Featured Posts
Home » பொதுவானவை » முட்டை சைவமா? அசைமா?

முட்டை சைவமா? அசைமா?

கோழிமுட்டை சைவமா? அசைமா? என்ற சர்ச்சை நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது. உயிருள்ள கோழியின் வயிற்றில் இருந்து வருவதால் அசைவம் என்று சிலர் சொல்கின்றனர்.

சைவமாக இருந்து கொண்டு முட்டை சாப்பிடும் சிலர் அப்படியானால் பாலும் அசைவமாகத்தானே இருக்க வேண்டும். அதுவும் உயிருள்ள மாட்டின் மடியிலிருந்து தானே கறக்கப்படுகிறது. அதை யாரும் அசைவம் என்று சொல்வதில்லையே! அதைப்போல் தான் முட்டையும் சைவமே! என்று சொல்லி வந்தனர்.

இந்த சர்ச்சை வழக்காக மாறி சட்டீஸ்கர் மாநில உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதனை விசாரித்த ஆனந்த குமார் பட்நாயக், திலிப் ராங் சாகிப் தேஷ்முக் ஆகியோரைக் கொண்ட டிவிசன் பெஞ்ச் “‘முட்டை அசைவமே”‘ என்று தீர்ப்பளித்து, பொது இடங்களில் முட்டை விற்கக் கூடாது. இறைச்சி விற்பதற்கு லைசென்ஸ் கொடுப்பது போல் முட்டை விற்பதற்கும் உரிய முறையில் லைசென்ஸ் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

பொது இடங்களில் பீடி விற்கலாம், சிகரெட் விற்கலாம், பான்பராக் விற்கலாம், மூக்குப் பொடி விற்கலாம். என் மது வகைகளைக் கூட விற்கலாம். ஆனால், முட்டை மட்டும் விற்கக் கூடாது. முட்டை மனித உடலுக்குத் நல்லது. ஆனால், புகையிலை பொருட்களும், மது வகைகளும் மனித உடலுக்கு தீங்கானது.

இப்படி மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை பொது ஆடங்களில் தாராளமாக விற்க அனுமதித்து விட்டு முட்டைக்கு மட்டும் கட்டுப்பாடு விதிப்பதை விநோதம் என்று சொல்வதா? அல்லது விபரீதம் என்று சொல்வதா?

புலியின் வயிறு சைவத்தை ஏற்றுக் கொள்ளாது. முயலின் வயிறு அசைவத்தை ஏற்றுக் கொள்ளாது. ஆனால் மனிதனின் வயிறு இரண்டையும் ஏற்றுக் கொள்ளும். சைவத்தையும், அசைவத்தையும் ஏற்றுக் கொள்ளும் வகையில் மனிதனின் வயிற்றை இறைவன் இயற்கையாய் படைத்திருக்க இயற்கைக்கு மாற்றமாய் முட்டையை உதாசீனப்படுத்துவது இறைவனின் அருளை உதாசீனப்படுத்துவதாகும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.

அதுவும் இதை பொது இடங்களில் வைத்து விற்கக் கூடாது என்று சொல்பவர்கள் கண்டிப்பாக சிந்தித்தே ஆக வேண்டும்.

நன்றி: எப்படி முட்டை “சைவமாகும்”?

பண்ணை அறிவியல் துறையின் டாக்டர்.அஜீத் ரானடே அவர்கள் பண்ணைக் கோழி முட்டைகள் நிச்சயம் சைவம் என்றும் நாட்டுக் கோழி முட்டைகள் அசைவமாக இருக்க வாய்ப்புள்ளது என்கிறார்.மேலும் சொல்கிறார், “ஒரு பெட்டைக் கோழி முட்டையிட சேவலின் துணை தேவையில்லை. குறிப்பிட்ட பருவத்திற்குப் பின் சேவல் துணையின்றி முட்டை போட முடியும். இவ்வகையான முட்டைகள் சைவம். இவை உயிரற்ற முட்டைகள் (Non-fertile eggs.) என அறியப்படுகின்றன.இவை பண்ணைக் கோழிகளில் (English Hens) மிகப்பொதுவானவை.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் கமிட்டியின் சேர்மன் M.B.தேசாய் அவர்களுக்ம் இதை ஆமோதிக்கிறார். மேலும் வர்த்தகரீதியில் கோழிப்பண்ணைகள் இவற்றை அதிகம் உற்பத்தி செய்ய வேண்டும் என்கிறார்.அண்ணல் காந்தி அடிகளும் முட்டையை சைவம் என ஏற்றுக் கொண்டுள்ளார். ” சுத்தமான பால் சைவமாக இருக்கும் போது நிச்சயம் முட்டையும் சைவம்தான் என்றார்.

என்ன வேறுபாடு?

நாட்டுக் கோழி பிறந்து 22-28 நாளிலிருந்து முட்டையிடும். இவை சேவலுடன் இணைந்த பிறகே முட்டையிடுகின்றன. இத்தகைய முட்டையின் வளர்ச்சியானது சேவலுன் இணைந்த மூன்றாவது நாள் முதல் தொடங்குகிறது. நாட்டுக் கோழி முட்டையை 37 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் இருபத்து ஒரு நாட்களுக்கு வைத்தால் கோழிக்குஞ்சு

15 comments

  1. மு.மயூரன்

    //இறைவன் இயற்கையாய் படைத்திருக்க இயற்கைக்கு மாற்றமாய் முட்டையை உதாசீனப்படுத்துவது இறைவனின் அருளை உதாசீனப்படுத்துவதாகும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.//

    நல்லடியார்,

    இந்த வாக்கியம் சிரிப்பை வரவழைக்கிறது.

    மனித இறைச்சியை உண்ணும்போதுகூட அதை வயிறு ஏற்றுக்கொள்ளும். மனித இறைச்சி நன்றாக சமிபாடடையும்.
    இப்பதிவு ஏதோ இந்துமதத்தை வலிந்து கேலிபண்ணுவதற்காக இடப்பட்டதோ என தோன்றுகிறது.

    இந்துமதத்தின் விதண்டாவாதங்கள் எனக்கு தெரியும். எல்லா மதங்களும் தமக்கென ஏராளம் விதண்டாவாதங்களை வைத்திருக்கும்.

    இந்துமதத்தின் உணவுக்கட்டுப்பாடுகள் குறித்து சில விசயங்கள் எனக்கு தெரியும்.

    நாம் உண்ணும் உணவு எமது நடத்தையை தீர்மானிக்கிற்து என்று அவர்கள் நம்புகிறார்கள்.

    காய்கறிவகைகளில் கூட எல்லாம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

    வெங்காயம், பொரித்த உணவு போன்றவை முறையே சோம்பல், பரபரப்பு மனநிலையை ஏற்படுத்தும் என்று நம்புகிறார்கள்.

    மாமிச உணவுகள் இந்துமதம் விரும்பாத நடத்தை கோலத்தை மனிதரில் ஏற்படுத்தும் என்பதால் அதை தவிர்க்கச்சொல்கிறார்கள்.

    எல்லா மனிதக்கண்டுபிடிப்புகளும் இயற்கைக்குமாறானதே. மதம் கூட இயற்கைக்கு மாறான மனித கண்டுபிடிப்புத்தான். கடவுட்கோட்பாடுகூட இயற்கைக்கு மாறானதுதான்.

    இஸ்லாம் பற்றி உங்க்ளுக்கு சில விசயங்கள் தெரிந்திருக்கலாம்.

    அம்மதத்தில் பன்றி இறைச்சி ஏன் தடைசெய்யப்பட்டுள்ளது?

    நான் பன்றி இறைச்சியை கிடைக்கும்போது விரும்பி உண்பேன். அது எனக்கு நன்றாக சமிபாடடைகிறது. எந்த பிரச்சனையும் ஏற்பட்டதில்லை. நுண்மையான உளவியல் வேறுபாடுகளை உண்டாக்கியதோ என்னவோ நான் கவனிக்கவில்லை.

    இறைவர் மனித வயிற்றை பன்றி இறைச்சியை செரிக்கக்கூடியதாக ”படைத்திருக்கும்போது” அதனை தடைசெய்வது இறைவரது அருளை உதாசீனம் செய்வதாகிவிடுமல்லவா?

    பொது இடத்தில் விற்கக்கூடாது எனும் நிதிமன்றத்தின் தீர்ப்பு “இந்து” மேலாதிக்க மனநிலையின் பாற்பட்டது.

    எப்படி அரபுதேசத்தில் பன்றி இறைச்சி தடை செய்யப்படுகிறதோ, எப்படி முழுமதி தினத்தில் இலங்கையில் மாட்டிறைச்சி தடை செய்யப்படுகிறதோ அதேபோன்ற மேலாதிக்க மனநிலை.

    ஒன்றைப்பற்றி மட்டுமே பேசுவது பக்கச்சார்பானது.

    ஒன்றைப்பற்றி பேசும்போது இன்னொன்ன்றைப்பற்றியும் பேசவேண்டியதாகிறது.

  2. மு.மயூரன்

    ஆ…

    இன்னுமொரு விசயம்,

    உயிர்க்கொலை, உயிர்வதை என்ற காரணங்களால் மாமிச உணவை தடை செய்து தரக்குறைவாக்கிய கலாச்சாரம், சமண, பவுத்த மதக்கோட்பாடுகளின் வழி வந்தது.

  3. நல்லடியார்

    //அம்மதத்தில் பன்றி இறைச்சி ஏன் தடைசெய்யப்பட்டுள்ளது?//

    இஸ்லாம் தடுத்திருப்பவற்றை நடுநிலையாக சிந்தித்தால் நியாயமான காரணங்கள் விளங்கும்.

    எல்லா உயிர்களையும் படைத்து வாழ்வளிப்பவன் இறைவன் எனும் நம்பிக்கை கொண்ட இஸ்லாத்தில் பன்றிக்கறி தடுக்கப்பட்டது முரன்பாடகத் தெரியும். காரணம் எனக்கும் தெரியவில்லை.

    பன்றிக்கறியின் தீங்கு பற்றி முன்பு இணையத்தில் ஒரு அறிவியல் கட்டுரை படித்ததாக் ஞாபகம். தேடிப்பார்த்து இங்கு இடுகிறேன் அல்லது தனிப்பதிவாக இடுகிறேன்.

    மற்றபடி நீங்கள் சொன்ன விசயங்களில் பெரும்பாலானவற்றில் எனக்கு ஒப்புதல் இல்லை. மன்னிக்கவும்.

    அன்புடன்,

  4. நல்லடியார்

    //இப்பதிவு ஏதோ இந்துமதத்தை வலிந்து கேலிபண்ணுவதற்காக இடப்பட்டதோ என தோன்றுகிறது//

    இஸ்லாமிய சட்டங்கள் பற்றி சொல்லப்படும் போதெல்லாம் இயற்கைக்கு ஒவ்வாதவை என சொல்ல பலர் இருக்கிறார்கள். நான் இத்தலைப்பை எழுத விழைந்தது நம் சட்டங்களின் முரன்பாட்டையும் அத்தகைய மேதாவிகளின் மெளனத்தையும் சுட்டிக் காட்டவே.

    தயவு செய்து என்மீதான உங்கள் தவறான கண்ணோட்டத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.
    அன்புடன்,

  5. மு.மயூரன்

    நல்லடியார்,

    உங்கள் மீது எனக்கு தவறான கண்ணோட்டம் எதுவும் கிடையாது.
    அப்படி இருந்திருந்தால் நான் இங்கு பின்னூட்டமிட்டிருக்க தேவையில்லை.

    நான் யாருக்கும் பெரிதாக பின்னூட்டமிடுவதில்லை.

    உங்களுடைய வாதங்களில் ஏதோவொரு தேடல் இருப்பதாக இனங்காண்பதாலேயே, இஸ்லாத்தை விளங்கப்படுத்த, முனையும் வலைப்பதிவுகளில் உங்களுக்கு மட்டும் பினூட்டமிடுகிறேன்.

    இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட உணவு தொடர்பாக எழுத முனைவதற்கு நீண்ட நேர யோசனை எனக்கு தேவைப்பட்டது. அது எந்தவகையிலும் உங்களை புண்படுத்துவதாக இருந்துவிடக்கூடாது என்பதில் அதிக சிரத்தை எடுத்தேன்.

    நான் ஒரு மதத்தை கொண்டிருக்கவில்லை என்பதற்காக மற்றவர் மனதை புண்படுத்த முடியாதல்லவா?

    என்னை தவறாக புரிந்துகொள்ளாதிருந்தால் சரி.

  6. க்ருபா

    நல்லடியார்,

    ஏன் பன்ற்றிக்கறி தடுக்கப்பட்டது முரண்பாடாகத் தெரிகிறது? இறைவனால் வெளிப்படையாகவே தடுக்கப்பட்டதை ஆராய்ந்துகொண்டிருப்பதை விட பின்பற்றுவதே ஒரு இஸ்லாமியனின் கடமை. ஆராய்வதெனில், இறைவன் சொல்வது நமது நன்மைக்காக இருக்குமா இல்லையா என்று மட்டும் ஆராய்ந்தாலே போதும். இறைவனை விட மனிதர்கள் பெரிய ஆராய்ச்சியாளர்கள் இல்லை. இஸ்லாமியன், இறவனின் மேல் நம்பிக்கை உடையவன் இல்லையா?

    பன்ற்றிக்கறி கிறுஸ்துவ மதத்திலும் தடைசெய்யப்பட்ட ஒன்றுதானாம். இதிலிருந்து, இவ்வுணவுத் தடையும் கிறுஸ்துவம் மற்றும் இஸ்லாம் மதங்கள் தோன்றிய பகுதி/சுற்றுப்புறம் சார்ந்ததாக இருக்கவேண்டும் என்று அறியலாம்.

    மயூரன்,

    இந்து மதத்தில் உணவுக்கட்டுப்பாடு என்று நீங்கள் சொல்லியவை எல்லாம் எனக்குத் தெரிந்து பகவத் கீதையில் மட்டுமே வருகிறது. அவையெல்லாமும் கூட கட்டுப்பாடுகள் இல்லை, பகவத் கீதை மட்டுமே இந்து மதமும் இல்லை. அவை(யும்) க்ருஷ்ணரால் எல்லாருக்கும் சொல்லப்படுவதாக வருபவை, அவ்வளவே. :-)

    க்ருபா

    க்ருபா

  7. நல்லடியார்

    //இறைவனை விட மனிதர்கள் பெரிய ஆராய்ச்சியாளர்கள் இல்லை//

    சரியாகச் சொன்னீர்கள் க்ருபா. மனிதனின் ஆராய்ச்சிகள் இறைவனால் படைக்கப்பட்ட படைப்பினங்களில் மட்டுமே இருந்து கொண்டிருக்கிறது. ‘குளோனிங்’ அறிவியல் அறிமுகமான புதிதில் இனி கடவுள் ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என இருமாப்பாக சொன்னார்கள். ஆனால் அவர்களால் குரோமோசம்களைப் பற்றிதான் சிந்திக்க முடிந்ததே தவிர குரோமோசோம்களையும் படைத்த இறைவனைப் பற்றி சிந்திக்க முடியவில்லை. இறைநம்பிக்கையாளனும் மறுப்பாளனும் வேறுபடுவது இங்குதான்.

    //நான் ஒரு மதத்தை கொண்டிருக்கவில்லை என்பதற்காக மற்றவர் மனதை புண்படுத்த முடியாதல்லவா?//

    நன்றி மு.மயூரன்1

    உங்களின் இந்த வார்த்தைகள்தான் தற்போதைய தேவை. மேலும் பன்றிக்கறியின் தீங்குகள் பற்றியும் எடுத்துச் சொல்வது அவசியமும் கடமையும் என நினைக்கிறேன். சொல்லப்படும் மருத்துவக் காரணங்களை வைத்துப் பார்க்கும் போது உண்மையில் “கருணை” நிறைந்தவன் என்பது மட்டும் தெளிவாகிறது.

  8. மு.மயூரன்

    “இறை” என்ற எண்ணக்கரு மிகப்பரந்த வியாக்கியானங்களுடன் இருக்கிறது.

    அத்தனை வியாக்கியானங்களும் மனிதரது கற்பனைகள் நம்பிக்க்கைகள் சார்ந்ததாகவே இருக்கிறது.
    இறையை நம்புவதாக முடிவெடுத்து, அதில் கடுமையாக இருக்கும் ஒருவரிடம், இறைக்கோட்பாட்டைப்பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாமலிருக்கும் எனது நிலைப்பாட்டை விளக்குவது ரொம்ப கஷ்டம்.

    இறை ஒன்றாக இருந்தால் வெவ்வேறு புனிதநூல்களும் அதனால் விளையும் குழப்பங்களும் இருந்திருக்காது.
    “இறை” எல்லாஅம் வல்லதாக இருந்தால், என்னைப்போன்ற இறைமறுப்பாளர்களின் தோற்றம், இருப்பு, வளர்ச்சி கூட அங்கீகரிக்கப்பட்டதுதான்.

    எனவே இறையின் சித்தப்படி நான் இறைமறுப்பாளனகவே இருந்துவிட்டு போகிறேன்.

    இஸ்லாத்தை பின்பற்றுபவர்களைத்தவிர்த்து அத்தனை மாற்றுமதக்காரரரு. தத்தமது அம்பிக்கைகளின்படி தாராளமாக வாழலாம். ஏனெனெனில் அது “இறையின் சித்தமாகத்தானே” இருக்கமுடியும்?

    உருவ வழிபாடு என் அம்மம்மாவுக்கு தரும் மன நிறைவை இஸ்லாம் முறைப்படியான வழிபாடு கொடுத்துவிடாது.

    எனவே அம்மம்மாவை பொறுத்தவரை அவர் உருவ வழிபாடு செய்யவேண்டும் என்பதே “இறை” சித்தம்.

    இந்த உலகின் அத்தனை நல்லவிசயங்களுக்கும் பொறுப்பான “இறை” தான் கெட்டவிசயங்களுக்கும் பொறுப்பேற்கவேண்டும்.

    அல்லாதுபோனால், அடிக்கோடிட்டுக்கொள்ளுங்கள்….

    உலகில் கெட்ட விசயங்கள் நடப்பதை தடுக்கும் வல்லமை இறைக்கு கிடையாது. மனிதர் இறை சித்தத்தை மீறி கெட்ட விசயங்கள் செய்யத்தக்கவராயிருக்கின்றனர். எனவே இந்தவிசயத்திலாவது மனிதர் இறையை மீறுமளவுக்கு அதனை விட சக்தி மிக்கவர்.

    அப்படியும், நீங்கள் உலகின் கெட்ட விசயங்க்ள் “இறை” யுடைய ஏதோவொரு சித்தப்படிதான் நிகழ்கிறது என்று நம்புவீர்களாயின், மனிதன் தன்னை நல்லவனாக்கிக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. அதற்கான் முயற்சியும் தேவையில்லை.
    அப்படி மீறி நல்லவனாக முயற்சித்தல் இறை சித்தத்தை மீறும் செயல் அல்லவா?

  9. நல்லடியார்

    எல்லாம்வல்ல இறைவன் “அற்ப” மனிதனை வணங்கச் சொல்வது “சாடிஸ்ட்” மனப்பான்மையாகத் தெரியலாம். மேலும் மனிதன் எந்த மதத்தை/கொள்கையைப் பின்பற்றினாலும் அதனால் இறைவனுக்கு ஒரு நன்மையும் ஏற்பட்டுவிடப் போவதில்லை.

    மேலும் இறைக் கொள்கைக்கும்,மனிதக் கொள்கைக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்க்க வேண்டும். மனிதக் கொள்கைகள் தனக்கு தோதானபடி அமைத்துக் கொள்ளப்படும். இவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கோ அல்லது குழுவினருக்கோ மட்டுமே பொருந்தும். ஆனால் கடவுளின் கொள்கையானது உலகம் முழுவது உள்ளவர்களுக்கும் எல்லாக் காலங்களுக்கும் பொருந்துவதாக இருக்க வேண்டும்.

    எல்லாக் உயிர்களும் ஒரு நியதிக்குட்பட்டுதான் பிறக்கின்றன. நம்பிக்கையாளனாகவோ அல்லது மறுப்பாளனாகவோ மாறுவது மனிதனின் நாட்டமன்றி இறைவனின் நாட்டமல்ல. எவை நல்லவை-கெட்டவை எனப்பிரித்து அறிவித்து, நல்லது செய்தால் சொர்க்கமும் கெட்டது செய்தால் நரகமும், நாடினால் மன்னிக்கவும் படுவோம் என தெளிவாகச் சொல்லி இருக்கும்போது, இறைமறுப்புச் செய்வது மனிதனின் நாட்டம்தானே?

    எல்லாம் வல்ல இறைவன் அவனை வணங்குவதற்காக மட்டும் மனிதனை படைக்க நாடி இருந்தால் சதா தலைவணங்கியவர்களாகவே நம்மை படைத்திருக்க முடிந்திருக்கும். இதுவல்ல வல்லமை.படைக்கப்பட்டவை மூலம் படைத்தவனின் வல்லமையை உணர்ந்து வணங்க வேண்டும் என்பது அறிவுப் பூர்வமானதுதானே?

    மயூரன், நாம் இப்பதிவுக்கு தொடர்பில்லாதவற்றை பேசுகிறோமோ என நினைக்கிறேன்.

    நன்றி.

  10. முட்டை சைவமோ அசைவமோ……பொது இடங்களில் விற்கக் கூடாதென்ற தீர்ப்பு மிகவும் அக்கிரமமானதாகத் தெரிகிறது. இது குறித்து மேல் முறையீடு செய்தால் சரியென்றே தோன்றும்.

    இந்து மதம் என்பது சைவ மதமல்ல. அசைவ மதமாகவே இருந்து வந்திருக்கிறது. இன்றைக்குகுள்ள கோயில்களில் பலியிடுதல் இல்லை என்றாலும் இந்துக்களில் பெரும்பாலானோர் அசைவர்களே. பொது இடங்களில் பலியிடுவது முறையாக இருக்காது என்ற வகையில் கோயில் பலியிடுதல் இல்லாமையை எடுத்துக் கொள்ளலாம்.

    மற்றபடி சைவ-அசைவ உணவு வகைகளை அவரவர் விருப்பத்திற்கேற்ப உண்ணலாம். அடுத்தவரைக் குமட்டாத வரைக்கும் சரி. ஹா ஹா ஹா

    முடிந்த வரை எல்லாரும் விஷயத்தை ஒட்டியே விவாதியுங்கள். அதுதான் நல்லது.

  11. // சைவத்தையும், அசைவத்தையும் ஏற்றுக் கொள்ளும் வகையில் மனிதனின் வயிற்றை இறைவன் இயற்கையாய் படைத்திருக்க இயற்கைக்கு மாற்றமாய் முட்டையை உதாசீனப்படுத்துவது இறைவனின் அருளை உதாசீனப்படுத்துவதாகும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும். //

    நல்லடியார். என்ன இது? சைவம் என்பது அவர்களின் உணவுப் பழக்கம். அதைக் குறை கூறுதல் முறையன்று. அசைவத்தை ஏற்கும் திறமை உண்டென்றாலும் எல்லாவற்றையுமா நாம் உண்கிறோம். இல்லையே. அது போலத்தான் சைவர்களின் உணவுப் பழக்கமும்.

    முட்டையைப் பற்றிச் சொல்கின்ற இடத்தில் அருள் இருள் என்று எதற்குப் பேச்சு. புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கின்றேன்.

  12. நல்லடியார்

    //முட்டையைப் பற்றிச் சொல்கின்ற இடத்தில் அருள் இருள் என்று எதற்குப் பேச்சு. புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கின்றேன்//

    அன்பின் ராகவன்,

    இப்பதிவு சைவப்பிரியர்களை கேலி செய்வதற்காக இடவில்லை. (நான் கூட வாரத்தில் 3-4 நாள் சைவத்தையே விரும்புகிறேன் :-)

    மது,சிகரெட் போன்ற தீங்கு தரும் பொருட்களை சட்டம் போட்டு தடுக்காமல், குறைந்த செலவில் பயன் தரும் முட்டையைக் கட்டுப்படுத்துவது அநியாயமாகத் தெரிந்தது.

    மேலும் அதில் சொல்லப்பட்ட வார்த்தைப் பிரயோகங்கள் லின்க் கொடுக்கப்பட்ட பத்திரிக்கையிலிருந்து எடுத்து மாற்றம் செய்யாமல் அப்படியே இட்டேன் எனபதை அறியவும்.

    ஆமா, நீங்க சைவமா அசைவமா? :-)

    என்னாச்சு ரொம்ப நாளா உங்களைக் காணவில்லையே? உள்வாங்குவதைப் பார்த்தால் “நட்சத்திர பதிவாளராக” திட்டம் ஏதும் வைத்திருக்கிறீர்களோ? எண்ணவோ?

    குர்ஆனை படித்து வருவதாக சொன்னீர்கள். உங்கள் போன்றோர் அதைப்படித்து நியாயமாக விமர்சனம் செய்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
    உங்கள் கருத்துக்களை பதிவாகவோ அல்லது மெயிலிட்டோ பகிர்ந்து கொள்ளலாமே?

    அன்புடன்,

  13. நல்லடியார்

    போலியன்,

    வணக்கம். உங்கள் கருத்து நியாயமானதும் என் கருத்தை ஓரளவு பிரதிபலிக்கவும் செய்கிறது. அக்கருத்து இப்பதிவுடன் தொடர்பில்லாததால்லும், தனி மனித தாக்குதலே சொல்லவரும் கருத்தை விட மிகைத்திருப்பதால், நீக்குகிறேன். (மன்னிக்கவும்).

    கற்பு பற்றிய டோண்டு அவர்களின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை என்பதையும் அழுத்தமாகச் சொல்லிக் கொள்கிறேன்.

  14. // மது,சிகரெட் போன்ற தீங்கு தரும் பொருட்களை சட்டம் போட்டு தடுக்காமல், குறைந்த செலவில் பயன் தரும் முட்டையைக் கட்டுப்படுத்துவது அநியாயமாகத் தெரிந்தது. //

    உண்மைதான் நல்லடியார். முட்டையைத் தடை செய்வது எனக்கும் அநியாயமாகப் படுகிறது.

    // மேலும் அதில் சொல்லப்பட்ட வார்த்தைப் பிரயோகங்கள் லின்க் கொடுக்கப்பட்ட பத்திரிக்கையிலிருந்து எடுத்து மாற்றம் செய்யாமல் அப்படியே இட்டேன் எனபதை அறியவும். //
    பத்திரிகைக்காரன விடுங்க. குஷ்பூ படமுன்னா முன்னாடி போடுவான். நல்ல செய்தீன்னா கண்டுக்கவே மாட்டான். விருதாப்பயக.

    // ஆமா, நீங்க சைவமா அசைவமா? :-) //
    நான் கடைந்தெடுத்த அசைவங்க. இனைக்குக் கூடப் பாருங்க ஒரு நண்பரோட ஒரு பெர்சியன் உணவகம் போய் ஒரு வெட்டு வெட்டீட்டுதான் வந்தேன். இன்னும் வாயும் வயிறும் திருப்தியில் இருக்கு. வாரத்துக்கு மூனுவாட்டியாவது அசைவம் இருக்கனும் எனக்கு. லீவு நாளில் முடிஞ்சா நானே செஞ்சுக்குவ்வேன். அம்மா அளவுக்கு இருக்காது. ஆனாலும் சொல்ல்லிக்கிர்ர மாதிரி இருக்கும்.

    // என்னாச்சு ரொம்ப நாளா உங்களைக் காணவில்லையே? உள்வாங்குவதைப் பார்த்தால் “நட்சத்திர பதிவாளராக” திட்டம் ஏதும் வைத்திருக்கிறீர்களோ? எண்ணவோ? //
    நட்சத்திரமாவது விண்மீனாவது….அதெல்லாம் எனக்குத் தெரியாதுங்க. அது எப்படி ஆகறதுன்னும் எனக்குத் தெரியாது. கொஞ்சம் வேலை நெறைய…அதுதான் காரணம். வேறொன்னும் இல்லை.

    // குர்ஆனை படித்து வருவதாக சொன்னீர்கள். உங்கள் போன்றோர் அதைப்படித்து நியாயமாக விமர்சனம் செய்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
    உங்கள் கருத்துக்களை பதிவாகவோ அல்லது மெயிலிட்டோ பகிர்ந்து கொள்ளலாமே? //
    குரானை இன்னும் முழுதுமாகப் படிக்கவில்லை நல்லடியார். காரணங்கள் இரண்டு. ஒன்று நேரமின்மை. மற்றொன்று அது எழுதப்பட்ட விதம். அந்தத் தமிழ் எனக்குக் கொஞ்சம் கடினமாக இருக்கிறது. ஆனாலும் பெரிய பிரச்சனையில்லை. கொஞ்சம் கொஞ்சமாகப் படித்து வருகிறேன். ஏற்புடைய கொள்கைகளும் உண்டு. மறுப்புடைய கொள்கைகளையும் உண்டு. நிச்சயமாக உங்களுடன் என் கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறேன். இங்கேயும் ஹோம் ஆஃப் பீஸ் (எனக்கு குரான் அன்பளித்தவர்கள்) அவர்களையும் தொடர்பு கொள்ள வேண்டும். பாருங்கள். கொஞ்சம் வேலைப்பளு குறைந்தால் எல்லாம் நன்றாக இருக்கும்.

    அது சரி. நீங்கள் இப்பொழுதெல்லாம் ஏன் என்னுடைய வலைப்பதிவிற்கு வருவதில்லை. அடிக்கடி வாருங்கள்.

  15. நண்பன்

    பன்றிக் கறி மிகுந்த உடல் சூட்டை உண்டாக்குவது. அதை உண்பவர்களுக்கு மூல நோய் உண்டாக சாத்தியக் கூறுகள் உள்ளன. அரேபியா மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய வெப்ப பிரதேசங்களில் அந்த உணவு தேவையில்லை. குளிர் பிரதேசங்களில் அது உடலை சூடாக வைத்திருக்கும்.

    அதனால் பன்றிக் கறி உண்பது சரியா? என்றால் கிடையாது.

    ஆனந்த விகடனில், சில வருடங்க்களுக்கு முன் அட்டைப்பட விவகாரமாக ஒரு மருத்துவரின் கதை ஒன்று வெளியாகி இருந்தது – அந்த மருத்துவரின் பேட்டி உட்பட.

    அவர் ஒரு மருத்துவ மாநாட்டிற்காக லண்டன் சென்ற பொழுது அங்கு ஓட்டலில் உணவருந்தி இருக்கிறார். சுத்த சைவம் என்பதால் – மிகுந்த சிரமத்துடன் அவர்கள் கொடுத்த சாலடுகளை சில சாஸ்களுடன் கலந்து சாப்பிட்டு சமாளித்து விட்டு ஊர் போய் சேர்ந்து விட்டார். சில நாட்களில் அவருக்குக் கடுமையான காய்ச்சல். கொஞ்சம் கட்டுப்படுவது போலிருக்கும் பின்னர் அதிகமாகும். மருத்துவர்கள் ஏன் என்று புரியாமல், பின்னர் ஏதோ ஒரு ஊகத்தில் என்ன என்ன சாப்பிட்டீர்கள் – கடந்த நாட்களில் என்ற பொழுது அவர் ஓரிரண்டு நாட்கள் லண்டனில் மாநாடு நடந்த ஓட்டலில் சாப்பிட்டிருக்கிறார் என்ற தகவல் தெரிய வந்தது.

    உடனே லண்டனிலிருக்கும் சில மருத்துவ நண்பர்களைத் தொடர்பு கொண்டு அவருக்கு ஏற்பட்டிருக்கும் உபாதைகளை விவரித்த பொழுது, அடுத்த விமானத்தில் அவருக்கு மருந்து அனுப்பி வைக்கப்பட்டது. அவருக்கு ஏற்பட்ட நோய் – ஒரு வகை மூளை சிலந்திக் காய்ச்சல். அது சாஸ் தயாரிக்கக் கலக்கப்பட்ட, பன்றியின் கொழுப்பிலிருந்து அவருக்குத் தொத்தி விட்டது. அந்தக் கிருமி – வயிற்றிலிருந்து ரத்தம் வழியாக மூளைக்குச் சென்று ஒரு சிலந்தியைப் போல மூளையைச் சுற்றி படரத் தொடங்கி இருக்கிறது. இது அங்கு சாதாரண நோய் – அதற்கான மருந்துகள் உடனே கிடைக்கின்றன.

    இந்த நவீன தயாரிப்பு வசதிகள் நிறைந்த உலகில், அந்தக் கிருமிகளை முற்றிலுமாக வெளியேற்ற இயலாதா? ஆச்சரியம் – பன்றி இறைச்சி / ரத்தம் இவற்றிலிருக்கும் கிருமிகளை நூறு சதவிகிதம் அழிக்க இயலாது என்பதே. நவீன சாதனங்கள் கொண்டு தயாரிக்கப்படும் உணவிலே இதை தவிர்க்க இயலவில்லை என்றால் – நம் வீட்டில் உபயோகப்படுத்தும் சராசரி அடுப்பில் சமைத்து இந்தக் கிருமிகளை வென்று விட முடியுமா? சந்தேகம் தான்….

    இது ஆனந்த விகடனில் சில வருடங்களுக்கு முன்பாக வந்த அட்டைப்பட கதை. (ஒரு 5 வருடங்களுக்குள்ளாக?) ஆனந்த விகடனில் தொடர்பு உடைய அன்பர்கள் அவர்களது நூலகத்தில் அல்லது சேமிப்பகத்தில் தேடினால் கிடைக்கக் கூடும்.

    அடுத்த காரணம் – பன்றி இறைச்சி – காமத்தை மிக அதிகமாக தூண்டிவிடும்.

    இத்தகைய ஒரு உணவை மனிதர்களுக்குத் தடை செய்ததில் ஏதும் தவறில்லை தானே?

    மனிதர்கள் அசைவம் உண்பதை கிண்டல் செய்யும் நண்பர்களுக்கு – அதே கையோடு நவீன விஞ்ஞான உலகத்தையும் கிண்டல் செய்ய முடியும் தானே? செய்யுங்கள் – உணவு சுழற்சி முறையை. வெறும் சைவமாக இந்த உலகம் இருந்தால், பின்னர் நீங்கள் போட்டி போட வேண்டியது – தாவரங்களை உண்டு உயிர் வாழும் பிராணிகளுடன் தான். இந்த உணவுப்போட்டியில் பின் தங்கும் இனங்கள் அழிந்து விடும். இதையொட்டிய விவாதங்கள் எத்தனையோ நடை பெறுகின்றன. எல்லோரும் – காருண்யவாதிகள் – சொல்வது – தன்னாலே செத்துப் போவதாயிருந்தால் செத்துப் போகட்டும் – ஆனால், அவற்றை எளிதாக சாப்பிட மட்டும் விடமாட்டோம் என்ற வீறாப்பு ஏன் என்று தெரியவில்லை.

    நாளை ஹஜ்ஜுப் பெருநாள். ஆயிரக்கணக்கான டன் எடையுள்ள இறைச்சி இலவசமாக ஆப்பிரிக்காவின் ஏழை நாடுகளுக்கு அனுப்பப்படப் போகிறது. இது ஒவ்வொரு வருட நிகழ்வு. எந்த ஒரு விளைச்சலும் இல்லாத பாலை வன நிலத்தில் இருந்து கொண்டே, பிறருக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *