Featured Posts
Home » பொதுவானவை » பெரியார் ஈ.வெ.ராமசாமி பார்வையில் இஸ்லாம்

பெரியார் ஈ.வெ.ராமசாமி பார்வையில் இஸ்லாம்

  • மதங்களையும், மதங்களின் பெயரால் மனிதனை மனிதன் தாழ்த்தி, சக மனிதனுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் கொடுமைகளையும் எதிர்த்த “பகுத்தறிவுச் சிங்கம்” பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கள் மற்ற மதங்களை விட இஸ்லாத்தின் மீது மாறுபட்ட கண்ணோட்டம் கொண்டிருந்தார்.
  • குர்ஆனை முதன் முதலாக அழகுதமிழில் மொழிபெயர்த்த ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி (மர்ஹும் A.K.A.அப்துல் ஷமது அவர்களின் தந்தையார்) அவர்கள் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன் எழுதிய “இயற்கை மதம்” என்ற ஆய்வு நூலுக்கு, பெரியார் அவர்கள் குடியரசு (26.10.1930) இதழில் எழுதிய பரிந்துரையை தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்து கொள்வது அவசியமாகும்.
  • தற்கால இஸ்லாமிய நூற்களைக் குறிப்பாக, இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று, இஸ்லாமின் ஆன்மிக நம்பிக்கை சார்ந்த அடிப்படை நூற்கள். மற்றொன்று, இஸ்லாம் போதிக்கும் அரசியல், பொருளாதாரம், வாழ்வியல் போன்றவற்றை விமர்சிப்பவர்களுக்குப் பதிலளிக்கும் நூற்கள். ஏறத்தாழ, 75 ஆண்டுகளுக்கு முன்பே அல்லாமா பாகவி அவர்களால் எழுதி, வெளியிடப்பட்ட இந்நூல் இரண்டு வகைகளையும் உள்ளடக்கியதாகும்.
  • இந்நூல் முன்வைக்கிற மகத்தான செய்தியை, சுருக்கமாக இப்படிக் குறிப்பிடலாம்: இறைவனின் மார்க்கமான இஸ்லாமின் வாழ்க்கை நெறி, பின்பற்றுவதற்கு இலகுவானது சாத்தியமானது எந்தவித குறைகளோ குற்றங்களோ இல்லாதது இயற்கைக்கு உகந்த முறையில், அறிவார்ந்த சீர்திருத்தங்களுக்கு எல்லாம் முன்னோடியாக, எல்லாக் காலத்திற்கும் பொருத்தமானது. எனவே, இஸ்லாம் ஓர் இயற்கை மதமே!
  • இந்நூலை வாசித்த திருவாளர் ஈ.வெ. ரா. பெரியார் அவர்கள் குடியரசு இதழில் எழுதியுள்ளதாவது:
  • “எமது பார்வைக்கு அனுப்பப்பட்ட ‘இயற்கை மதம்’ என்ற இந்நூல் ஆசிரியர், மவ்லானா மவ்லவி, ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி அவர்களால் எழுதப்பட்டது.
  • இப்புத்தகம், ‘இயற்கை மதம்’ என்னும் அதன் பெயருக்கேற்ப, இஸ்லாமிய மதக் கொள்கைகள் இயற்கைத் தன்மைக்கு முற்றிலும் பொருந்தியவை என்பதை அதன் ஆசிரியர் அதில் தெளிவுபட விளக்கிக் காட்டியிருப்பதுடன், இஸ்லாமிய மதச்சட்டங்கள் அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும் பொருத்தமானவை, அனுபவ சாத்தியமானவை, எந்நாட்டிலும் உள்ளவர்கள் எளிதில் அனுசரிக்கக் கூடியவை என்பதாகவும் விளக்கிக் காட்டுகின்றார்.
  • தவிர, தற்காலமுள்ள தீவிர சீர்திருத்தவாதிகள் விரும்பும் சீர்திருத்தங்கள் அனைத்தும் இஸ்லாம் மதத்தில் ஏற்கனவே இடம் பெற்றுள்ளதாகவும் எடுத்து காட்டுகின்றார்.
  • இவையன்றி, மக்களுக்கிடையில் தீண்டாமையை ஒழித்து சமப்பந்தி விருந்தையும், கலப்புத் திருமணத்தையும் அடிப்படையாகக் கொண்ட மெய்யான சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் உண்டு பண்ணி ஆண்களுக்கு சமமான உரிமைகள் பெண்களுக்கும் அவர்களின் இயற்கைக்குத் தக்கவாறு பூரணமாக அளித்து அவர்களைப் பராமரித்தும், கள், காமம், சூது முதலிய தீய காரியங்களை மனித வர்க்கத்திலிருந்து ஒழித்து மெய்யான ஜீவகாருண்யம் (மனித நேயம்) என்னும் ஜாதிமத பேதமற்ற நீதியையும், நியாயத்தையும், கைக் கொள்வதுதான் இஸ்லாம் மதத்தின் முக்கியக் கொள்கை என்பதாகவும் எடுத்துக் காட்டுகின்றார்.
  • தவிர, அரசியல் விஷயத்திலோ பூரண சுயேச்சைதான் இஸ்லாமின் கொள்கை என்பதையும் தெளிவுபடுத்துகின்றார். அன்றி, இவற்றை மற்ற மதங்கள் அடியோடு புறக்கணித்து விட்டதென்பதையும் ஆங்காங்கு எடுத்துக் காட்டியிருப்பதுடன், மற்ற மதங்களிலுள்ளவை தற்காலம் கைக்கொள்ளத் தகுதியற்றவை என்பதையும் தெளிவுபட விளக்கிக் காட்டுகின்றார்.
  • மேலும், உடன்கட்டை ஏறுவதை அரசா

3 comments

  1. பெரியாரின் உரையை முழுமையாய் தர இயலுமா? அல்லது இதுதான் முழுமையானதா? நன்றி.

  2. நல்லடியார்

    திரு.ரோஸாவசந்த்,

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களின் கருத்தை மேற்குறிப்பிட்ட இணைய தளத்திலிருந்து மேற்கோளிட்டேன். என்னிடம் முழு குறிப்பும் இல்லை. கிடைத்தால் மறக்காமல் தெரியப் படுத்துகிறேன்.

  3. நல்லடியார்

    திரு.ரோஸாவசந்த்,

    பெரியார் பரிந்துரைத்திருந்த ‘இயற்கை மதம்” புத்தகம் கீழ்கண்ட முகவரியில் கிடைக்கிறது என்று இன்னொரு தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது (எனக்கு முன்பே இவ்விடயம் பதிக்கப்பட்டிருக்கிறது)

    தாருல் ஹுதா
    211 (102) லிங்கி செட்டி தெரு
    மண்ணடி. சென்னை 600 001
    தொலைபேசி: 044 25247866, 98401 74121

    இணையத்தளம்: http://www.darulhuda.info
    மின்னஞ்சல்: click@darulhuda.info

    டபுள் டெம்மி சைஸில் 128 பக்கங்கள்
    விலை: ரூ.30

    முடிந்தால் தொடர்பு கொண்டு பாருங்களேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *