Featured Posts
Home » பொதுவானவை » அமானுடக் கேள்விகளும், அரைகுறை ஞானிகளும் – 8

அமானுடக் கேள்விகளும், அரைகுறை ஞானிகளும் – 8

வரலாற்றுக் குறிப்புகளைக் கொண்டு முஹம்மது நபியின் தூதுத்துவத்தையும் வஹீ அருளப்பட்ட விதத்தையும் ஆய்ந்த ஒரு சிலர், நபிகளாரின் உன்னத வாழ்க்கையையும் வஹீ அருளப்படுவதற்கு முன்னர் நபிகளார் தம் சமூகத்தில் பெற்றிருந்த நம்பகத் தன்மையையும் கருத்தில் கொண்டு, ‘அவரால் குர்ஆன் எழுதப்படவில்லை அல்லது அதை எழுதுவதற்கான உள்நோக்கம் அவருக்கு இருந்ததில்லை’ என ஒப்புக் கொண்ட போதிலும், ‘அவர் வலிப்பு நோயால் அவதிப்பட்டார் அல்லது தாம் இறைச்செய்தி அனுப்பப்படும் தூதர் என்ற மனப்பிரமையில் உழன்றார்’ என்ற அடிப்படையற்றக் குற்றச்சாட்டை வைக்கின்றனர்.

வரலாற்றில் பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்துச் செயல்பாடுகளும் ஆதாரங்களுடன் பதிந்து வைக்கப்பபட்ட ஒரு மனிதர் உண்டென்றால் அவர் முஹம்மது நபி மட்டுமே என்பதை மனதில் வைத்துக் கொண்டு, இவர்களின் இக்குற்றச்சாட்டை அணுகுவோம். முஹம்மது நபியின் வாழ்க்கைக் குறிப்புகளின் மூலம், நபிகளார் வாழ்ந்த அறுபத்து மூன்று ஆண்டுகளில் மனோதிடமான ஆளுமையுள்ளவராகவும் சாதாரண வாழ்க்கை வாழ்ந்தவராகவுமே (normal and sane life) அவர் அறியப்படுகிறார்.

மேலும் இஸ்லாத்தைக் களங்கப்படுத்தப் பயிற்றுவிக்கப்பட்ட கிறிஸ்தவ ஓரியண்டலிஸ்டுகளுங்கூட ‘இக்குற்றச்சாட்டில் உண்மையில்லை’ என மறுக்கின்றனர். முஹம்மது நபிக்கு வலிப்பு நோய் இருந்ததாகச் சுமத்தப்பட்ட அவதூறை மறுக்கும் பிரபல கிறிஸ்தவ ஓரியண்டலிஸ்ட் டேனியேல் சொல்வதாவது:

“Epilepsy as applied to the Prophet was the explanation of those who sought to amuse rather than to instruct” – Mohammad The Sublime Qu’ran and Orientalism p. 13.

நபிகள் நாயகம் அவர்களுக்கு வலிப்பு நோய் இருந்ததாகக் கூறுபவர்களது உள் நோக்கம், நபிகள் நாயகத்தைக் குறித்துச் சரியான தகவல் தருவதன்று; மாறாக, அவரை எள்ளி நகையாடுவதே”.

மற்றொரு பிரபல கிறிஸ்தவ ஓரியண்டலிஸ்ட் ஜான் டேவன்போர்ட் (John Davenport) சொல்வதாவது:

“This remark that Muhammad has suffered the attacks of epilepsy is one of the false, awkward sayings of the Greeks by which they meant to stain the prestige of the propagator of a new religion, and turn the world of Christianity against his moral behavior and qualities.” Udhri Taqsir, p.20

“முஹம்மது நபி வலிப்பு நோயால் அவதியுற்றார் என்பது, ஒரு புதிய மார்க்கத்தைச் சொல்பவரின் மரியாதையை மாசுமடுத்த கிரேக்கர்கள் பொய்யாகச் சுமத்திய குற்றச்சாட்டாகும். மேலும் கிறிஸ்தவ உலகை, நபியவர்களின் நடத்தைகளுக்கும் பண்புகளுக்கும் எதிராக வழி நடத்துவதுமாகும்.”

முஹம்மது நபியின் மீதான வலிப்பு நோய் பற்றிய குற்றச்சாட்டுக்கு வரலாற்றில் எவ்வித முகாந்திரமும் இல்லாத போழ்து, கற்பனையாக இட்டுக் கட்டுபவர்கள், வலிப்பு நோய் பற்றிய குறைந்த பட்ச ஞானம் கூட இல்லாதவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

பிரபல மருத்துவரும் இஸ்லாமிய அறிஞருமான டாக்டர். ஜாகிர் நாயக், வலிப்பு நோயின் கூறுகளையும் முஹம்மது நபியின் செயல்பாடுகளையும் ஆய்ந்து சொல்வதாவது:

வலிப்புகள் பலவகைப்படும். முக்கியமாக,

1) Grand mal = வலிப்பு அல்லது அதுபோன்ற ஒத்த தன்மையுடைய பாதிப்பு. அதாவது வலிப்பு வந்தவரைச் சுயநினைவிழக்கச் செய்து, உடல் அங்கங்களை உதறி, ஸ்தம்பிக்கச் செய்யும் இசிவு நிலை.

2) Petit mal = உடல் அங்கங்களை உதறலெடுக்கச் செய்து, தசைகளை இழுத்துக் கொண்டு கணநொடியில் தோன்றி மறைகின்ற இழுப்புடன் கூடிய இசிவு நிலை.

3) Focal Seizures = மூளையின் குறிப்பிட்ட பகுதியை பாதித்து, பிறகு அப்பகுதி கட்டுப்படுத்தும் அவையங்களைத் தாக்கும்.

4) Psychomotor = ஒரு சில நொடிகளுக்கு மட்டுமே நிகழ்கின்ற அரற்றலு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *