Featured Posts
Home » பொதுவானவை » அறிமுகம்

அறிமுகம்

தமிழ் நெஞ்சங்களுக்கு, இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீதும் என்றென்றும் உண்டாவதாக!

தமிழ்மணத்தின் மூலம் “நல்லடியார்” என அறியப்பட்ட நான் < <எதிரொலி>> என்ற வலைப்பூவில் இஸ்லாம் மார்க்கம் பற்றியும், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பற்றியும் சில எழுதிய அவதூறுகளுக்கு விளக்கம் சொல்லும் கடமையில் எழுதி வந்தேன்.

எனது வலைப்பூ பதிவுகள் http://athusari.blogspot.com என்ற முகவரியில் செயல்பட்டு வந்த போழ்தும், தமிழ்மணம் நிர்வாகிகளின் புதிய விதிமுறைகள் மதம் சார்ந்த அல்லது துவேச கருத்துக்கள் சசத்தியமுள்ள வலைப்பூக்களை திரட்டுவதில்லை என்ற புதிய விதியால் எனது வலைப்பூவும் பட்டியலிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இஸ்லாம் மார்க்கத்திற்கு எதிரான வலைப்பூக்களும் பட்டியலிலிருந்து நீக்கப்படுள்ளன.

தள நிர்வாகிகளின் இத்தகைய கட்டுப்பாடு தேவையானது என்பதைச் சொல்லிக் கொள்ளும் இதே நேரத்தில் சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

மொழியால் தமிழன்! தேசத்தால் இந்தியன்! மதத்தால் இஸ்லாமியன்! உணர்வால் மனிதன். இதுதான் என் நிலைப்பாடு.

இணையத்தில் சாதாரண வாசகனாக இருந்த என்னை வேதனைப்படுத்தியது ஒன்று உண்டென்றால், இஸ்லாத்திற்கு எதிரான வலைப்பூக்கள். இதுவரை தமிழல்லாத மொழிகளில் அது போன்ற தளங்கள் உலகலாவிய அளவில் இயங்கி வந்தபோது எழாத வருத்தம் சக தமிழர்களை மதத்தின் பெயரால் பிளவுபடுத்த முயலும் சில சக்திகளின் துவேச எழுத்துக்களால் எழுந்தது.

மத நம்பிக்கை என்பது மனித நல்வழிப்படுத்த தோன்றியவை என சொல்லும் இஸ்லாத்தை மனப்பூர்வமாக ஏற்று, இதுவரையிலும் சகமனிதர்களுடன் நண்பணாய், அண்டை வீட்டுக்காரணாய், சக ஊழியனாய் இருந்து வருகிறேன். இனியும் இதில் மாற்றமிருக்காது.

என் நம்பிக்கையை சிலர் ஏளனப்படுத்தியதாலும் அவதூறாக எழுதியதாலும் அவர்களுக்கு பதில் கொடுக்க வேண்டி மட்டும் இஸ்லாம் சம்பந்தமாக எழுதி வந்தேன். நான் இஸ்லாமிய பிரச்சாரகனோ அல்லது எழுத்தாளனோ அல்ல. நான் அறிந்த உண்மைகளை பிறருக்கு புரிந்து கொள்ளும் வகையில் சொல்வதற்காகத்தான் எழுதி வருகிறேன்.

என் மதநம்பிக்கை தாக்கப்படும்போது, அதற்கு தகுந்த விளக்கம் கொடுக்காமல் சினிமா,அரசியல்,பொழுதுபோக்கு என்று என்னால் எழுத முடியவில்லை. முடியவில்லை என்று சொல்வதை விட எழுத விடவில்லை என்பதே உண்மை.

இனி என் மத நம்பிக்கைகளின் மீதான அதூறுகளுக்கு தமிழ்மணத்தில் வாய்ப்பில்லை என்பதால் அத்தகைய விளக்கங்கள் அல்லாமல் பொதுவான சமய/சமூக சிந்தனைகளை
பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இந்த முடிவில் என் எழுத்தார்வம் மற்றும் இதுவரை பெற்ற தமிழிணைய நண்பர்களை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற சுயநல நோக்கமுமே என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

இனி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *