Featured Posts
Home » சட்டங்கள் » ரமளான் » [15] நோன்பின் நிய்யத்தை பஜ்ருக்கு முன் வைப்பது அவசியம்

[15] நோன்பின் நிய்யத்தை பஜ்ருக்கு முன் வைப்பது அவசியம்

1) அமல்களுக்குக் கூலி கொடுக்கப்படுவது எண்ணங்களைப் பொறுத்தே என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
2) பஜ்ருக்கு முன்னால் யார் நிய்யத்து வைக்கவில்லையோ அவருக்கு நோன்பு கிடையாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி)

விளக்கம்: நிய்யத் என்பது உள்ளத்தில் ஒன்றை நினைப்பதற்குச் சொல்லப்படும். இன்றைய நோன்பை நோற்க வேண்டும் என்று நினைத்து ஸஹர் உணவு உண்பதே நிய்யத்தாகும். ஆனால், இன்று நிய்யத் என்ற பெயரில் சில வார்த்தைகள் (இந்த வருடத்து ரமளான் மாதத்தின் பர்ளான நோன்பை நாளைப்பிடிக்க அல்லாஹ்விற்காக நிய்யத் வைக்கின்றேன் என்று) சொல்லிக் கொடுக்கப்படுகின்றது. இப்படி நபி (ஸல்) அவர்கள் செய்யவுமில்லை. சொல்லித்தரவுமில்லை. இதற்கு நிய்யத் என்று சொல்லப்படவும் மாட்டாது.
இவ்வாறே, இன்றைய நோன்பை ஒருவர் நோற்க வேண்டும் என்ற நிய்யத் (எண்ணமில்லாமல்) இல்லாமல் பஜ்ர் வரைக்கும் தூங்கிவிட்டால், அவருக்கு அன்றைய நோன்பை நோற்க முடியாது. காரணம் அவர் இரவில் நிய்யத் (எண்ணம்) வைக்கவில்லை. ஆனால் இன்றைக்கு நோன்பு நோற்க வேண்டும் என்று எண்ணி பஜ்ர் வரைக்கும் ஒருவர் தூங்கிவிட்டால், ஸஹர் உணவை உண்ணாவிட்டாலும் அவர் அன்றைய நோன்பை நோற்கலாம், காரணம், அவர் அன்றைய நோன்பை நோற்க நிய்யத் வைத்திருந்தார்.

3 comments

  1. some groups in sri lanka muslims making neeyath after suhur this is not a tradition of our Prophets mohamed,if you tell the right way they are calling your WAHABEES so when this peoples will be in correct way?? still needed more islamic Knowledge’s.some of our well educated Mowlavies too following the same Procedures there not telling truth why??

  2. Its better if u specify ( Ennam ) replacing neeyath many people thinks that neeyath means reciting via mouth!!!

  3. ரமளான் நோன்பு நோட்டிற்கும் நேரத்தில் தைலம் oxe oil போன்றவைகள் உபயோகிக்கலாம

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *