Featured Posts
Home » பொதுவானவை » அமானுடக் கேள்விகளும் அரைகுறை ஞானிகளும்

அமானுடக் கேள்விகளும் அரைகுறை ஞானிகளும்

மனித சமுதாயத்திலுள்ள கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களின் மீது சர்சைக்கிடமின்றி இன்று ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் ஒருவரின் மிகச் சிறந்த வாழ்க்கையை அறிந்திட நான் ஆவல் கொண்டேன். (அவ்விதம் அதனை நான் படித்தறிய முற்பட்ட போது) இஸ்லாத்திற்கு அக்காலத்திய வாழ்க்கையமைப்பில் உயர்ந்த ஓர் இடத்தைப் பெற்றுத் தந்தது, வாள் பலமல்ல என்று முன் எப்போதையும் விட அதிகமாக நான் உணர்ந்தேன்.

நபிகள் நாயகத்தின் மாறாத எளிமை, தம்மைப் பெரிதாகக் கருதாமல் சாதாரணமானவராக நடந்து கொள்ளும் உயர் பண்பு, எந்நிலையிலும் வாக்குறுதியைப் பேணிக் காத்த தன்மை, தம் தோழர்கள் மீது அவர் கொண்டிருந்த ஆழிய அன்பு, அவரது அஞ்சாமை, இறைவன் மீதும் தமது பிரச்சாரப் பணியிலும் அவர் கொண்டிருந்த முழுமையான நம்பிக்கை ஆகியவை தாம் அவரது வெற்றிக்குக் காரணங்கள்.

இவையே உலக சக்திகள் அனைத்தையும் நபிகள் நாயகத்தின் முன்பும் அவர்களின் தோழர்கள் முன்பும் கொண்டு வந்து குவித்தன. எல்லாத் தடைகளையும் வெற்றி கொண்டன. அவரது மகத்தான வெற்றிக்கு இவை தான் காரணமே தவிர வாள்பலம் அன்று! – யங் இந்தியாவில் முஹம்மத் நபியின் பண்பைக் குறித்து மஹாத்மா காந்தி

“If greatness of purpose, smallness of means, and astounding results are the three criteria of human genius, who could dare to compare any great man in modern history with Muhammad? The most famous men created arms, laws and empires only. They founded, if anything at all, no more than material powers which often crumbled away before their eyes.

Philosopher, orator, apostle, legislator, warrior, conqueror of ideas, restorer of rational dogmas, of a cult without images; the founder of twenty terrestrial empires and of one spiritual empire, that is Muhammad.

As regards all standards by which human greatness may be measured, we may well ask, is there any man greater than he?” Famous French Historian Lamartine, HISTOIRE DE LA TURQUIE, Paris, 1854, Vol. II, pp. 276-277.

திரு.நேசகுமார் வஹீ-பற்றிய மொழிபெயர்ப்புப் பதிவை தமிழோவியத்திலும் தமிழ்மணத்திலும் பதிந்த போது, இஸ்லாம் பற்றியும் முஹம்மது நபிகள் பற்றியும் அவருக்குத் தோன்றிய கருத்துக்களை Dr.Koenraad Elst என்ற மேலை நாட்டு அறிஞரின் மொழி பெயர்ப்புடன் வெளியிட்டபோது, அவர் மறைத்த உண்மைகளையும் வரலாற்று திரிப்புகளையும் இணைய வாசகர்களுக்கு விளக்க வேண்டும் என்ற அவா ஏற்பட்டது.

அமானுடக் கேள்விகளும் அறைகுறை ஞானிகளும் என்ற தொடரின் முதல் பகுதியை தமிழ்மணம் வாசகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

மதநம்பிக்கைக்கும் கருத்து சுதந்திரத்திற்கும் மதிப்பு கொடுத்து எனது பதிவை தமிழோவியத்தில் தொடராக வெளியிட அன்புடன் இசைந்த திரு.கணேஷ் சந்திரா அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

முன்னுரை – ” நல்லடியார்”

சாந்தியும் சமாதானமும் படைத்தவன் புறத்திலிருந்து உண்டாகட்டுமாக.

இஸ்லாம் என்பது இன்றைக்கு உலகு புரிந்து வைத்திருப்பது போன்றதொரு மதமல்ல. அது ஒரு வாழ்க்கை நெறி. இஸ்லாத்தின் நோக்கம், மனிதர்கள் அமைதியாக வாழ வேண்டும் என்பதேயாகும்.

மாற்றுமத சகோதரர்கள் நினைப்பது போல இஸ்லாம் ஒரு மதமாக இருந்திருக்குமானால், அது வணக்க வழிபாட்டு முறைகளைப் பற்றித் தான் தன் திருமறையின் வாயிலாகப் போதித்திருக்கும். ஆனால் அந்தத் திருமறையின் ஆரம்ப வசனங்கள் கூறுவது என்னவென்றால்,

இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்;. இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்க

2 comments

  1. அஸ்ஸலாமு அலைக்கும்.

    இஸ்லாத்தின் ஆரம்பம் முதல் நபிகளாரின் அந்தரங்கம் வரை ஒளிவுமறைவின்றி பொதுவில் இருப்பதன் மூலம் இஸ்லாம் மற்ற மதங்களைவிட தனித்து விளங்குகிறது.

    நேசகுமார் போன்றோர் தங்கள் மத/மட யோகிகளின் அந்தரங்கத்தை பொதுவில் வைத்து விவாதிக்க வக்கற்ற நிலையில்தன் அவர்களின் மத சம்பிரதாயங்களும் யோகிகளின் நிலையும் உள்ளன.

    நேசகுமார்/எல்ட்ஸ் ஐய் அறைகுறை ஞானி என்பதற்கு இதுவே போதும்.

    இன்னல்லாஹ மஹஸ்ஸாபிரீன்

  2. //(இவர்களின் பின்னணி “இந்துத்துவா மீட்சி” என்பதும், அதற்கு தடைக்கல்லாக இஸ்லாம் இருப்பதும் வேறு விஷயம்) .//

    ஒரு மிகப்பெரிய செய்தியை ரொம்பச் சாதாரணமாக அதுவும் அடைப்புக்குறிக்குள் தந்துள்ளீர்கள்.
    இது தான் அரவிந்தன்களுக்கும் நேசகுமார்களுக்கும் பின்னணி காரணம். இஸ்லாத்தின் பால் அவர்களுக்குள்ள இனம்தெரியாத வெறுப்புக்கும் அதற்காக எந்த எல்லைக்கும் இறங்கி அவர்கள் எழுதுவதற்கும் இது ஒன்றே அடிப்படை காரணம்.
    மற்ற சிலரோ இஸ்லாம் குறித்து முழுமையாக அறிய வரும் போது விளக்கம் பெற்று விடுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *