Featured Posts
Home » மதங்கள் ஆய்வு » விமர்சனம் விளக்கம் » முஹம்மது நபியை நேசித்தல்

முஹம்மது நபியை நேசித்தல்

விஷயத்துக்கு வருவோம்.

ஸலாஹுத்தீன் எழுதிய விமர்சனம் பற்றி சகோதரர் நேசகுமார் எழுதியவற்றிலிருந்து, முஹம்மது நபியையும், நபியின் மனைவிமார்களையும், கண்ணியமாக எழுதுங்கள் என்று கேட்டக்கொண்டிருக்கிறார் என்று விளங்க முடிகிறது. ஒவ்வொரு முஸ்லிமும் முஹம்மது நபியை தன் உயிரினும் மேலாக மதிக்க வேண்டும் என்றே இஸ்லாம் கட்டளையிடுகிறது.

அல்லாஹ் கூறுகிறான்.

(நபியே) கூறும், உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் ஏற்பட்டுவிடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும்விட உங்களுக்குப் பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் – அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை. (அல்குர்ஆன் 9:24)



அல்லாஹ்வின் தூதர் கூறுகிறார்.

எனது உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக, உங்களில் ஒருவருக்கு அவரது தந்தையையும் அவரது மக்களையும்விட நான் மிக்க அன்பானவராக ஆகும்வரை அவர் (உண்மையான) ஈமான் கொண்டவராக மாடடார். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர், அபூஹுரைரா (ரலி) நூல்-புகாரி,)



உங்களில் ஒருவருக்கு அவரது தந்தை அவரது குழந்தைகள், ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் மிக அன்பானவராக ஆகும்வரை அவர் உண்மையான ஈமான் கொண்டவராகமாட்டார். என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர், அனஸ்(ரலி) நூல்- புகாரி)


முஹம்மது நபியை நேசிக்க வேண்டும் என்பது முஸ்லிம் சமுதாயம் மட்டும் செயல்படுத்த வேண்டிய கட்டளை. பிற சமூகத்தினரை ஒருபோதும் கட்டுப்படுத்தாது. நபியை நேசித்தல் – நபியின் சொல், செயல். அங்கீகாரம் இவற்றை அறிந்து பின்பற்றுவதில்தான் முழுமைபெறும். நபியைப் பின்பற்றுவது ஒரு முஸ்லிமின் தலையாயக்கடமை.

இன்னும் வரும்.

One comment

  1. is very useful

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *