Featured Posts
Home » பொதுவானவை » பண்டிகைகளும் நல்லிணக்கமும் -1

பண்டிகைகளும் நல்லிணக்கமும் -1

பண்டிகைகள் – அந்தந்த மத நம்பிக்கையாளர்கள் தங்கள் கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக சந்தோசமாகக் கொண்டாடப் படுவதற்காக மதங்கள் ஏற்படுத்திய வழிமுறை. கிறிஸ்துமஸ்,புத்தாண்டு, புனிதவெள்ளி என கிறிஸ்தவர்களும் தீபாவளி,ஆயுத பூசை என இந்துக்களும் ரம்ஜான், பக்ரீத் என முஸ்லிம்களும் ஒவ்வொரு வருடத்திலும் சில நாட்கள் கொண்டாடுகின்றார்கள்.

இவையல்லாமல் பொங்கல்,ஓணம்,யுகாதி போன்ற சமூக/இன ரீதியான பண்டிகளும் கொண்டாடப் படுகின்றன. அனைத்து மத பண்டிகைகளின் நோக்கமும் மக்கள் சந்தோசமாகவும் நன்றியுடையவர்களாகவும் இருக்க
வேண்டும் என்பதே.

உண்மையில் அனைத்து பண்டிகைகளும் மக்களுக்கு சந்தோசத்தைக் கொடுக்கிறதா? என்று நடுநிலையாக சிந்திக்க வேண்டியது நம் கடமையாகும்.

முஸ்லிம்களின் பண்டிகைகளின் போது குர்பானியின் போது உணவுக்கு ஏற்ற கால்நடைகளை இறைவன் பெயரால் அறுத்து தானும் உண்டு, உறவினர், அண்டை வீட்டார் மற்றும் ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டும். இது பசுவை தெய்வமாக வணங்குபவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதில்லை.

கிறிஸ்தவர்களின் பண்டிகையின்போது மது அருந்துதல், ஆண்-பெண் கட்டுப்பாடின்றி ஆடிப்பாடுதல் போன்றவற்றில் முஸ்லிம்களுக்கு ஈடுபாடில்லை. அர்த்தமற்ற கேளிக்கைகளையும், அனாச்சாரங்களையும்
இஸ்லாம் அவர்களுக்கு தடுத்துள்ளதால் ஒரு சாராருக்கு மகிழ்சியான பண்டிகை இன்னொரு சாராருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை.

இந்துக்களின் பண்டிகையின் போது செய்யப்படும் சில சடங்குகளும், மேட்டுக்குடி இந்துக்களில் சிலர் மது அருந்தியும் இன்னும் பிற கேளிக்கைகளிலும் ஈடுபட்டு தங்கள் பண்டிகளைகளைக் கொண்டாடுகின்றனர்.

இதுவும் இஸ்லாமியருக்கு ஏற்புடையதாக இல்லை. இப்படி ஒருவர் சந்தோசமாகக் கொண்டாடும் பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்கள் இன்னொருவருக்கு கொண்டாட்டத்தையும் சந்தோசத்தையும் கொடுக்க முடியவில்லை.

சரி, அனைத்து மக்களும் பொதுவாக ஒரு பண்டிகையைக் கொண்டாடலாமே என்ற வாதம் நியாயமாகப் படலாம். பிற மத வழிபாடுகளற்ற அல்லது பிறர் மதக் கொள்கையுடன் ஒத்துவராத பண்டிகைகள் சாத்தியமா? எனப் பார்ப்போம்.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *