Featured Posts

கிரிக்கெட்

சுவனப்பாதை மாதஇதழ் நடத்திய உலகளாவிய கட்டுரைப் போட்டியில் (ஹிஜ்ரி 1430) முதல் பரிசு பெற்ற கட்டுரை

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நாட்டிலே, மக்களால் குறிப்பாக இளைஞர்களால் அதிகமாக உச்சரிக்கப்படுகிற ஐந்து எழுத்து மந்திரச் சொல் எது என்று கேட்டால், கிரிக்கெட் என்று அடுத்த வினாடியே சொல்லிவிடுவார்கள். கிரிக்கெட் சம்பந்தமாக எழுதப்படாத பத்திரிக்கைள், காட்டப்படாத தொலைக்காட்சிகள், சொல்லப்படாத வானொலிகள் பாவம் செய்தவையாக மக்களால் எண்ணப்படுகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி, சாதி மத பேதமின்றி ஒன்றை ரசிக்கிறார்கள் என்றால் அது கிரிக்கெட் ஒன்றாகத்தான் இருக்கும். நாட்டு நடப்புகள் உலக விஷயங்கள் அரசியல் மற்றும் இஸ்லாம் பற்றிய விபரங்கள் பற்றி தெரியவில்லையா பரவாயில்லை! ஆனால் கிரிக்கெட் பற்றி புள்ளி விபரங்கள் ஒருவருக்குத் தெரியவில்லையெனில் அவர் அறிவீனராக கருதப்படுகிறார். அந்த அளவிற்கு கிரிக்கெட் எனும் போதை தலைவிரித்தாடுகிறது.

இப்படிப்பட்ட அதி முக்கியத்துவம்? வாய்ந்த கிரிக்கெட்டைப் பற்றி இஸ்லாமியப் பார்வை என்ன என்று ஆதாரத்துடன் பார்ப்போம். முதலில் இஸ்லாம் ஆரோக்கியமான மற்றும் பயனுள்ள எந்த ஒரு விளையாட்டுக்கும் எதிரி அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்தார்கள் அபிசீனியர்கள் நபி(ஸல்) அவர்கள் முன்னே தங்கள் ஈட்டிகளால் விளையாடிக் கொண்டிருந்தார்கள் அப்போது உமர்(ரலி) அவர்கள் வந்து (கோபமடைந்து) குனிந்து சிறு கற்களை எடுத்து அவற்றால் அவர்களை அடித்தார்கள் நபி(ஸல்) அவர்கள் உமரே! அவர்களை விட்டுவிடுங்கள் என்று கூறினார்கள் (புஹாரி: பாகம் 3, அத்தியாயம் 56, எண்: 2901)

ஆனால் எந்த வித பலனுமில்லாத நேரத்தை வீணடிக்கிற, அறிவுக்கு சம்பந்தமில்லாத, சூதாட்டத்தை ஊக்குவிக்கிற, நாட்டின் முன்னேற்றப்பாதையில் வளர்ச்சியில் தடை போடுகிற, ஆபாசத்தை தூண்டுகிற (Cheer Girls), ஆரோக்கியத்துக்கு அப்பாற்பட்ட எந்த ஒரு விளையாட்டையும் இஸ்லாம் ஒரு போதும் ஆதரிக்கவில்லை. ஆங்கிலேயர்களால் திட்டமிட்டு விட்டுச் செல்லப்பட்ட ஆபத்துதான் இந்த கிரிக்கெட் என்று சொன்னால் மிகையாகாது. கிரிக்கெட் எனும் மாயப்பேயினால் நிகழக்கூடிய ஆபத்துக்களை ஆதாரத்துடன் ஒவ்வொன்றாக பார்ப்போம்.

தொழுகையை விடக்கூடிய நிலை:

கிரிக்கெட் விளையாடக்கூடிய, பார்க்கக்கூடிய ஒருவர், (அது பகல் ஆட்டமாகவோ அல்லது இரவு ஆட்டமாக இருந்தாலும் சரியே) தொழுகையை விடுபவராக இருக்கிறார். கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் ஒரு முஸ்லிம் ஐந்து நேரத் தொழுகையை கண்டிப்பாக ஐமாஅத்தோடு தொழக் கூடியவராக இருக்க முடியாது.

அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் மறுமையில் ஒரு மனிதனின் அமல்களைப் பற்றி விசாரிக்கப்படும்போது தொழுகையைப் பற்றித்தான் முதன்முதலாக விசாரிக்கப்படும் (அபூதாவூது)

தொழுகையை விட்டுவிட்டு கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டு இருக்கும் ஒருவர் மறுமையில் அல்லாஹ்வின் முன்னிலையில் இந்த கேள்விக்கு என்ன பதில் தயாரித்து வைத்து இருக்கிறார்? தொழுகையை விடுவதால் இஸ்லாமிய வட்டத்தில் இருந்து வெளியே செல்லக்கூடிய நிலை இருக்கும்போது அப்படிப்பட்ட விளையாட்டு நமக்குத் தேவைதானா? இளைஞர்களே சிந்திக்கக் கடமைப்பட்டு உள்ளீர்கள்!

வீண் செலவுகள் பண விரயம்:

இந்த விளையாட்டைப் போன்று எந்த ஒரு விளையாட்டிலும் பணம் வீணடிக்கப்படுவதில்லை. போட்டிகளைக் காண டிக்கெட் வாங்குவது, டிஷ் (குடை) வைப்பது, பணம் கொடுத்து கட்டண சேனல்களை (Pay Channel) பெறுவது, எல்லாமே வீண்செலவுகள். தான தர்மங்கள் செய்வதில் இருந்து விலகி நிற்கும் இவர்கள், போட்டிகளை காண்பதற்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்வது ஆச்சரியமாக உள்ளது. அத்தியாவசிய செலவுகள் செய்வதற்கு ஆயிரம் முறை யோசிக்கக்கூடியவர்கள் கிரிக்கெட் போட்டிகளை காண்பதற்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்யத் தயங்குவதில்லை.

இவர்கள் திர்மிதியில் இடம் பெற்ற ஒரு ஹதீதை வசதியாக மறந்துவிட்டார்கள் என்றே தோன்றுகிறது. ‘முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் மறுமை நாளில், நான்கு கேள்விகளுக்கு பதில் சொல்லாத வரையில் ஒரு அடிகூட முன்னால் எடுத்து வைக்க முடியாது. அவற்றில் ஒன்றுதான் சம்பாதித்த பணத்தை எவ்வாறு செலவு செய்தாய்… (திர்மிதி)

மேலும் இளைஞர்களே! இறைவன் கூறுவதுபோல் வீண் செலவுகள் செய்து ஷைத்தானின் சகோதரர்களாகி விடாதீர்கள். நிச்சயமாக வீண்விரயம் செய்வோர் ஷைத்தானுடைய சகோதரர்களாக இருக்கின்றனர். ஷைத்தானோ தன் இரட்சகனுக்கு நன்றி செலுத்தாது மாறு செய்தவனாக இருக்கின்றான். (17:27)

பணம் புகழ் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசை:

கிரிக்கெட் வீரர்கள் போன்று பணம் புகழ் ஈட்ட வேண்டும் என்ற பேராசை காரணமாக மார்க்கம், படிப்பு எல்லாவற்றையும் விட்டுவிட்டு கிரிக்கெட் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு குழந்தைகள் வளர்க்கப்படுகிறார்கள். கிரிக்கெட் வீரர்கள் செல்வச்செழிப்பில் மிதப்பதை பார்த்துவிட்டு இந்திய அணிக்காக விளையாடினால் கோடீஸ்வரனாகி விடலாம் என்ற எண்ணத்தில் அதிகமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு பதிலாக கிரிக்கெட் விளையாடுவதற்கு பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.

பெற்றோர்களே! உங்கள் குழந்தைகளை இஸ்லாமிய முறைப்படி வளர்க்க வேண்டிய பொறுப்பு உங்கள் மீது சாட்டப்பட்டுள்ளது.

இறைவன் திருமறையில் கூறுகிறான் (செல்வத்தையும், மக்களையும்) ஒருவருக்கொருவர் அதிகமாகத் தேடிக்கொள்வது உங்களைப் பராக்காக்கிவிட்டது. (102:1).

இறைவன் கூறுவது போல செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களை பராக்காக்கி விடவேண்டாம் மறுமைநாளில் இறைவன் முன்னிலையில் என்னுடைய குழந்தைகயை இஸ்லாமிய முறைப்படி வளர்த்தேன் என்று பயமில்லாமல் சொல்லக்கூடிய ஒருவராக அனைத்து பெற்றோர்களையும் ஆக்கி வைப்பானாக!

பொழுதுபோக்கு:

மிகப்பெரும் அறிஞர்கள் கூட இந்த விஷயத்தில் மூளை மழுங்கடிக்கப்படுகிறார்கள் என்பது நிதர்சனமாக உண்மை. ஒரு உண்மையான இறைவிசுவாசிக்கு வணக்கவழிபாடுகள் மற்றும் நியாயமான அன்றைய தேவைகளுக்கு 24 மணி நேரம் போதாமல் இன்னும் ஒரு சில மணி நேரங்கள் இருந்தால் இபாதத்துகள் செய்வதற்கு நன்றாக இருக்குமே என்று நினைப்பான், நிலைமை இப்படி இருக்கும்போது, பொழுது போக்குவதற்கு என்று எங்கே நேரம் ஒதுக்க முடியும். இளைஞர்களே! உங்களுக்கென்று, இறைவன் பொறுப்புகளை ஒப்படைத்துள்ளான் பொழுது போக்குவதற்கு என்று நேரம் ஒதுக்க முடியாத சூழ்நிலையில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். மறுமையில் இறைவன் முன்னிலையில் பல கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாய நிலையில் இருக்கிறோம்.

முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். மறுமை நாளில் இறைவன் முன்னிலையில் நேரத்தை எவ்வாறு செலவழித்தாய் என்ற கேள்விக்கு பதில் சொல்லாத வரை ஒரு அடிகூட முன்னால் எடுத்து வைக்க முடியாது. (திர்மிதி)

விலைமதிப்பற்ற நேரத்தை கிரிக்கெட் பார்ப்பதில் கழித்துவிட்டு மறுமைநாளில் நஷ்டமடைந்தோரில் ஒருவராக நம்மை ஆக்கிவிடாமல் அல்லாஹ் அருள்புரிவானாக!.

உடல் ஆரோக்கியம்:

இந்த விளையாட்டை நியாயப்படுத்துவோர் கூறும் அநியாயமான காரணம்தான் இந்த உடல் ஆரோக்கியம். பகல் முழுக்க அல்லது இரவிலோ வெயில் மற்றும் குளிரில் உடலை வருத்திக் கொண்டு விளையாடுவது தான் ஆரோக்கியமான விளையாட்டு எனில் ஆரோக்கியமாக விளையாடக்கூடிய மற்ற விளையாட்டுக்களை என்னவென்று கூறுவார்கள். கிரிக்கெட் விளையாடுபவர்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும் நேரத்தை விட ஆரோக்கியமில்லாமல் இருக்கும் நேரம்தான் அதிகம். Unfit, Cramp, Injury, Back pain, Wounds, Shoulder Operation போன்ற வார்த்தைகள் எல்லாம் கிரிக்கெட் விளையாடுபவர்களுக்காக உருவாக்கப்பட்ட வார்த்தைகள் என்பது மறுக்கமுடியாத உண்மை. இதுதான் ஆரோக்கியம் என்றால், அந்த ஆரோக்கியம், இஸ்லாமிய இளைஞர்களே, நமக்குத் தேவையில்லை.

இறைவன் திருமறையில் இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள் (2:185) என்று கூறுகிறான். ஆகையால் கிரிக்கெட்டை விட்டு விலகி நில்லுங்கள் ஆரோக்கியமாக வாழுங்கள்.

சூதாட்டம்:

கிரிக்கெட்டும், சூதாட்டமும் பிரிக்க முடியாததாக ஆகிவிட்டதோ என்று எண்ணும் அளவிற்கு நிலமை மோசமாகிவிட்டது. நாளுக்கு நாள் புதிய புதிய சட்டங்களை உண்டாக்குவதன் மூலம், சூதாட்டம் அதிகமாகிக் கொண்டு இருப்பதையே காட்டுகிறது. சூதாட்டத்தில் ஈடுபடாத பிரபல கிரிக்கெட் வீரர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். Match fixing, Bookies இவைகள் எல்லாம் கிரிக்கெட்டும், சூதாட்டமும் இரண்டறக் கலந்து விட்டதையே காட்டுகிறது. இறைவன் திருமறையில் கூறுகிறான்.

ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதல் அம்புகள் எறிந்து குறி கேட்பதும் ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களில் உள்ளவையாகும். (5:90)

கிரிக்கெட் விளையாடுவதன் மூலமாகவோ அல்லது கண்டுகளிப்பதன் மூலமாகவோ ஏதோ ஒரு வகையில் சூதாட்டத்தை ஊக்குவிப்பவர்களாகவே இருக்கின்றோம். ஆகையால் இளைஞர்களே! ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களில் உள்ள இந்த கிரிக்கெட்டில் சூதாட்டத்தில் இருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள அல்லாஹ் போதுமானவன்.

ஆடைகுறைப்பு அழகிகள்:

மேற்கத்திய நாடுகளில் பிரபலமான, ஆட்டத்தின் நடுவே ரசிகர்களை மகிழ்விக்க இந்த அரைகுறை அழகிகள்? நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆடை குறைப்பு, புயல் இந்தியாவையும் மையம் கொண்டு விட்டது. இந்த ஆடைகுறைப்பு அழகிகளின்? (Cheer Girls) ஆட்டம், இந்திய போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் என்றே கூறலாம். ஆட்டத்தின் நடுவே காட்டப்படும் அழகிகளில் ஆட்டம் விபச்சாரத்தின் பக்கம் இட்டுச் செல்ல காரணமாக அமைகிறது.

கண்கள் செய்யும் விபச்சாரம் பார்ப்பது என்று முஹம்மது நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள். (புஹாரி 609)

இறைவன் திருமறையில் ‘(நபியே) முஃமினான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் (24:30)

கிரிக்கெட் போட்டிகளைக் காண்பதன் மூலம் நாம் கண்களால் விபச்சாரம் செய்தவர்களாக ஆகிவிடுகிறோம் மேற்கண்ட குர்ஆன் ஹதீதை கண்ணியப்படுத்தும் வகையிலும் விபச்சாரத்தின் பக்கமும் நம்மை இட்டுச் செல்லாமலும் இருக்க கிரிக்கெட் போட்டிகளை காண்பதில் இருந்து தடுத்துக் கொள்ளுமாய் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

தனிநபர் வாரியங்களின் வளர்ச்சி:

தீமைகளுக்கு துணை போகிற நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுகிற கிரிக்கெட் விளையாட்டால் தனி நபர்கள் BCCI போன்ற வாரியங்கள்தான் செல்வச் செழிப்புடன் திளைக்கின்றன. ஒரு கிரிக்கெட் வீரரின் 2 வருடத்திற்கு முந்திய சொத்து மதிப்பு 200 கோடிகளுக்கு மேல். இப்படி பல கிரிக்கெட் வீரர்களின் சொத்துக்களை முடக்கினால் ஒரு மாநிலத்தின் பட்ஜெட்டையே சமாளித்துவிடலாம். உலகத்தில் கிரிக்கெட் அதிகம் பார்க்கும் நாடு கிரிக்கெட் விளையாட்டால் அதிக வருமானம் பெறும் வாரியம், இவற்றால் ஒரு நாட்டின் சமுதாயத்தின் வளர்ச்சிக்கு என்ன பயன்? நாட்டுக்காக உழைத்த எத்தனையோ தியாகிகள் பட்டினியால் வாடிக் கொண்டிருக்க நாட்டின் வளர்ச்சியில் ஒரு துளி பங்களிப்புக்கூட இல்லாத இவர்கள் கோடிகளில் புரண்டு கொண்டிருக்கிறார்கள் இது ஒரு வெட்கக்கேடு! ஆகையால் தனி நபர்கள் வாரியங்கள் மட்டுமே பயனடைகிற ஒரு நாட்டுக்கு எந்த விதத்திலும் பலனில்லாத இந்த விளையாட்டுக்களை அரசாங்கம் தடை செய்தால்கூட பொருத்தமாக இருக்கும். இளைஞர்களே! நீங்கள் செலவழிக்கின்ற ஒவ்வொரு பைசாவும் வீணாக அவர்களை சென்றடைகிறது என்பதை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இளைஞர்களே! விழித்தெழுங்கள் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பஜர் மற்றும் இஷா தொழுகையை ஜமாஅத்தோடு தொழாதவர்களை முனாபிக் என்று அடையாளம் காட்டியுள்ளார்கள். காலை நேரத்தில் கிரிக்கெட் போட்டிகளை காண்பதற்காக விழித்தெழும் நாம் பஜ்ர் தொழுகைக்கு தூங்கிக் கொண்டிருப்பதை என்னவென்று சொல்வது.

இளைஞர்களே! உங்கள் கால்கள் விளையாட்டு மைதானங்கள் (Stadium) பக்கம் செல்வதில் இருந்தும் தவிர்த்து பள்ளிவாசல்கள் பக்கம் செல்வதற்கு முயற்சி செய்யுங்கள்.

இளைஞர்களே! உங்கள் முன் இந்த சமுதாயத்தை தட்டி எழுப்பக்கூடிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது மறுமையில் உங்கள் பொறுப்புகளைப்பற்றி கண்டிப்பாக வினவப்படுவீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்

இளைஞர்களே! கிரிக்கெட் வீரர்களை Roll Modelலாக ஆக்காமல் திருக்குர்ஆனில் 85வது அத்தியாயத்தில் சொல்லப்படுகிற ஓரிறைக் கொள்கையை மக்கள் முன்னியைலில் எடுத்து வைப்பதற்காக தன்னுயிரை மாய்த்துக் கொண்டு பல்லாயிரக் கணக்கான மக்களை ஈமானின் பக்கம் திரும்ப வைத்த இளைஞரை உங்களுடைய முன்மாதிரியாக (Roll Model) ஆக்கிக் கொள்ளுங்கள்.

இறைவன் இந்த சமுதாயத்தை கிரிக்கெட் என்ற படுகுழியில் விழுவதில் இருந்தும் காப்பாற்றி கரை சேர்ப்பானாக ஆமீன்.

– M. அன்வர்தீன்

—————————————————————————–

கட்டுரையாளரின் சுய அறிமுகம்:

பெயர்: M. அன்வர்தீன், ஊர்: புது ஆத்தூர் (பெரம்பலூர் மாவட்டம்) வயது: 45, திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. வேலை: சவூதி அரேபியாவில் கப்ஜி என்ற ஊரில் ஒரு தனியார் கம்பெனியில் பணி புரிகின்றேன்.

நான், இளமைப்பருவத்தில், இதன் தீமைகளை உணராததால், அதிகமாக கிரிக்கெட் பார்த்து நேரத்தை வீணடித்தவர்களில் ஒருவன். ஆகையால், கிரிக்கெட்டில் ஈடுபட்டிருக்கின்ற அனைவரும் அதனால் ஏற்படக்கூடிய தீமையை உணர்ந்து, அதிலிருந்து விலகி, நேரத்தை அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் இந்த கட்டுரை எழுதப்பட்டது. அல்லாஹ் மிக அறிந்தவன்.

நன்றி: சுவனப்பாதை மாதஇதழ்  www.suvanam.com

11 comments

  1. These all reasons are said for covering the article.Yes offcourse these all accepted.But some other important things we have to change.We can watch the cricket with islamic attitude

  2. பனங்காட்டூர் மு.அப்துல் ஹலீம் ஜித்தா சவுதி அரேபியா

    தங்களின் இந்த இணையதள சேவை மென்மேலும் வளர்ச்சி பெற துவா செய்கிறேன்

  3. It is very good Article for those waste their time such a game like cricket.
    it is a useless game and i agree with the writer of this article.
    please write more and more about time, it is very important to our Muslim brothers
    May Allah bless all of us here and hereafter,
    Nawshad

  4. we can watch cricket with islamic attitude that point you
    didn’t tell OR say

  5. very good article
    jazakallah

  6. very nice advise to myself and all Muslim ummah.BARAKALLAH

  7. Asslamu Alaikum Bro. Anvardeen

    it’s wonderful article and Allah may bless you for opening our eyes.

    wassalaam.

  8. Your Article is good but we can watch cricket as an sport

  9. we can watch cricket but cheer girls not nessesary in that spot

  10. ^ just time waste nothing more…..

    @haatim
    bro TIME is valuable WASTING that valuable time is not good

    play cricket thats not a problem
    but by merely watching it what are the benefits you get bro ?

    Please Point Out !!!

  11. assalaamu alaikkum va rah..

    very intrresting facts.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *