்பூக்களில் எழுதும் அன்பர்கள், பெரியாரின் இந்த நியாயமான அணுகுமுறையை உணர மறுப்பதற்கு நீங்கள் சொன்னதுபோல், “இரண்டு சமூகக் கொடுமைகளையும் கைவிட முடியாதவர்கள்தான் ஈ.வெ.ரா அவர்களை கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள். இன்றும் எதிர்த்து வருகிறார்கள்” என்பது சரியே!

    தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  3. //அதேபோல், கிறிஸ்தவர்களின் கடவுள் நம்பிக்கையான இறைவனுக்கு மகன் உண்டு என்பது. கடவுளின் மகனால் முடியுமெனும் போது மகனின் தயவின்றி தந்தையால் அதைவிட அதிகமாக முடியும் என்பதும், அல்லது தந்தையை விட மகனால் இன்னும் சிறப்பாகச் செய்ய முடியும் என்றும் அல்லது மனிதர்களைப் போலவே மனைவி, மகன் கடவுளுக்கும் குடும்பம் உண்டு என்று சொல்லப் படும்போது, தனக்கிருக்கும் பிரச்சினைகள் போலவே கடவுளுக்கும் இருக்கலாம்! என்றும் எண்ணத் தோன்றும். //

    இயேசு தேவனுடைய குமாரன் என்றால் தேவனுக்கு மனைவி உண்டு, இருவரும் உறவு கொண்டு கருத்தரித்து குமாரன் உருவானர் என்று எந்த கிறிஸ்தவரும் அர்த்தம் கொள்ளுவதில்லை. இஸ்லாமியரே இங்ஙனம் அர்த்தம் கொள்கின்றனர்.

    கடவுளுடைய படைப்பு ஏசு. அதனாலேயே ஏசு தேவனை பிதா என்றும் ஏசு தேவனுடைய குமாரன் என்றும் கூறப்படுகிறது

    பைபிளில் கடவுளின் முதற்பேறான குமாரன் என்று வரும். அதாவது ஆங்கிலத்தில் FirstBorn.

    இதன் அர்த்தம் தேவனின் முதல் படைப்பு இயேசு. இயேசுவே மற்ற அனைத்தையும் படைத்தார்.
    (Colossians 1:15)-ல் இயேசுவைபற்றி சொல்வதைப் பாருங்கள்
    [15] He is the image of the invisible God, the first-born of all creation;
    [16] for in him all things were created, in heaven and on earth, visible and invisible, whether thrones or dominions or principalities or authorities — all things were created through him and for him.
    [17] He is before all things, and in him all things hold together.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *