Featured Posts
Home » சட்டங்கள் » ரமளான் » [04] பிறை கண்ட பின்பே நோன்பும் பெருநாளும்

[04] பிறை கண்ட பின்பே நோன்பும் பெருநாளும்

1) பிறையைக் கண்டே நோன்பு நோர்க்கவும் விடவும் செய்யுங்கள். மேகம் (பிறையை) மறைத்துவிட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

2) பிறையைக் காணாத வரை நீங்கள் நோன்பு நோற்கவும் வேண்டாம், நோன்பை விடவும் வேண்டாம். பிறை தெரியாமல் மேகம் மறைத்துவிட்டால் (அம்)மாதத்தை முப்பது நாட்களாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

விளக்கம்: ரமளான் மாதத்தின் ஆரம்பத்தையும், முடிவையும் தெரிந்து கொள்வதற்கு பிறைதான் அடையாளமாகும். ஆனால் மேகம் தெளிவில்லாமல் இருந்து ரமளான் மாதத்தின் பிறை தென்படவில்லையானால் நோன்பு மாதத்திற்கு முந்திய ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக கணக்கிட்டு, அதற்கு அடுத்த நாள் ரமளான் நோன்பை நோற்க வேண்டும். காரணம் சந்திர மாதத்தில் முப்பது நாட்களை விட அதிகமாக ஒரு மாதமும் வரமுடியாது. ”மாதம் முப்பது நாட்களாகவும் இருபத்தி ஒன்பது நாட்களாகவும் வரும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (ஆதாரம்: ஸஹீஹ் இப்னு ஹிப்பான்)

17 comments

  1. Nasri - Sri lanka

    அஸ்ஸலாமு அலைகும்,,

    இப்பகுதியில் ஆரோக்கியமான முறையில் பிறை சம்பந்தமான கருத்துக்களை பரிமாறிக் கொண்டால் அழகிய ஒரு தீர்வுக்கு வரலாம் என்று நினைக்கிறேன்.

    ஆக்கத்தில் உள்ள ஹதீஸ்களில் இன்னொரு முக்கியமான விளக்கம் இருக்கிறது.

    அதாவது, ஒரே நாளில் உலகில் எல்லாப் பகுதிகளிலும் மேகம் மறைத்து விடுவதில்லை. மேகம் மறைத்த பகுதிகளில் வாழ்பவர்களுக்குரிய சட்டம் தான் அம் மாதத்தை முப்பது நாட்களாக கணக்கிட்டுக் கொள்வதாகும். இவர்களுக்கு, மறுநாள் முப்பதாவது பிறையாக இருக்கும் போது மேகம் மறைக்காத, பிறை தென்பட்டவர்களுக்கு மறு நாள் அடுத்த மாதத்தின் முதல் பிறையாகும்.

    இந்த ஹதீஸின் விளக்கத்தின் படி மறு நாள,; உலகில் ஒரு பகுதியினருக்கு முப்பதாவது பிறை. இன்னொரு பகுதியினருக்கு (அடுத்த மாதத்தின); முதலாவது பிறை. ஒரே நாளில் இரு பிறைகள் ஏற்பட முடியும் என்பதை மேற்படி ஹதீஸ் மிகத் தெளிவாக பறைசாற்றுகிறது. இதன்படி முழு உலகுக்கும் ஒரே பிறை என்ற கருத்துக்கு முற்று முழுதாக இந்த ஹதீஸ் மாற்றமாக முரண்பாடாக அமைந்திருப்பதை முதல் படியாக அனைவரும் ஏற்றாக வேண்டும்.

    இன்ஷா அல்லாஹ் வளரும்.

  2. ungal karuttupadi naatukku naadu alla oorukku oor pirai paarka vendum

  3. assalamu alaikum

    bro/nasri
    P. முகமது சிராஜுதீன் பிறை சம்பதமான கட்டுரையை பார்வையிடுக

  4. முழு உலகுக்கும் ஒரு பிறை என்று வாயால்தான் சொல்கிறார்கள். சர்வதேசப் பிறைக்காரன்கள் எங்கையா அதைப் பின்பற்றுகிறார்கள். சுஊதியில் பிறை கண்டால் அதுதான் அவங்களுக்கு சர்வதேசம். சுஊதிக்கு முன்னர் வேறு எங்கு கண்டாலும் ஏற்கமாட்டினம். எப்பதான் விளங்கப்போகுதுகளோ?

    இறைநேசன்.

  5. வஅலைகுமுஸ்ஸலாம் brother Ahamed!

    என் கருத்துப்படி ஊருக்கு ஊர் பிறை பார்க்க வேண்டி வரும் எனக் கூறியுள்ளீர்கள். நான் உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகிறேன். குர்ஆனும் ஹதீஸம் ஊருக்கு ஊர் பிறைப் பார்த்துத் தான் நோன்பை – பெருநாளை தீர்மானிக்கச் சொல்லியிருந்தால் நீங்கள் நடைமுறைப்படுத்த தயார் இல்லையா?????

  6. நான் “உலகில் ஒரு பகுதி” எனக் குறிப்பிட்டது ஒரு வேளை ஊராக இருக்கலாம். அல்லது மாவட்டமாக இருக்கலாம். அல்லது மாகாணமாக இருக்கலாம். அல்லது நாடாக இருக்கலாம். அல்லது கண்டமாகவே இருக்கலாம்.

    எல்லை எவ்வளவு என்பது பிரச்சினை கிடையாது. காரணம், அதற்கும் அழகான தீர்வை நபி வழி காட்டித் தருகிறது. “எல்லை” தான் பிரச்சினை என்றaal இதை வைத்து மற்றைய கருத்துகளை மறுக்க முடியாது.. இதைப்பற்றி பின்னால் கலந்துறையாடுவோம் இன்ஷா அல்லாஹ்.

    FIRST OF ALL… சர்வதேசப்பிறைக்கு குர்ஆனோ சுன்னாவோ வழி காட்ட வில்லை என்பதை ஏற்றாக வேண்டும். முழு உலகுக்கும் ஒரே நாளில் ஒரே பிறை தான் என்ற கொள்கையை இஸ்லாம் போதிக்கவும் இல்லை. வழிகாட்டவும் இல்லை. இதைத்தான் மேற்படி சுட்டிக்காட்டிய ஹதீஸ்கள் தெளிவாக வழிகாட்டிக் கொண்டிருக்கின்றன.

    Do you agree with me brother????

  7. P.Mohamed Sirajudeen

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹ்

    அன்பான சகோதரர் இலங்கை நஸ்ரி அவர்களுக்கு,

    தாங்கள் பிறையில் கீழ்கண்ட சில ஹதீஸ்களை ஆய்வுக்குட்படுத்துவதற்கு முன் ஒரு சில விஷயங்களை உங்கள தகவலுக்கு தருகிறேன். அதையும் சேர்த்து தாங்கள் ஆய்வு செய்து நீங்கள் ஒரு முடிவுக்கு வந்தால் இன்ஷாஅல்லாஹ் தாங்கள் கூறுவது போல் பிறை சம்மந்தப்பட்ட நீண்ட கால பிரச்சினைக்கு ஓர் அழகிய தீர்வு ஏற்படலாம் என கருதுகிறேன்.

    //இந்த ஹதீஸின் விளக்கத்தின் படி மறு நாள் உலகில் ஒரு பகுதியினருக்கு முப்பதாவது பிறை. இன்னொரு பகுதியினருக்கு (அடுத்த மாதத்தின); முதலாவது பிறை. ஒரே நாளில் இரு பிறைகள் ஏற்பட முடியும் என்பதை மேற்படி ஹதீஸ் மிகத் தெளிவாக பறைசாற்றுகிறது. இதன்படி முழு உலகுக்கும் ஒரே பிறை என்ற கருத்துக்கு முற்று முழுதாக இந்த ஹதீஸ் மாற்றமாக முரண்பாடாக அமைந்திருப்பதை முதல் படியாக அனைவரும் ஏற்றாக வேண்டும். -நஸ்ரி//

    தாங்களுடைய கருத்தின்படி உலகின் ஒரு பகுதியில் உள்ளவர்களுக்கு வியாழக்கிழமை ஷஃபான் மாதத்தின் 29 ஆவது நாளாகவும், அதே வியாழக்கிழமை உலகின் மற்றோர் பகுதியில் ஷஃபான் 30 ஆக இருக்கும் என கூற வருகிறீர்கள் அல்லது வெள்ளிக்கிழமை உலகின் ஒரு பகுதி மக்களுக்கு 1 ரமளான் என்றும் ஒரு பகுதி மக்களுக்கு அதே வெள்ளிக்கிழமை ஷஃபான் மாதத்தின் 30 வது நாள் என கூறுகிறீர்கள்.

    என்னுடைய கேள்வி சரியா என்பதை தாங்கள் கூறினால் அதன் பிறகு எனது கருத்தை தொடர்கிறேன்.

    சிராஜ் ஏர்வாடி

  8. assalamualaikum.dear muslim brother “லைலத்துல் கத்ர்” ஓரே நாளில்தான் வர முடியும். அதுவும் ஒற்றைப்படை நாளில்தான் வரமுடியும். தலைப்பிறை இரண்டு நாட்களில் வரமுடியுமென்றால் ‘லைலத்துல் கத்ர்’ இரவும் இரண்டு நாட்களில் வரவேண்டும். ஆனால் அல்லாஹ் ஆயிரம் மாதங்களை விட சிறப்புக்குரிய லைலத்துல் கத்ர் இரவு ரமழான் மாதத்தின் ஒரே ஒரு இரவில் தான் வரும். அதுவும் மஃரிபிலிருந்து பஜ்ர் நேரம் வரை மட்டுமே நீடிக்கும் என்று மிகத் தெளிவாகக் கூறி இருக்கிறான் ஆகவே தயவு செய்து பிறை சம்பந்தமாக எல்லா ஹதீஸ்களையும் பார்வைடுக குரானையும் மருந்து விடவேண்டாம்

  9. வஅலைகுமுஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹ|

    சகோதரர் ஏர்வாடி சிறாஜ் அவர்களே!

    உங்களுடைய கேள்வி சரியானதாக இருந்தால் தொடருவதாக கூறியுள்ளீர்கள். மன்னிக்க வேண்டும் கேள்வி என்னவென்று விளங்கவில்லை.

  10. Brother Ahamed!

    குர்ஆனும் ஹதீஸம் “ஊருக்கு ஊர் பிறை”ப் பார்த்துத் தான் நோன்பை – பெருநாளை தீர்மானிக்கச் சொல்லியிருந்தால் நீங்கள் நடைமுறைப்படுத்த தயார் இல்லையா?????

    enru naan keytta keylvikku pazil sollavillayye???

    //அல்லாஹ் ஆயிரம் மாதங்களை விட சிறப்புக்குரிய லைலத்துல் கத்ர் இரவு ரமழான் மாதத்தின் ஒரே ஒரு இரவில் தான் வரும். அதுவும் மஃரிபிலிருந்து பஜ்ர் நேரம் வரை மட்டுமே நீடிக்கும் என்று மிகத் தெளிவாகக் கூறி இருக்கிறான்//
    enru kooriyirukkireerhal. ” lailathul qadr” vidayattai waittuth than nonpukkuriya allazu perunalukkuriya pirayyai theermanippaza??? or pirayyudan thodarfu patta hadeeshalai waittu theermanippaza???

    neengal eyn orey yadiyaha lailathul qadr iravukku poy viduhireerhal.

    ungalukkuriya pirachchinaihal ippozaikku 2.

    1- pirai “ellai”
    2- lailathul qadr

    Anpuch chahozaraney!!

    pirai sambandappatta quraan wasanangal saheehana hadeeshal namakku ezan pakkam walikattuhirazu, ezan pakkam wali kattavillai enpazai parkka veyndum. azan pinnarey theermanippazu nallazu.

    quran sunnaawai aaywu pannum pozu SARVADEYSAP PIRAIKKU; MULU ULAHUKKUM OREY NALIL PERU NAL enra kolhaikku walikaattavey illai enpazu thelivu. azanaith than ”meyham maraindal” hadees thelivu paduttik kondirukkirazu.

  11. நிர்வாகி

    எத்தனையோ வழிகள் யுனிகோடு தமிழில் தட்டச்சு செய்ய இருக்கும்போது, தங்க்லீஸில் ஏன் எழுதுகிறீர்கள் சகோதரரே?

    http://www.islamkalvi.com/web/Romanised2Unicode.htm

  12. Dr Ahamad!!

    i would like to read that article you have mentioned. pls help me. my email: ibnujiffri@yahoo.com

  13. P.Mohamed Sirajudeen

    அஸ்ஸலாமு அலைக்கும்

    சகோதரர் நஸ்ரி அவர்களே

    தாங்கள் வைத்த கருத்தை தான் என்னுடைய விரிவான கேள்வியாக உங்களிடம் வைத்தேன்.

    //இந்த ஹதீஸின் விளக்கத்தின் படி மறு நாள் உலகில் ஒரு பகுதியினருக்கு முப்பதாவது பிறை. இன்னொரு பகுதியினருக்கு (அடுத்த மாதத்தின); முதலாவது பிறை. ஒரே நாளில் இரு பிறைகள் ஏற்பட முடியும் என்பதை மேற்படி ஹதீஸ் மிகத் தெளிவாக பறைசாற்றுகிறது. இதன்படி முழு உலகுக்கும் ஒரே பிறை என்ற கருத்துக்கு முற்று முழுதாக இந்த ஹதீஸ் மாற்றமாக முரண்பாடாக அமைந்திருப்பதை முதல் படியாக அனைவரும் ஏற்றாக வேண்டும். -நஸ்ரி//

    நீங்கள் சொல்லும் கருத்தின் அடிப்படையில் கீழ்கண்டவாறு தான் மாதத்தை துவங்க வேண்டும் என கூறுகிறீர்களா?.

    ஹிஜ்ரி 1430 ரமளான் “1” வெள்ளிக்கிழமை (20.8.2009 கிருஸ்துவ நாட்காட்டி) சவூதியில்

    ஹிஜ்ரி 1430 ஷஃபான் “30” வெள்ளிக்கிழமை (20.8.2009) இலங்கையில்

    ஹிஜ்ரி 1430 ஷஃபான் “29” வெள்ளிக்கிழமை (20.8.2009)
    இந்தியாவில்

    சுருக்கமாக நீங்கள் கூறவருவது வெள்ளிக்கிழமை என்ற ஒரு நாளுக்கு மூன்று தேதிகள், அதாவது ஒரு பகுதிக்கு தேதி1, இன்னொரு பகுதிக்கு தேதி30, இன்னொரு பகுதிக்கு தேதி 29. இது தான் தாங்கள் கூறும் கருத்து என உங்கள் பதிலில் இருந்து எங்களுக்கு புரிய முடிந்த விஷயம். சரிதானா என்பதை விளக்கவும்?

    நீங்கள் இரண்டு நாட்கள் தான் வரமுடியும் என கூறுகிறீர்கள் தற்போது நான் கூறியது போல் ஒரு கிழமைக்கு மூன்று நாட்கள் உலகில் வந்து கொண்டிருப்பதை தாங்களுக்கும் அறிவீர்கள் என நினைக்கிறேன்.

    இப்படிக்கு

    சிராஜ் ஏர்வாடி

  14. Nasri - Sri lanka

    சகோதரர் சிராஜ் அவர்களே!

    பிறை விடயத்தில் கட்டம் கட்டமாக நாம் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. உதாரணத்திற்கு இவ்விடயம் பற்றி ஆராய இருபது கட்டங்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு கட்டமாக முடிவு கண்டு விட்டு அடுத்த கட்டங்களுக்கு நகர்ந்தால் இன்ஷா அல்லாஹ் தெளிவான முடிவைக் காணலாம் என நான் நினைக்கிறேன். அதாவது முதலாவது கட்டத்தில் இருக்கும் போது அதில் தீர்வு காண முன் இரண்டாவது கட்டத்துக்கு போகக் கூடாது.

    முதலாவது கட்டம்: குர்ஆனோ சுன்னாவோ சர்வதேசப் பிறைக்கு வழிகாட்டவில்லை என்பதாகும்.

    இதற்கு நான் சுட்டிக்காட்டிய ஆதாரம் தான் ‘மேகம் மறைத்தால் அம்மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்யுங்கள்’ என்பது. இந்த ஹதீஸின் படி உலகில் எப்பகுதியில் வாழ்பவராக இருந்தாலும் சரி பிறை தென்படாமல் மேகம் மறைத்து விட்டால் அம்மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்ய வேண்டும் என்பது நபியின் கட்டளை.

    உலகம் அழியும் காலம் வரை இந்த ஹதீஸை நடை முறைப்படுத்துவது முஸ்லிம்களின் கடமை. அந்த வகையில் நாம் இதை நடை முறைப்படுத்தும் போது ஒரே நாளில் உலகில் உள்ள எல்லாப் பகுதிகளிலும் பிறைக் கணக்கில் வித்தியாசம் ஏற்படும்.

    உதாரணத்திற்கு இலங்கையில் AUGUST 21 ஆம் திகதி ஷஃபான் D29 என்று வைத்துக் கொள்ளுங்கள். நமக்கு மேகம் மறைத்து விட்டது. யாரும் பிறை காணவில்லை என்றால் ஹதீஸின் படி நாம் ஷஃபானை முப்பதாக பூர்த்தியாக்க வேண்டும்.

    பூர்த்தியாக்கினால் AUGUST 22 நமக்கு ஷஃபான் முப்பது. இதே நேரம் குவைத்தில் பிறையை மேகம் மறைக்கவில்லை. பிறையைக் கண்டுவிட்டார்கள் என்றால் AUGUST 22 அவர்களுக்கு ரமழான் முதல் பிறையாகும்.

    எனவே மேற்படி ஹதீஸ் (உலகத்திற்கே ஒரே நாளில் ஒரு பிறைக்கு) சர்வதேசப்பிறைக்கு முற்றிலும் மாற்றமான ஒரு கருத்தை தெளிவாக சுட்டிக் காட்டிக் கொண்டிருப்பதை புரிந்து கொள்ளலாம்.

    சகோதரரின் கேள்விக்கு பதில் கிடைத்திருக்குமென நினைக்கிறேன்.

  15. ASSALAMU ALAIKUM bro.NASRI ” (29ம் நாளில்) பிறையை காணாவிட்டால் கண்டதாக வருகின்ற இரு சாட்சிகளின் தகவல்களை ஏற்றுக்கொள்ளல்.” இரு சாட்சிகள் (பிறை கண்டதாக) சாட்சி சொன்னால் நோன்பு வையுங்கள், நோன்பை விடுங்கள்” அறிவிப்பளர்: அப்துர் ரஹ்மான் (நபித்தோழ்ர்களிடமிருந்து)
    ஆதாரம்:அஹ்மத் நஸ்ஈ இந்த ஹதீஸின்படி எல்லை எது என்று விளக்குவீர்களா ? அதாவது, ஒரே நாளில் உலகில் எல்லாப் பகுதிகளிலும் மேகம் மறைத்து விடுவதில்லை ( சாட்சி) எட்கமாடிர்களா ?

  16. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    சகோதரர் நஸ்ரி அவர்களுக்கு,

    வெளியூர் பிரயாணத்தில் இருந்ததால் பதிலளிக்க தாமதமாகிவிட்டதை தெரிவித்துக்கொள்கிறேன்.

    ஓரே கிழமைக்கு இரு திகதிகள் வரும் என்று கூறுகிறீர்கள். தாங்கள் பிறை என்று கூறுவது ஒவ்வொன்றும் ஒரு திகதி. அதை தான் அல்குர்ஆனின் 2:189 வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான். சதாரணமாக பள்ளி செல்லும் சிறு குழந்தைகளிடம் கேட்டால் கூட இந்த விஷயத்தை சரியாக சொல்லுவார்கள். உதாரணமாக இன்று வெள்ளிக்கிழமை திகதி 1, என்றால் நாளை சனிக்கிழமை திகதி 2 என கூறுவார்கள். திகதி மாறினால் கிழமை மாறும் கிழமை மாறினால் திகதி மாறும். தாங்கள் அடிப்படைக்கு மாற்றமாக கிழமை மாறினாலும் திகதி மாறாது என்ற கருத்தை இஸ்லாம் கூறுவதாக கூறுகிறீர்கள். இஸ்லாமிய நாட்காட்டியில் மட்டும் ஊர் ஊருக்கு தேதி வித்தியாசப்படும் என தாங்கள் வாதத்தை எடுத்து வைக்கிறீர்கள்.

    நாம் நேரடியாக விஷயத்திற்கு வருவோம்.

    தாங்கள் இந்த விஷயத்தை 20 கட்டமாக பிரித்து ஆராய வேண்டும் என கூறுகிறீர்கள்.

    1.முதலில் எத்தனை தலைப்புகளாக ஆராய வேண்டும் என்பதை பட்டியலிடுங்கள். அதன் பிறகு முதல் கட்டடமாக எதை ஆராயலாம் என்பதை முடிவு செய்வோம்.

    2.குர்ஆனுக்கு விளக்கமாக ஹதீஸை பார்க்க வேண்டுமா? ஹதீஸிற்கு விளக்கமாக குர்ஆனை எடுக்க வேண்டுமா? என்பதையும் விளக்குங்கள்.

    3.முக்கியமாக தாங்கள் கூற வேண்டியது இன்று ஷஃபான் மாதம் புதன்கிழமை (19.08.2009) இஸ்லாமிய நாட்காட்டி அடிப்படையில் உங்களுக்கு என்ன திகதி? என்பதை தெரிவித்து விட்டால் நமது ஆராய்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

    இப்படிக்கு
    சிராஜ் ஏர்வாடி

  17. ASSALAMU ALAIKUM bro.NASRI ‘ where are you ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *