Featured Posts

எழுதுவோம்.

//*காஃபாவைப் புனித ஆலயமாக இஸ்லாம் அறிவித்திருப்பதால் அங்கே கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டிய சிலக் கட்டுபாடுகள் உண்டு, இஸ்லாத்தைச் சார்ந்தவர்களாலேயே அதைப்பேண முடியும் மற்றவர்களுக்குத் தெரியாது என்பதால் இயலாது. இது பற்றி விரிவாக என்பதிவில் எழுதவுள்ளேன்.

சிவா & ஈரோடு பிலிம்ஸ்,இது குறித்து எழுதுகிறேன். தற்போது நிறைய வேலைகள் இருப்பதால் உடனடியாக எழுத இயலாது என்றே நினைக்கிறேன். அதற்குள் அபூ முஹை அவர்கள் மேலே கண்டிருப்பது போன்று இது குறித்து விளக்கி எழுதுவார் என எதிர்பார்க்கிறேன்.*//

எழுதாமலா, எழுதுவோம் அதற்கு முன் நிலுவையிலிருக்கும் பழைய வினாக்களுக்கு விளக்கம் வைக்கப்பட வேண்டும். 01.05.2005 நமது பதிவில், நேசகுமார் கேட்டுக் கொண்டதற்காக – அதுவும் அவர் எழுதியவற்றிலிருந்தே மூன்று விளக்கங்களை கேட்டிருந்தோம், ஹதீஸ்களின் தரங்கள் பற்றி அவர் அறிந்திருக்கவில்லை என்பதால் முதலாவது கேள்விக்கு விளக்கம் தர வேண்டாம். 2,3 ஆகிய கேள்விகளுக்கு விளக்கமளிக்கட்டும். மீண்டும் கேள்விகள் கீழே.

2. நபி (ஸல்) அவர்கள், ஜைனப் (ரலி) அவர்களைத் திருமணம் செய்த போது, நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் அதிர்ச்சியடைந்து எதிர்ப்பாயிருந்தார்கள் என்று நேசகுமார் கதையளந்திருக்கிறார்.

3. 24:3ம் வசனம் மாற்று மதப்பெண்டிர்களையெல்லாம் ”விபச்சாரிகள்” என்று சொல்வதாக – நேசகுமார் திருக்குர்ஆன் மீது களங்கம் சுமத்தியிருக்கிறார். இந்த வசனத்திற்கு இதுதான் பொருள் என்பதை அவர் நிரூபிக்கட்டும்.

இதற்கு நேசகுமார் அவர்கள் விளக்கமளித்த பின் அடுத்தக் கட்டத்தைத் தொடர்வோம். ஸஹீஹான ஹதீஸ்கள் பற்றிய தகவல்கள் கேட்டிருக்கிறார், நேரம் கிடைக்கும் போது ஹதீஸ்களின் தரங்கள் பற்றி விளக்குவோம்.

One comment

  1. Its a good post. Nesakumar need to clear out the old issues before discussing others. Is he listening? It is pathetic that this self-styled scholar still searching the answers for the questions that are months old.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *