Featured Posts
Home » பொதுவானவை » பந்தாடப்படும் பெண்மை

பந்தாடப்படும் பெண்மை

சானியா மிர்ஜா – ஊடகங்களின் இன்றைய தலைப்புச் செய்தி. இதுவரை கிரிக்கெட் மோகம் கொண்டிருந்த இந்திய விளையாட்டு ரசிகர்களை டென்னிஸ் பக்கம் திரும்ப வைத்த இளம் இந்திய மங்கை. ஆந்திராவைச் சார்ந்த முஸ்லிம் பெண். வயது 19. பெற்றோர் இம்ரான் மிர்ஜா – நசீமா.

இதுவரை சினிமா நடிகைகளின் ஆடைகளும், அணிகலன்களும்தான் இந்திய மங்கைகளின் மாடல். ஆனால் இன்று மூக்குத்தி, கண்ணாடி என அணிகலன்களிலும் சானியாவின் தாக்கம்.

லியண்டர் பயசும், விஜய் அமிர்தராஜும் விளையாடிய போது கண்டு கொள்ளப் படாமல் இருந்த டென்னிஸ், சானியா வந்த பிறகு தேசிய கவனத்தை ஈர்த்தது ஏன்? எல்லாம் இஸ்லாம்.!!!

அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் 2005 போட்டியில் நான்காவது சுற்று வரை வந்த முதல் ஆசியப் பெண். இதில் கலந்து கொண்டபோதும் இதற்கு முன்பும் போட்டியில் அணிந்திருந்த உடை (Skirt) ஆபாசமாக இருக்கிறது. உடை விசயத்தில் முஸ்லிம் பெண்களுக்கு சானியா தவறான முன்மாதிரியாகிறார் என்று ஒப்புக்கு சொல்லி வைத்தார் ஒரு இஸ்லாமிய மத அறிஞர் (மெளலவி).

தொலைந்தது போங்க. ஒட்டு மொத்த விளையாட்டு ஆர்வலர்களும், பெண்ணுரிமைவாதிகளும்? வரிந்து கட்டிக் கொண்டு களமிறங்கி விட்டார்கள். வலைப்பூவிலும் அங்கங்கே விவாதங்கள்.

“இவருடைய சாதனைக்குக் குறுக்காக இவர் மீது இசுலாமியத்தீவிரவாதிகள் இவர் இது மாதிரி அரைக்கால் பாவாடை அணியக்கூடாது, கவர்ச்சியாக இருக்கிறது என்று விமர்சித்து வருகிறார்கள். ஆபாசம் சானியாவிடமா இல்லை இவர்கள் கண்கள் மீதா என்ற கேள்வி எழுகிறது. இது மாதிரி குற்றம் சாட்டுபவர்கள் மனிதாபிமானமற்ற, பெண்கள் மீது இரக்கமில்லாதவர்கள் என்று இவர்களை மக்கள் ஒதுக்கித்தள்ளும் காலம் வெகுதூரம் இல்லை.” – அமலசிங்

“உலமா கவுன்சிலைச் சேர்ந்த மவுலானா மகமூத் தரியாபாதி கூறுகையில், “டென்னிஸ் ஒரு விளையாட்டுதானே தவிர, `பேஷன் ஷோ’ அல்ல” என்றார். சானியா அணியும் உடை மற்றவர்களை சங்கடப்படுத்துவதாக இருந்தால் தனது உடம்பை மறைத்தபடி உடை அணிந்து விளையாடும் பொறுப்பு அவருக்கு உள்ளது என்றும் கூறினார்.” – சஞ்சய் ராமசாமி

“சுப்பு: சரி நம்ம கோயம்புத்தூர் பொண்ணு நிருபமா வைத்தியநாதன் கூட நல்லாதான் விளையாண்டுது, அவளும் ஆஸ்திரேலிய ஒப்பன் டென்னிஸ்ல 2-வது சுற்று வர வந்தா, அவள ஏன் இவ்வளவு தூக்கி வைக்கல? சானியா ஆஸ்திரேலிய ஒப்பன் டென்னிஸ்ல 3-வது சுற்று வந்த ஒடனேயே தூக்கிடாங்கலப்பா?” – அல்வாசிட்டி.சம்மி

“மும்தாஜ், சதா, ஜீனத் அமன், நக்மா, போன்ற கவர்ச்சி நடிகைகளின் உடை(இல்லா) க்கு வராத எதிர்ப்பா சானியா மிர்ஸாவுக்கு..??” – மூக்கு சுந்தர்

“விளையாட்டுக்குள்ளும் மதம் மூக்கை நுழைப்பது துரதிருஷ்டவசமானது.தான் விளையாடும் விளையாட்டுக்குப் பொருத்தமான உடையணியும் உரிமை சானியாவுக்கு உள்ளது. இதைக் கண்டிப்பது அநாகரீகம். & சானியாவை முஸ்லீம் பெண்ணாக நான் பார்க்கவில்லை. ஒரு இந்தியப் பெண்ணாக, எங்கள் குடும்பப் பெண்ணாகத்தான் நான் பார்க்கிறேன். தான் பிறந்த நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் என்னுடைய சகோதரியாகத்தான் பார்க்கிறேன். ” – கோ.ராகவன்

“இந்தப் பெண்ணின் ஆளுமை / தன்னம்பிக்கை முகத்தில் ஒரு தேஜஸ் – இதெல்லாம் இவர் நிச்சயம் சரித்திரம் படைக்கப் போகிறார் என்று சொல்கிறது. விம்பிள்டன் ரொம்ப தூரம் இல்லை” – அருணா ஸ்ரீன்ரிவாசன்

“ஜான் மெக்கன்ரோ சொன்னது போல யாருமே கண்டுக்கொள்ளாத இரட்டையர் ஆட்டத்தை விட்டு சானியா மிர்சா வுக்கு உதவி செய்வதில்தான் மகேஷின் புத்திசாலித்தனம் இருக்கிறது போலும்.” – ஆனந்த் விநாயகம்

“அவங்க கேள்வி என்னன்னா, பசங்க மட்டும் முழங்கால் நீளத்துக்கு கால்சட்டையும், தொள தொளன்னு கைவச்ச சட்டையும் போட்டு விளையாடும்போது, இந்தப் பொம்பள பசங்க மட்டும் ஏன் அதுக்கு எதிர்மறையா போட்டு விளையாடுறாங்கன்னுதான். பசங்க மாதிரியே போட்டுக்கிட்டா என்னன்னு இந்த தடவை சீர்யசா கேட்டாங்க. ‘தெரியலை, வேண்ணா ‘எங்க மக்கள்’கிட்ட கேட்டு சொல்றேன்’ அப்டின்னு சொன்னேன். சானியா மிர்ஸாவுக்கு எதிரா வந்த குற்றச்சாட்டு மாதிரி இல்ல இது. ” – தருமி

ஒரு பெண் டென்னிஸ் விளையாடுவது ஏன் இப்படி விவாதிக்கப் படுகிறது? அவர் போட்டியில் அணிந்திருக்கும் உடை ஆபாசமாக இருக்கிறது என்று சொன்னால், விளையாட்டில் மதம் மூக்கை நுளைக்கக் கூடாது என்ற கூக்குரல். சம உரிமை, பெண்னுரிமை என்று சொல்லும் இஸ்லாம் பெண்கள் விளையாடுவதை தடுக்கிறதா?

இல்லை. பார்க்க:

http://www.islamonline.net/English/News/2004-05/22/article05.shtml
http://www.dailytimes.com.pk/default.asp?page=story_17-2-2005_pg2_8
http://news.bbc.co.uk/2/hi/middle_east/3570040.stm

During the Olympics, several female athletes wore headscarfs
‘No. This is not a hurdle. In fact by covering our bodies we feel more secure
Women athletes have already proven their capabilities in different fields.

ஆணும்-பெண்ணும் சமம் என்று கருதும் இஸ்லாம் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள உடலியல் ஈர்ப்பை கருத்தில் கொண்டு சில வரைமுறைகளை வகுக்கிறது. அப்படி ஒன்னும் யாரும் சொல்லாததை அந்த மத அறிஞர் சொல்லவில்லை. கவர்ச்சியான உடையை தவிர்க்க வேண்டும் என்றே சொன்னார். இதிலுள்ள மிகப்பெரிய தவறு சொன்னவர் ” இஸ்லாமிய அறிஞர்” அவ்வளவுதான்.

டென்னிஸ் சீருடைவிதி (Dress Code):

சரி, டென்னிஸ் விளையாட்டு கவர்ச்சியைக் காட்டுவதற்கா?அல்லது திறமையைக் காட்டுவதற்கா? என்றால், ஏன் கவர்ச்சியைப் பார்க்கிறீர்கள், விளையாட்டை பாருங்கள் என மேதாவித்தனமான தத்துவங்கள். கவர்ச்சி பார்ப்பவரின் கண்களில்தான் இருக்கிறது என்ற சினிமா நடிககைகள் சொல்லும் சப்பைக் கட்டு வேறு.

டென்னிஸ் விளையாடுபவர்கள் ஸ்கர்ட் (Skirt) தான் அணிய வேண்டும் என்ற விதி எதுவும் இல்லை. டென்னிஸ் வீரரின் உடை விதிமுறைகளைப் பற்றி சொல்லும்போது,

It’s not that they have to wear skirts in tournaments. The Wimbledon Web site’s FAQ section answers the question “What is the dress code for The Championships?” with this redundant answer: “Players’ dress is predominantly white (‘almost entirely white’).” No mention of skirts. Similarly, the Women’s Tennis Association, which organizes the premier women’s international tour, forbids sweat shirts, sweat pants, T-shirts, jeans, and cut-offs during matches, but doesn’t mention skirts.”

அதாவது வெள்ளை உடை அணிய வேண்டும். அதிகம் வியர்வை வரவழைக்கும் உடைகளை தவிர்க்க வேண்டும் என்றே சொல்கிறது.

சில வருடங்களுக்கு முன் நடந்த அமெரிக்க ஓப்பன் டென்னிஸில் பாரம்பரிய வெள்ளை சீருடையை தவிர்த்து முதுகைக் காட்டும் மஞ்சல் நிற (Backless Yellow Pandex Dress ) உடையை வீனஸ் வில்லியம்ஸ் அணிந்து விளையாட எதிர்ப்பு எழுந்தபோது, 1933 ஆம் வருடம் ஹெலன் ஜாகோப்ஸ் சார்ட்ஸ் (Shorts) அணிந்து விளையாடியதையும் இன்னும் பலர் வெவ்வேறு உடைகளில் (முழுக் கால்சட்டை மற்றும் ஜட்டி தெரியும் சார்ட்ஸ் (Panty Flash Skirt) அணிந்ததை சுட்டிக்காட்டி, தனக்கு தோதான உடை அணிந்து விளையாடும் உரிமையுள்ளது என்றார்.

37 comments

  1. நல்ல தொகுப்பு நல்லடியார்.

    // சந்திரவதனா இப்படியும் கேட்டுள்ளார்.
    அதற்காக ஒரு பெண் தான் விரும்பி அணியும் உடைகள் பற்றி நாம் விமர்சனம் செய்யத் தேவையில்லை. அவளது ஆடை குறைப்பினால்தான் ஆண் தவறினான் என்பது வெறும் சப்பைக்கட்டே. திரண்ட புஜங்களையும், விரிந்த மார்பகங்களையும், நிமிர்ந்த தோற்றங்களையும் கண்டு பெண்களெல்லாம் ஆண்கள் மேல் ஆசை கொண்டால்… அதற்கு ஆண்களின் ஆடை குறைப்பின் மேல் யாராவது குற்றம் சொல்வார்களா? //

  2. தேவையற்ற சர்ச்சை, மதத்தின் பெயரால் இப்படிக் குட்டையைக் குழப்புவது தவிர இந்த மெள்ல்விகளுக்கு வேறு வேலையே இல்லையா. சானியாவைப் பற்றி கவலைப்படாதீர்கள், அமீனாக்களைப் பற்றிக் கவலைப்படுங்கள். முஸ்லீம் பெண்களிடயே எழுத்தறிவு மிகவும் குறைவாக இருக்கிறது. அதையெல்லாம் விட இதுதான் உங்களுக்குப் பெரியப்பிரச்சினை.

    மிஞ்சிப்போனால் சானியா குடும்பத்தினை மதத்திலிருந்து விலக்கி வைத்து விடுவீர்களா. அப்படி வைத்தாலும் அவர் குடும்பத்தினை ஏற்க பல மதங்கள் உள்ளன. அவரது சாதனைகளை நினைத்துப் பெருமைப்படாமல் இப்படி முட்டாள்தனமாக நடந்து கொள்ளும் இந்த மெளல்விகளால் தொல்லைகள்தான் அதிகம். இரானில் என்ன நடக்கிறது என்று எங்களுக்கும் தெரியும். அடிப்படைவாதிகள் கையில் ஆட்சி இருந்தால் என்ன நடக்குமோ அதுதான் அங்கு நடக்கிறது.

  3. இறை நேசன்

    An marvalous Timely collection – Thank you Nalladiyar.

    //Armstrong said she didn’t think the extra clothing would distract other players, or hamper her abilities on the court.//

    If one will think only to improve game then surely she will like this armstrong ststement.

    But some persons need to improve their name only, that’s why some ladies like SANIA not only from ISLAM from all religions like the politicians.

    And some “Preymaanantha’s” also needs like this dressing not to enjoy the game. That’s why “THEY” like this.

    Actually “THEY” need like this dressing – For not seeing game, for seeing ……..

    i want to ask these persons that Is “THEY” will allow their sisters, daughters, wife, mother to wear like this dresses?

  4. இறை நேசன்

    //சானியாவைப் பற்றி கவலைப்படாதீர்கள், அமீனாக்களைப் பற்றிக் கவலைப்படுங்கள்.//

    Yes “THEY”(Like ravi) will look SANIYA’S.

    //முஸ்லீம் பெண்களிடயே எழுத்தறிவு மிகவும் குறைவாக இருக்கிறது//

    Think about the goat!!!

    //மிஞ்சிப்போனால் சானியா குடும்பத்தினை மதத்திலிருந்து விலக்கி வைத்து விடுவீர்களா.//

    Wow! What a fantastic Question!!!!!

    First know about ISLAM. It’s not one’s Family Property.

    //அப்படி வைத்தாலும் அவர் குடும்பத்தினை ஏற்க பல மதங்கள் உள்ளன.//

    If she need no problem. Actually the problem is SHE IS IN ISLAM – But not obedient the Rules.Only saying by mouth not by Heart.

    If one person told I am INDIAN but he didn’t follow the Rules & Regulations of INDIAN Administration then what you say about him – Can you accept and encourage him?
    If you will then Indian government will arrest you and that man by “National Security Act” – Isn’t?

    This is happening here.

    //அவரது சாதனைகளை நினைத்துப் பெருமைப்படாமல் இப்படி முட்டாள்தனமாக நடந்து கொள்ளும் இந்த மெளல்விகளால் தொல்லைகள்தான் அதிகம்.//

    Yes disturbances to the “Premaanantha’s”!!!

    //இரானில் என்ன நடக்கிறது என்று எங்களுக்கும் தெரியும்.//

    Who ask this?

    Is any Muslims in India accept and follow them?

    Is this is the matter of SANIA’s Matter. Foolish Writing!

    //அடிப்படைவாதிகள் கையில் ஆட்சி இருந்தால் என்ன நடக்குமோ அதுதான் அங்கு நடக்கிறது.//

    Who told Irani’s are Fundamentalists? Is RAVI got any Islamic Degree from any MADARSA???!

    Don’t write anything without knowledge. My opinion is first go and read QURAN and study about ISLAM, then come with the “NESAM GROUP & Co. Pvt Ltd”

  5. இறை நேசன்

    //திரண்ட புஜங்களையும், விரிந்த மார்பகங்களையும், நிமிர்ந்த தோற்றங்களையும் கண்டு பெண்களெல்லாம் ஆண்கள் மேல் ஆசை கொண்டால்… அதற்கு ஆண்களின் ஆடை குறைப்பின் மேல் யாராவது குற்றம் சொல்வார்களா? //

    Good Question???!!!!!

    But upto now i didn’t hear any news like “An 80 year old lady rapped 5 year boy”

  6. நல்லடியார்

    // தனக்கு தோதான இஸ்லாமிய ஆடையில் பெண்கள் விளையாட அனுமதிக்கப் படவேண்டும் என்று உரிமை கோரும் ஈரானிய ஒலிம்பிக் சங்கத் துணைத் தலைவர். இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? //

    கோ.ராகவன்,

    இதைச் சொல்லி இருப்பவரும் அடிப்படைவாத ஈரானின் பிரதமரின் மகள்தான்.

    விளையாடக் கூடாது என்பதற்கும் கண்ணியமாக விளையாட வேண்டும் என்பதற்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.

    //மிஞ்சிப்போனால் சானியா குடும்பத்தினை மதத்திலிருந்து விலக்கி வைத்து விடுவீர்களா. அப்படி வைத்தாலும் அவர் குடும்பத்தினை ஏற்க பல மதங்கள் உள்ளன.//

    நன்றி. ரவி ஸ்ரீனிவாஸ்! இஸ்லாத்திலிருந்து வெளியே வந்தால் ஏற்க பல மதங்கள் உள்ளன என்பதில்தான் உங்கள் “மனிதாபிமானம்” தெரிகிறது!.

  7. Dear nalladiyar,

    you forgot two things..

    one is the issue of the dress came into picuture after a muslim cleric spoke about that.. no body spoke about all that when it was hindu girls. so its not somebody talking about her just because she is a muslim. I will not have any hesitation if my sister or daughter wants to wear a skirt like that and play. it certainly depends on your mentality.

    secondly, sania has said in an interview that she does not have any comments about the “fatwa”. Its sania who decided that she should wear the dress. In some of your earlier articles you had mentioned that Islam does not force anything on anybody esp. woman. i think this is forcing something on somebody..

    anbudan vichchu

    neyvelivichu.blogspot.com

  8. அன்பும் மரியாதையும் பெருமதிப்பும் கொண்ட நல்லடியாரே,
    முஸ்லீம் பெண்களுக்கு ஏன் உடைக்கட்டுப்பாடு பர்தா ?

    முஸ்லீம் ஆண்கள் எல்லாம் தங்கள் கண்ணைக் குத்திக் குருடாக்க்கிக் கொண்டால் அவர்கள் பார்வையில் இருந்து முஸ்லீம் பெண்கள் தப்பி விருவார்கள். so…பெண்கள் பர்தாவில் இருந்து விடுதலை.
    நீங்கள்தான் அல்லாவுக்காக எதுனாலும் செய்வீர்ளே ? முதலில் நீங்கள் ஆரம்பித்து வையுங்கள்.

  9. நல்லடியார்

    //முஸ்லீம் ஆண்கள் எல்லாம் தங்கள் கண்ணைக் குத்திக் குருடாக்க்கிக் கொண்டால் அவர்கள் பார்வையில் இருந்து முஸ்லீம் பெண்கள் தப்பி விருவார்கள்.//

    அன்பரே,மனதில் துவேசம் தழும்பி வழியும் உங்களின் பார்வையில்

    //24:30 (நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும். அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும். //

    என்ற வரிகள் படவில்லையா?அல்லது நீங்களும் குருடரா?

  10. //24:30 (நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும். அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும். //

    //என்ற வரிகள் படவில்லையா?அல்லது நீங்களும் குருடரா?//

    ஓ உங்களுக்கு இந்த வசனம் தெரியுமா?
    நான் தெரியாது என்று நினைத்தேன் sorry

    நீங்கள் (சானியா விளையாடுவதைப் பார்த்த அனைத்து முஸ்லீம் சகோதரர்களும்) புனித குரான் சொன்னபடி ஏன் பார்வையைத் தாழ்த்தவில்லை அன்பரே? பார்வையைத் தாழ்த்தி ஏன் குட்டைப் பவாடையைப் பார்க்கின்றீர்கள்? பெண்களுடன் பேசும் போது முகத்தைப் பார் என்னும் புது வசனத்தை புனித குரானில் இணைப்பதற்கு வேண்டுமானால் அன்னார் நபியிடம் வேண்டுகோள் வைப்போம்.

    நாங்கள் பர்தா போடுவது போல் நீங்களும் உங்கள் பார்வையைத் தாழ்த்திக் கொள்ள(சரி செய்ய) குதிரைக்குப் போல் ஏன் shade வைத்துக் கொள்ளக் கூடாது?

    போங்க சார் போங்க நீங்கள் எல்லாம் விளக்கம் சொல்லித்தான்/தாங்கிப் பிடித்துத்தான் இசுலாம் வளர வேண்டும் என்பதில்லை. எங்களுக்கு எது அல்லா எது ஆணாதிக்கம் என்று தெரியும்.

  11. சரி சரி Jahmyyllah! முஸ்லிம் வேசங்கட்டுனது போதும்…டைம் ஆயிடுத்து!

    இனி ID மாத்தும் நேரம்! (உன் டைம் முடிஞ்சி போச்சி)

    இனி கிறிஸ்துவ ஆரோக்கியம் அனானிமஸ் டைம்! (பாத்து ஸாக்கிரத ராஸா… நடை நடைதான் முக்கியம்!)

  12. I dont think “white” is the dress code for any tennis event other than wimbeldon. Nalladiyar you may need to refer the laws again properly !

  13. டி ராஜ்/ DRaj

    //லியண்டர் பயசும், விஜய் அமிர்தராஜும் விளையாடிய போது கண்டு கொள்ளப் படாமல் இருந்த டென்னிஸ், சானியா வந்த பிறகு தேசிய கவனத்தை ஈர்த்தது ஏன்? எல்லாம் இஸ்லாம்”//

    I dont think so. The penetration of the media is now pretty high and hence the popularity. And sports personalities are also brand ambassadors for several products and the sponsors ensure that their brand ambassadors gather enuff media coverage so as to reinforce their advertising.

  14. // நீங்கள் (சானியா விளையாடுவதைப் பார்த்த அனைத்து முஸ்லீம் சகோதரர்களும்) புனித குரான் சொன்னபடி ஏன் பார்வையைத் தாழ்த்தவில்லை அன்பரே? //

    Ofcourse they can!
    But more muslim women are going to wake up and try to break away the strange hold of muslim maulvis and fundamentalists.

    Lets not allow it. :-)

    Funny that Nalladiyar should attribute her religion being the reason for her popularity.The obsession with religion these folks have ! :D

  15. நல்லடியார்

    //அனைத்து முஸ்லீம் சகோதரர்களும் புனித குரான் சொன்னபடி ஏன் பார்வையைத் தாழ்த்தவில்லை அன்பரே?//

    பார்வையைத் தாழ்த்திக் கொள்ளச் சொல்லி இருப்பது ஆணையும் பெண்ணையும்.

    முஸ்லிம் சகோதர்களை மட்டும் பார்வையை தாழ்த்தச் சொல்லும் நீங்கள் இந்த இரண்டிலும் சேர்த்தி இல்லையா?

  16. நல்லடியார்

    //The penetration of the media is now pretty high and hence the popularity. And sports personalities are also brand ambassadors for several products and the sponsors ensure that their brand ambassadors gather enuff media coverage so as to reinforce their advertising//

    மீடியா பாபுலாரிட்டியும் ஒரு காரணம் என்பது உண்மையே.

    Since Sports Personalities are brand ambassadors why not given to P.T.Usha & Karnam Malleswari?

    If popularity is important for advertisement Rajyavardhan Singh Rathore & Danraj Pillai too eligible. Do you have any ad of them?

  17. நல்லடியார்

    //I dont think “white” is the dress code for any tennis event other than wimbeldon. Nalladiyar you may need to refer the laws again properly ! //

    thanks for your advice! Let us hope Sania will be allowed her desired uniform in Wibledon.

  18. டி ராஜ்/ DRaj

    //லியண்டர் பயசும், விஜய் அமிர்தராஜும் ……………….? எல்லாம் இஸ்லாம்”//

    where does Islam come into picture ?

  19. டி ராஜ்/ DRaj

    I wanted to say this. Sorry for not being clear.

    I am sure if Sania had been a “Sowmya” or a “Sahaya mary” she would have caught the media attention and won the brand endorsement deals. Religion comes no where in the picture.

  20. நல்லடியார்

    //I am sure if Sania had been a “Sowmya” or a “Sahaya mary” she would have caught the media attention and won the brand endorsement deals//

    Dear Raj,

    I am not saying Muslim girl should not be a brand model.Also I do not think religion will be a barricade while in modest pose.

  21. சுதர்சன்

    //லியண்டர் பயசும், விஜய் அமிர்தராஜும் விளையாடிய போது கண்டு கொள்ளப் படாமல் இருந்த டென்னிஸ், சானியா வந்த பிறகு தேசிய கவனத்தை ஈர்த்தது ஏன்? எல்லாம் இஸ்லாம்.!!!//

    இதெப்படி முன்பெல்லாம் டென்னிஸ் கண்டு கொள்ளப் படாமல் இருந்தது என்று சொல்கிறீர்கள். பயஸும் பூபதியும் நன்றாக விளையாடிய காலத்திலும் டென்னிஸ் மிகப் பிரபலமே. என்ன அப்போதெல்லாம் வலைப்பதிவுகள் தான் பிரபலம் இல்லை. இப்பொழுதுகூட ஆனந்த் வினாயகம் எழுதிய பதிவு பூபதியைப் பற்றி, ஆனால் உங்களுக்கு அதிலும் சானியாதான் தெரிகிறார்.

    பல வெற்றிகளும் திறமையும்தான் அந்தப் பெண்ணுக்கு கவனத்தை பெற்றுத் தந்திருக்கிறதே தவிர, உங்கள் மதம் அல்ல.

  22. டி ராஜ்/ DRaj

    Dear Nalladiyar, if I understood that sentence correct(லியண்டர் பயசும், விஜய் அமிர்தராஜும் விளையாடிய போது கண்டு கொள்ளப் படாமல் இருந்த டென்னிஸ், சானியா வந்த பிறகு தேசிய கவனத்தை ஈர்த்தது ஏன்? எல்லாம் இஸ்லாம்), it means Islam is the reason behind her popularity.

  23. இறை நேசன்

    Better to leave this “NOT” Well-behaved girl (By her T-Shirt Word -“Well-behaved girl rarely make History”)matter.

    Let to allow her to make History by the support of “NOT” Well-behaved girls and boys.(Don’t think about this as my comment – This is Sania’s mind shows her T-Shirt Word).That’s why “THEY” worry about her this much Not like to “Peyas” etc…

  24. ஜும்பலக்கா

    காதலர் தினம் Valentine என்ற கிறிஸ்தவர் நினைவாகக் கொண்டாடப்படுகிறது. அந்த காழ்ப்புணர்ச்சிதான் அவர்களின் எதிர்ப்புக்குக் காரணம்.

    காதலர் தினத்தை எதிர்க்கும் பரிவாரங்கள் ஒருவருக்கொருவர் வர்ணம்பூசி பணத்தையும் கலாச்சாரததையும் சீரழிக்கும் “ஹோலி” யை மட்டும் அனுமதிப்பார்கள்.

    பெண்களை நிர்வானமாக செதுக்கி அழகு பார்க்கும் இவர்களிடம் நிர்வானத்துக்கு எதிரான மனப்பான்மையை எதிர்பார்ப்பது அறிவீனம்.

  25. //முஸ்லிம் சகோதர்களை மட்டும் பார்வையை தாழ்த்தச் சொல்லும் நீங்கள் இந்த இரண்டிலும் சேர்த்தி இல்லையா?//

    What a imbecile comment ?

    It is in this comment that Nalladiyar has exposed himself.

    Anyone else not following the Quran is a eununuch Nalladiyar ?

    Religious intolerance , even towards their own girls and glossing it up with such religious pious platitude which ultimately is of no use !

    Why the Mullahs are even banning television channels , are you going to justify that too ?

  26. ஆரோக்கியம் kettavan

    ச மூத்ரா,

    பேருக்கேத்த மாதிரி தான் பின்னூட்டம் போட்டிருக்கே.. என்ன இங்கிலிபீசுல பெனாத்துனாலும் ‘வேச’த்த மறைக்க முடியலேப்பா

    புரிஞ்சு போச்சு எனக்கு. Jammyllah ன்னு இவ்வளவு நேரம் பொம்பள வேசம் போட்டது இந்த ச’மூத்திரா’ தான். முஸ்லிம்களெல்லாம் கண்ணைக் குருடாக்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லிட்டு, நீயெல்லாம் Religious Intolerance பற்றி பேசலாமா?

  27. Shaheer Technics Inc

    Ar Riyad, Riyadh, Saudi Arabia !!

    என்ன சார். நல்லாய் இருக்கிறீர்களா ?

    யாகாவாராயினும் நாகாக்க ..
    பந்து விளையாட்டை பற்றி உங்க வீட்ல கேட்டு பாருங்க.

  28. குழலி / Kuzhali

    சானியா மிர்சா இசுலாமியர் என்பதே இந்த சர்ச்சைக்கு பிறகே எனக்கு தெரியும், அவர் ஏதோ ஹைதராபாத்தில் வசிக்கும் வடநாட்டவர் என்றே எண்ணியிருந்தேன்.

    நன்றி

  29. //புரிஞ்சு போச்சு எனக்கு. Jammyllah ன்னு இவ்வளவு நேரம் பொம்பள வேசம் போட்டது இந்த ச’மூத்திரா’ தான். முஸ்லிம்களெல்லாம் கண்ணைக் குருடாக்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லிட்டு, நீயெல்லாம் Religious Intolerance பற்றி பேசலாமா? //

    when Nalladiyar has to write comments that are not parliementary use another user name !

    Its THAT simple folks.

  30. ellorum sollvadhu irukkatum. idhai patri saniya enna sonnar endru padhiyavullaye!

    usopen arambathil avar sonnadhu.
    “nalaiku 5 murai kuran odhugiren .ellorum nam seyyum thavarugaldhan pesuvargal. naam seyyum nalla vishayangalai patri pesuvadhillai.’

  31. //முஸ்லிம் சகோதர்களை மட்டும் பார்வையை தாழ்த்தச் சொல்லும் நீங்கள் இந்த இரண்டிலும் சேர்த்தி இல்லையா?//

    அன்பு நல்லடியார் நீங்களும் உங்களைப் போன்ற இஸ்லாம் கொள்கையை உயிர் மூச்சாகக் கொள்ளும் முஸ்லீம் ஆண்கள் குரான் சொன்னபடி (சானியா குட்டைப் பாவாடை அணிந்து விளையாடும் போது) பார்வைய ஏன் தாழ்த்தவில்லை என்பது தான் கேள்வி. மற்றவர்கள் குரானைப் பின்பற்ற வேண்டும் என்று சட்டமா என்ன? மற்றவர்கள் (முஸ்லீம் அல்லாதவர்கள்) யாரும் குட்டைப்பாவாடை விமர்சனம் செய்யவில்லை. உங்களுக்கு அதுவாவது புரிகிறதா?

    அல்லா என்ன பார்வையைத் தாழ்த்தி குட்டைப்பாவடைக்குகீழ் தெரியும் காலையா பார்க்கச் சொன்னார்?
    உங்களைப் போன்ர முஸ்லீம் முல்லாக்கள் “காலையும்” “தொடையுயும்” பார்க்காமல் விளைடாட்டை மற்றும் பார்த்து இருந்தால் இந்தப் பிரச்சனை வந்து இருக்காது. சரிதானே? ஒத்துக் கொள்வீர்களா?

  32. முத்துகுமரன்

    இஸ்லாம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை கொடுத்துள்ள மார்க்கம். ஆனால் தங்களை மதத்தை காக்க வந்த யோக்கிய புருசர்களாக காட்டிக் கொள்ளும் மத அடிப்படைவாதிள் சானியா மிர்சாவிற்கு கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்கள்…. சானியாவிற்கு தேவை நமது ஊக்கங்கள்தானே அன்றி சொந்த நாட்டிலே அச்ச உணர்வோடு விளையாடும் நிலை அல்ல. சானியா விசயத்தில் வெளிப்பட்டிருப்பது மத அடிப்படைவாதிகளின் ஆணாதிக்க சிந்தனையே. வக்கிரமான இந்த ஆணாதிக்க சிந்தனையை மதத்தின் பெயரால் செய்வதை அந்த அல்லா கூட மன்னிக்க மாட்டார்…
    இவர்களைப் போன்ற அடிப்படைவாதிகளாலே மொத்த மார்க்கமும் அடிப்படைவாதத் தன்மை கொண்டது போல் பிம்பத்தை உருவாக்குகிறார்கள்.. சானியாவை பொறுத்தவரை விளையாட்டு தவிர மத்த நேரங்களில் பாரம்பர்ய உடைகளை அணியத்தானே செய்கிறார்… அவரது திறமைக்கு கிடைத்த வெற்றியை, கவனிப்பை அவர் இஸ்லாம் மதத்தை சார்ந்தவர் என்பதால்தான் இத்தனை முக்கியத்துவம் என்று புலம்புவர்களுக்கு ஒர் சிறு விண்ணப்பம். எல்லா விசயங்களுக்கும் மதச் சாயம் பூசிப் பார்க்காதீர்கள்…..

  33. நல்லடியார்

    முத்துகுமரன்,

    முஸ்லிம் பெண்கள் விளையாட்டில் கலந்து கொள்வதென்பது ஒன்றும் புதிய விசயமில்லை. சமீபத்தில் ஹைதராபத்தில் நடந்த ஆசியன் சாம்பியன்ஷிப் பாட்மிண்டனில் ஈரானைச் சார்ந்த ஐவர் குழு கலந்து கொண்டனர் (தோற்றுவிட்டார்கள் என்பது வேறு விசயம்). இவர்கள் சல்வார்கமீஸ் போன்ற ஆடை அணிந்தே விளையாடினர். (பேட்மிண்டனுக்கும் டென்னிசுக்கும் விளையாடும் முறையில் அதிக வித்தியாசமில்லை என நினைக்கிறேன்)

    ஆடை என்பது விளையாடுபரின் விருப்பம் என்பதை மறுப்பதற்கில்லை. வீனஸ் வில்லியம்ஸ் தனக்கு தோதான ஆடை அணிய பாரம்பரியத்தைச் சுட்டிக்காட்டி வெள்ளை ஸ்கர்ட் என்பது விதியல்ல என்று வாதாடி தனக்குப் பிடித்தமான உடையணிந்து விளையடினார். இதே காரணத்தை சானியாவும் சொல்லியிருந்தால் சானியாவுக்கு கிடைத்திருக்கும் இந்தளவு பப்ளிசிடி கிடைத்திருக்குமா?

    ஒரு பேச்சுக்கு சானியா தனக்கு தோதான இஸ்லாமிய உடையில் ஆடுகிறேன் என்றால், தற்போது கூக்குரல் இடுபவர்கள் என்ன சொல்வார்கள் என்று கொஞ்சம் மனசாட்சிப்படி சொல்லுங்கள்.

    //சானியா விசயத்தில் வெளிப்பட்டிருப்பது மத அடிப்படைவாதிகளின் ஆணாதிக்க சிந்தனையே. வக்கிரமான இந்த ஆணாதிக்க சிந்தனையை மதத்தின் பெயரால் செய்வதை அந்த அல்லா கூட மன்னிக்க மாட்டார்//

    மதகுருவுக்குப் பதில் சானியாவின் தந்தையோ அல்லது தாயோ ஒழுங்கான உடையணிய அனுமதித்தால் மட்டுமே சானியா விளையாடுவார் என்றால் அதற்கும் ஆணாதிக்கம் என்று சொல்லுவீர்களோ?

    மற்றபடி உங்களின் சில கருத்துக்களில் நானும் உடன்படுகிறேன்.

  34. ஒரு இந்திய முஸ்லிம் தன் நாட்டுப்பண்பாடு, தனது மதம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சானியாக்களுக்கு ‘அட்வைஸ் தான் தரலாம். கொலை மிரட்டல்களையல்ல.

    அது போல முஸ்லிம்கள் எப்போது சறுக்குவார்கள் என்று காத்திருந்து இஸ்லாமை விமர்சிக்க காத்திருப்பவர்கள் (கிரிக்கெட் போன்ற) விளையாட்டுக்களங்களையே தம் அரசியலுக்காக குத்தகைக்கு எடுத்திருந்தவர்களை மறந்துவிடவும் கூடாது.

  35. முத்துகுமரன்

    நல்லடியார். ஆணாதிக்கம் என்று நான் சொல்ல வந்தது மதங்கள் பெண்களுக்கு கொடுத்த சுதந்திரங்களைப் பறித்து அவர்களை எப்போதும் அடிமைகளாகவே வைத்திருக்க முனைவோரைச் சுட்டிக் காட்டவோ. ( பொதுவாக மத அடிப்படை வாதிகள் – அனைத்து மதங்களுக்கும் இது பொருந்தும் ). என்னைப் பொறுத்தவரை சானியா இந்தியப் பெண்களுக்கு ஒரு வரலாற்று அடையாளமாக கருதுகிறேன். இன்று கொலை மிரட்டல் விடுக்கும் மட அடிப்படைவாதிகள் திரைப்படங்களில் மிகவும் கீழ்த்தரமாக நடிப்பவர்களைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே. இன்று உலகத்தால் கவனிக்கப்படும் ஒரு பெண்ணின் மீது – அவர் வெற்றியை ஏளனம் செய்யும் ஒரு குரூரத்திருப்திதானே…. மற்றபடி தனக்கேற்ற உடை அணிவது என்பது சானியாவின் விருப்பம்….

    மதங்களுக்கு எல்லாம் மதம் பிடிக்க காரணம் அவர்களுக்குள் திளைத்திருக்கும் விடமறுக்கும் ஆணாதிக்க வெறிதான் காரணம் என்று நம்புகிறவன் நான்

  36. வாசகன்

    கொலை மிரட்டல் மிகவும் தவறு தான் என்பதை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளாமல் இல்லை. கொலை மிரட்டல் (யாருக்கு யார் செய்தாலும்) அது தவறு தான் .
    அதே சமயம் ஐந்து வேளை குர்ஆன் படிக்கிற தங்கள் சகோதரி, தன் திறமையில் நம்பிக்கை கொன்டுள்ள சகோதரிக்கு ஒரு சகோ முஸ்லிம் ‘கவர்ச்சியை போனஸாக வழங்காமல் திறமையை மட்டுமே காட்டி விளையாடம்மா’ என்று புத்தி சொல்வதில் என்ன குற்றம் இருக்க முடியும்?

    அப்படியானால் மும்தாஜ், ஜோதிகாக்களுக்கு ஏன் புத்திமதிகள் இல்லை என்பதற்கு ….
    ‘அவர்கள் (நடிக வகையறாக்கள்) தம் ‘பாப்புலாரிட்டி’க்காக எதை ‘முதலீடு’ செய்கிறார்கள் என்பதை யோசிப்பதில் பதில் இருக்கிறது

  37. சினிமாவில் முஸ்லிம் பெயர் கொண்டவர்கள் ஆபாசமாக நடிக்கும் போது மவுனமாக இருக்கும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், சானியா உடை விசயத்தில் குரல் கொடுப்பது தவறு என்றும் இவ்விசயத்தில் மதம் ஏன் தலையிடுகிறது என்றும் கேட்பவர்கள் ஒன்றைக் கவனிக்க வேண்டும். மனிதர்களின் நியாயமான எதையும் இஸ்லாம் அநீதியாக தடுக்கவில்லை.

    சினிமா என்பது கலைத்துறை என்று சொல்லப்பட்டாலும் அதில் பெரும்பாலும் ஆபாசமே நிறைந்திருக்கிறது.இதில் முஸ்லிம் நடிகை முஸ்லிமல்லாத நடிகை என்ற பேதம் இல்லை. சினிமாவில் மட்டுமல்ல பொதுவில் ஆபாசமாக தோன்றுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. ஆகவே சினிமாவிற்கு ஒரு முஸ்லிம் வந்து விட்டால் இஸ்லாமிய கோட்பாட்டைப் பற்றி அவளுக்குக் கவலை இல்லை என்றே அர்த்தம். இவர்கள் விசயத்தில் மார்க்க அறிஞர்கள் ஏன் கவலைப்பட வேண்டும்?

    ஆனால் விளையாட்டுத்துறை அப்படியல்ல. உடற்பயிற்சியாகவும் தனித்திறமைகளை வெளிக்காட்டவும் உள்ள துறை இது. நியாயமான எதையும் இஸ்லாம் தடுக்கவில்லை. வருமானத்திற்காக குழந்தைகளை வேலைக்கு அனுப்புவதையும் பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்துவதையும் இந்திய சட்டம் தடுக்கிறது. ஆனால் சானியா தனது ஆறு வயதிலிருந்தே டென்னிஸ் விளையாடியும், 63% மார்க்கு எடுத்தும் பத்தாவது வரை மட்டுமே பள்ளியில் படிக்க அனுமதிக்கப் பட்டிருக்கிறார்.

    பர்தாவை பெண்ணுக்கு எதிரான அடக்குமுறை என்று சொல்வார்கள். ஆனால் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட பெண்ணையோ அல்லது அழகியையோ??? பர்தா போட்டு மூடி கோர்ட்டுக்கு அழைத்து வருவார்கள். இது என்ன நியாயமோ தெரியவில்லை!

    சானியாவை கண்ணியமான ஆடையுடன் ஆட அனுமதிப்பதன் மூலம் இன்னும் பல முஸ்லிம் வீராங்கனைகள் இது போன்ற துறைகளில் வருவதற்கு முன்மாதிரியாக முடியுமே? ஆனால் சுயநலமாக இவர்கள் இந்த கோணத்தில் சிந்திப்பதில்லை.

    மூக்குத்திப் பெண்ணுக்கு ஆதரவாக எழுதிய நபர்கூட கழுத்தில் தொங்கும் டாலரைதான் பார்த்துள்ளார். அந்த அளவு இருக்கிறது அவரின் மார்பு பார்க்கும் கலாச்சாரம்.

    சானியாவின் உடையை ஆதரிக்கிறோம் என்ற பெயரில் இஸ்லாமிய எதிர்ப்புவாதமே மிகைத்திருக்கிறது என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *