Featured Posts
Home » பொதுவானவை » அமானுடக் கேள்விகளும், அரைகுறை ஞானிகளும் – 6

அமானுடக் கேள்விகளும், அரைகுறை ஞானிகளும் – 6

இதுவரை வஹீ அருளப்பட்ட விதத்தை அறிவியல்,உளவியல் காரணம் சொல்லி அவதூறு செய்த டாக்டர்.கோயன்ராட்/நேசகுமாரின் முரன்பாடுகளையும், இஸ்லாம் பற்றிய அவர்களின் அரைகுறை ஞானத்தையும் முந்தைய தொடர்களில் அறிவியல் அளவீடுகளின் மூலம் பார்த்தோம்.

இத்தொடருக்கு மேலும் வழு சேர்க்கும் விதமாக தமிழில்குர்ஆன் என்ற தளத்தில் இருக்கும் குர்ஆன் அருளப்பட்டவிதம் பற்றியும் குர்ஆனில் சொல்லப்பட்ட முன்னறிவிப்புகள் மெய்ப்படுத்தப் பட்டதையும் இப்பதிவில் பார்ப்போம்.

குர்ஆன் அருளப்பட்ட விதம்:

முஸ்லிம்களுக்கும் இஸ்லாம் பரவத்தொடங்கிய காலத்தில் இருந்த முஹம்மது நபியின் சமூக மக்களுக்கும் திருக்குர்ஆன் அருளப்பட்ட விதத்தில் எவ்வித சந்தேகமும் இருந்திருக்கவில்லை. இறைவனுக்கும் அவனின் தூதுவருக்கும் இருந்த தொடர்பு பற்றிய ஐயங்கள் இஸ்லாத்தை ஏற்ற மக்களுக்கு தேவையற்ற ஒன்றாக இருந்திருக்கிறது.

குர்ஆன் முஹம்மது நபியின் சமூகத்தவர் ஐயம்தவிர்த்து நம்பும் வகையிலேயே அருளப்பட்டது. வஹீ வரும் முன்னரும் வஹீ வந்த பின்னரும் இருந்த அனைத்து நிகழ்வுகளும் வரலாற்றில் ஆதாரங்களுடன் இருப்பதால் முஸ்லிம்களுக்கும் உண்மையை தேடுவோருக்கும் எவ்வித ஐயமும் இல்லை. குர்ஆன் புத்தகமாக அருளப்பட்டதா? அல்லது யாரும் அறியாத விதத்தில் வஹீ அருளப்பட்டதா என்றால் அதுவும் இல்லை.

வஹீ அருளப்பட்ட சூழலில் மனைவியரும் இன்னும் நபித்தோழர்களும் சாட்சியாக இருந்ததால், அதன் வெளிப்பாட்டில் அவர்களுக்கு ஐயம் ஏற்படவில்லை.
திருக்குர்ஆன், குறிப்பிட்ட தலைப்புகளின் கீழ் செய்திகள் வடிவமைக்கப்பட்ட நூல் அல்ல. மாறாக 23 ஆண்டுகளில் பல்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்ப இறைவனால் கூறப்பட்ட அறிவுரைகளின் தொகுப்பு என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நல்லொழுக்கமுள்ள அறிவுள்ள தந்தை தன் மகனுக்குப் பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிவுரை கூறுகிறார். இவ்வாறு அவர் பத்து ஆண்டுகளில் கூறிய அறிவுரைகளை நாம் தொகுத்தால் அது எவ்வாறு அமைந்திருக்கும்?

1) இதில் முதல் வருடம் கூறிய அறிவுரைகளில் சிலவற்றை மறு வருடமும் அவர் கூறியிருப்பார்.
2) சில அறிவுரைகளை ஏழெட்டு தடவை கூட கூறியிருப்பார்.
3) சில அறிவுரைகளை ஒரே ஒரு தடவை தான் கூறியிருப்பார்.
4) செய்தியின் முக்கியத்துவத்தின் காரணமாக இவ்வாறு திரும்பத் திரும்பக் கூறியிருக்கலாம். அல்லது கூறப்பட்ட அறிவுரையை மகன் சரியாகக் கடைபிடிக்காத போதும் மறுபடியும் கூறியிருப்பார்.

இதே போன்ற காரணங்களால் தான் திருக்குர்ஆனிலும் சில விஷயங்கள் திரும்பத் திரும்பக் கூறப்பட்டுள்ளன. தந்தை மகனுக்குக் கூறிய பத்து வருட அறிவுரைகளைத் தொகுத்துப் பார்த்தால் அது எந்தத் தலைப்பின் கீழும் வரிசைப்படுத்திக் கூறப்பட்டதாக இருக்காது.
முதல் நாளில் மகன் கோபமாக இருப்பதைக் கண்டு பொறுமையைப் பற்றிப் பேசுவார்.

அடுத்த நாளில் பரீட்சை என்றால் படிப்பதன் அவசியம் பற்றிக் கூறுவார். மறுநாள் மகன் சரியாக சாப்பிடவில்லையானால் உணவு உட்கொள்வது பற்றிப் போதனை செய்வார். அதற்கும் மறுநாள் தாயை மகன் எதிர்த்துப் பேசுவதைக் காணும் போது அது பற்றி அறிவுரை கூறுவார்.
முதலில் இந்தத் தலைப்பிலான விஷயங்களைக் கூறிவிட்டு, அடுத்து வேறு தலைப்பை எடுத்துக் கொள்வோம் என்றெல்லாம் திட்டமிட்டு தந்தை மகனுக்குத் அறிவுரை கூறுவதில்லை.

மகனுக்கு தேவைப்படும் செய்திகளைத் தேவையான அளவுக்குக் கூற வேண்டும் என்பது மட்டுமே அவரது திட்டமாக இருக்கும். இது போலவே திருக்குர்ஆ

2 comments

  1. கலாநிதி

    நீரும் அவுட்டா?

  2. நல்லடியார்,
    நாமிருவரும் தமிழ்மணம் திரட்டியிலிருந்து விலக்கப்பட்டிருக்கும் சுழ்நிலையில்,
    நாமிருவரும் வலைபதிவில் பின்வருமாறு விவாதத்தை வைதுக்கொள்ளாம் என விரும்புகிறேன்.தங்கள் விருப்பத்தையும் தெரியபடுத்தவும்.

    1.எனக்கு எழும் கேள்விகளை என் வளைபதிவில் இட்டு(நல்லடியாரிடம் விளக்கம் வேண்டி 1,2..(அல்லது உங்களுக்கு விருப்பமான தலைப்பு)) ) ,உங்களுக்கு தெரியபடுத்துகிறேன்.
    2.நீங்கள் உங்களுக்கு விருப்பமான வகையில் (மின்னஞ்லலிலோ அல்லது என் பதிவிலோ) உங்கள் விரிவான விளக்கத்தை தமிழில் கொடுங்கள்.
    3.நான் நீங்கள் சொல்லும் விளக்கத்திலிருந்து கேள்வியை எழுப்பமாட்டேன்.
    4.ஒரு மாற்று எற்ப்பாடு எற்ப்படுத்தும் வரையில் நம் விவதத்தை 1 கேள்வி அதற்க்கு பதில் என்ற வரையில் நிறுத்திக் கொள்வோம்(மனஸ்தாபத்தை தவிர்க்க மற்றும் தெடர்ந்து செயல்பட).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *