Featured Posts
Home » பொதுவானவை » இஸ்லாம் தாக்கப்படும் போதெல்லாம்…

இஸ்லாம் தாக்கப்படும் போதெல்லாம்…

நாம் எங்கிருந்து வந்தோம், எங்குச் செல்கிறோம் எனும் கேள்விக்கு விடை தேடும் போதுதான் ஒவ்வொரு மனிதனும் தத்துவச் சிந்தனையாளன் ஆகிறான். இந்தத் தேடலின் விளைவாகத்தான் உலகம் பல்வேறு கொள்கைகளையும் சிந்தனைகளையும் மாறிமாறிச் சோதித்துப்பார்த்தது!

மனிதனை நல்வழிப்படுத்தி உலக மக்களை அமைதியாகவும் சுபிச்சமாகவும் வாழச் செய்ய இதுவரை எத்தனையோ கொள்கைகள் தோன்றி விட்டன. அவை உருவாக்கியவரின் பெயராலோ அல்லது தத்துவத்தின்/கொள்கையின் பெயராலோ அழைக்கப் படுகின்றன.

அரசியல் ரீதியான சமூக மாற்றத்தை ஏற்படுத்தி, மக்களை சமதர்ம சமுதாயமாக வாழச் செய்வதே கம்யூனிஸ தத்துவத்தின் அடிப்படை நோக்கம். இன்று உலகில் கம்யூனிஸ சித்தாந்தத்தின் வெவ்வேறு பரிணாம அடிப்படையில் செயல்படும் நாடுகள் என்றால் சீனா, ரஷ்யா,கியூபா, லாவோஸ், வட கொரியா மற்றும் வியட்நாம் ஆகியவற்றை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

இவற்றில் சீனா தவிர்த்து ஏனைய கம்யூனிஸ நாடுகளில் அமைதியின்மையும், வறுமையும் நிரந்தரமாகக் குடிகொண்டுள்ளன. காலங்காலமாக “எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்” என்று சொல்லப்பட்டு வந்த போதிலும், ஏழைகள் மிக ஏழைகளாகவும், பணக்காரர்கள் மிகப் பணக்காரர்களாகவுமே இருந்து வருகின்றனர்.

அளவுக்கு மீறிய ஆக்கிரமிப்பின் காரணமாக முதலாளியத்துவ மேலை நாட்டு மக்களில் பெரும்பாலோர் மனச்சிதைவுகளுக்கு ஆளாகி வருகிறார்கள். ஆன்மீகத்திற்கு மதிப்பில்லாத சூழல், மனச்சிக்கல்களை மேலும் அதிகமாக்கியுள்ளது. வரம்புகடந்த பாலுறவுகளின் காரணமாக தந்தை யார் என்று அறியாத ஒருதலைமுறையே உருவாகியுள்ளது. இவைதான் முதலாளியத்துவ மேலை நாகரிகம் தேடித்தந்துள்ள செல்வம்!

கம்யூனிஸம் உட்பட நவீன கொள்கைகள் எல்லாம் தகர்ந்துபோய்விட்ட நிலையில் இஸ்லாம் இன்றும் வியக்கத்தக்க வகையில் உயிர்த்துடிப்புடன் நிலைகொண்டுள்ளது. தனிமனித ஒழுக்கம் சார்ந்த இறைவழிபாட்டிற்கு இதர மதங்களில் தெளிவான வழிகாட்டல் இல்லாததால் பெயருக்கு மட்டுமே அவை நடைமுறையில் இருந்து கொண்டிருக்கின்றன.

பலதெய்வ வழிபாட்டுக் கொள்கையால் ஒருபோதும் உலகளாவிய கண்ணோட்டத்தைக் கையாள முடியாது. மதக்கொள்கைளைத்தான் அதிகாரம் பெறுவதற்கான ஒருவழியாகக் கிறிஸ்தவ மதம் கையாண்டது. மதங்களால் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய வந்த மார்க்சியம் போன்ற கொள்கைகளும் மதங்களின் தொடச்சியாகவே செயல்பட்டன.

பொலிட்பீரோ உறுப்பினர்கள் புரோகிதர்கள் போல் இயங்கினர். மதம் இருந்த இடத்தில் கம்யூனிஸம் வந்தது. தெய்வங்கள் இருந்த இடத்தில் மார்க்சும் – ஏங்கல்சும்! மற்றவர்கள் மீதான வெறுப்புணர்வையே அடித்தளமாகக்கொண்டு வடிவம் பெற்ற பாசிசம் போன்ற கொள்கைகள் தாம் சென்ற நூற்றாண்டில் மனித இரத்தம் ஆறாய் ஓடக் காரணமாயின!

இஸ்லாமும் செக்யூலரிஸமும் மட்டும்தான் இப்பொழுது எஞ்சியுள்ள கொள்கைகள். இதில் செக்யூலரிஸத்திற்கு அதிக ஆயுள் இருக்கப் போவதில்லை. இறைவனைப் பற்றியும் சுற்றுச்சூழல், சக உயிரினங்கள் ஆகியவை பற்றியெல்லாம் மிக அழகான-அறிவுப்பூர்வமான கொள்கைகளைத் தன்னகத்தே கொண்டிருப்பது இஸ்லாத்தின் சிறப்பாகும்!

புகழ் பெற்ற சிந்தனையாளரும் முன்னாள் ஜெர்மன் தூதருமான முராத் வில்ஃபிரட் ஹாப்மென் கூறுகிறார்:

உலக மயமாக்கலின் புத்தாயிரமாண்டு இது! வரக்கூடிய நூற்றாண்டுகளில் ஏற்படக்கூடிய எல்லாச் சிக்கல்களையும் எதிர்கொண்டு அவற்றிற்குத் தீர்வளிக்கக்கூடிய ஒரே மார்க்கம் இஸ்லாம்தான்!

இஸ்லாத்தின் ஓரிறைக் கொள்கையும் அது கற்றுத் தரும் விழுமங்களின் அடிப்படையிலான வாழ்க்கை நெறியும் – சி

2 comments

  1. நல்லடியார்

    “இஸங்களின் தோல்வியில் இஸ்லாத்தின் எழுச்சி” என்ற தலைப்பில் எழுதப்பட்ட பதிவு. மீண்டும் பதிக்கப்பட்டுள்ளது.

  2. அப்துல் குத்தூஸ்

    படிக்கத்தந்தமைக்கு நன்றி நல்லடியார் அவர்களே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *