Featured Posts
Home » நூல்கள் » [தொடர் 4] இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள்

[தொடர் 4] இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள்

Articleபெயர்கள் வரக்காரணம்:

இந்தப் பிரிவுகளுக்கான பெயர்கள் அந்த சிந்தனையை முதல் முதலில் பிரதிபலித்தவர், அல்லது அவரது கருத்தைப்பிரதி பலித்த பிரபல்யமிக்க மாணவர், அல்லது அந்தக்கருத்தின் அடிப்படையில் பெயர்கள் சூடப்பட்டிருக்கின்றன என்பதை அறிந்து கொள்ளவேண்டும். உதாரணமாக கத்ரிய்யா என்ற பிரிவனர் ‘விதி’ கத்ரை மறுத்ததனால் வந்ததாகும். அந்த சிந்தனையை முதன் முதல் முதலில் கைலான் அத்திமஷ்கி என்பவனே முன்வைத்தவன். அவனது பெயரில் அந்தப் பிரிவின் பெயர் இடம் பெறவில்லை.

அவ்வாறே, இமாமிய்யாவிப் பிரிவான ஷீஆக்களை எடுத்துக் கொண்டால் நபி (ஸல்) அவர்களின் மரணத்தின் பின்னால் அலி (ரழி) அவர்களே ஆட்சிக்குத் தகுதியானவர் என்ற கருத்தை முன்வைக்கின்ற காரணத்தால் ‘இமாமிய்யா’ என்ற பெயரில் அழைக்கப்படுகின்றனர். ஹவாரிஜ்களின் பெயருக்கான காரணமும் அதே போன்றுதான். இவ்வாறு ஒவ்வொரு பிரிவும் ஒரு காரணப் பெயர் அல்லது அதை தோற்றுவித்தவரின் பெயரில் அழைக்கப்படும். இதன் விளக்கம் பற்றி அதன் தொடர்களில் காண்க.

நேர்வழியைப் பின்பற்றுவதன் அவசியம்

மனிதன் சிந்தனையுடையவனாக படைக்கப்பட்டிருக்கின்றான். ஆனால் அது குறுகியதாகவே உள்ளது. அதனால் அவனால் இயற்றப்படும் சட்டங்களும், ஒழுங்குகளும் குறைவுள்ளதாகவே காணப்படும். ஆகவே அவன் எவ்வித குறைவுமற்ற, சகலதையும் அறிந்த ஒரு வழிகாட்டல் பக்கம் தேவையுடையவனாக இருக்கின்றான்.

அந்த அடிப்படையில் இந்த உலகை சீராக நிர்வகிக்கும் அல்லாஹ்வின் வழிகாட்டலைத்தவிர வேறு எந்த வழிகாட்டலாலும் இக்குறையை நிவர்த்தி செய்ய முடியாது.

‘நீங்கள் இருவரும் ஒன்றாக இங்கிருந்து இறங்குங்கள், என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும். எனவே எவர் எனது நேர்வழியைப் பின்பற்றுகின்றார்களோ அவர்கள் மீது எவ்வித பயமும் இல்லை, அவர்கள் கவலைப்படவும்மாட்டார்கள்’ (அத்: அல்பகரா: வச: 38), (தாஹா வசனம்.123)

எனது நேர்வழியைப் பின்பற்றுபவர் வழிதவறிவிடவோ, துர்ப்பாக்கியவானாகவோ ஆகிவிடமாட்டார். (ஆலு இம்ரான் 202-ல்) ‘எவர் அல்லாஹ்வைப் பற்றிக் கொள்கின்றாரோ நிச்சயமாக அவர் நேரான வழியில் செலுத்தப்பட்டுவிட்டார்’ என்றும் கூறப்பட்டுள்ளதை அவதானித்தால் மனித வாழ்வில் அல்லாஹ்வின் நேர்வழியின் அவசியத்தை புரிந்து கொள்ள முடியும்.

தொடரும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *