Featured Posts
Home » மதங்கள் ஆய்வு » விமர்சனம் விளக்கம் » திசை திருப்பும் உள் நோக்கம்.

திசை திருப்பும் உள் நோக்கம்.

ஒட்டு மொத்த உலக முஸ்லிம்களையும் முட்டளாக்கும் முயற்சியில், அவதூறுகளை சுமந்து களமிறங்கிய நேசகுமார் ”தனியொருவனாக பதிலளிப்பதின் சங்கடங்கள்” என்று இப்போது புலம்புகிறார். மந்தையில் அமர்களமாய் புகுந்த தனி நரியைப்போல, இஸ்லாத்தின் மீது அவதூறுச் சேற்றை வாரியிறைக்க தமிழ்மணம் வலைப்பதிவில் 3.12.2004ல் ”நபிகள் நாயகத்தின் வாழ்வு” என்று தொடங்கி.. நேசகுமார் தனி நபராகத்தான் வலிய களமிறங்கினார்.

நொங்கு தின்ன ஆசைப்பட்டவன், நோண்டித்தின்ன சங்கடப்பட்டானாம்.
இஸ்லாத்தின் மீது பெய்யானக் குற்றங்களை அடுக்கடுக்காய் சுமத்துவதில் நேசகுமார் தன்னையொரு தன்னிகரற்ற அறிவாளி(?)யாகத்தான் அடையாளம் காட்டிக் கொண்டார். 3.12.2004ன் முதல் பதிவிலேயே பல குற்றச்சாட்டுக்களை பதிந்திருக்கிறார். அதைத் தொடர்ந்த பதிவுகளிலும், இஸ்லாத்தைப் பற்றி அவர் எழுதியவற்றில்தான் முஸ்லிம் சகோதரர்கள் குறுக்கு விசாரணை செய்திருக்கிறார்கள். அதற்கு விளக்கம் தர முன் வராமல் ”தனியொருவனாக பதிலளிப்பதின் சங்கடங்கள்” என்று தனது பன்முகத்தன்மையைக் காட்டுகிறார்.

இது தனியொருவராகக் களமிறங்குவதற்கு முன் யோசித்திருக்க வேண்டிய விஷயம். அல்லது ஒவ்வொரு வாதமாக வைத்து விவாதித்திருக்க வேண்டும். (நான் பதிலளிக்க மாட்டேன் என்று சொல்லவில்லை என்று அவர் சொன்னாலும் பின் ஏன் இரட்டை வேஷம்?)

கால அவகாசமெடுத்து பதிலளிப்பதன் உறுதித்தன்மை, வசதிகள்

காலம் தாழ்த்துவது தடம் புரண்ட கருத்துத் திசை மாற்றத்திற்கும் உதவியாக இருக்கும் என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இஸ்லாத்தின் எதிர்ப்பு.

இஸ்லாத்தின் பன்முகத்தன்மையைப் பற்றி நான் எழுதியபோது அதை இஸ்லாமிய எதிர்ப்பு எனத் தவறாகக் கருதிய முஸ்லிம் அன்பர்கள்,..

நேசகுமார் இதுவரை இஸ்லாத்தை வன்மையாக எதிர்க்கும் தீவிரவாதியாகவே தன்னை அடையாளம் காட்டியிருக்கிறார். எதிரியை எதிரி என்று சொல்லாமல் பூசி மொழுகச் சொல்கிறாரா?

இவையனைத்தும் இஸ்லாத்திற்கு எதிராக எழுதப் படுபவை அல்ல. இஸ்லாத்தில் மாற்றம் வேண்டும் என்றுதான் நான் கோருகிறேனே தவிர, இஸ்லாமே இல்லாமல் போகவேண்டும் என வேண்டவில்லை, விரும்பவும் இல்லை.

வென்னீரில் வாய் வைத்த பூனை, தண்ணீரைக் கண்டாலும் அலறும். என்பது போல் நேசகுமார் ஏதோ ஒரு அதிர்ச்சியில் பாதித்திருக்கிறார் என்றே கருத வேண்டியுள்ளது. முஸ்லிம்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் இஸ்லாத்தில் ஒன்றை சேர்க்கவோ, நீக்கவோ முடியாதே! இஸ்லாத்தின் இந்த அரிச்சுவடியை விளங்காமலேயே இஸ்லாத்தில் மாற்றம் வேண்டும் என விமர்சிப்பது நேசகுமாரின் அறியாமையை வெளிப்படுத்துகிறது.

சில முஸ்லிம்களின் குறையை இஸ்லாத்தின் குறைபாடாக முன்னெடுத்துச் செல்கிறார் என்பதை மட்டும் இங்கே சொல்லிக் கொள்கிறேன்.

சிறு பிள்ளைத்தனம்.

ஆனாலும், நான் மட்டுமே அடிப்படைவாதத்திற்கு எதிராக எழுதிக் கொண்டிருக்கவில்லை. வலைப்பதிவர்களில் இணையத்தில் எழுதுபவர்களில் பலரும் அவர்களது பதிவுகளிலும், குழுமங்களிலும், வலையிதழ்களிலும் பலவித முறைகளில் இஸ்லாமிஸ்ட்டுகளுக்கு எதிரான கருத்துக்களை தத்தம் பாணியில் வெளிப்படுத்தியே வருகின்றனர். ஆனால், எனக்கு மட்டுமே பதிலளிக்க வேண்டும் என அனைத்து இஸ்லாமிய அன்பர்களும் விழைகிறார்களேதவிர, மேலே குறிப்பிட்டுள்ளபடி ஏனையோர் எழுதுவதில் இருக்கும் வாதங்களுக்கு பதிலளிப்பதோ, அல்லது தொடர்ந்து பதிலளிப்பதோ இல்லை.

தனது கருத்தின் மீதான எதிர்கருத்தைச் சந்திக்க முடியாமல், ”அவனும்தான் வேலியைத்தாண்டி என்னோடு சேர்ந்து மாங்காய் பறித்தான், அவனையும் கண்டியுங்கள்” என்று சொல்லும் சிறுவனின், சிறு பிள்ளைத்தனமாக இருக்கிறது.

ஹாமீத் ஜஃபருக்குத்தான் பதிலளிப்பேன் என்ற சாதிப்பு எதற்கு?
விவாதம் நேரடியானதாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம். அது வரிசைப்படியாகவும் அமைந்திருக்க வேண்டும். இது விவாத விஷயத்தில் தெளிவையேற்படுத்திட உதவியாக இருக்கும். சுற்றி வளைத்தல் என்பது விவாத மையக் கருத்தை விட்டு விலகச் செய்து – திசை திருப்பவே உதவும் என்பதில் என்னிடம் மாற்றுக் கருத்தில்லை.

டிசம்பர் 3.2004ல் நேசகுமார் முதல் வலைப்பதிந்து பல பதிவுகளுக்குப்பிறகே ”கயமை வேண்டாம்” என்று 23.12.2004ல்(திண்ணையில்) ஹாமீத் ஜாஃபர் எழுதுகிறார். (நேசகுமார் இதை 7.1.2005ல் தான் வலைப்பதிவில் அறிமுகப்படுத்துகிறார்) இடைப்பட்ட ஒரு மாத நாட்களில் முஸ்லிம் சகோதரர்கள் வலைப்பதிவில், வைத்த கருத்துக்களுக்கு முன்னுரிமை வழங்காமல் ஹாமீத் ஜாஃபருக்குத்தான் பதிலளிப்பேன் என்று சுற்றி வளைத்து ஜல்லியடிப்பது திசை திருப்பும் நோக்கமா இல்லையா?

தான் நினைப்பது போலவே பிறர் எழுத வேண்டும்.
தான் நினைப்பது போலவே மற்றவர்கள் எழுத வேண்டும் என்று நினைப்பவரின் புத்தியில் கோளாறு இருக்கும் என்பதை எவரும் மறுக்க முடியாது. நேசகுமாரும் இந்த சுபாவத்தையுடையவர்தான் இதை நான் மிகையாகச் சொல்லவில்லை. அவரே அப்படி எழுதியிருக்கிறார்.

ஹமீது ஜா·பருக்கு உடனடியாக அபூமுஹை எதிர்வினை புரிந்திருக்க வேண்டும்.

என்னே அறிவு!? ஹாமீத் ஜாஃபர் திண்ணையில் எழுதுகிறார். திண்ணைக்கும் நமக்கும் சம்மந்தமில்லை. 7.1.2004ல் நேசகுமாரின் வலைப்பதிவில் ”இஸ்லாம் முன் வைக்கும் இறைவன் – ஹாமீத் ஜாஃபருக்கு சில கேள்விகள்” என்ற தலைப்பில் ”கயமை வேண்டாம்” என்ற கட்டுரைக்கு சுட்டி கொடுக்கப்பட்டிருந்தது.

நான் பின்பற்றும் மதத்தை ஒருவன் குறை சொன்னால், நான் பின்பற்றும் மதம் அந்தக் குறைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது என்பதையே நான் நிரூபிக்க வேண்டும். இதை விடுத்து நீ பின்பற்றும் மதம் யோக்கியமா? என்று நான் திரும்ப அவனைக் கேட்டால், நான் பின்பற்றும் மதம் யோக்கியமானதல்ல என்பதை என்னை அறியாமலேயே ஒப்புக் கொள்கிறேன்.

நேசகுமார் இஸ்லாத்தைப் பற்றி விமர்சித்து விட்டார் என்பதற்காக, நான் என் நண்பர்களின் முதுகிலேறி அவர்கள் பின்பற்றும் மதத்தை விமர்சிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை!

கயமை வேண்டாம் ஆக்கத்தில் இந்து மதத்தைச் சாடியும் எழுதப்பட்டிருந்தது. இதில் இஸ்லாம் உடன்படவில்லை என்பதாலும், ஹாமீத் ஜஃபருக்கு என்று பெயர் குறிப்பிட்டே நேசகுமாரின் வலைப்பதிவுத் தலைப்பு வைக்கப்பட்டிருந்ததாலும் சம்மந்தப்பட்டவர்களே விவாதிக்கொள்வதுதான் சிறப்பாகும்.

உதாரணமாக ஹமீது ஜா·பரின் இஸ்லாம் பற்றிய கருத்துக்கு நான் எழுதும் பதிலை விட, அதை மறுத்து அபூமுஹை அளித்துள்ள பதில் படிப்பவர்களிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஹாமீத் ஜஃபருக்கு – அதாவது ஒரு முஸ்லிற்கு, முஸ்லிமல்லதோர் பதிலளித்தால் அது இன்னும் கணமாக இருந்திருக்குமே!

பின்னூட்டங்களில் தெரிவியுங்கள்.
நேசகுமார், முன்பு பின்னூட்ட வாசலை அடைத்து, விவாத நாகரீகமற்றவர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். இப்போது ”பின்னூட்டங்களில் தெரிவியுங்கள்” என்று ஏலம் விடுகிறார். ஒருமுறை முகத்திலறைந்தாற்போல் சாத்திய கதவை எவரும் மீண்டும் தட்டுவார்களா?

தகுதியற்ற தம்பட்டம்.

நான் இஸ்லாம் பற்றி மட்டுமே எழுதிக் கொண்டிருக்கவில்லை. வரலாறு, சமூகம், சினிமா, இலக்கியம், மொழி, கலை என பல்வேறு விஷயங்களைப் பற்றி – சித்தர்களிலிருந்து விண்கோள் வரை எழுதியிருக்கிறேன், எழுதிக் கொண்டிருக்கிறேன். என்னிடம் புத்தகமாய் இவற்றைப்(இஸ்லாம் பற்றியவை) பதிப்பிப்பதற்கு கேட்டு வந்த ஆ·பர்களுக்கும் கூட மாதங்கள் பல ஆகியும், கமிட் செய்யாமல் இருக்கிறேன் – நேரமின்மையால். இந்நிலையில் மூச்சுவிடாமல் இஸ்லாம் பற்றி எழுதுவது, நாளுக்கு நாலு பதிவு செய்வது, சாத்தியமில்லாமல் போகிறது.

எனது இவ்வலைப்பதிவு இதுவரை நாலாயிரத்துக்கும் அதிகமான முறை படிக்கப் பட்டிருக்கிறது (கவுன்ட்டரில் தெரிவது உள்ளே வரும் ஐபி எண்ணிக்கை மட்டுமே. மீண்டும் மீண்டும் படிப்பவைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை), இது மட்டுமல்லாது திண்ணையில், மரத்தடியில், பதிவுகளில் என பல்வேறு இடங்களில் பலர் படித்திருக்கின்றனர். பின்னூட்டங்கள் போன்று பதிக்க ஆரம்பித்தேனென்றால், எனது எழுத்துக்கள் தமது மதிப்பை இழந்துவிடும்.

1. வரலாறு, சமூகம், சினிமா, இலக்கியம், மொழி, கலை, சித்தர்களிலிருந்து விண்கோள்வரை எழுதியிருக்கிறேன்.
2. (இஸ்லாம் பற்றியவை) பதிப்பிப்பதற்கு கேட்டு வந்த ஆ·பர்களுக்கும் கூட மாதங்கள் பல ஆகியும், கமிட் செய்யாமல் இருக்கிறேன் –
3. எனது இவ்வலைப்பதிவு இதுவரை நாலாயிரத்துக்கும் அதிகமான முறை படிக்கப் பட்டிருக்கிறது.

தற்புகழ்ச்சி விரும்பியைத் தவிர வேறு எவரிடமிருந்தும் இந்த தம்பட்டம் வெளிப்படாது. இவையெல்லாம் 3.12.2004ல் நேசகுமார் முதல் வலைப்பதிந்து, தொடர்ந்து பதிந்த இஸ்லாத்தின் வரலாற்றுப் புரட்டலுக்கு எந்தளவிற்கு வலுசேர்க்கும்? உண்மைப்படுத்தும்? என்பதை நடுநிலையாளர்கள் புரிந்தால் சரி.

பொதுவாக
நேசகுமார் 23.3.2005 பதிவில் கவ்வைக்குதவாத வாதங்களையே வைத்திருக்கிறார். திண்ணையில் எழுதியது, மரத்தடியில் சூடு பறந்தது, யமுனா ராஜேந்திரனுக்கு மறுமொழியிட்டது, நாகூர் ரூமி வந்தது போனது இன்னும் இது மாதிரியான உளறலெல்லாம் ”இஸ்லாம் ஓர் முழு அறிமுகம்” என்ற பெயரில் ”நபிகள் நாயகத்தின் வாழ்வோடு” எப்படி சம்மந்தப்படும்? என்பதை பொறுத்திருந்துதான் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதுவரை பழைய பாக்கிக்கான கருத்துக்களை வைக்கிறேன்.

விவாதத்திற்கு எடுத்துக்கொண்ட நேசகுமாரின் பதிவு.

http://islaamicinfo.blogspot.com/2005/03/blog-post_23.html

One comment

  1. அரபி பதத்தில் தனது பெயரை மட்டும் கொண்டவனாக, அதனைத்தவிர மேலதிகமாக இஸ்லத்தைப் பற்றி எதனையும் அறியா முஸ்லீம் களை மட்டும் கண்டவராக, ஒட்டுமொத்த தமிழ் முஸ்லிம்களும் இப்படித்தான் என்ற நிலைப்பாட்டில் நேசகுமார் எழுத ஆரம்பித்து இருக்கிறார் என்றே தோன்றுகிறது. அதனால் தானோ எல்லா திசைகளில் இருந்தும் விளக்கங்கள்/கேள்விகள் வருவதைக் கண்டு ஆயாசப்படுகிறார்.

    இஸ்மாயில், சிங்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *