Featured Posts
Home » நூல்கள் » சூஃபித்துவத் தரீக்காக்கள் » [தொடர் 1] சூஃபித்துவத் தரீக்காக்கள்.. அன்றும் இன்றும்

[தொடர் 1] சூஃபித்துவத் தரீக்காக்கள்.. அன்றும் இன்றும்

Bookالطرق الصوفية بالأمس واليوم
الإعداد  : محمد جليل عبد الغفور

இரங்கலுரை
இந்தியாவின் தமிழகத்திலே நெய்வேலி எனும் ஊரைப் பிறப் பிடமாகக் கொண்டவர்தான் சகோதரர் M.யூஸுஃப் பாய் அவர்கள். சிறுபிராயத்திலிருந்தே அழைப்புப் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்கள். மிக நீண்டகாலமாகவே தப்லீக் ஜமாஅத் அமைப்பில் இணைந்து செயற்பட்டு பல்வேறு இடங்களுக்கெல்லாம் நீண்ட நேரங்கள் சென்று பல தப்லீக் பெரியார்களைச் சந்தித்து அளவலாவிய அனுபவங்கள் அவர்களுக்கு நிறையவே உண்டு.

தப்லீக் அமைப்பிலுள்ள பல விஷயங்கள் குர்ஆன் ஹதீஸிற்கு முரணாவதாக அவரது மனம் உறுத்தவே பெரியார்களிடம் அது பற்றிக் கேட்க, அவர்கள் சொன்ன பதில் திருப்தியளிக்காததால் அதிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு குர்ஆன் ஹதீஸின் பிரகாரம்  அழைப்புப்பணி செய்யும் அமைப்புகளோடு இணைந்து கொண்டார்.

அல்ஜுபைல் தஃவா நிலைய த்தில் நீண்ட காலமாகவே தன்னார்வத் தொண்டராக அழைப்புப்பணியில் ஈடுபட்டு வந்த இவர், அழைப்பாளர்களுக்கு ஒரு முன்மாதிரியானவராக பல அருங்குணங்கள் மிக்கவராயிருந்தார். அவர்தான் மேற்படி தலைப்பில் ஒரு நூல் எழுதும் எண்ணம் எனக்கு இருப்பதாக சொன்னபோது என்னை ஊக்கப்படுத்தி இப்படியான ஒரு நூல் எழுதப்பட வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தி அதற்கான துணை நூல்கள் பலவற்றையும் தேடியெடுத்துத் தந்து உதவியவர். பின்னர் அவரே இந்த நூல் முற்றுப் பெற்றதும் அதனைப் பெற்று சரிபார்த்தும் தந்தார்.

அன்னார் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த சாலை விபத்தொன்றில் திடீர் மரணமடைந்து விட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து அவர்களுக்கு ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸைக் கொடுப்பானாக. ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.

-ஏ.சீ. முஹம்மது ஜலீல் (மதனீ)

வெளியீடு: இஸ்லாமிய வழிகாட்டல் மையம்,
அல்ஜுபைல், சவூதி அரேபியா

thareeka-book

3 comments

  1. How to download this book?

  2. Rev. Abdur Rehaman

    Keep the cursor on the tittle u wish to download & click on Right side of Mouse Button there you will find Save target as.. click on it. It will ask for the place to be stored. Save where you wish to store..

  3. i want detailed in sufiyakal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *