Featured Posts
Home » நூல்கள் » சூஃபித்துவத் தரீக்காக்கள் » [தொடர் 3] சூஃபித்துவத் தரீக்காக்கள்.. அன்றும் இன்றும்

[தொடர் 3] சூஃபித்துவத் தரீக்காக்கள்.. அன்றும் இன்றும்

Bookஉள்ளே செல்லுமுன்..

சூஃபித்துவத் தரீக்காக்கள்பற்றி தமிழக, இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் மட்டுமின்றி அரபுலக முஸ்லிம்களில் கணிசமானோரிடம் கூட இன்று வரைக்கும் சரியான கருத்துக் கண்ணோட்டம் வரவில்லையென்றே சொல்லவேண்டும். காரணம் காலா காலாமாக இவர்களைப்பற்றிய உண்மை அறிமுகம் உலமாக்களாலோ தமிழுலக எழுத்தார்களாலோ அதன் தூய வடிவில் முன்வைக்கப்படவில்லை என்பதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டியுள்ளது.

எனவே இதுபற்றிய உண்மைகளை அல்குர்ஆன் அல்ஹதீஸின் ஒளியில் தோலுரித்துக் காட்டுவதே இச்சிறு நூலின் நோக்கமாகும். இதன் மூலம் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் மக்கள் விளங்க உதவுவதுடன் இந்தத் தரீக்காக்களுக்கும், சூஃபிகளுக்கும் – தூய இஸ்லாமியக் கோற்பாடுகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையென்பதை எடுத்துக் காட்டுவதும் என் நோக்கமாகும்.

எனவே முடிந்தளவு ஆதாரப்பூர்வமான தகவல்களுடன் இதைத் தொகுத்துள்ளேன். இருந்தபோதிலும் மனிதன் தவறிழைப்பவன் எனும் வகையில் எனக்கும் பல தவறுகள் ஏற்படலாம். அவ்வாறு உங்களுக்குப் புலப்படுமிடத்து அதனை என் கவனத்துக்குக் கொண்டு வருமாறு வாசக சகோதரர்களான உங்களைக் கேட்டுக் கொள்கின்றேன்.

உங்கள் சகோதரன்…

-ஏ.சீ. முஹம்மது ஜலீல் (மதனீ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *