Featured Posts
Home » பொதுவானவை » அமானுடக் கேள்விகளும், அரைகுறை ஞானிகளும் – 7

அமானுடக் கேள்விகளும், அரைகுறை ஞானிகளும் – 7

கீழைத்தேய ஆய்வு (Science of Orientalism) என்பது பொதுவாகக் கீழைத்தேய நாடுகள், இனங்களின் மொழி, மதம், பண்பாடு, நாகரிகம், வரலாறு பற்றிய மேற்கத்திய ஆய்வாளர்களின் ஆராய்ச்சியைக் குறிக்கும். (பார்க்க: Encyclopedia Britannica). கீழைத்தேய ஆய்வு என்பது ஆரம்பத்தில் ஐரோப்பிய காலனித்துவவாதிகளின் ஆதரவிலும் அதனைத் தொடர்ந்து கீழைத்தேய உலகில் கிறிஸ்தவ மதப்பிரச்சாரத்தை மேற்கொண்ட கிறிஸ்தவ மதப்பிரச்சாரகர்களின் துணையாலும் வளர்ச்சியடைந்தது.

கீழைத்தேயங்களைக் கைப்பற்றி ஐரோப்பிய அரசியல் ஆதிக்கத்தை அங்கு நிலைபெறச் செய்யவும், கீழைத்தேய மக்களுக்கும் அவர்களது மதம், பண்பாடு, வாழ்க்கை முறைக்குமிடையேயுள்ள பிரிக்க முடியாத உறவைச் சீர்குலைத்து, அவர்களைக் கலாச்சாரப் பண்பாட்டு ரீதியாக அடிமைப்படுத்தவும் அம்மக்களின் மொழி, பண்பாடு, நாகரிகம், வாழ்க்கைமுறை பற்றிய அறிவு மிக அவசியம் என்பதை உணர்ந்த காலனித்துவவாதிகள் இத்துறைகளில் ஆழமான அறிவும் புலமையும் பெற்ற ஒரு குழுவை உருவாக்க முனைந்தனர். இதுவே மேற்குலகில் கீழைத்தேய ஆய்வின் ஆரம்பமாகும்.

குறிப்பாக, கிறிஸ்தவ மதத்திற்கும் (ஐரோப்பாவிற்கும்) முஸ்லிம் உலகிற்குமிடையில் நிகழ்ந்த சிலுவைப்போர்களின் பின்னர்தான் முஸ்லிம்களைக் கலாச்சார ரீதியாக அடிமைப்படுத்தும் ஆரம்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மேற்குலகில் காலனித்துவவாதத்தின் எழுச்சிக்குப் பின்னர் இவ்வுணர்வு மிக உக்கிரமாகச் செயல்பட்டது. முஸ்லிம்களைக் கிறிஸ்தவர்களாக மாற்றுவதில் தோல்விகண்ட மேற்கத்தியவாதிகள், முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்குமிடையேயுள்ள தொடர்பைத் துண்டிக்கும் முயற்சிகளை மேற்கொண்டார்கள்.

இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்களான குர்ஆன், ஹதீஸ் பற்றிய சந்தேகங்களை முஸ்லிம்களின் உள்ளத்தில் தோற்றுவித்து, இஸ்லாத்தைச் செயலிழந்ததாக ஆக்கி, அவர்களைக் கலாச்சாரப் பண்பாட்டு ரீதியாக முற்றிலும் சீர்குலைத்துவிடுவதே மேற்கத்தியவாதிகளின் திட்டமாக அமைந்தது.

பிரான்ஸிலிருந்து பிரசுரிக்கப்பட்ட Le Monde Mussalman என்னும் இதழில் Mr. Chatalier என்னும் கிறிஸ்தவ மிஷனரி ஒருவர் எழுதிய கட்டுரையில் காணப்படும் இக்கருத்து இதனை மிகத் தெளிவாகக் காட்டுகின்றது.

“No doubt our missionaries have failed so far indirectly undermining the faith of the Muslims, This end can be achived only by the propagation of ideas through the mediam of European languages.

“முஸ்லிம்கள் இஸ்லாத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையைப் பலவீனமடையச் செய்வதில் எமது மிஷனரிகள் (பிரச்சாரகர்கள்) தோல்வி கண்டு விட்டனர் என்பதில் சந்தேகமில்லை. மேற்கத்திய மொழிகள் மூலம் நம் கருத்துக்களைப் பரப்புவது கொண்டே இதனைச் சாதிக்க முடியும்”.

அவர் மேலும் கூறுகிறார்:

“With the weakening of their belief in Islam, decay and disintergration are bound to set in and when this decay and this disintergration spreads throught the world of Islam, the religious spirit of the Muslims will be entirely uprooted and will never be able to re-emerge in a new form”.

“இஸ்லாத்தின் மீது அவர்களுக்குள்ள நம்பிக்கை பலவீனமடைந்தவுடன், அவர்களை வீழ்ச்சியும் நலிவும் பலவீனமும் ஆட்கொண்டுவிடும். நலிவும் பலவீனமும் முஸ்லிம் உலகம் முழுவதும் வியாபித்துப் பரவியதும் முஸ்லிம்களின் மத உணர்வு முற்றிலும் வேரோடு பிடுங்கப்பட்டுவிடும். அதன் பின்னர் அவர்கள் மீண்டும் புது உருப்பெற்று என்றும் தலை தூக்க முடியாது. “[Ref: Khurshid Ahmad, “Islam & the west”. (1970, P 13-15)]

எனவே முஸ்லிம்களின் உள்ளத்தில் இஸ்லாத்தைப் பற்றிய சந்தேகங்களைத் தூண்டிலாகப் போட்டு, அதில் மீன்பிடிக்க அடிகோலிட்ட மிஷனரிகளின் உத்தியையே இந்தியாவின் காவிச் சிந்தனாவாதிகள் தொடருகிறார்கள். அவர்

One comment

  1. நீங்கள் எழுதும் கருத்துகள் அருமை. உங்கள் பதிவை என் இமெயில் முகவரிக்கு தயவுசெய்து அனுப்ப முடியுமா? நான் சில நேரம் பார்க்க தவறிவிடுகிறேன். நன்றி.

    shafi@dailythanthi.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *