Featured Posts
Home » பொதுவானவை » எச்சரிக்கை » உஷார்! உஷார்!! இன்னும் இவர்களை நம்ப வேண்டுமா? எச்சரிக்கை!!

உஷார்! உஷார்!! இன்னும் இவர்களை நம்ப வேண்டுமா? எச்சரிக்கை!!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

சமுதாய சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

‘நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுககு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்!’ (அல்அஹ்ஸாப் : 70)

உணர்வு வார இதழின் உரிமை 14 குரல் 9, 8-ம் பக்கத்தில் முக்கிய அறிவிப்பு என்ற தலைப்பில் எங்களது நாச்சியார்கோயில் திருநரையூர் உமர் (தவ்ஹீத்) பள்ளிவாசல் நிர்வாகிகளான ஜாஃபர் அலி மற்றும் ஒலி முஹம்மது ஆகியோர் குறித்து வெளியான செய்திகள் கண்டு அதிர்ச்சியடைந்தோம்.

பெரிதாகப் பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்

unarvu_umar_palli

நபி(ஸல்) அவர்கள் மூன்று விஷயங்கள் வெற்றி தரக்கூடியவை, மூன்று விஷயங்கள் அழிவை தரக்கூடியவை என கூறினார்கள்.

வெற்றி தரக்கூடியவை –
1. தனிமையிலும், சபையிலும் அல்லாஹ்விற்கு அஞ்சுவது,
2. விருப்பு வெறுப்பு இரு நிலைகளிலும் உண்மையை பேசுவது,
3. வறுமையிலும், செழிப்பிலும் நடுநிலையை மேற்கொள்வது.

அழிவை தரக்கூடியவை –
1. மனோ இச்சையை பின்பற்றுவது, அதற்கு அடிமையாவது,
2. தன்னை ஆட்டிப்படைக்கும் அளவுக்கு பேராசை கொள்வது,
3. இருமாப்பு கொள்வது, இந்த மூன்று நோய்களில் இதுவே மிகவும் ஆபத்திற்குரியது.

(அறிவிப்பவர்: அபுஹுரைரா(ரலி), நூல்: பைஹகி, மிஷ்காத்)

யார் இந்த ஜாஃபர் அலி?

ஏகத்துவ பிரச்சாரங்கள் தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் அறிமுகமான ஆரம்ப காலத்தில், சுன்னத்துவல் ஜமாஅத்தின் பள்ளிவாசல்களின் நிர்வாகிகளால் குர்ஆன்-ஹதீஸ் வழிமுறையில் தொழ விரும்பியவர்கள் சந்தித்த சொல்ல இயலாத துன்பங்களும், இடையூர்களும் நாமனைவரும் அறிவோம். அதுபோன்ற ஒரு நிலை எங்கள் ஊரில் ஏற்பட்டபோது, கடந்த 15 வருடங்களுக்கு முன்பு குர்ஆன்-ஹதீஸ் வழியில் ஊர்தவ்ஹீத் சகோதரர்கள் தொழ, தான் குடியிருந்த வீட்டை காலி செய்து கொடுத்து ஏற்படுத்திய பள்ளி தான் இந்த உமர் பள்ளிவாசல். சென்ற 14-08-2009 அன்று இப்பள்ளி புதிய கட்டிடமாக கட்டி திறப்பதற்கு முன்பு வரை ஜாஃபர் வீடு தான் உமர் பள்ளிவாசலாக இயங்கியது. டி.என்.டி.ஜெ உருவாவதற்கு முன்பே எங்கள் ஊர் சகோதரர்களால் இஸ்லாமிய கல்வி கலாச்சார நல அறக்கட்டளை என்ற பெயரில் பதிவு செய்து, மார்க்க பிரச்சாரங்கள், நல உதவிகள், சமூக பணிகள் இன்னும் ஏராளமான செயல்பாடுகளை டி.என்.டி.ஜெவுடன் இணைந்தே செயலாற்றி வந்தோம். வல்ல அல்லாஹ்வின் கிருபையால் இந்த ஜாஃபர், ஒலி முஹம்மது மற்றும் எங்களுரைச் சேர்ந்த வெளிநாட்டு வாழ் சகோதரர்களாளும் எடுத்த பெரும் முயற்சிகளின் விளைவாக கூரையில் இயங்கிய பள்ளியை இன்று பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்தாக உருவாக்கியிருக்கிறார்கள். இந்த உமர் பள்ளிவாசலை முகவை சகோதரர் ஒருவரே முழுவதும் கட்டி தந்து இந்த பள்ளிவாசல் எந்த ஜமாஅத்திற்கோ, இயக்கத்திற்கோ உட்படாமல் முழுக்க முழுக்க ஊர் மக்களுக்கு குர்ஆன்-ஹதீஸ் அடிப்படையில் பயன்பட வேண்டும் என்று மேற்கண்ட அறக்கட்டளைக்கு வக்ஃபு செய்தார்கள்.

மேலும் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம்(வடக்கு-தெற்கு) தலைவராக இந்த ஜாஃபர் இருக்கும் போதுதான் குடந்தை குலுங்கும் அளவுக்கு ஜனவரி ‘9,2006-ல் சமுதாயத்திற்கு இடஒதுக்கீடுப் பேரணி-மாநாடு நடத்தப்பட்டது. மக்கள் மீண்டும் ஜாஃபரை மாவட்ட தலைவராக தேர்ந்தெடுத்த போது, நீண்ட நாட்களாக நானே தலைவராக இருக்க விரும்ப வில்லை என்று உறுதியாகக் கூறி, வேறு ஒரு சகோதரரை தலைவராக நியமித்து கும்பகோணம் பகுதிகளில் நிறைய டி.என்.டி.ஜெ கிளைகள் உருவாக அல்லாஹ் இவரை காரணியாக்கினான். சமீபகாலமாக தனி நபர்களின் கண்ணியத்தை குலைப்பதையே கொள்கையாக கொண்டு செயலாற்றி வருகிற டி.என்.டி.ஜெ பட்டியலில், ஜாஃபர் அலியையும் சேர்த்துள்ளனர். மேற்கண்ட உண்மைகளை மறைத்து அவருடைய கண்ணியத்தை சிதைக்கும்விதமாக இப்போது இவருக்கு பதவி இல்லை என்பதால் அவரே மீறுகிறார் என்று உண்மைக்கு புறம்பாக இட்டுகட்டியுள்ளார்கள். தஞ்சை மாவட்டத்தில் இவ்வளவு பணிகளை செய்துள்ள சகோதரர் ஜாஃபர் கடந்த இரண்டரை ஆண்டுகளாக கிளை செயலாளராக பணியாற்றி வந்தார். இதுதான் டி.என்.டி.ஜெ பார்வையில் பதவி ஆசையா?

மேலும் டிரஸ்ட் மூலம் நடத்தும் பள்ளிவாசல் தவ்ஹீத் ஜமாஅத்தின் கீழ் செயல்படுகிறது என்று எண்ணி உதவிகள் செய்ய வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கிறார்களாம். ஒவ்வொரு முஸ்லிமும் பள்ளிவாசல்களுக்கு உதவி செய்யும்போது, எவரும் இயக்கத்திற்காக எண்ணி உதவி செய்வது கிடையாது, முழுக்க முழுக்க அல்லாஹ்விடம் கூலியை எதிர்பார்த்துதான் உதவி செய்கிறார்கள். சகோதரர்களே! இவர்களுடைய கீழ்தரமான எண்ணங்களை சிந்தியுங்கள்! அல்லாஹ்வுடைய பள்ளிவாசலுக்கு உதவும் சகோதரர்களை தடுப்பதோடு, இவர்களுடைய நோக்கம் என்ன என்பதை வல்ல அல்லாஹ் அவர்களை கொண்டே சமுதாயத்திற்கு அடையாளம் காட்டிவிட்டான். அல்ஹம்துலில்லாஹ்! இந்த பள்ளிவாசல் உருவாக எந்தவகையிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை அல்லது மாநில தலைமையுடைய எந்த பரிந்துரையும் பெறாமல் வல்ல அல்லாஹ்வின் நாட்டத்தால் எங்கள் டிரஸ்டின் பெயரை மாத்திரமே பயன்படுத்தி இப்பள்ளியை உருக்கி இருக்கிறோம். ஆகவே, அல்லாஹ்வுடைய பொருத்தத்தை நாடி உதவக்கூடிய கொள்கை சகோதரர்களை எவராலும் தடுத்துவிட முடியாது என்பதான் கடந்த கால வரலாறு.

ஜாஃபர் மற்றும் ஒலி முஹம்மது மட்டும்தான் தனி டிரஸ்டாக இயங்குகிறார்களா?

முக்கிய அறிவிப்பு என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மாநிலத் தலைமையகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் – கடந்த காலங்களில் டிரஸ்ட் என்ற பெயரில் இயங்கக் கூடாது என்றும் தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் தான் இயங்க வேண்டும் என்று அறிவித்துள்ளார்களாம். அதனால் ஜாஃபர் மற்றும் ஒலி முஹம்மது மட்டும் தான் தனி டிரஸ்ட் அமைத்து செயல்பட்டு வருவது போன்று ஒரு பொய்யான தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இந்த டி.என்.டி.ஜெ மாநில நிர்வாகிகள் பொய்யர்கள் என்பதற்கு நமது கேள்விகள் இதோ?

1. முஸ்லிம் டிரஸ்ட் என்று பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுடைய பெயரில் ஒரு டிரஸ்ட் இயங்கி வருகிறது. இந்த டிரஸ்டிற்கு மதுரையில் நூர் பள்ளிவாசல், சென்னை ராயப்பே;டையில் ஒரு கட்டிடமும், சென்னை மண்ணடியில் தமுமுக அலுவலக கட்டிடமும் சொத்துகளாக இருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக, பொது மக்களுடைய பொதுப் பணத்தில் வாங்கப்பட்ட தமுமுக அலுவலக கட்டிடத்தில் ஒரு தளம் நீண்ட நாட்களாக யாருக்கும் பயன்படாமல் இருக்கிறது. இந்த பொது மக்களின் பணத்தில் வாங்கிய சொத்தை வீணாக பூட்டி போட்டு வைத்துள்ள டிரஸ்டிகள் மீது இந்த டி.என்.டி.ஜெ மாநில நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்தது. இந்த டிரஸ்டை ஏன் டி.என்.டி.ஜெ பெயரில் இன்னும் பதிவு செய்யவில்லை.

2. முஸ்லிம் மீடியா டிரஸ்ட் என்று பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுடைய பெயரில் ஒரு டிரஸ்ட் இயங்கி வருகிறது. இந்த டிரஸ்டிற்கு உணர்வு வார இதழ் என்ற பத்திரிக்கையும், ஒவ்வொரு வருடமும் ஸஹர் நேரத்தில் டிவியில் நடத்தப்படும் நிகழ்ச்சியின் மூலம் வரும் வருவாய்களும், டி.என்.டி.ஜெ விஷன் நெட்வொர்க் என்ற பெயரில் நடத்தும் டிவி நிகழ்ச்சிகளின் மூலம் வரும் வருவாய்களும் சொத்தாக உள்ளது. இந்த சொத்துகள் யாவும் கொள்கை சகோதரர்கள் பங்களிப்பில் தான் உருவாக்கப்பட்டுள்ளது. இன்னும் இந்த டிரஸ்ட் டி.என்.டி.ஜெ பெயரில் பதிவு செய்யவில்லையே ஏன்?

3. தஃவா செய்வற்காக மதுரையில் கொள்கை சகோதரர் ஒருவர் அளித்த ஒரு நிலத்தை பி. ஜைனுல் ஆபிதீன் என்ற தனி நபர் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதே. இன்னும் இந்த சொத்தை டி.என்.டி.ஜெ பெயரில் பதிவு செய்யவில்லையே ஏன்?

4. ஜமாஅத்துத் தவ்ஹீத் டிரஸ்ட் என்று எம். அப்துல்(சாகுல்)ஹமீது அவர்ளுடைய பெயரில் ஒரு டிரஸ்ட் இயங்கி வருகிறது. இந்த டிரஸ்டிற்கு ஏகத்துவம், தீன்குலப் பெண்மணி ஆகிய மாத இதழ்கள் சொத்தாக உள்ளதே. இன்னும் இந்த டிரஸ்ட் டி.என்.டி.ஜெ பெயரில் பதிவு செய்யவில்லையே ஏன்?

5. கும்பக்கோணத்தில் அந்நூர் பெண்கள் அரபிக் கல்லூரி என்ற நிறுவனம் இஸ்லாமிய கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளை என்ற டிரஸ்டின் பெயரில் இயங்கி வருகிறது. இன்னும் இந்த டிரஸ்ட் டி.என்.டி.ஜெ பெயரில் பதிவு செய்யவில்லையே ஏன்?

6. மேலப்பாளையத்தில் மஸ்ஜிதுர் ரஹ்மான் என்ற பள்ளிவாசல், அல் இர்ஷhத் மகளிர் கல்லூரி ஆகிய இரண்டும் மஸ்ஜிதுர் ரஹ்மான் கட்டிட கமிட்டி – சம்சுல் லுஹா அவர்களுடைய பெயரில் இயங்குகிறதே. இன்னும் இந்த கமிட்டி டி.என்.டி.ஜெ. பெயரில் பதிவு செய்யவில்லையே ஏன்?

7. கடையநல்லூர் இஸ்லாமிய கல்லூரி மற்றும் மஸ்ஜிது முபாரக் ஆகிய இரண்டும் வௌ;வேறு பெயர்களில் ஸைபுல்லா ஹாஜா அவர்களுடைய பொறுப்பில் இயங்கி வருகிறதே. இன்னும் இந்த டிரஸ்ட் டி.என்.டி.ஜெ பெயரில் பதிவு செய்யவில்லையே ஏன்?

இப்படியாக இவர்களின் டிரஸ்ட் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. கும்பக்கோணத்தில் அந்நூர் பெண்கள் அரபிக் கல்லூரியைத்தவிர மேலே உள்ள அனைத்து டிரஸ்டுகளும் டி.என்.டி.ஜெ. தலைமைபீட நிர்வாகிகள்தான் நிர்வாகிகளாக இருக்கின்றார்கள். அவர்கள் உருவாக்கிய இயக்கத்திற்கு அவர்களின் டிரஸ்ட்டையே சேர்க்காத இவர்கள், அடுத்தவர்களின் டிரஸ்டை தங்களின் இயக்கத்திற்கு அபகரிக்க நினைப்பது ஏன்? சிந்தியுங்கள்! ஆக இவர்கள் உஷாராக இருப்பார்களாம். நாம் மட்டும் பள்ளியையும் அதன் சொத்துக்கயையும் எழுதிக்கொடுத்துவிட வேண்டுமாம். இவர்களுடைய நேர்மையையும், நீதியின் இலட்சணத்தைப் பாருங்கள்.

(நபியே!) உமக்கு ஏவப்பட்டதை நோக்கி அழைப்பீராக! உமக்குக் கட்டளையிட்டவாறு நிலைத்திருப்பீராக! அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்! ‘அல்லாஹ் அருளிய வேதத்தை நம்பினேன். உங்களுக்கிடையே நீதியாக நடக்க கட்டளையிடப்பட்டுள்ளேன். அல்லாஹ்வே எங்கள் இறைவனும், உங்கள் இறைவனுமாவான். எங்கள் செயல்கள் எங்களுக்கு, உங்கள் செயல்கள் உங்களுக்கு. எங்களுக்கும், உங்களுக்குமிடையே எந்தத் தர்க்கமும் (இனி) இல்லை. அல்லாஹ் (மறுமையில்) நம்மை ஒன்று திரட்டுவான். அவனிடமே திரும்பிச் செல்லுதல் உள்ளது.’ என்று கூறுவீராக!. (அஷ்ஷுஅரா:15)

சமுதாய சகோதரர்களே சிந்தியுங்கள்!

தமிழகத்தின் அனைத்து ஊர் கொள்கை சகோதரர்களும் அவரவர் பிறந்த மண்ணில் இந்த இஸ்லாமிய தூய மார்க்கத்தை நிலைநிறுத்துவதற்காக சுயமாக சுழன்று பணியாற்றி வருகிறோம். உதாரணதிற்கு வாடகை கட்டிடத்தில் இயங்கும் மர்கஸிற்கு வாடகை செலுத்துவது, தஃவா பணிகள், சமூக நல உதவிகள், பள்ளிகள் உருவாவதற்கு நிலம் வாங்குவது, அந்நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்கு தனவந்தர்களின் உதவியை தேடுவது, என்று எண்ணற்ற பணிகளுக்கு நாம் ஒவ்வொருவரும் தங்களுடைய உதிரத்தை வியர்வையாக சிந்தி உருவாக்குகிறோம். இப்படி அல்லாஹ்வுக்காக நமது சொந்த ஊர்களில் உருவாக்கப்படுகிற நம்முடைய சொத்துக்களை இந்த சொத்துகள் உருவாவதற்கு எந்த வகையிலும் சம்மந்தம் இல்லாத, எந்த பங்களிப்பும் அளிக்காத இவர்கள் நம்மை ஆட்டுவிக்க எண்ணுகிறார்கள்.

கடந்த காலங்களில் மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான், கடையநல்லூர் மஸ்ஜிது முபாரக் ஆகிய பள்ளிகளின் சொத்துக்கள் ஜாக் பெயரில் பதிவு செய்ததின் விளைவு அன்மைகாலங்களில் நிகழ்ந்து வருகிற நிகழ்வுகளை நாம் அவ்வளவு எளிதில் மறந்திருக்கமாட்டோம். அதோடு இயக்கங்கள் உருவாக்கிய நோக்கமே, உள்ளூர் விவகாரங்களில் தலையிடமாட்டோம், சமுதாயம் இழந்த உரிமைகளை மீட்கவும், இருக்கின்ற உரிமைகளை காக்கவும், சமுதாயத்திற்கு எதிரான அடக்குமுறையின்போது பாதுகாக்கவுமே தவிர, சொத்துகளை அபகரிக்க அல்ல. இன்று சமுதாயத்தவர்கள் அவரவர் ஊர்களில் தூய இஸ்லாமிய பணிகள் செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் உருவாக்கிய டிரஸ்டுகளில் நிகழ்காலத்தில் இல்லாத பிரச்சனைகள், எதிர்காலத்தில் நிர்வாக நடவடிக்கைகளில், கணக்கு வழக்குகளில் பிரச்சனைகள் ஏற்பட்டால் கொள்கை சகோதரர்களின் சொத்துகளை பாதுகாக்க வருகிறோம் என்று கூறி சமுதாயத்தவர்களின் உரிமைகளிலும், நிர்வாக சுதந்திரத்திலும் தலையிட எத்தனிக்கிறார்கள். இந்த வாதம் பொருந்த காரணமும், நடைமுறைக்கு சாத்தியமற்றதுமாகும். இது மட்டுமல்ல நல்ல நிர்வாகிகளாக இருப்பவர்கள் மாநில நிர்வாகிகள் கூறும் விஷயங்களுக்கு உடன்படாவிட்டால் ‘நன்றாக இயங்குகிற நிர்வாகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்வார்கள்’ என்று கூறி, வெளியூர் ஆட்களை நிர்வாகிகளாக நியமித்து கஸ்டப்பட்டு உருவாக்கியவர்களை வெளியேற்றக் கூடும். இன்னும் இதுபோன்ற பல காரியங்கள் நிகழ வாய்ப்பு உண்டு.

நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி, தங்களையே மறந்து விடுகிறீர்களா? நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா? அல்பகரா:44

நாங்கள் மேலே குறிப்பிட்டுள்ள டிரஸ்டுகளும் அதனை இயக்குகின்றவர்களும் யார் யார் என்பதை நீங்கள் கவனிப்பதன் மூலம் டி.என்.டி.ஜெ மாநில நிர்வாகிகள் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்புகளை எந்த அளவு அவர்கள் பேணி வருகிறார்கள் என்பதை நீங்கள் உணரலாம். அவர்களுக்கு ஒரு நீதியாம், அப்பாவி கொள்கை சகோதரர்களுக்கு ஒரு நீதியாம். சகோதரர்களே! இவர்களை இன்னும் இவர்களை நம்ப வேண்டுமா? எச்சரிக்கை!

மொத்தத்தில் அவர்களுக்கு என்று ஒரு கூட்டத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும், யாரும் இவர்களை கேள்வி கேட்டுவிட கூடாது, இவர்கள் செய்யும் தவறுகளை கண்டுக் கொள்ளாதவர்கள் தான் இப்போது இவர்களுக்கு தேவை. ஆகவே சகோதரர்களே! இவர்கள் போடும் இதுபோன்ற சூழ்ச்சி வலைகளில் நம்மில் எவரும் விழுந்துவிட கூடாது என்ற ஒரு நோக்கத்தை தவிர நாங்கள் இதை எழுதுவதற்கு வேறு நோக்கமில்லை. அல்லாஹ்வின் மார்க்கத்தை தூய முறையில் நாம் ஒவ்வொருவரும் நமது ஊர்களில் உள்ள உற்றார், உறவினர்கள், ஊர் மக்களிடம் கொண்டு சேர்ப்போம். சமுதாயத்தில் ஒற்றுமையுடனும் அதேசமயம் மார்க்க விஷயங்களில் எந்தவித சமரசத்திற்கும் இடம் தராமலும் செயல்படுவோம்.

….நம்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன். (அல்மாயிதா: 2)

இப்படிக்கு,
நாச்சியார்கோயில்-திருநரையூர் தவ்ஹீத் சகோதரர்கள் கூட்டமைப்பு, துபை.
050-3118322 / 050-9737002 / 055-3073765

__________________________________________________
Published as per request of M.S.Rahmathullah +971 50 9737002
Email: ibbrahmath (at) gmail (dot) com

21 comments

  1. அஸ்ஸலாமு அலைக்கும்

    முக்கிய அறிவிப்பு என்ற பெயரில் ததஜ என்ற முதலை வாயிலிருந்து கடைசி நேரத்தில் தப்பிய பள்ளிவாசல்களையும் அதன் நிர்வாக டிரஸ்டுகளையும் தங்களின் வழமையான பாணியில் கொச்சைபடுத்த முயன்றதால் மல்லாக்க படுத்துக்கொண்டு தங்கள் மீதே காரி உமிழ்ந்து கொண்டுள்ளனர். அல்லாஹ்வின் ஆலயங்களை குல தெய்வ கோயில்களைப்போல் தனி மனித இயக்கத்தின் வழிபாட்டு மையங்களாக நடத்தி வரும் பள்ளிவாயில் கொள்ளைக் கும்பலை அனைத்துப் புகழுக்கும் சொந்தக்காரனாகிய அல்லாஹ் அவர்களை கொண்டே உண்மைகளை வெளிக் கொண்டு வந்துள்ளான்.

    அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள், அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஜகாத்தை கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறெதற்கும் அஞ்சாதவர்கள்தாம் – இத்தகையவர்கள் தான் நிச்சயமாக நேர் வழி பெற்றவர்களில் ஆவார்கள். 9:18

    அல்லாஹ்வின் மஸ்ஜிதுகள் என்றே ஆணித்தரமாக தன் திருமறையில் குறிப்பிடும் அல்லாஹ் எந்த வசனத்தில் ததஜ தரீக்காவிற்கு மட்டும் தான் பள்ளியை நிர்வகிக்கும் தகுதி இருக்கிறது என்றா குறிப்பிடுகிறான் அல்லது ததஜவின் பெயரால் நிர்வகிப்போர் அனைவருக்கும் இந்த தகுதி உள்ளது என்று சர்ட்டிபிகேட் தர முடியுமா உங்களால்? நிலமும் நிர்வாகமும் டிரஸ்ட் வசம் மற்ற அனைத்து வழிபாட்டு உரிமைகளையும் ததஜ குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பார்க்கட்டும் என்று பெருந்தன்மையோடு அனைத்து தவ்ஹீத் சகோதரர்களும் அனுமதி தந்த பள்ளிகளை ஏற்றுக் கொள்ளாமல் அப்படியே விழுங்குவேன் என அடம்பிடிப்பதேன்? நியாமான கேள்வி கேட்ட அந்த ஊர் தவ்ஹீத் சகோதரர்களுக்கு பதில் என்ற பெயரில் தைய தக்கா என்று உலரிதள்ளி இருப்பதையும், இச்செய்தியை வெளியிட்ட இந்த இனையதலத்தை குடிகாரன் திட்டுவதுபோல் திட்டி தீர்த்திருப்பதையும் பார்த்தால் இவர்கள்மீது வைத்திருந்த கொஞ்சநஞ்ச மரியாதையையும் போய்விடுகிறது.

    மறுப்புகள் எழுதுவதற்காக ஜமாஅத் தொழுகைகளை தியாகம் செய்துவிட்டேன் என கேப்பையில் நெய்வடிவதாக நம்பச் சொல்லுபவரே! சாணுக்கு சாண் முழத்துக்கு முழம் உங்களை இன்னும் நம்புவர்களை தன்னைப்போல் வாய்ச்சவடால் வீரனாக, தில்கி நமாஸ் பேர்வழிகளாக மாற்ற வேண்டும் என்ற நல்ல? நோக்கம் உங்களிடம் மறைந்து கிடந்தால்.. தெரிந்து கொள்ளுங்கள் உங்களால் எல்லோரையும் எல்லா நேரமும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது என்பதைத் தான் கூண்டோடு கலைக்கப்பட்டு உறுப்பினர்கள் அற்றுப்போய்விட்ட நாச்சியார்கோயில் போன்ற கிளைகள் நிரூபிக்கின்றன.

    கடைசியாக ஒரு சின்ன சந்தேகம், பஞ்சாயத்து போர்டு வார்டு மெம்பருக்கு உள்ள அதிகாரம் கூட இல்லாத ததஜ நிர்வாக பதவி! என்ன ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸா? அது எப்புடிண்ணே உங்க வண்டவாளம் தெரிந்து ஒதுங்கும் நேரத்தில் மட்டும் உங்க கூட இருக்கும் போது வராத பதவி ஆசை அவர்களுக்கு வந்துவிடுகிறது!? பதவியில் இல்லாமலே ஆட்டிப்படைக்கலாம், வாய்க்கு வந்ததை அள்ளிவிடலாம் என நீங்களே அனைவருக்கும் வழிகாட்டி இருக்கும் போது உணர்ந்து ஒதுங்குபவர்களுக்கு மட்டும் அற்பப்பதவிகள் ஒரு கேடா? இதே ஜோக்கிற்கு மக்கள் எத்தனை முறை தான் சிரிப்பார்கள்.

    சித்தீக்
    தொண்டி

  2. அல்லாஹ்வின் திருப்பெயரால்…

    ததஜவில் இருக்கும் சகோதரர்கள் மர்கஸ் அமைப்பதற்காகவோ, அல்லது பள்ளிவாசல் எழுப்புவதற்காகவோ சொத்துவாங்கினால் அதை தனிநபர் பெயரிலோ, அல்லது ட்ரஸ்ட் அமைத்தோ பதிவு செய்யாமல், அரண்மனைக்காரன் தெருவில் இலக்கம் 30 ஐ தலைமையகமாக கொண்டு இயங்கும் ததஜவின் இன்னவூர் கிளை/மாவட்டத்திற்காக தற்போதைய நிர்வாகிகளான இன்னாருக்கு என்றுதான் பத்திரம் பதிவு செய்யப்படவேண்டும் என்பது ததஜவின் விதியாகும். இது இன்றைய நிர்வாகிகளால் ஏற்படுத்தப்பட்டதல்ல. மாறாக சாட்சாத் பீஜே என்பவர் மாநிலத்தலைவராக இருந்த காலத்திலேயே உள்ள விதியாகும். தன்னுடைய காலத்தில் தன்னால் கொண்டுவரப்பட்ட விதியை தானே மீறினார் பீஜே. ஆம்! ஜமாத்திற்காக உள்ள சொத்துக்களை தனிநபர் பெயரில் பதிவு செய்யக்கூடாது என்ற ததஜவின் விதிக்கு மாற்றமாக, மதுரையில் ஒரு சகோதரர் ஜமாத்திற்காக தந்த இடத்தை தன்பெயரில் பத்திரம் முடித்துக்கொண்டார். ஜமாத்திற்கு சேர வேண்டிய சொத்தை தனி நபர் பெயரில் எப்படி பத்திரம் முடிக்கலாம் என்று விமர்சனங்கள் எழுந்தபோது,

    அந்த சொத்தை வழங்கிய நபர் ஜமாஅத் எழுதித்தர மறுத்து என்பெயரில் தான் எழுதித் தருவேன் என்று கூறியதாகவும், நான் என்பெயரில் எழுதித்தருமாறு அவரிடம் கேட்கவில்லை என்றும் பீஜே கூறுகிறார். மேலும் அந்த பத்திரத்தை புதிய நிர்வாகிகளிடம் ஒப்படைத்துவிட்டு எப்போது வேண்டுமானாலும் மாற்றித்தர தாயார் என்று கூறியதாகவும் பீஜே கூறியதோடு,

    ஒரு பெயரில் இருந்து இன்னொரு பெயருக்கு மாற்றுவதற்கு பத்திரச் செலவு ஏற்படும். இதுவே தாமதத்திற்கு காரணம்.
    ஃபித்னாக்களை கிளப்புவதற்காக நிறைய பணம் செலவிட்டுக் கொண்டு இருக்கின்றவர்கள் பத்திரச் செலவை ஒப்புக் கொண்டால் நாளையே அந்த மதுரை சொத்தும் மாற்றப்பட்டு விடும் இன்ஷா அல்லாஹ் என்கிறார்.

    இதுபற்றி நாம் எழுப்பும் கேள்விகள்;

    ஜமாத்திற்காக தனது சொத்தை தரும் ஒருவர் அந்த ஜமாஅத் மீது நம்பிக்கை கொள்ளாமல் ஒரு தனிநபர் மீது நம்பிக்கை கொள்வது ‘தஃலீத்’ இல்லையா..?

    ஜமாஅத் வளர்சிக்காக தரும் சொத்தை, ஆலமரம் போன்ற ஜமாத்தை நம்பாமல் தனிமனிதனாகிய என்னை நம்பி தரும் அந்த சொத்து தேவையில்லை என்று பீஜே கூறாதது ஏன்..?

    என் பெயரில் எழுதி தருமாறு நான் கேட்கவில்லை என்று கூறும் பீஜே, உண்மையில் தனக்கு உடன்பாடு இல்லையெனில் பத்திரப்பதிவை புறக்கனிக்காதது ஏன்..?

    இன்று பத்திர பதிவு செலவு பற்றி ‘நீலிக்கண்ணீர்’ வடிக்கும் பீஜே, அன்றே ஜமாஅத் பெயரில் எழுதித்தர சம்மந்தப்பட்டவரை வற்புறுத்தாது ஏன்..?

    ஜமாஅத் மீது நம்பிக்கையில்லாமல் பீஜேயை மட்டும் நம்பி அவர் பெயரில் சம்மந்தப்பட்டவர் எழுத்தந்த சொத்தை, எந்த ஜமாத்தை நம்பவில்லையோ அந்த ஜமாத்திற்கே மாற்றித்தருவது சம்மந்தப்படவருக்கு இழைக்கும் நம்பிக்கை துரோகமா..? இல்லையா?

    பத்திரம் மாற்றும் பொறுப்பு என்னை சேர்ந்ததல்ல. ஏனெனில் நான் இப்போது நிர்வாகி அல்ல என்று ஜகா வாங்கும் பீஜே, தான் ஒரு சாதாரண உறுப்பினர் என்று அறிவிக்க தயாரா..? மாநில நிர்வாகிகளையே ‘மேலாண்மை’ செய்யும் அதிகாரம் உடைய மேலாண்மை குழு உறுப்பினராக இருக்கும் பீஜே, நிர்வாக மாற்றம் நடந்து ஓராண்டு கடந்த பின்னும் இந்த சொத்து பற்றி விமர்சனம் எழும் வரையிலும், ஜமாஅத் பெயரில் மாற்ற முயர்ச்சிக்காதது ஏன்..? தனது ‘மேலாண்மை’யை பயன்படுத்தி நிர்வாகத்திற்கு உத்தரவிடாதது ஏன்..?

    பதினொரு நபர் கொண்ட டிரஸ்ட் நம்பகத்தன்மையானது அல்ல என்று கூறும் பீஜே, அதைவிட நம்பக தன்மையற்ற தனிநபர் மீது [அதாவது தன்மீது] ஜமாஅத் சொத்தை எழுதிக்கொண்டது அறிவுப்பூர்வமானதா..?

    டிரஸ்ட் தொடர்பாக யாரும் கேள்வி எழுப்ப முடியாது. எனவே அமைப்பின் பெயரில் வாங்குவதுதான் பாதுகாப்பானது என்று கூறும் பீஜே, தான் ஆயுட்கால ‘அறங்காவலர்’ ஆக இருக்கும் முஸ்லீம் டிரஸ்ட் மற்றும் முஸ்லீம் மீடியா டிரஸ்ட் பற்றி மட்டும் வரவு செலவை மக்கள் மன்றத்திலா வைக்கிறார்..? இந்த டிரஸ்டுகள் மீது இருக்கும் சொத்துக்கள் என்ன..? அதன்மூலம் கிடைக்கும் வருவாய் என்ன..? அந்த வருவாய் எதற்காக செலவிடப்படுகிறது..? என்றெல்லாம் பீஜே என்றாவது மக்கள் மன்றத்தில் விளக்கியதுண்டா..? அல்லது அவரது ஆதரவாளர்கள் தான் இதுபற்றி கேட்டதுண்டா..?

    தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் செயற்குழுவோ பொதுக் குழுவோ மேற்கண்ட இரண்டு ட்ரஸ்ட்களையும் மற்றவர்களிடம் ஒப்படைத்து விட வேண்டும் முடிவு செய்தால் அடுத்த நிமிடமே தவ்ஹீத் சகோதரர்கள் அதற்குக் கட்டுப்பட்டு அதில் இருந்து விலகி விடுவார்கள் என்று கூறும் பீஜே, மேற்கண்ட இரு டிரஸ்ட்களுக்கும் ததஜ செயற்குழு-பொதுக்குழுவுக்கும் என்ன சம்மந்தம் என்று விளக்கத்தயாரா.? மேற்கண்ட இரு டிரஸ்ட்களும் ததஜவுக்காக உருவாக்கப்பட்டது என்று கூறத்தயாரா..? குறைந்தபட்சம் தவ்ஹீத்வாதிகளுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது என்று கூறத்தயாரா..?

    மேலும், ததஜ செயற்குழுவோ பொதுக் குழுவோ மேற்கண்ட இரண்டு ட்ரஸ்ட்களையும் மற்றவர்களிடம் ஒப்படைத்து விட வேண்டும் முடிவு செய்தால் அடுத்த நிமிடமே தவ்ஹீத் சகோதரர்கள் அதற்குக் கட்டுப்பட்டு அதில் இருந்து விலகி விடுவார்கள். என்று கூறுகிறார் பீஜே, அப்படியாயின் மேற்கண்ட இரு டிரஸ்டுகளில் ஏராளமான தவ்ஹீத்வாதிகள் டிரஸ்டியாக இருக்கிறார்கள் போலும். மேலும் அடுத்தவரிடம் அந்த டிரஸ்டை ஒப்படைக்க ததஜ செயற்குழு- பொதுக்குழு அனுமதிக்கவேண்டும் என்று கூறும் பீஜே, அந்த டிரஸ்டுகளின் வரவு-செலவுகளை எந்த செயற்குழுவில்-எந்த பொதுக்குழுவில் தவ்ஹீத் சகோதரர்கள் பார்வைக்கு வைத்தார்..?

    எங்கள் அமைப்பின் செயற்குழு ஒப்புதலுடன் ஒரு முடிவு எடுக்கப்பட்டிருக்கும் போது அமைப்பிலிருந்து நீக்கப்பட்டவர்கள் அதை மாற்றுமாறு கேட்க உரிமை இல்லை என்று கூறும் பீஜே, உமர் பள்ளி டிரஸ்டில் மட்டும் மூக்கை நுழைப்பது ஏன்..?

    இவ்வாறாக தனக்கு என்றால் ததஜவின் சட்டத்தை கண்டுகொள்ளமாட்டார். அடுத்தவர் விஷயம் என்றால் அங்கே ததஜ சட்டம் பாயும் இதுதான் பீஜே.

    ஆனால் வறுமையில் வாடியபோதும் தனது பதவியை பயன்படுத்தி பொது சொத்தை நபி[ஸல்] அவர்கள் தன்வயப்படுத்தியது இல்லை. வரும் பைத்துல் மாலுக்கு தானமாக தந்த சொத்துக்கள் எதையும் தன் பெயருக்கு பட்டா போட்டுக்கொண்டதில்லை. மாறாக இறக்கும்போது தனக்கே உரிய சொத்தை கூட வாரிசுகளுக்கு எந்த உரிமையும் இல்லை என்று வஸியத் செய்தார்கள் வள்ளல் நபி[ஸல்] அவர்கள். அதுமட்டுமன்றி பொது சொத்திலிருந்து அவர்கள் காட்டிய பேணுதலுக்கு ஒரு சான்று;

    அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். அறுவடையின் போதே பேரீச்சம் பழத்தின் ஸகாத், நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்படும். இவ்வாறு ஒவ்வொருவரும் தத்தம் பேரீச்சம் பழங்களைக் கொண்டு வந்ததும் அது பெரும் குவியலாக மாறிவிடும். (சிறுவர்களான) ஹஸன்(ரலி) ஹுசைன்(ரலி) இருவரும் அக்குவியலருகே விளையாடுவார்கள். ஒருநாள் அவ்விருவரில் ஒருவர் ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்து தம் வாயில் போட்டார். இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் உடனே அதை வெளியே எடுத்துவிட்டு ‘முஹம்மதின் குடும்பத்தினர் ஸகாத்தின் பொருளை உண்ணக் கூடாது என்பதை நீ அறியவில்லையா?’ எனக் கேட்டார்கள்.

    ஆதாரம் புஹாரி எண் 1485 ]

    ஒரு பேரிச்சம் பழத்தை கூட தனது குடும்பத்தினர் தொட்டுவிட கூடாது என்று கவனம் செலுத்திய நபி[ஸல்] அவர்கள் எங்கே..? ஒரு ஜமாத்திற்கு சேரவேண்டியதை தன் பெயரில் எழுதிக்கொண்டு அதற்கு ஆயிரம் வியாக்கியானம் கூறும் இவர்கள் எங்கே..?

    ஹூம்! இவர் என்ன சொன்னாலும் அதை வழிமொழியும் ஒரு கூட்டம் இருக்கும் போது அவர் காட்டிலோ அடைமழைதான்.

  3. அபூபக்கர் தம்பி

    “ஒரு பெயரில் இருந்து இன்னொரு பெயருக்கு மாற்றுவதற்கு பத்திரச் செலவு ஏற்படும். இதுவே தாமதத்திற்கு காரணம்.

    ஃபித்னாக்களை கிளப்புவதற்காக நிறைய பணம் செலவிட்டுக் கொண்டு இருக்கின்றவர்கள் பத்திரச் செலவை ஒப்புக் கொண்டால் நாளையே அந்த மதுரை சொத்தும் மாற்றப்பட்டு விடும் இன்ஷா அல்லாஹ் என்கிறார்”

    மேலே உள்ள விஷயத்தை படித்தப் பொழுது நம் ஊர்களில் பேசப்படும் பழமொழியான “ஊர் கோழியை அறுத்து உம்மா பெயரிலே ஃபாத்திஹா ஓதவா” என வேடிக்கையாக சொல்வதுதான் நினைவுக்கு வருகிறது.

    இவருடைய பெயரில் உள்ள சொத்தை இவரது ஆளுமையில் இருக்கும் அமைப்பிற்கு எழுதிக் கொடுக்க நீங்கள் பணம் கொடுக்க வேண்டுமாம்!?

    கோடான கோடிகளை செலவழித்து மாநாடு நடத்துவார்களாம், ஆனால் ஒரு சில ஆயிரத்தை செலவழித்து பத்திரத்தை ஒரு தனிமனிதனிடமிருந்து ஒரு ஜமாஅத்திற்கு மாற்ற மாட்டார்களாம்.

    வளைகுடா முழுவதும் வியாபித்து இருக்குகின்றோம் என மார்தட்டும் அமைப்பிடம் பத்திரப்பதிவு செலவிற்கு காசு இல்லை என்பது வேடிக்கையானது.

    இஸ்லாம்கல்வி டாட் காம் என்ற இணையதளத்தை மிகச் சிறப்புடன் நடத்தும் சகோதரர்களே! இவருடைய மோசமான விமர்சனங்களை கண்டு கொள்ளாதீர்கள். தனி மனிதனை தரம் தாழ்ந்து தாக்குவதில் இவருக்கு நிகர் இவரே என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. அல்லாஹ்விற்காக சேவையாற்றும் தங்களது இணையதளம் இன்னும் வீரியத்துடன் செயலாற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

    அன்புடன் தாங்களின் சகோதரன்
    அபூபக்கர் தம்பி

  4. நிர்வாகி

    //அல்லாஹ்விற்காக சேவையாற்றும் தங்களது இணையதளம் இன்னும் வீரியத்துடன் செயலாற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.//

    ஜஸாக்கல்லாஹு கைரன்

  5. அல்லாஹ்வின் திருப்பெயரால்

    ஏகத்துவத்திற்கு எதிரான எதிர்ப்புகள் எல்லாம் 90 சதம் தமிழக ஊர்களில் காணமல்போய், பள்ளிகளில் தொழுவதை தடுப்பதற்கு ஆள் இல்லாமல் போய்விட்ட குறையை பூர்த்தி செய்ய நவீன அவதாரம் எடுத்துள்ள ததஜ ஷெய்கு தன் முரீதுகளில் பெரும்பாலோனோரை ஏற்கனவே ஊரின் பொதுப்பள்ளிகளில் தொழுவதிலிருந்தும் பல்வேறு பொருந்தாக் காரணங்களை கூறி தடுத்து வைத்துள்ளார். இது ஒருபக்கம் இருந்தாலும் இப்போது தவ்ஹீதின் பெயரால் கட்டப்படும் பள்ளிகளில் தொழுவதிலிருந்தும் தடுக்க தயாராகிவிட்டார்கள். எங்கள் ஊர் (கும்பகோணம்) மேலக்காவேரியில் டிஎன்டிஜே இயக்கத்தில் பேச்சாலராக இருந்த அஸ்கர் என்ற சகோதரர் தனது சொந்த பணத்தில் கடந்தமாதம் ஒரு பள்ளியை கட்டினார். டிஎன்டிஜே மானில நிர்வாகிகள் இந்த பள்ளியையும் விட்டு வைக்காமல் அவரிடம் கேட்டுள்ளனர் அவர் எழுதித்தர இயலாது நிர்வகித்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார். இந்த ஒரே காரணத்திற்காக, இந்த பள்ளி தவ்ஹீத் பள்ளியாக இருந்தும் டிஎன்டிஜேவினர் பள்ளி அருகிலேயே தனியாக ஒரு வீட்டில் தொழுகை நடத்திவருகின்றனர். சுன்னத்துல்ஜமாத் பள்ளி, இணைவைக்கும் இமாம் என்ற காரணங்கள் மலையேறி, இன்று டிஎன்டிஜேக்கு சொந்தமான பள்ளியில்தான் தொழுவோம் என்ற நிலைக்கு போய்விட்டார்களே! இவர்களின் இந்த நிலை எந்த குர்ஆன் சுன்னாவிற்கு உட்பட்டதோ தெரியவில்லை. தரீக்காவைவிட மதகபைவிட கீழ்நிலைக்கு சென்றுவிட்டார்கள். இவர்கள்தான் உலகம் முழுவதுக்கும் தவ்ஹீதை எத்திவைப்பவர்களாம்???

  6. A.S.Rasool mohideen

    முஃமின்களே!
    நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம்.
    நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) – பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன்: 5:8)

  7. எல்லாம் அமைப்புகளும் தவறு செய்யும் மனிதர்களால் நடத்தப்படுவதால் தவறுகளுக்கு உள்ளாகுவது உண்டுதான் அதில் ததஜ மட்டும் விதிவிலக்காகாது. ஆனால் அந்த தவறுகள் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் சுட்டிக்காட்டப்படும் பொழுது அவைகளை ஒப்புக் கொண்டு திருத்திக் கொள்ளும்.//

    சரியான கருத்து. இது தான் அனைத்து இயக்கங்கம் பின்பற்ற வேண்டிய விஷயமும் கூட.

    இயக்கங்களும் அமைப்புகளும் இஸ்லாத்திற்காகவே. அவை தறிகெட்டுப் போகாமல் இருக்க வேண்டுமானால், அவற்றின் செயல்பாடுகள் இஸ்லாத்தால் உரசிப்பார்க்கப்பட வேண்டும். அவ்வாறு உரசப்பட்டு தவறுகள் சுட்டிக்காட்டப்படும் போது அவற்றை உடனடியாக ஏற்றுக் கொண்டுத் திருத்தி வந்தால், அத்தகைய அமைப்புகளும் இயக்கங்களும் அக்காலம் வரை இஸ்லாத்திற்காகவே செயல்படுவதாக காணப்படும். இந்த வரம்பைப் பேணாமல் மீறப்படும் போதே, “இயக்கத்திற்காக இஸ்லாம்” என்ற நிலைக்கு அந்த அமைப்பு தள்ளப்பட்டதாக எடுத்துக் கொள்ளப்படும். இன்று இந்த நிலைக்குத் ததஜ மிகச் சிறந்த உதாரணமாக உள்ளது.

    இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக, சமுதாய சேவைக்காக, தஃவத்துக்காக, ஏகத்துவ வளர்ச்சிக்காக என ஆரம்பிக்கப்பட்டத் ததஜ, இன்று தனிமனித தக்லீதில் அளவுகடந்த நிலைக்குத் தள்ளப்பட்ட நிலையில் உள்ளது. அந்தத் தனி மனிதர் கூறும் செய்யும் காரியங்களை இஸ்லாத்தோடு உரசிப்பார்த்துத் தங்களின் தவறை அது திருத்திக் கொள்ள முன்வருவது வரை அது விமர்சிக்கப்படவே செய்யும்.

    தங்களின் மீது விமர்சனம் வரும் போது, அதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் விமர்சனம் செய்பவரையே மோசமான, கண்ணியக்குறைவான சொற்களால் வசைபாடக் கிளம்புவது ஒன்றே அவர்களின் மீது தவறு இருப்பதற்கான முதல் சான்றாகும். இந்த வரம்பில் இன்று பிஜே முதலிடத்தில் இருக்கின்றார்.

    தன்னை விமர்சனம் செய்பவர்களை “சாக்கடை பன்றிகள்”, “குப்பைகள்”, “வாந்தி”, “தடம்புரண்டவர்கள்”, “யூத கைக்கூலிகள்” என இஷ்டத்திற்கு அநாகரீக பட்டங்களை அள்ளி விடுவதும் தொடர்ந்து தங்கள் செய்கைகளை நியாயப்படுத்துவதிலேயுமே அவர் குறியாக இருக்கிறார். இது ஒரு மார்க்க அறிஞருக்கு, அதுவும் அழைப்புப் பணியில் உள்ள ஒரு மார்க்க அறிஞருக்கு அழகல்ல.

    “அழைப்பாளனின் பண்புகள்” எப்படி இருக்க வேண்டும் என்று முன்னர் அவர் பேசியும் எழுதியும் உள்ளவற்றிற்கு அவரே முரணாக இருக்கும் போது, அப்படிப்பட்டவரின் தலைமையில் அவர் சொல்வதையே வேத வாக்காக எடுத்து செயல்படும் ததஜவை என்னவென்பது?

  8. பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

    அல்லாஹ் ஒருவனுக்கு மாத்திரமே எல்லாப் புகழும்!

    ஏதாவது ஒரு நன்மை உங்களுக்கு ஏற்பட்டால், அது அவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கிறது. உங்களுக்கு ஏதாவது தீமை ஏற்பட்டால், அதற்காக அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். நீங்கள் பொறுமையுடனும், பயபக்தியுடனுமிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை (எல்லாம்) சூழ்ந்து அறிகிறவன். (ஆல இம்ரான்:3:120)

    …அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட (துன்பத்)திற்காக அவர்கள் தளர்ந்துவிடவில்லை. பலவீனப்படவும் இல்லை. பணிந்துவிடவும் இல்லை. சகித்துக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான். (ஆல இம்ரான்:146)

    கண்ணியத்திற்குரிய இஸ்லாம்கல்வி.காம் இணையதளத்தாருக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

    நமது கொள்கை சகோதரர்கள் விழிப்படைய செய்ய வேண்டும் என்ற நோக்கத்தை மனதில் கொண்டு நான் தங்களிடம் எங்கள் ஊர் உமர் பள்ளிவாசல் குறித்த கட்டுரையை வெளியிட வேண்டியதை ஏற்று தங்களுடைய இணையதளத்தில் வெளியிட்டமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அல்ஹம்துலில்லாஹ்!

    மக்களுக்காக நாம் வேதத்தில் தெளிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய தெளிவான சான்றுகளையும், நேர்வழியையும் மறைப்பவர்களை அல்லாஹ்வும் சபிக்கறான். சபிப்ப(தற்குத் தகுதியுடைய)வர்களும் சபிக்கின்றனர். மன்னிப்புக் கேட்டு (தங்களைத்) திருத்திக் கொண்டு, (மறைத்தவற்றை) தெளிவுபடுத்தியோரைத் தவிர, அவர்களை நான் மன்னிப்பேன். நான் மன்னிப்பை ஏற்பவன்: நிகரற்ற அன்புடையோன். (அல் பகரா:159,160)

    பல ஆயிரக்கணக்கான கொள்கை சகோதரர்களுக்கு இந்த உண்மை தகவல் சென்றடைந்துள்ளது என்பதை எங்களுக்கு வரும் தொலைபேசிகள் உறுதிப்படுத்துகிறது. அல்ஹம்துலில்லாஹ். அதோடு மட்டுமல்லாமல் தரம் தாழ்நத விமர்சனங்களுடன் டிரஸ்ட் குறித்து டி.என்.டி.ஜெ மற்றும் அதன் நிரந்தர நிழல் தலைவருடைய உடனடி விளக்க கட்டுரை இன்னும் இவர்களை ஒட்டியுள்ள ஏனைய நடுநிலை சகோதரர்களும் சத்தியத்தை விரும்பும் சகோதரர்களும் விலகுவதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையில்லை.

    மேலும் தங்களை நாகரிகமற்ற முறையில் மனநோயாளி போல் உளரி இருப்பது பற்றி கவலைக்கொள்ள வேண்டாம். நாம் அறிந்த செய்திகளை எந்தவிதத்திலும் மறைக்காமல் மக்களிடத்தில் கொண்டுபோய் சேர்க்க வேண்டியது ஒவ்வொரு முஃமினின் கடமையாகும். அதன்படி தங்களுடைய இணையத்தளம் வாயிலாக தாங்கள் செய்து வரும் இந்த இறைப்பணி இன்னும் சிறப்பான முறையில் தொடர வல்ல நாயனிடம் பிரார்த்திக்கிறேன்.

    ஸிஹ்ர் சம்மந்தமாக இஸ்மாயில் ஸலஃபி அவர்களின் கட்டுரையைப் படித்துத்தான், குர்ஆனும் நபி(ஸல்) அவர்களும் ஆனித்தனமாக சொல்கின்ற விஷயத்தை இவர் மனமுரன்டாக மறுக்கிறார் என்பதை விளங்கி, என்னைப்போன்ற பலர் இவர்களின் கட்சியிலிருந்து விலகி சத்தியத்தை விளங்குவதற்கு தங்களின் இணையதளம் மூலமாக அல்லாஹ் எங்களுக்கு நலவை நாடினான் என்பதை சுட்டிகாட்ட விறும்புகிறேன் அல்ஹம்துலில்லாஹ்.

    கொள்கை சகோதரர்கள் மார்க்க விஷயங்களில் நமது சமுதாயத்தில் நிலவி வருகிற கருத்துபரிமாற்றங்களை ஆய்ந்து அறிவதற்கு தகுந்தார்போல் தங்களுடைய இணையத்தளத்தில் வெளியிடக் கூடிய ஆக்கங்கள் அமைந்துள்ளன. மேலும் தமிழ் சமூகத்தில் ஏகத்துவத்துக்கு ஏகபோக குத்தகையாளர்களைவிட, சிறந்த பண்புள்ள பல அறிஞர் பெருமக்கள் செயலாற்றி வருகிறது உலகுக்கு தெரியவந்துள்ளது. அந்த அறிஞர்கள் மேற்படியார் போடும் பல வேசங்களை அக்குவேறு ஆணி வேறாக சமூகத்திற்கு அடையாளப்படுத்தி வருவது பல இணையத்தளத்தில் பதிவுகளாக உள்ளன.

    ‘நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நாளைக்கு என தாம் செய்த வினையை ஒவ்வொருவரும் கவனிகட்டும். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல் ஹஷ;ர்:18)

    மேலே உள்ள திருமறை வசனங்களுக்கு இனங்க துபையில் தவ்ஹீத் இல்லம் செய்யும் பணிகள்:

    அல்லாஹ் இவ்வசனத்தில் குறிப்பிடுவதற்கு இனங்க அல்லாஹ்வின் பெரும் கிருபையால், எங்கள் தவ்ஹீத் இல்லம் சார்பாக அல்லாஹ்வுடைய வார்த்தைகள் மற்றும் நபி(ஸல்) அவர்களுடைய பொன் மொழிகளை மாத்திரம் அச்சிட்டு முஸ்லிம்களுக்கும், முஸ்லிமல்லாதவர்களுக்கும் பிரச்சாரம் செய்கிறோம், அதனையே மின்னஞ்சல் மூலமும் பிரச்சாரம் செய்கிறோம், வாரம் 150 – 200 பிரதிகள் மார்க்க ஆலிம்கள் ஆற்றிய உரைகள் அடங்கிய குறுந்தகடுகளை வெள்ளி தோறும் மக்களுக்கு இலவசமாக வினியோகித்து வருகிறோம், இதுபோன்று குர்ஆன் வகுப்புகள், அரபி பாடம் பயிலும் வகுப்புகள், மார்க்க சொற்பொழிவுகள் போன்ற மார்க்க பணிகளை இயன்றவரையில் நல்ல முறையில் அழைப்பு பணிகளாக செய்து வருகிறோம் அல்ஹம்துலில்லாஹ்.

    அவருடைய இணையத்தில் வெளியிட்டுள்ள விளக்கத்தில் இவர் எவ்வளவு பெரிய பொய்யர், என்பதை மறுபடியும் நிரூபித்துள்ளார். அதாவது உணர்வு உரிமை 14: குரல் 9, 8-ம் பக்கத்தில் முக்கிய அறிவிப்பு என்று வெளியிட்ட செய்தி உண்மையா? அல்லது துபை ஃபித்னா அறையில் தீட்டப்பட்ட இந்த திட்டம் தெரிந்து தான் தவ்ஹீத் ஜமாஅத் இது குறித்து நடவடிக்கை எடுத்தது என்பது உண்மையா? மேலும் துபையில் ஃபித்னா அறையை(தவ்ஹீத் இல்லத்தை) கூத்தாநல்லூர் ஜின்னா போன்றவர்கள் சரியாக மோப்பம் பிடித்துச் சொன்னது வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கிறது என்று கூறுகிறார். சகோதரரே! தவ்ஹீத் இல்லத்தில் இவர் கூறுவது போல் எந்த திட்டமும் தீட்ட வேண்டிய அவசியம் இல்லை. அண்ணன் என்றும் பாராமல் நீதிக்காகவும் சத்தியத்திற்காகவும் குரல்கொடுப்பதென்பது திட்டம் தீட்டுதலாம்? மேற்படி ஜின்னா என்பவர் குவைத்தில் வேலை செய்து கொண்டு துபையில் உள்ள எங்கள் தவ்ஹீத் இல்லத்தை எப்படி மோப்பம் பிடித்தார் என்று தெரியவில்லை. இந்த இரண்டு செய்திகளையும் கூர்ந்து கவணித்தால், அல்லாஹ்வுடைய அச்சம் துளிகூட இல்லை என்பதும், இவர் எவ்வளவு பெரிய பொய்யையும் கூற தயங்கமாட்டார் என்பதும் தெரிகிறது. அல்லாஹ் நேர்வழிகாட்டட்டுமாக. எனவே தங்களுடைய இணையத்தளம் வாயிலாக தாங்கள் செய்து வரும் இந்த இறைப்பணி இன்னும் சிறப்பான முறையில் தொடர வல்ல ரஹ்மானிடம் மீண்டும் பிரார்த்திக்கிறேன்.

    ‘நேர்வழியை அடைந்த சிலர் நேர்வழி பெற்றப் பிறகு, வீண் தர்க்கத்தை செய்தே தவிர வழிகெடுவதில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு அல்குர்ஆனில் 43:58 வது வசனத்தை ஓதிக்காட்டினார்கள். (அறிவிப்பவர்: அபூஉமாமா(ரலி) நூல்: திர்மிதீ, இப்னுமாஜா)

    துபையிலிருந்து,
    M.S. ரஹ்மத்துல்லாஹ்

  9. அல்லாஹ்வின் திருப்பெயரால்

    உமர் பள்ளிவாசல் விஷயமாக அந்த ஊர் சகோதரர்கள் சிலர் இணையதளத்தில் எழுதியிருந்ததை நானும் படித்தேன் ஆனால் மறுப்புத் திலகம் எல்லாவற்றையும் வழக்கம்போல கண்டுகொள்ளலாமல் ஒரேயொரு பதிலை மட்டும் சொல்ல முயற்சி பண்ணியதிலேயே இவ்வளவு சந்தேகம்ஸ் வருது.

    உமர் பள்ளிவாசல் சம்பந்தமா எழுதியிருந்த அதுக்குத் தானே பதில் சொல்லனும் அதைவிட்டுவிட்டு பலவேசம், தசவதாரம் என்று திசை திருப்ப வேண்டிய அவசியம் என்ன?

    எவன் எதை எழுதினாலும் வெளியிட்டு கேவலம் அடைய வேண்டுமான்னு தாக்குதலை ஆரம்பித்த ஆலிம்சா எவன் எதை சொன்னாலும் நம்புவேன் என்று கூத்தாநல்லூர் மோப்ப கேஸ நம்பி எழுதியிருக்கிறார் அப்படின்னா கேவலத்து மேல கேவலம் யாருக்கு?

    உமர் பள்ளி பாக்கர் இயக்கத்துக்கு கிளையாம் எவ்வளவு பெரிய பொய், நாச்சியார் கோயில் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலிருந்தே சுத்தமா மக்களாலும் உறுப்பினர்களாலும் தூக்கியெறிபட்டுவிட்ட ததஜவுக்கு பதிலாக தான் தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாகமும் இதஜ கிளைகளும் போனஸா அமைக்கப்பட்டிருக்கு. பள்ளி இன்னமும் அதே டிரஸ்டிடம் தான் பத்திரமா இருக்கு அதுக்கும் இதஜவுக்கும் நிர்வாகரீதியான சம்பந்தமில்லை என்று எல்லோருக்கும் தெரியும் போது அண்ணாத்தே மட்டும் அத்வானியின் அம்னீஸியா லிஸ்டில் இடம் பிடிக்க பார்க்கிறார்?

    பித்னா அறை என்ற பெயர் உங்கள் துபை கிளைக்கு தான் பொருந்தும் ஏனென்றால் உங்களுடைய ஃபித்னாக்களை பக்தியோட பரப்புறது உங்கள் ஆசியோடு மேட்ச் பிக்ஸிங் மூலமாக நிர்வாகத்துக்கு கொண்டுவரப்பட்ட துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆட்கள் தான்.

    ஒரு கதை சொல்வாங்க நம்ம கிராமங்களில், தன் தலையினுள் மலம் சுமக்கிற இரால், மீனை பார்த்து கேட்டதாம் என்ன உன் மேல நாறுது என்று அதேமாதிரி இன்னும் துணிந்து சொல்கிறார் பாலியலாம், ஊழலாம், கேவலமாம்.

    குற்றம் சொல்லிவிட்டு இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் தன் கட்சி ஆட்கள் முன்பாக கூட நிருபிக்க முடியாமல், வாரிய.. வாரிய.. பேசிப் பார்ப்போம்னு சவடால் அடிச்சிக்கிட்டு இருக்கிறது செட்டப் செல்லப்பாவுக்கு கேவலமில்லையாம், அதேமாதிரி டீச்சரோட மாநாட்டு செலவு கணக்கை இவர் இஷ்டத்துக்கு எழுதி கொடுத்ததும் எலக்சனுக்கு எலக்சன் தனிப்பட்ட முறையில் தன் மகனை அனுப்பி ஜெகவீரபாண்டியன் மாதிரி அரசியல் புரோக்கர்கள் மூலம் முக்கிய கட்சிகளிடம் பெட்டிகள் வாங்கியதும் ஊழல் இல்லையாம். கணக்கு குடுத்தேன்னு சும்மா உதாறெல்லாம் உடப்புடாது வாங்கும் போது உங்களோட கட்சியிடம் முன்அனுமதி வாங்கினீர்களா, கணக்கு கொடுத்தீர்களா? சும்மகாச்சிக்குமாவது தலைமை நிலைய கைத்தடிகளிடம் வாங்கப்போறதுக்கு முன்கூட்டியே ஒப்புதலாவது வாங்குனீர்களா? நாளபின்னைக்கு பிரச்சனை வந்துடக்கூடாதுன்னு முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாக எலக்சனெல்லாம் முடிந்த பிறகு நீங்களாக எழுதிக் கொடுத்த, கழுதைக்கு தவிர வேறு யாருக்கும் பிரயோசனப்படாத இந்த கணக்கு பேப்பரை பத்திரமா வச்சிருக்கிறாங்க உங்க எடுப்பார் கை பிள்ளைகள். வாங்கிய பணத்தை செலவழித்து விட்டேன் என்று கணக்கை மட்டும் தருகிறீரே பணத்தை யாரை கேட்டு யாரை சாட்சி வைத்துக்கொண்டு எவ்வளவு வாங்குனீர் என எந்த நிர்வாகியாவது கேட்டானா? இல்லை அப்படி கேட்ட எவனையாவது உம்முடைய கட்சியில் இருக்கத் தான் விடுவீர்களா? கேட்டிருந்தால் பாக்கருக்கு ஏற்பட்ட கதி தான் நமக்கும் என்று அவர்களுக்கு தெரியாத என்ன?

    துபை ஃபித்னா அறையை குவைத்திலிருக்கிற கூத்தாநல்லூர் ஜின்னா மோப்பம் பிடித்தாராம் இடஒதுக்கீடே தேவைப்படாத இந்த அபார மோப்ப சக்தி ஐட்டத்தை போலிஸ் டிப்பார்ட்டுமென்டில் சேர்த்துவிட்ட நாட்டுக்கு நன்மை குறைந்தபட்சம் உங்க தலைமை நிலைய வாசலிலாவது கட்டிப்போடுங்கள் அதோடு திறமை வீணாகிவிடப்போகிறது.

    ஐயா சாமி உங்களால பதில் சொல்ல முடியாம வக்கத்துப்போன அவங்க ஆசாமிங்களா?

    இயக்கம் டிரஸ்ட் சொத்துன்னு தூக்கம் வருகிற அளவுக்கு ஜ…வ்…வா… எழுதியிருந்தாலும் அதில் நீங்க சொல்லவருகிறது என்ன? இயக்கமா இருந்தாலும் திருட முடியும் டிரஸ்டா இருந்தாலும் திருடமுடியும் கொள்கையில ரெண்டு பேருமே குப்புற அடிக்கலாம் நோ கேரன்டின்னு சொல்றீங்க, அதாவது பிக்பாக்கெட் திருடன் கூடாது கொள்ளையர்கள்னா ஓகேன்னு சொல்ல வர்றிங்க அதானே? ஏற்கனவே உங்களிடம் கொள்கை குழப்பம் வந்துவிட்டதை மறைமுகமா சொல்றீங்க அதானே?

    உண்மையில் குர்ஆன் ஹதீஸை தெளிவாக ஆரம்பத்துல மக்களுக்கு எடுத்துச் சொன்ன நீங்களே இன்னைக்கு இலங்கை உமரலியின் ரெஞ்சுக்கு வரம்புமீறி போய்கொண்டு இருக்கும் போது ததஜ ஆலிம்சாக்கள் எதிர்காலத்துல தடுத்து நிறுத்துவாங்கன்னு கற்பனையை பரப்பாதீர்கள் அதேமாதிரி இயக்கத்துல மாட்டிக்கிட்ட சொத்துக்கும் நீங்க நிர்வகிக்கிற டிரஸ்ட் மாதிரி கேள்வி கேட்க முடியாதுங்கிறது தான் உங்கள் இயக்க நடைமுறை.

    இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் உரிமையை கூட சமீபத்திய (சிபாரிசு) நியமனங்கள் மூலம் மறைமுகமாக பிடிங்கிக் கொண்ட நீங்கள் சொல்கிறீர்கள் ஒவ்வொரு கொள்கை சகோதரனுக்கும் சட்டப்படி கணக்கு கேட்க கேள்வி கேட்க உரிமையுள்ளதாம் அதை எங்கே நீங்கள் கடை பிடித்தீர்கள்? சொத்து கணக்கை விடுங்க உங்க கட்சிக்காரர் என்கிற உரிமையில் கட்சி நடவடிக்கைகளை நாகரீகமா கேள்வி கேட்டவர்களுக்கு நீங்கள் என்னாமா! வரிக்குவரி பதில் சொன்னீர்கள் என்று இந்த உலகமே அறியும்.

    தானே ஒதுங்கியவர்களை நீக்கியதாக சொல்வதே இன்னொரு பெரும் பொய், சரி ஒரு பேச்சுக்கு நீக்கியதாகவே வைத்துக் கொள்வோம் அதனால் கேள்வி கேட்க உரிமையில்லையா? அப்படி என்றால் அவர்களுடைய பங்கையும் உழைப்பையும் சேர்த்துத்தான் நீக்கினீர்களா, நீங்களும் உங்கள் சகாக்களும் சொத்தை காப்பதற்காக டிரஸ்ட்டில் இருப்பதாக கதைவிடலாம் ஆனால் நல்ல நோக்கதுக்காக நன்மையை மட்டும் நாடி சமுதாயம் கொடுத்த சொத்து நாசமா போய்விடக்கூடாதென்று கவலைப்பட்டால் அதுக்கு ஆயிரெத்தெட்டு வியாக்கியானம்.

    என்னதான் தனிக்கட்சி, பொதுக்குழு, செயற்குழுன்னு பம்மாத்து காட்டினாலும் உங்களோட கட்சியும் ஒட்டுமொத்த சமுதாயத்தின் பெயரை சொல்லித் தான், சமுதாயத்திடமிருந்து வசூல் பண்ணித்தான் காலத்தை ஒட்டிக்கொண்டு இருக்கு. அதனால் சமுதாயத்தின் அங்கமான அனைவரின் கேள்விக்கும் பதில் சொல்லித்தான் ஆகனும் அதே சமயம் உங்கள் உட்கட்சி பிரச்சனைகளுக்குள் சமுதாயத்திற்கு உரிமை இல்லை என்பதையும் தைரியமாகவும் ஒத்துக்கொள்வோம். மார்க்கமும் சொத்தும் உங்கள் கட்சிக்குள் மட்டும் வரும் விஷயமில்லை.

    ஜால்ரா போட்டுத் தானே ஆகனும் அதானே இடையில் தொடங்கி இன்று வரைக்கும் நிலவும் உங்கள் கட்சியோட எழுதப்படாத விதி ஜால்ரா போடாவிட்டால் தான் உங்களுக்கு ஆகாதவர்களாகி விடுவோமே. இன்று வரை உங்கள் ஜால்ரா போட்டுக்கொண்டு இருப்பவர்கள் கூட நாளைக்கு இதைத்தான் சொல்லப் போகிறார்கள் என்ற ஊரறிந்த ரகசியத்தை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். (நாளைக்கு அடைப்புக்குறிக்கு அவசியமிருக்காது)

    மதுரை சொத்தை நானே வைத்துக் கொண்டாலும் யாரும் கேட்க முடியாது என்று கொக்கறிக்கிற பெரியவாளே அதுக்கு தான் இந்த சமுதாயம் பயப்படுகிறது ஏன் என்றால் உங்களுடைய காலத்திற்கு பின் உங்களுடைய பிள்ளைகள் அதே சொத்துக்கு உரிமை கொண்டாட மாட்டார்கள் என்று என்ன உத்தரவாதம்?

    மதுரை சொத்தை நானே வைத்துக் கொண்டாலும் யாரும் கேட்க முடியாது என்று இறுமாப்புடன் சொல்கிறீர்களே எழுதித் தந்தவர் ஜமாஅத்தை வேண்டுமானால் நம்பாமல் இருக்கலாம் ஆனால் அதை உங்களோட தனிப்பட்ட தேவைக்கு எழுதித் தந்தாரா? இல்லை மார்க்கப் பணிகளுக்காக எழுதித் தந்தாரா சொல்லுங்கண்ணே?

    அபூ ஹூமைத் அஸ்ஸாஇதீ அவர்கள் அறிவித்தார்.

    இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அஸ்த் எனும் குலத்தைச் சேர்ந்த) ஒருவரை (ஸகாத் வசூலிக்கும்) அதிகாரியாக நியமித்தார்கள். அந்த அதிகாரி தம் பணியை முடித்துக்கொண்டு நபியவர்களிடம் திரும்பி வந்து, இறைத்தூதர் அவர்களே! இது உங்களுக்குரியது; இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் அவரிடம், உம் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு உமக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதோ இல்லையா என்று பாரும்!’ என்று கூறினார்கள்.

    பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மாலை தொழுகைக்குப் பிறகு எழுந்து நின்று, ஏகத்துவ உறுதிமொழி கூறி இறைவனை அவனுக்குரிய பண்புகளைக் கூறி போற்றிப் புகழ்ந்த பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்: பின்னர், அந்த அதிகாரிக்கு என்ன ஆயிற்று? அவரை நாம் (ஸகாத் வசூலிக்க) அதிகாரியாக நியமித்தோம். அவரோ நம்மிடம் வந்து இது உங்கள் அதிகாரத்திற்குட்பட்டது. இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது என்று கூறுகிறார். அவர் தம் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு, தமக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதா இல்லையா என்று பார்க்கட்டுமே! (இந்த) முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்களில் யாரேனும் அந்த(ப் பொதுச்) சொத்திலிருந்து முறை கேடாக எதைப் பெற்றாலும் அதை அவர் மறுமை நாளில் தம் பிடரியில் சுமந்து கொண்டு நிச்சயம் வருவார். அது ஒட்டகமாக இருந்தால் அது கனைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அதைக் கொண்டு வருவார்; அது பசுவாக இருந்தால் அது கத்திக் கொண்டிருக்கும் நிலையில் அதைக் கொண்டு வருவார்; அது ஆடாக இருந்தால் அது கத்திக்கொண்டிருக்கும் நிலையில் அதைக் கொண்டு வருவார் என்று கூறிவிட்டு (இறைவா! உன்னுடைய செய்தியை மக்களிடம்) நான் சேர்த்துவிட்டேன் என்று கூறினார்கள்.

    அபூ ஹூமைத்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

    பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் அக்குள்களின் வெண்மையை நாங்கள் நன்கு பார்க்கும் அளவிற்குத் தம் கையை உயர்த்தினார்கள்.

    இந்த ஹதீஸை என்னுடன் ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களும் நபி(ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்றார்கள். (வேண்டுமானால்) அவரிடம் நீங்கள் கேட்டுப்பாருங்கள்.20
    ஆதாரம் : புஹாரி பாகம் 7, அத்தியாயம் 85, எண் 6636

    தனிப்பட்ட முறையிலும் (யாருடைய ஹலாலான சம்பாத்தியத்தையும் குறை காண்பது ஆகுமானதல்ல) ஜமாஅத்தின் பெயரிலும் பொருளாதாரமும் சொத்துக்களும் கொழித்து விட்ட பிறகும் புறங்கையை நக்குவேன் என்று அடம்பிடித்தால் எப்படி? எல்லாரும் மறந்துருவாங்க ஆட்டய போட்ருலாம்னு நினச்சிருந்தாலே தவிர சொந்தப் பெயரில் பொது சொத்தை எழுதி வாங்கும் போது திரும்ப எழுதிக் கொடுக்க பத்திர செலவு வருமேன்னு நினைத்து அன்றைக்கே மறுத்திருப்பீங்க தானே? இன்றைக்கு அடுத்தவனிடம் பத்திர செலவுக்கு காசு கேட்கும் அவலமும் ஏற்பட்டிருக்காது.

    பீ. ஜெய்னுல் ஆபிதீன் என்று ஒரு நல்ல மனிதர் இருந்தார் அந்நஜாத் ஆசிரியராக இருந்தபோது நபி ஈஸா (அலை) அவர்கள் சம்பந்தமாக தவறாக புரிந்து கொண்டு எழுதிய விஷயத்திற்காக பகிரங்க மன்னிப்பை கோரி தன் தவறையும் திருத்திக் கொண்ட சிறந்த மனப்பக்குவம் உள்ளவர் அவர் அதனால் தான் மார்க்கத்தை உள்ளபடியே எடுத்து சொல்ல முடிந்தது அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாதவராக தான் பார்வைக்கு தெரிந்தார்.

    அவரும் தன்னுடைய மேடை பேச்சுகளில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு விலை இருக்கிறது என பலமுறை சொன்னவர் ஆனால் தானும் அதில் ஒருத்தர் என்பதை வேண்டுமென்றே விள(ங்)க்க மறந்துவிட்டார் என்பதை தான் அவரோட நிகழ்கால அலுச்சாட்டியங்கள் நிரூபிக்கின்றது ஆனால் அவருடைய காலம் இன்னும் முடிந்துவிடவில்லை என்பதே அல்லாஹ் அவருக்கு செய்திருக்கிற பெரிய அருள்.

    ததஜ என்கிற சின்னவட்டத்துக்குள்ள முடங்கிப் போய்விடாமல் மறுபடியும் அனைவராலும் அன்பாகவும் நம்பிக்கையோடும் மனிதனாகவும் மதிக்கப்பட வேண்டும் அதற்காக அவர் என்ன செய்ய வேண்டும் என்பதையும் நன்றாக தெரிந்தே இருக்கிறார்.

    இடையில் மனிதர் என்ற அடிப்படையில் தன்னிடம் ஏற்பட்டுவிட்ட கூடாத மாற்றங்களுக்காக வருந்துவார் திருந்துவார் என்கிற நம்பிக்கையை அவர் மீது அன்பு கொண்டுள்ள சமுதாயம் இன்னும் இழக்கவில்லை. தவறினால், கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதாக சொல்வார்களே அதேமாதிரி தன்னோட ததஜ அமைப்பும் அவர் வெறுக்கும் டிரஸ்டுகள் அளவுக்கு சுருங்குவதை அவரே பார்க்கும் கேவலத்தை அல்லாஹ் ஏற்படுத்தினால் ஆச்சரியப்படத் தேவையில்லை.

    தூய மார்க்கத்தை கற்றுத் தந்துவிட்டு நீங்கள் வழி தவறி போவதை அல்லாஹ்வின் மீது ஆணையாக நாம் விரும்பவில்லை. மனமுரண்டா? நேர்வழியா? இரண்டு உலகத்துக்கும் எதுதேவை என்று முடிவு பண்ணிக் கொள்வது உங்கள் விருப்பம் எங்கள் முன்னாள் நல்லாசிரியரே.

    அப்துல் ஜப்பார்
    திருப்பனந்தாள்
    சோனாப்பூர்
    கேம்பு துபாய்

  10. Assalamualaikkum, It is very clear & authentic Mr.P.J.is a greedy person and he has no any fear on Allah. The way he writes and criticising about the muslim brothers, apparently showing that he is an arrogant & ignorant. He has to answer for all his fraud & cheating activities in front of Allah. As a muslim my desire is, pj has to correct himself and he has to join back in Islam.

  11. நாச்சியார்கோவில் ஜாபர்அலி

    பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

    அன்புள்ள அண்ணன் பிஜே அவர்களுக்கு நாச்சியார்கோவில் ஜாபர்அலி கூறும் அஸ்ஸலாமு அலைக்கும்.

    நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள். உண்மையை (மூடி) மறைக்கவும் செய்யாதீர்கள். (பகரா 2:42)

    என்னைப்பற்றி உணர்வு பத்திரிக்கையிலும் தங்களின் இணையதலத்திலும் பல தவரான செய்திகளை வெளியிட்டுள்ளீர்கள். உணர்வு பத்திரிக்கையில் உரிமை 14 8ம் பக்கத்தில், நான் டிஎன்டிஜே தஞ்சை வடக்கு மாவட்ட தலைவராக இருந்தபோது இராஜகிரி டிரஸ்ட் விஷயத்தில், டிரஸ்ட் கூடாது என்று நான் வாதிட்டதாகவும், இப்போது நான் பதவியில் இல்லை என்ற காரணத்தினால் நான் வரம்பு மீறி செயல்படுவதாகவும் எழுதியிருந்தீர்கள். தாங்கள் எழுதிய செய்திகள்யாவும் முற்றிலும் தவரானதாகும். தஞ்சை வடக்கு மாவட்ட தலைவராக இருந்தபோது இராஜகிரி டிரஸ்ட் மட்டும் அல்ல, எந்த டிரஸ்டையும் கலைக்க சொன்னதுமில்லை, டிரஸ்ட் அமைப்பது தவறு என்று வாதிடவுமில்லை.

    மேலும் நாச்சியார்கோவில் உமர்(ரலி) பள்ளிவாசல் பாக்கர் இயக்கத்தின் கிளையாகவும் கேந்திரமாகவும் மாற்றப்பட்டுவிட்டது என்றும் தங்களின் இணையதலத்தில் பொய்யான ஒரு செய்தியை தெரிந்தோ, தெரியாமலோ எழுதி இருக்கின்றீர்கள். உண்மை என்னவென்றால் நாச்சியார்கோவில் உமர்(ரலி)பள்ளிவாசல் எந்த இயக்கத்தையும் சாராத பள்ளியாகவும் குர்ஆன் சுன்னாவை நடைமுறைப் படுத்தும் பள்ளியாகவும் மட்டும் அல்லாஹ்வின் கிருபையால் செயல்பட்டு வருகிறது என்ற உண்மையை தெரிந்துகொள்ளவும்.

    அடுத்ததாக நாச்சியார்கோவில் உமர்(ரலி)பள்ளிவாசல் விஷயத்தில் ஏதோ சதிவேளை செய்யப்பட்டு, அது அம்பளமானவுடன் டிஎன்டிஜே நடவடிக்கை எடுத்தது என்றும் எழுதி இருக்கின்றீர்கள். இதுவும் பொய்யான செய்தியாகும். என்னைப் பற்றிய செய்தியை உணர்வில் வெளியிட்டப்பின்தான், இப்படி மேலும் மேலும் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமந்து உங்கள் இயக்கத்தில் இருக்கவேண்டியதில்லை என்று முடிவெடுத்து, நானும் இன்னும் பல சகோதரர்களும் பாக்கர் இயக்கத்தில் சேர்ந்தோமே தவிர, உமர்(ரலி)பள்ளிவாசலை பாக்கர் இயக்கத்தின் கிளையாகவும் கேந்திரமாகவும் மாற்றிவிடவில்லை. அவ்வளவு ஏன் ஐஎன்டிஜே வின் ஆதரவு பெற்ற பள்ளியாககூட இன்றுவரை அறிவிக்கவில்லை என்பதுதான் உண்மை. உண்மை இவ்வாறு இருக்க, தாங்கள் கேள்விபடும் செய்திகளையெல்லாம் எழுதாமல், உண்மையை விசாரித்து பரிசீலித்து எழுதுவது நல்லது. வருங்காலத்திலாவது இப்படிப்பட்ட தவருகள் நடக்காமல் பார்த்துக்கொள்வது நல்லது.

    குறிப்பு: மேற்கண்ட இந்த விஷயங்கள் பொதுமக்களுக்கு வைக்கப்பட்டுவிட்டதால், நானும் இதை பொதுமக்கள் பார்வைக்கு வைத்துவிட்டேன். மேலும் அண்ணன் பிஜேக்கும் மெயில் அனுப்பிவிட்டேன்.

    நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம். (ஸூரத்துந் நஹ்ல் 16:105)

    இப்படிக்கு
    நாச்சியார்கோவில் ஜாபர்அலி
    9944502550 – 9626385777

  12. Abdur Rahman & Abdul kareem & Sultan moinkhan

    ISLAM NEWS FROM YOUR WEBSITE IS GOOD BUT DON’T BLAME OR CRITICISE OTHERS…
    MASALAAM…

  13. மதம் என்பது எப்போது பொதுவாழ்க்கையில் நுழைக்கப்படுகிறதோ அப்போதே தவறுகள் ஆரம்பித்துவிடுகின்றன. ஊரெங்கும் மேடை போட்டு திருப்பித் திருப்பி ஒரே விஷயங்களைப் பேசிக்கொண்டிருப்பதால் இஸ்லாமியர்களின் வாழ்வியல் ஏற்றம் கண்டுவிடப் போகிறதா? இன்று எத்தனையோ இளைஞர்கள் வாழ்க்கையின் முக்கியமான தருணத்தை இது போன்ற காரியங்களில் செலெவிட்டு எதிர்காலத்தைக் கேள்விகுறியாக்கிக் கொண்டுள்ளனர். நம் இளைஞர்களின் ஆற்றல் வீணடிக்கப் படுவது மிகவும் வேதனையளிக்கிறது. நம் சமுதாய மக்களுக்கு கல்வியின் மகத்துவத்தைப் புரிய வைத்து அவர்களைக் கல்வியில் மேம்பட்டவர்களாக ஆக்குவோம். அனைவரும் நன்கு கற்று நல்ல மரியாதைகுரிய வேலைகளில் அமர்ந்தால் இன்று நம்மைப் பீடித்திருக்கின்ற பல பிரச்சனைகள் தானே நீங்கிவிடும்.

    அதைவிடுத்து இன்று சிலர் தம் சுய இலாபத்திற்காக மக்களை முக்கியமாக இளைஞர்களை அடிப்படைவாத போக்கிற்கு திருப்பி விட்டுக்கொண்டிருப்பது நியாயமல்ல. சிந்தியுங்கள்…உங்கள் வாழ்க்கைகளை நீங்களே தீர்மானியுங்கள்…உங்களுக்கு அரசியல் பிடித்திருந்தால் அதை மட்டும் செய்யுங்கள். மற்றவர்களின் மத வாழ்ககையில் தலையிடாதீர்கள். உங்களின் தவறுகளுக்கு மதத்தைப் பொறுப்பாக்காதீர்கள். கல்வியின் தேவையை உணருங்கள்.

    இன்னும் எத்தனை தலைமுறை நாம் வளைகுடா நாடுகளுக்கு கூலி வேலைக்குச் செல்ல வேண்டும்? கண்களைத்திறந்து பாருங்கள்! உங்கள் கிணறுகளிலிருந்து வெளியே வாருங்கள். உலகைப்பாருங்கள்..உங்கள் உலக வாழ்க்கையை நீங்கள் சரியாக அமைத்துக்கொள்ளவில்லையெனில் நீங்கள் எவ்வாறு மறுமைக்குத் தயாராகுவீர்கள்?

  14. மாடரேட்டர் அவர்களே எம்முடைய கருத்தைப் பதிவு செய்ய மறுத்ததேனோ? உண்மை சுடுகின்றதோ? நீர் ஒரு நியாயவானாக இருப்பின் எம் கருத்தைப் பாரபட்சமின்றி பதிவு செய்திருப்பீர். உம்மிலேயே இல்லாத நியாயத்தை வேறு யாரிடம் தேடுகின்றீர்?மறுமை உமக்கும் உண்டல்லவா?

  15. Asslamu Alaikum Brothers

    pls. do not fight each other. what ever happening solve it smoothly for the sake of Allah.

    may Allah give us peace.

    Wassalam.

  16. Dear Brothers

    I dont have tamil font that is why I am writing in english.

    With grace of ALMIGHTY ALLAH atleast our brothers came to know the originality face of brother P. ZAINULABUDEEN. Since 1987 we are telling the same thing about him but nobody want to listen that. As long as Islam is concerned there is no groupism. We are all muslim and so brothers. If you form a group naturally you will oppose other group even if they did good things.

    So I request you all of you to work under only one banner that is ISLAM – JAMAATHUL MUSLIMEEN. May ALMIGHTY ALLAH will converge all of us under one roof and do the things only for the same of ALMIGHTY ALLAH’S satisfaction.

  17. அன்பு நிர்வாகிகளே, மார்க்க அறிஞர்களிடம் கேட்டு பதில் அளியுங்கள். என்னிடம் திருவனந்தபுரத்தில் ததஜ பள்ளி கட்ட வாங்கியுள்ள இடத்திற்கு நன்கொடை கேட்கின்றனர். நான் கொடுக்கலாமா?

  18. ஒரு பள்ளியை இது தான் தவ்ஹீத் பள்ளி என முழக்கமிடுவது தனியாக சுட்டிக்காட்டுவது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் என்பது அரைவேக்காடுகளுக்கு நிச்சயம் புரியாது. தமிழ்நாட்டில் ஏன் இந்தியாவில் எல்லா பள்ளியும் தவ்ஹீத் பள்ளி தான். கிப்லாவை முன்னோக்கி, இமாமை பின் தொடர்ந்து, தக்பீருடன், ருகூ,சஜ்தா இவற்றை சரியாக செய்து முஸ்லீம்கள் தொழும் எல்லாப் பள்ளிகளும் தவ்ஹீத் பள்ளிகள் தான். எந்த பள்ளியிலாவது இதற்கு மாற்றமாக புதுமாதிரி செய்தால் அது நிச்சயம் தவ்ஹீத் பள்ளி கிடையாது. இந்த அடிப்படை விஷயம் எல்லா முஸ்லீமுக்கும் தெரிந்தது. நாங்கள் கட்டுவது தான் தவ்ஹீத் பள்ளி என்று ஒரு கும்பல் குறிப்பிட்டால் அது வடிகட்டிய முட்டாள்தனம்.

  19. this is a useful website…..it is better to avoid criticize others…

  20. அஸ்ஸலாமு அழைக்கும்,
    இஸ்லாமிய சகோதரர்களே, நான் எந்த இயக்கம் சார்ந்தும் எழுதவில்லை.

    இஸ்லாம் என்பது ஒரு குடும்பம் போல. குடும்பத்தின் தலைவர் முகமது நபி (ஸல்…) அவர்கள். மேலும் அல்லாஹ் “முஹ்மினான ஒவ்வொருவரும் மற்றவருக்கு சகோதரர்” என்கிறான். ஆனால் நமக்ளுள் அத்தனை பிரிவினைகள். ஒவ்வொரு பிரிவும் அடுத்த பிரிவை எதிரிகளுக்கு மேலாக பார்க்கும் நிலைமை. கடுகளவு தவறானாலும் ஊரை கூட்டி ஒப்பாரி வைத்து கடலளவு பெரிதுபடுத்தும் எண்ணம். இஸ்லாத்தை மறந்து ஒருவருக்கொருவர் இட்டுக்கட்டி கொள்ளும் வாதம். (என்னே ஒரு சகோதரத்துவம்). ஆலமரம் போல பறந்து விரிந்து வேர்/விழுது விட்டு நிலையாக/வலுவாக நிற்க வேண்டிய நம் இஸ்லாமிய சமுதாயம், முருங்கை மரம் போன்றும் வலுவிழந்து இருக்கிறோம்.

    கொள்கை வேறுபாட்டில் ஆரம்பித்தது தற்போது தனி மனித/இயக்க விரோதத்தை நோக்கி செல்கிறது. இது முஸ்லிம் சமுதாயத்திற்கு மிகப்பெரிய கேடாக அமையலாம். இதனை கருத்தில் கொண்டு குறைந்த பட்சம் கொள்கை வேறுபாட்டோடு நிறுத்திக்கொள்ளுங்கள். அவர் அவர் கொள்கைக்கு அவர் இறைவனிடம் பதில் சொல்லட்டும். ஆனால் சமுதாயம் எனும்போது இணைந்துக் கொள்ளுங்கள். இதற்காக அனைத்து இயக்கங்களுக்கும் மத்தியில் ஒரு சிறந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது நல்லதென நினைக்கிறேன். நமது தலைவர் நபி (ஸல்..) அவர்கள் இஸ்லாமியர்களின் பாதுகாப்பிற்காக காபிர்களுடனும் ஒப்பந்தம் செய்துள்ளார்கள். சிந்தித்து முடிவெடுங்கள்.

  21. VERY DANGEROUS THAKLEED SPREADING IN TAMIL NAADU. MAY ALLAH SAVE TNTJ MEMBERS FROM THAKLEED.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *