Featured Posts
Home » பொதுவானவை » பெண்ணுரிமைப் பேணுவோம்

பெண்ணுரிமைப் பேணுவோம்

சென்ற வாரத்தில் ஒரு நாள் ‘அரப் நியூஸ்’ பத்திரிக்கையை படித்தபோது கண்ணில் பட்ட ஒரு செய்தி நவீன தலைமுறை இளைஞர்களிடம் ஏற்பட்டிருக்கும் தறிகெட்ட தனத்தை பறைசாற்றியது. ரியாத் நகரில் சாலையில் நடந்து கொண்டிருந்த இரு பெண்களை சில இளைஞர்கள் பலாத்காரம் செய்து அதனை தனது கேமரா செல்பேசியில் பதிவு செய்ததாக வந்திருந்த செய்தி நாகரீக மனிதர்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இளைஞர்களின் சிந்தனையை இதுபோன்று பாழாக்குவதில் மேற்கத்திய ஊடகங்களும், அதனை முன்மாதிரியாகக் கொண்டு தன்னை வார்த்துக் கொண்டிருக்கும் மற்ற ஊடகங்களும் பெரும் பங்காற்றி வருகின்றன. “செல்”லுக்குள் நடந்து கொண்டிருந்த குற்றங்கள் இன்று சாலைக்குள் வலம்வரும் விபரீதத்தை இங்கு காணமுடிகிறது.

மிகவும் கண்ணியமான முறையில் உடையுடுத்தி சென்று கொண்டிருந்த பெண்களையே இவ்வாறு சீண்டிப் பார்க்கும்போது அரைகுறை ஆடையுடன் அங்கங்கள் தெரிய பவனி வரும் இன்றைய மங்கைகளின் விஷயத்தில் ஒன்றும் சொல்வதற்கில்லை.

முழுக்க முழுக்க ஆண்கள் பயன்படுத்தும் பொருட்களின் விளம்பரத்திற்குக் கூட பெண்களின் கவர்ச்சி அவசியம் என்ற ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் இன்றைய நுகர்வுக் கலாச்சாரத்தின் பகட்டு வெளிச்சத்தை நோக்கி விட்டில் பூச்சிகளாக விரைந்து ஓடிக்கொண்டிருக்கும் நாகரீக! பெண்களை நினைத்து அழுவதா? சிரிப்பதா? என்று தெரியவில்லை.

பெண்கள் பெண்களாக வாழும்போதுதான் அவர்கள் முழு உரிமை பெற்றவர்களாக இருக்க முடியும். நான் எப்படியும் இருப்பேன் என்று அரைகுறை ஆடையுடன் வலம் வருபவர்கள், தனக்கு முறையாகக் கிடைக்க வேண்டிய கண்ணியம் என்ற தனது உரிமையை இழந்தவர்களாகவே ஆகமுடியும்.

பெண்களின் கண்ணியத்தையும், பாதுகாப்பையும் மேலும் உறுதிப்படுத்தவே இஸ்லாம் பர்தாவை அவசியமாக்கியிருக்கிறது என்பதை முதலில் உணர வேண்டும். பெண்களுக்கு பர்தா ஒரு சிறந்த, எளிய பாதுகாப்பு வளையம் என்பதை உணர்ந்ததாலேயே மேலைநாட்டைச் சேர்ந்த Tanya C. Hsu என்ற மத்திய கிழக்கு ஆய்வாளர் இப்படிக் குறிப்பிடுகிறார்:

“In Riyadh’s Bedu Souk I added a burqha and realized, for the first time in my adult life, men spoke directly to me rather than to a physique. That is respect.

ஆடையைக் குறைப்பதுதான் தான் பெறக்கூடிய மிகப்பெரும் உரிமை என்று நினைக்கும் விட்டில் பூச்சி பெண்வர்க்கமும், தன் உள்மனதில் உள்ள கீழ்த்தர ரசனை எனும் குரூரத்தை, பெண்ணுரிமைப் பாதுகாவலர்கள் என்ற போர்வையிட்டு மறைத்து வலம் வரும் ஆண்வர்க்கமும் இருக்கும் வரை கலாச்சாரச் சீரழிவை யாராலும் தடுக்க முடியாது.

சானியாவின் ஆடைக்கு வக்காலத்து வாங்கும் ஆடவர்கள் சொல்லும் வசனம் “ஆடையைப் பார்க்காதே; ஆட்டத்தைப் பார்” என்பது. ஒரு திரைப்படத்தைப் பார்க்க வருபவர்களில் கதைக்காக வருபவர்களும் உண்டு. கவர்ச்சிக்காக வருபவர்களும் உண்டு. இதுபோல்தான் எல்லா விஷயத்திலும். இதனைப் புரியாதவர்கள் போல் நடிப்பதும், சுட்டிக்காட்டுபவர்களை எழுத்துக்களால் தட்டிக் கேட்பதும் அவரவர் மன அழுக்குகளை வெளிப்படுத்துவதாகவே தெரிகிறது.

மாறிவரும் சூழ்நிலைக்கேற்ப நாமும் மாறுதலுக்குட்பட வேண்டும் என்று கூறுபவர்களில் ஆண்கள் யாரும் மக்கள் கூடும் இடங்களில் அரைக்கால் சட்டைகளோடு வலம் வருவதில்லை. மேலும் மேலும் ஆடைகளால் முழுவதும் மறைத்த வண்ணமே தோன்றுகிறார்கள். அதுதான் சிறந்த கலாச்சாரம் என்பதை உணர்ந்ததாலேயே இந்திய, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பொது இடங்களில் தோன்றும்போது நீளக்காற்சட்டை அணியுமாறு சில மாதங்களுக்கு முன்பு அறிவுறுத்தப்பட்டார்கள். அப்போது யாரும் அதற்கு எதிராக கூக்குரலிடவில்லை. ஏனென்றால், ஆண்களின் ஆடைக் குறைப்பில் அவர்களுக்கு எந்தத் தேவையும் இருக்கவில்லை.

பெண்கள் தங்கள் நிலையை உணர வேண்டும். ஆடையைக் குறைப்பதை விட்டு விட்டு தங்களை நோக்கி வரும் ஆப(அச)த்தைக் குறைப்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும். இதன் மூலம் அவர்கள் தங்கள் உரிமையை மீட்டுக்கொள்ள வேண்டும்.

8 comments

  1. //இந்திய, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பொது இடங்களில் தோன்றும்போது நீளக்காற்சட்டை அணியுமாறு சில மாதங்களுக்கு முன்பு அறிவுறுத்தப்பட்டார்கள். அப்போது யாரும் அதற்கு எதிராக கூக்குரலிடவில்லை. ஏனென்றால், ஆண்களின் ஆடைக் குறைப்பில் அவர்களுக்கு எந்தத் தேவையும் இருக்கவில்லை.//

    சிந்திக்கவேண்டிய செய்தி.

    சானியா விஷயத்தில் எதிர்த்தவர்களை இரு வகைப்படுத்தலாம்:

    1). சானியாவுக்கு ஆடை பற்றி ‘ஒரு தந்தையின் இடத்திலிருந்து’ அறிவுரை செய்தவர் ஒரு முஸ்லிம் அறிஞர் என்பதாலேயே, இஸ்லாத்தைத் தாக்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது என்பதால் எதிர்த்தவர்கள். (இவர்கள் அதே கருத்தைச் சொன்ன ‘மற்றவர்’களை எதிர்க்கவில்லை).

    2). எங்கே பெண்ணும் ‘ஆணை’ப் போன்று முழுமையாக உடுத்தத் தொடங்கிவிட்டால் தங்கள் ‘இச்சை மனதுக்கு’ தீனி கிடைக்காமல் போய்விடுமோ என்று பதட்டத்தால் எதிர்த்தவர்கள்.
    (மூன்றாவதாக கும்பலோடு ‘கோவிந்தா’ போடுவதற்காக எதிர்த்தவர்களை கணக்கில் சேர்க்கவில்லை).

  2. மூர்த்தி

    நல்ல கட்டுரை.

    வந்தபின் யோசிப்பதைவிட வருமுன் காப்பதே சாலச் சிறந்தது.

    போர்த்தி நடக்கும்போதே பிரச்னை என்றால் நாபிச்சுழி தெரிய உடை உடுத்தி அதனை நாகரிகம் என்று வாய்கிழியப் பேசுபவர்களைக் கண்டால் காமுகர்களுக்கு சொல்லவா வேண்டும்?

    சமீபத்தில் சானியா ஸ்னூக்கர் விளையாடுவது போன்றதொரு படத்தினை இணையத்தில் கண்டேன். அதனை ஒரு வக்கிர புத்தியோடு எடுத்து இருந்தார்கள். எனவே ரவுண்ட்நெக் எனப்படும் கழுத்தை இறுகச் சுற்றிய உடையை சானியா அணிவது நல்லது. அடியில் கால்சராயில் நீளத்தை அதிகரிக்கலாம்.

  3. test

  4. நல்லடியார்

    அன்னாகோர்னிகோவா என்றொரு டென்னிஸ் தாரகை இருக்கிறார். இவர் டென்னிஸ் ஆடிய புகைப்படங்களை விட செக்ஸியாக இருக்கும் புகைப்படங்களே இணையத்தில் பிரபலம்.

    இவருக்கு ஆனந்த விகடன் வைத்த பட்டம் காதல் பிசாசு!

  5. I really enjoyed your blog. This is a cool Website Check it out now by Clicking Here . I know that you will find this WebSite Very Interesting Every one wants a Free LapTop Computer!

  6. Another perverse argument to impose islamic dress code.Come
    to Europe and visit Belgium,
    Switzerland and Netherlands.
    You will find that women have
    freedom to dress and in public
    places there is no eve teasing.
    Your mind conditioned by islamic
    dogma can never understand this.

  7. Mr.Ravi Srinivas,

    We are talking about a sister of India. We know western girls used for trian marriage,dating and so on. If she is someone’s daughter or sister, people like you praise the western freedom, if it happen to our sister or daughter, I am sure you will not encourage.

    Even Indian hindu women want modesty. Pls. mind it.

  8. தமிழ் குழந்தை

    தமிழ் அன்பரே,

    தமிழ் தகவல் தொழில் நுட்பத்தில் வலைதளம் மூலமாக பல அரிய தகவல்கலளை தந்து எங்களை உற்சாகத்தில் ஆழ்த்திகொண்டிருக்கின்றீர்கள். உங்கள் வலைத்தளம் மேலும் மேலும் உயர வாழ்த்துகின்றோம். நாங்கள் புதிதாக அமைத்திருக்கும் இந்த வலைதளத்தினையும் பார்வையிட்டு உங்கள் மேலான கருத்துக்களை எங்களுக்கு அனுப்புமாறு கேட்டுகொள்கிறோம்.

    தமிழ் குழந்தை
    தமிழ் சிறுவன்
    தமிழ் சமையல்ருசி
    ஆன்மிகம்
    தமிழ் பொதுஅறிவு

    அன்புடன்,
    தமிழ் குழந்தை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *