Featured Posts
Home » பொதுவானவை » பெண்ணுரிமையின் பரிணாம வளர்ச்சி

பெண்ணுரிமையின் பரிணாம வளர்ச்சி

ஒவ்வொரு வருடமும் மார்ச் 8 ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் கொண்டாட்டங்கள், சில இடங்களில் ஆர்ப்பாட்டங்கள், உரிமை மீட்புப் போராட்டங்கள் என்று பலவித முகங்களில் அவைகள் நடந்தேறின. ஊடகங்கள் ஒவ்வொன்றும் அவற்றைப் பார்த்த விதமும் பலவாறாக இருந்தது.

சானியா மிர்ஸா டென்னிஸில் உலகத் தரத்திற்கு இணையாக வந்திருப்பது மகளிர் முன்னேற்றமென்று ஒரு பத்திரிக்கை மேற்கோள் காட்டியது. மகளிர் மேம்பாட்டுக்காக உழைத்து ஐ.நா.விருது பெற்ற சேலத்தைச் சேர்ந்த தேவிகா சின்னு பிள்ளையின் சேவைகள் இந்தியாவின் சாதனைகளாக எடுத்துக்காட்டப்பட்டன.

அண்டை நாடுகளில் பங்களாதேஷில் பெண்களின் மீது திராவக வீச்சு, காதலித்த பாகிஸ்தான் பெண் கொலை ஆகியவை பெண்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளாக எடுத்துக்காட்டப்பட்டன.

பெண்களுக்கான உரிமை என்றால் என்ன? என்பது பற்றி நாம் அறிந்தவரை இதுவரை எந்த வரையறையும் எந்த அரசியல் சாசனத்திலும் கொடுக்கப்பட்டதாக அறிய முடியவில்லை.

பத்திரிக்கைகளில் நாம் பெண்களின் உரிமைகளாக நாம் பார்ப்பது, அவர்களுக்கு இயல்பான ஆடைகளிலிருந்து வெளியே வந்து அரைகுறை ஆடைகளுடன் வெளியே சுதந்திரமாக நடமாடுவது என்பது உரிமை என்று கூறப்படுகின்றது. ஏனென்றால் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் என்ற உடல் முழுவதும் மறைக்கும் ஆடையை அணிவதை அடக்குமுறையாகச் சித்தரிக்கப்படுவதால், அதற்கு எதிரான உடல் அலங்காரங்களை வெளியே காட்டுவதை ‘உரிமை” என்கிறார்கள்.

அடுத்ததாக கற்பு நெறிகளில், பெண்கள் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்றொரு குரல் கொடுக்கப்படுகின்றது. அதாவது, தஸ்லிமா நஸ்ரீனுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்திலிருந்து இதனை நாம் அறிந்து கொள்ள முடியும். அவர் தனது கர்ப்பப்பையை தான் விரும்பிய எவரிடமும் பகிர்ந்து கொள்ளலாம், அதற்கு கணவன் என்ற ‘உறவு” அவசியமற்றது என்று அவர் கூறியதை, பத்திரிக்கைகள் சிலாகித்து எழுதின.

அவரது அந்தப் பேச்சுக்கு மறுப்பு வெளியிடுவதை விட்டு விட்டு அவரை புரட்சிப் பெண்ணாகப் பார்த்தன. எனவே, அதிலிருந்து ஒரு பெண் தனது கற்பு நெறியை தான் விரும்பியவாறு அதனை பயன்படுத்திக் கொள்வதனை ‘உரிமை” என்று கூறுவதாக நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.

சமீபத்தில் நடிகை குஷ்பு கூட பெண்ணுரிமைக்கு புது இலக்கணம் கொடுத்துள்ளார். அப்படி ஒன்றும் மோசமாக சொல்லி விடவில்லை. திருமணத்திற்கு முன் பெண் கற்போடு இருக்க வேண்டும் என் எந்த படித்த ஆண்மகனும் எதிர்பார்க்க மாட்டானாம். அப்படி எதிர் பார்ப்பது ஆணாதிக்கமாம். அவரே இந்த ஆணாதிக்க மனப்பான்மைக்கு எதிரான உதாரணமாம். ஏன், தமிழ் நாட்டில் கூட இது போல் பல ஆதாரங்களை இவரால் காட்ட முடியுமாம். சுருக்கமாக கற்பு என்பது ஓல்ட் பேஷன் என்கிறார்.

தொலைந்தது போங்க! அரசியல்வாதிகள் முதற்கொண்டு சிவகாசி ஜெயலட்சுமி வரை, ப்ளாட்பார்மில் கடை போட்டும் காய்கறிப் பெண் முதற்கொண்டு குழந்தைகளை சீவி சிங்காரித்து ஸ்கூலுக்கு அனுப்பும் குடும்பஸ்திர்கள் வரை குஷ்புவிற்கு எதிராக கொதித்து எழுந்து விட்டார்கள். பெண்களே பெண்ணுரிம்மைக்கு எதிராக போராடுகிறார்களா? ஒன்னும் புரியவில்லை.

ஊடகங்களில் பெண்களும் பெண்மையும் விவாதிக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல. விவாதப் பொருள் இஸ்லாம் சார்ந்தது என்றால் பத்திரிக்கைகளுக்கு இன்னும் கொண்டாட்டம்தான். ஜாஹிரா, இம்ரானா, சானியா மிர்ஜா இப்படி முஸ்லிம் பெண்கள் வெவ்வேறு விவாதங்களில் அடிக்கடி ஊடகங்களில் அடிபடுகிறார்கள்.

4 comments

  1. இறை நேசன்

    //ஆனால் இந்தியப் பெண் குழந்தைகளுக்கோ கருவிலேயே சுதந்திரம்?//

    Freedom of death!

  2. Baby girls fill Pakistan’s public cradles
    http://www.feminist.com/news/vaw33.html

    female genital mutilation in kurdistan
    http://www.feminist.com/news/vaw23.html

    YOUNG AFGHAN WOMEN SETTING THEMSELVES ABLAZE
    From her hospital bed, Shakiba told Herat television that she
    burned herself because her family had sold her to a 28-year-old man
    for $10,000 as a second wife.

    http://www.bridge.ids.ac.uk/Reports/re10c.pdf
    Violence against women in Bangladesh,Pakistan,Sudan,Egypt,Senegal and Yemen

    http://www.muslimwakeup.com/main/archives/2003/06/when_the_music.php
    In her paper, Dr. Wadud, who is no stranger to controversy, lashed out
    at Muslims in positions of authority whose only response to preventing
    HIV/AIDS is quoting the Qur’anic verse that says “La taqrabu ‘z-zina” –
    “Do not approach adultery.” She said that religious platitudes like this
    were meaningless when spouted at faithful wives who contract HIV/AIDS
    from their philandering husbands, and at children orphaned by HIV/AIDS.

    http://www.muslimwakeup.com/main/archives/2003/06/vulnerabilities.php

    In effect, what I present here emphasizes the ways that Islam and Muslims
    exacerbate the spread of AIDS and that a traditional Islamic theological
    response can never cure AIDS. AIDS exists as an immune deficiency syndrome.
    It has spread to epidemic proportions; over 42 million people are affected
    with an estimated 3 million deaths per year. Of particular interest to my
    thesis is the consequence and spread of AIDS among children (under the age
    of 15), with additional infections of over one half million annually.
    In addition to its fatality, consequences here include children who become
    orphaned each year due to the death of their primary care takers from AIDS.
    The estimates are 14 million children orphaned by AIDS. What does a
    theological premise “la taqrabuna ‘l-zina” avail these children? How has
    Islam in particular assisted them towards living a life of dignity and
    how has it prevented them from experiences of dignity and worth,
    un-stigmatized by our ostrich theology and law?

    The other group that is of concern here are monogamous wives. Especially
    in the context of Islam, where a Muslim wife is not only expected to be,
    but defined in terms of her being unconditionally sexually available to her
    husband. Properly fulfilling this role of wife is fatal to some women,
    with estimates as high as 80%. That is 80% of the heterosexual women with
    AIDS are monogamous and have only ever had sex with their husbands.

    With regard to the 80% heterosexual women who contract AIDS in monogamous
    relations, a direct look at Islam and sexuality is called for. According
    to Shari’ah if a Muslim man desires intercourse with his wife, she
    must comply. If she does not, she is guilty of nushuz, recalcitrance.
    A wife who is nashizah is no longer eligible for nafaqah: maintenance or
    financial support. In addition, in various degrees of interpretation and
    application, the Qur’an asserts that the husband of such a woman may beat her.
    In the face of this, the vast majority of Muslim wives, those with gentle
    husbands, husbands of polygyny: open or secret, husbands of violence and
    abuse, upright husbands of moral standing and husbands of AIDS, open their
    legs to their men as they are not only expected, but commanded to do by
    that which is most popularly understood as “Islam”. Women turn towards men
    who have contracted AIDS and open their legs to their own death and
    destruction. It matters little if the men have contracted AIDS by either
    legal and moral or illegal and immoral means. By legal and moral means,
    I refer to the husband who has contracted AIDS by marrying younger more
    sexually virile women as confirmation of their masculine sexuality and
    then turn to the demure and compliant wife of longer standing. In turn,
    she may then give birth to or infect at birth their innocent child.

    If HIV/AIDS was merely the result of immoral or un-Islamic behavior then
    non-Muslim countries should have a higher percentage of cases. However,
    highly industrialized countries like the United States have more
    active measures to curtail the spread of the disease perhaps because
    they do not resort to such an equation

    In Africa, upwards of 15 million people have been lost to AIDS.
    There, the overwhelming majority of heterosexual women who contract
    the disease do so as a result of sex with infected husbands who
    have been involved in extramarital relationships. Nevertheless,
    many Muslim clerics continue to urge women to submit to the sexual
    whims of their husbands, citing the woman’s duty, according to their
    interpretation of Shariah law, to comply with her husband’s sexual
    desires.

    பெண்ணுரிமை அமைப்புகள் அழகிப் போட்டியை எதிர்த்தாக நியாபகம். ஸ்டவ்வில்
    வெடிக்கும் பெண்களை தடுக்க இந்தியாவில் domestic violence சட்டம் கொண்டு
    வந்திருக்கிறார்கள்.

  3. a-1 nonsense

  4. Our Databse detected the above posts from the following IP: 66.127.54.249

    If any offensive please call us.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *