Featured Posts
Home » பொதுவானவை » அரபி மொழியும் நீச மொழிகளும்!!!

அரபி மொழியும் நீச மொழிகளும்!!!

இஸ்லாம் அரேபியாவிலிருந்துதான் உலகின் பல பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டது. அவ்வாறு எடுத்துச் செல்லப்பட்ட இஸ்லாம் உலகிற்கு பல நன்மைகளை வழங்கியுள்ளது. கணிதவியலின் அல்ஜீப்ரா முதல் ஆல்கஹால் வரை முஸ்லிம்களால் உலகிற்கு அறிமுகப் படுத்தப்பட்டன.

இஸ்லாம் அரேபியாவில் தோன்றிய போது, அன்றைய பாகன் அரபிகள், மிகுந்த மொழிவெறி பிடித்தவர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் அரபி (பேசத்தெரிந்தவர்) மற்றும் அஜமி (பேசத் தெரியாதவர்). அதாவது அரபி பேசத்தெரியாதவர் ஊமையாம்! இந்த மனநிலையையும் மொழி வெறியையையும் இஸ்லாம் அடியோடு ஒழித்துக் கட்டியது.

மொழியியலிலும் இஸ்லாம் குறை வைக்கவில்லை. குர்ஆன் அரபி மொழியில் அறிமுகமான போதிலும் அனைத்து மொழிகளும் சிறந்தவை என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடு. அரபி தேவ பாஷையோ அல்லது மற்ற மொழிகள் நீச பாஷையோ அல்ல.

அரபி மொழி பேசுவர், அரபி அல்லாத மொழி பேசுபவரை விட உயர்ந்தவர் அல்லர் என்பது முஹம்மது நபியின் வாக்கு.

அரபி மொழி ஆங்கிலத்திற்கு பல வார்த்தைகளை வழங்கியுள்ளது. அவற்றில் சில:

admiral, alchemy, alcohol, alcove, algebra, algorithm, alkali, almanac, amalgam, aniline, apricot, arsenal, arsenic, artichoke, assassin, aubergine, azure, borax, cable, calibre, camphor, candy, cannabis, carafe, carat, caraway, checkmate, cipher, coffee, cotton, crimson, crocus, cumin, damask, elixir, gauze, gazelle, ghoul, giraffe, guitar, gypsum, hashish, hazard, jar, jasmine, lacquer, lemon, lilac, lime, lute, magazine, marzipan, massage, mattress, muslin, myrrh, nadir, orange, safari, saffron,sash, sequin, serif, sesame, shackle, sherbet, shrub, sofa, spinach, sugar, sultana, syrup, talc, tamarind, tambourine, tariff, tarragon, zenith, zero

இவ்வலைப்வூவில் ஆங்கிலம்-அரபி அகராதி உள்ளது! விரும்பினால் மொழி பெயர்த்துப் பார்க்கலாமே.

தகவல் தந்த புண்ணியவான்

3 comments

  1. ஜும்பலக்கா

    //saffron//

    :-)

  2. அட்றா சக்கை

    ஐயா ஜும்பலக்கா

    இங்கே சொல்ல வந்த

    saffron = குங்குமப்பூ

    காவி இல்லன்னு நெனக்கிறேன்..

    சரிதானாய்யா நல்லடியாரு?

  3. //saffron = குங்குமப்பூ

    காவி இல்லன்னு நெனக்கிறேன்..

    சரிதானாய்யா நல்லடியாரு? //

    உண்மையிலேயெ தெர்யாமத்தன் கெக்குறிங்களா?

    அதை தெரிஞ்சுக்கிட்டு நிங்க என்ன பன்னப் போரிங்க?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *