Featured Posts
Home » பொதுவானவை » அவதூறுகளின் வயது 1426

அவதூறுகளின் வயது 1426

இஸ்லாமியவாதம்-பழமைவாதம்-பெண்ணடிமைவாதம்-தீவிரவாதம்- என அவதூறுகள் சொல்லி “வாதம்” பிடித்து இன்னும் எத்தனை நாளைக்குத்தான் அலையப் போகிறார்களோ? குர்ஆன்மீதும் நபிகளார்மீதும் சுமத்தப்படும் இத்தகைய அவதூறுகளுக்கு வயது 1426. என்ன ஆச்சரியம்! எத்தனை அவதூறுகள் வீசப்பட்ட போதிலும் வீழாமல் புன்முறுவலுடன் இஸ்லாம் வளர்ந்து வருகிறது.



செப்டம்பர்-11, 2001 அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் வீழ்ந்தபோதே அமெரிக்காவில் வீழ்ந்திருக்க வேண்டிய இஸ்லாம் தான் அமெரிக்காவில் இன்று வேகமாகப் பரவும் மதம்! உலகின் அதிவேகமாக வளரும் மதம் இஸ்லாம். உலகில் அதிகமான மக்களால் 90%க்கும் மேல் முழுமையாக வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட மதம் இஸ்லாம். கிறிஸ்தவ ஐரோப்பாவின் இரண்டாவது மதம் இஸ்லாம்!

வல்லரசுகளுக்கு என்னவாயிற்று? முஸ்லிம்களெல்லாம் வாளை எடுத்துக் கொண்டு போர் செய்து இஸ்லாத்தை பரப்ப ஆரம்பித்து விட்டார்களா? அணு குண்டுகளுக்குக் கூட அஞ்சாத அமெரிக்கா இன்று இஸ்லாத்திற்கு அஞ்சுவது ஏன்?

உலகிலுள்ள அனைவரும் அமைதியாகவும், அன்பாகவும் இருக்கிறர்களா? முஸ்லிம் அல்லாத பெண்கள் எல்லாம் சுதந்திரம் என்ற பெயரில் கண்ணியமாக இருக்கிறார்களா? இஸ்லாம் தவிர உலகில் ஏனைய பிரச்சினைகளே இல்லையா?

உலக மக்களுக்கு எதிராக அப்படி என்னதான் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளது? சக மனிதனை கொல்லச் சொல்வதாக அவதூறு செய்யப்படும் ஒரு கொள்கையை நோக்கி குடும்பம் குடும்பமாக ஏன் இந்த படையெடுப்பு? அடக்குமுறை செய்யப்படுகிறது என்று சொல்லப் படும் ஒரு கொள்கையை நோக்கி அணியணியாக பெண்கள். உண்மையில் என்னதான் நடக்கிறது?

இஸ்லாத்தின் மீது சேற்றை அள்ளிப் பூசிக் கொண்டிருப்போர் நியாயமான விமர்சனங்களை மேற்கொள்வதில்லை. தங்களின் மூடத்தனமும் குற்றங்களும் இஸ்லாத்திற்கு எதிராக இருப்பதால் நியாய உணர்வுகளை அவர்களால் மதிக்க முடிவதில்லை. இஸ்லாமியக் கோட்பாடுகளும் கட்டுப்பாடுகளும் மனித இனத்திற்கு நலம் சேர்ப்பதை இவர்கள் சரியாகப் புரிந்து கொள்வதில்லை அல்லது புரியாதது போன்று நடிக்கிறார்கள்.

இஸ்லாத்தில் பெண்கள் கொடுமைப்படுத்தப் படுகிறார்கள் எனச் சொல்லுவோர்தான் பெண்களை உயிருடன் ‘சதி’ செய்து எரிக்கிறார்கள். பெண்கள் மீதான கட்டுபாடுகள் அதிகம் என்போர் தங்கள் பெண்களை தேவதாசிகளாக்குவதில்லை. கணவன் இறந்து விட்டால் இனி வாழ்நாளெல்லாம் விதவைக் கோலம்தான். பர்தா போட்டு மூடச்சொல்கிறார்கள் என்போர் ‘தோசம்’ எனச்சொல்லி அடக்கி வைக்கிறார்கள்.

இவர்களால் இஸ்லாத்தை தூற்றத்தான் முடிகிறதே தவிர மாற்றாக ஒரு சிறந்த கொள்கையை அல்லது தங்கள் மதத்தின் நல்ல பக்கங்களைக்கூடச் சொல்ல முடிவதில்லை. ஐயகோ, என்னே இவர்களின் கரிசனம்?

எல்லாம் சரி, குர்ஆனில் போரிடச் சொல்லவில்லையா? போரிடச் சொன்னது உண்மைதான். ஆனால் அப்பாவிகள் மீதல்ல. அநியாயக்காரகள் மீது! சுவாசத்தை தடுப்பவர்கள் மீது! தங்கள் கடவுள்களை நம்ப மறுத்தார்கள் என்பதற்காக ஊரையும் நாட்டையும் விட்டு வெளியேற்றியவர்கள் மீது!

2:190 உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள். ஆனால் வரம்பு மீறாதீர்கள். நிச்சயமாக
அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.

4:75 பலஹீனமான ஆண்களையும் பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக, அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் போர் செய்யாதிருக்கக் காரணம் யாது? (அவர்களோ) ‘எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் இருக்கும் இவ்வூரைவிட்டு எங்களை வெளிப்படுத்துவாயாக. எங்களுக்காக உன்னிடமிருந்து தக்க ஒரு பாதுகாவாலனை அளித்தருள்வாயாக. இன்னும் எங்களுக்காக உன்னிடமிருந்து ஓர் உதவியாளனையும் அளித்தருள்வாயாக” என்று பிரார்த்தனை செய்கிறார்கள்.

22:39 போர் தொடுக்கப்பட்டோருக்கு – அவர்கள் அநியாயம் செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்பதனால் (அவ்வாறு போர் தொடுத்த காஃபிர்களை எதிர்த்துப் போரிடுவதற்கு) அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. நிச்சயமாக அவர்களுக்கு உதவி செய்ய அல்லாஹ் பேராற்றலுடையவன்.

மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள். உங்கள் மீது அடக்குமுறை அவிழ்த்து விடப்பட்டால் அமைதியாகப் போவீர்களா? உங்கள் குழந்தைகளும், பெண்மக்களும் அநியாயமாக வெளியேற்றப்பட்டால், எதிரிகளின் கைகளை முத்தமிடுவீர்களா? உலகில் எத்தனை முஸ்லிம் நாடுகள் போரிட்டுக் கொண்டிருக்கின்றன? உங்கள் அண்டை வீட்டுக்காரன், உங்களை குண்டு வைத்து கொல்ல வந்தானா? எத்தனை முஸ்லிம்கள் கூட்டமாக வந்து கற்பழித்தார்கள்?

3 comments

  1. //இஸ்லாத்தின் மீது சேற்றை அள்ளிப் பூசிக் கொண்டிருப்போர் நியாயமான விமர்சனங்களை மேற்கொள்வதில்லை. தங்களின் மூடத்தனமும் குற்றங்களும் இஸ்லாத்திற்கு எதிராக இருப்பதால் நியாய உணர்வுகளை அவர்களால் மதிக்க முடிவதில்லை. இஸ்லாமியக் கோட்பாடுகளும் கட்டுப்பாடுகளும் மனித இனத்திற்கு நலம் சேர்ப்பதை இவர்கள் சரியாகப் புரிந்து கொள்வதில்லை அல்லது புரியாதது போன்று நடிக்கிறார்கள்.//

    இஸ்லாத்தைத் தூற்ற முனைபவர்கள், அதற்கு மாற்று என்ன என்று கேட்கப்பட்டால் பதில் சொல்ல முடியாமல் தங்களின் கையாலாகாத்தனத்தை அசட்டுச் சிரிப்பால் மறைக்க முயல்கிறார்கள். இஸ்லாத்தை தூற்றுவதாக நினைத்து தங்களை அறியாமல் இவர்களே இஸ்லாத்தை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

    ‘இஸ்லாம் வன்முறையை வளர்க்கிறது’ என்கிற outdated வாதத்தை தூக்கிப்பிடித்துக்கொண்டு அலையும் இவர்கள் டோனி பிளேரின் சமீபத்திய அறிக்கைகளை படித்தாவது தங்கள் முட்டாள்தனத்தை உணர்ந்து கொள்வார்களா?

    டோனி பிளேர் பிரிட்டன் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரையின் ஒரு பகுதி:

    “..And I say to our Muslim community. People know full well that the overwhelming majority of Muslims stand four square with every other community in Britain. We were proud of your contribution to Britain before last Thursday. We remain proud of it today. Fanaticism is not a state of religion but a state of mind. We will work with you to make the moderate and true voice of Islam heard as it should be.

    http://www.number-10.gov.uk/output/Page7903.asp

  2. Hi, I used to vist Tamil Blogs. It is interesting to exhcnage the inter-faith dialogue to understand the religion.

    Recently I encountered to visit a website where I notice an interesing question posted there. I forgot the site name but emailed to my friend. So, it is pretty to cut & paste it here.

    1) Why a nun can be covered from head to toe and she’s respected for devoting herself to God, but when a Muslimah does that, she’s “oppressed”?

    2) Why a jew & Sikh can grow a beard and he’s just practicing his faith, and when a Muslim does that, he’s an extremist?

    3) When a western & Asian woman stays at home to look after the house and kids she’s sacrificing herself and doing good for the household, but when a Muslim woman does so, she “needs to be liberated”?

    4) Why is it that when a child dedicates himself to a subject, he has potential, and when a child dedicates himself to Islam, he is hopeless?

    5) When a christian & jews kills someone, religion is not mentioned, (i.e. IRA) but when a Muslim is charged with a crime, it’s Islam that goes to trial?

    But then again, why is it after all that, Islam is still the fastest growing religion in the world?

    The moderator can delete it if not worthy to read.

  3. Enjoyed your Blog. Continue your great job. Thanks
    I wanted just to mention an interesting site about Religions. With more than 500 pages, Religion News and Articles: Religion Universe: Buddhism, Christianity, Hinduism, Islam, Judaism, Taoism (Daoism) and many others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *