Featured Posts
Home » பொதுவானவை » அமானுடக் கேள்விகளும், அரைகுறை ஞானிகளும் – 5

அமானுடக் கேள்விகளும், அரைகுறை ஞானிகளும் – 5

இஸ்லாத்தின் மீது கொண்ட மிகையான அச்சத்தினால் அதன் அடிப்படையான இறைவேதத்தின் வெளிப்பாட்டை ஆராய்கிறோம் என்ற போர்வையில் ஆராய்வோரும் குர்ஆனில் நல்ல கருத்துக்கள் இருக்கின்றன என்று ஒப்புக் கொள்ளும் அதேநேரம், அதன் வெளிப்பாட்டின் மீது ஐயம் கிளப்புபவர்கள் / ஐயம் கொண்டவர்களின் சந்தேகங்களை தெளிவு படுத்துவதும் அவசியம்.

முஹம்மது நபியவர்கள் இறை வேதம் அருளப்படும் முன்னர் பெற்றிருந்த நற்பெயராலும், நாணயத்தாலும் குர்ஆன் அருளப்பட்ட காலங்களில் இருந்த மக்களுக்கு அதன் வெளிப்பாட்டில் சந்தேகம் சிறிதும் இருக்கவில்லை. எழுதப் படிக்க அறிந்திராத முஹம்மது நபி குர்ஆனை எழுதி இருப்பார் என்ற ஐயம் அவர்களுக்கு கிஞ்சிற்றும் இருந்திருக்க வில்லை. அன்றைய கால நம்பிக்கையின் படி, நிச்சயம் முஹம்மது ஒரு கைதேர்ந்த மந்திர ஜாலம் செய்யும் வித்தைகாரர் என்ற அளவிற்கே அவர்களின் சந்தேகம் சுழன்றது.

நியாயமாக சிந்தித்தால் குர்ஆன் கீழ்கண்ட மூன்று வழிகளில் மட்டுமே வந்திருக்க வாய்ப்புண்டு.

1) முஹம்மது நபி அல்லாத வேறொரு அராபியரால் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

2) முஹம்மது நபியால் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

3) அல்லாஹ்வால் எழுதப்பட்டிருக்க வேண்டும்

குர்ஆனிய வசனங்களில் நிறைந்திருக்கும் இலக்கிய ஆளுமை, கருத்துச் செறிவு, கவிதை நடை இவற்றைக் கொண்டு பார்க்கும் போது மேற்கண்ட காரணங்களில் ஏதாவது ஒன்றன்றி வேறு வழியில் குர்ஆன் எழுதப்பட்டிருக்க வாய்ப்பில்லை.

அரபி மொழியின் வரலாற்றை உற்று நோக்கினால் குர்ஆன் அருளப்பட்ட காலத்தில்தான் அதன் மொழியாளுமையும் செழுமையும், வார்த்தைகளின் தெரிவும் உச்சகட்டத்தில் இருந்தன. அராபிய மொழியில் புலமைபெற்ற எவரும் குர்ஆன், அரபியர் அல்லாத ஒருவரால் எழுதப்பட்டிருக்க வாய்ப்பே இல்லை என அறுதியிட்டுக் கூறுவர்.

அரபி மொழியில் புலமை பெற்ற, தேர்ந்த கல்வியறிவுள்ள, கவித்துவ சிந்தனையுடன் இலக்கண சொல்லாளுமையாக நயமான வார்த்தைகளால் சொல்ல வரும் கருத்தை வெளிப்படுத்தும் யுக்தியறிந்த அராபிய தீபகற்பத்தை நன்கு அறிந்த, மேற்கத்திய கிழக்கத்திய நாகரிகங்களில் ஞானம் உள்ள, இன்றும் பொருந்தக்கூடிய கருத்துக்களுடன் காலத்தால் மாற்ற முடியாத சிந்தனை சக்தி படைத்த ஒருவரால்தான் குர்ஆன் வெளிப்பட்டிருக்கக் கூடும்.

கி.பி.ஆறாம் நூற்றாண்டில்தான் அராபிய இலக்கியம் அதன் உச்ச கட்டத்தில் இருந்தது. யூதர்களுக்கான இறைத்தூதுவர் மூசா நபி (Moses) காலத்தில் அச்சமூகத்தினர் சூன்ய வித்தைகளில் கைதேர்ந்தவர்களாக இருந்தார்கள். அதனால்தான் இறைவன் வழங்கிய அற்புதங்களைக் கொண்டு அம்மக்களை அல்லாஹ்வின்பால் அழைத்தார்கள்.

கிறிஸ்தவ சமூகத்திற்கு இறைத்தூதராக வந்த ஈசா நபி (Jesus) காலத்தில் அவரின் சமூக மக்கள் மருத்துவங்களில் அற்புதம் செய்து வந்தார்கள். அன்றைய மருத்துவத் துறைக்கு சவாலாக இயேசுவின் பிறப்பும் அவர் செய்த நோய் தீர்க்கும் அற்புதங்களையும் கொண்டு அவர் அல்லாஹ்வின்பால் மக்களை அழைத்தார்.

முஹம்மது நபி இஸ்லாத்தை அறிமுகப்படுத்திய போது அரபுலகம் இலக்கிய மோகத்தில், தங்கள் கடவுள், குலம் பற்றிய கவிதைகளை கவித்துவமான வார்த்தைகளைக் கொண்டு படைக்கப்பட்ட கவிதைகளால் சிறந்து விளங்கினார்கள். ஆகவேதான் குர்ஆன் அவற்றையெல்லாம் விஞ்சும் இலக்கிய நயத்துடன் அருளப்பட்டது.

குர்ஆன

One comment

  1. I really enjoyed your blog. This is a cool Website Check it out now by Clicking Here . I know that you will find this WebSite Very Interesting Every one wants a Free LapTop Computer!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *