Featured Posts
Home » சட்டங்கள் » உம்ரா, ஹஜ், துல்ஹஜ் மாதம் » துல் ஹஜ் மாதத்தின் முந்திய பத்து நாட்களின் சிறப்புகளும் உழ்ஹிய்யாவின் சட்டங்களும்

துல் ஹஜ் மாதத்தின் முந்திய பத்து நாட்களின் சிறப்புகளும் உழ்ஹிய்யாவின் சட்டங்களும்

ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் மிக சிறப்புக்குரிய நாட்களாகும் ஆகவே இந்த நாட்களில் செய்யும் நல் அமல்களை தெரிந்து நாமும் அமல் செய்து அல்லாஹ்வின் அருட்கொடைகளை பெற்றவர்களாகுவோமாக.

சிறப்புகள்
1- துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவுமா? என நபித்தோழர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவும்தான் ஆனால் அல்லாஹ்வின் பாதையில் பொருளையும் உயிரையும் அர்ப்பணித்து வீரமரணம் அடைந்தவரைத் தவிர என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : புகாரி

2- நாட்களில் மிகச்சிறந்த நாள் அரஃபாவுடைய நாள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான்

சிறப்பான இந்த நாட்களில் செய்யும் அமல்கள்
1- ஹஜ் உம்ரா:- ஒரு உம்ரா மற்ற உம்ராவுக்கு இடைப்பட்ட பாவங்களுக்கு பரிகாரமாகும் மேலும் ஏற்றுக்கொள்ப்பட்ட ஹஜ்ஜுக்குரிய கூலி சுவர்க்கத்தைத்தவிர வேறு எதுவும் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் – புகாரி முஸ்லிம்

2-உபரியான தொழுகைகள் நோன்புகள் தர்மங்கள் உறவினர்களுக்கு உதவுவது குர்ஆன் ஓதுவது பாவமன்னிப்பு தேடுவது நன்மையை ஏவுவது தீமையை தடுப்பது போன்ற நல் அமல்களில் ஈடுபடுவது.

குறிப்பு:– துல் ஹஜ் மாதத்தின் பத்தாம் நாளாகிய பெருநாளன்று நோன்பு நோற்பது தடை செய்யப்பட்டுள்ளது.
ஆதாரம் – புகாரிமுஸ்லிம்

3- அரஃபா நோன்பு :- அரஃபா நோன்பு (நோற்பவருக்காக) அந்த நாளுக்கு முந்திய வருடத்தின் பாவங்களையும் அதற்கு பின்னுள்ள வருடத்தின் பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான் என நான் நம்புகின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்-முஸ்லிம்

குறிப்பு:– அரஃபா நோன்பை ஹாஜிகள் நோற்க்கக்கூடாது ஹஜ் செய்யாதவர்கள் இந்த நோன்பை நோற்பது மிகவும் சிறந்தது.

அரஃபா தினத்தன்று அரஃபாவில் தங்கியிருந்த நபி (ஸல்) அவர்கள் தன்னிடம் கொண்டுவந்த பாலை அருந்தி தான் நோன்பு நோற்கவில்லை என்பதை மக்களுக்கு அறிவித்திருக்கின்றார்கள்.
ஆதாரம் புகாரி முஸ்லிம்

4- தக்பீர் கூறுவது:- கடமையான தொழுகைகளுக்குப் பின்னரும் பள்ளிவாசல் வீடு கடைவீதி போன்ற எல்லா இடங்களிலும் தக்பீர் கூறுவது
துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை. ஆகவே லாஇலாஹா இல்லல்லாஹ் அல்லாஹ{ அக்பர் அல்ஹம்து லில்லாஹ் போன்ற திக்ருகளை அதிகமாக செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : அஹ்மத்

இப்னு உமர் (ரலி) அபூஹுரைரா (ரலி) ஆகிய இரு நபித்தோழர்களும் துல்ஹஜ் (மாதம் ஆரம்ப) பத்து தினங்களிலும் கடைவீதிகளுக்கு செல்லும் போதெல்லாம் தக்பீர் கூறுவார்கள் இவ்விருவரும் கூறுவதை கேட்கின்ற மற்ற மக்களும் தக்பீர் கூறுவார்கள்.
ஆதாரம் – புகாரி

பெருநாளைக்காக கூறக்கூடிய தக்பீரை அரஃபா நாளின் ஸுப்ஹு தொழுகையிலிருந்து பிறை 13ம் நாள் அஸ்ர் தொழுகை வரைக்கும் கூறுவது.

5- ஹஜ் பெருநாள் தொழுகை இன்னும் குத்பா பிரசங்கத்தில் கலந்து கொள்வது

நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப்பெருநாளிலும் கன்னிப்பெண்கள் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் (உட்பட) முஸ்லிம்களின் பிரார்த்தனைகளிலும் நல்ல அமல்களிலும் கலந்து கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு கட்டளையிட்டார்கள். மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் தொழுகையில் கலந்து கொள்ளாமல் தொழுகை நடக்கும் பகுதிக்கு வெளியே இருந்து கொள்ள வேண்டும் என்றார்கள்.
ஆதாரம் :- புகாரி முஸ்லிம்

6- உழ்ஹிய்யா:- உழ்ஹிய்யா என்பது ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கு பின் இறை திருப்தியை நாடி அறுக்கப்படும் பிராணிக்கு சொல்லப்படும் இது நபியவர்கள் வலியுறுத்திய சுன்னத்தாகும்.

கொம்புள்ள கறுப்பு நிறம் கலந்த இரண்டு வெள்ளை நிற ஆடுகளை நபி (ஸல்) அவர்கள் உழ்ஹிய்யாவாக கொடுத்தார்கள் அப்போது பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூறி அவ்விரண்டின் ஒரு பக்கத்தின் மீது தனது காலை வைத்து கையால் அறுத்தார்கள்.
ஆதாரம் – புகாரி

உழ்ஹிய்யா கொடுப்பதற்கு தகுதியான பிராணிகள்

– ஆடு. மாடு ஒட்டகம் (புகாரி)

– ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆடு போதுமாகும் – (திர்மிதி)

– மாட்டிலும் ஒட்டகத்திலும் ஏழு பேர்கள் பங்கு கொள்ளலாம் – (திர்மிதி)

உழ்ஹிய்யாவிற்கான கால் நடைகளில் கீழ்க்கண்ட குறைகள் இருக்கக்கூடாது:
கண் குறுடு கடுமையான நோயானவை மிகவும் மெலிந்தவை நொண்டியானவை அங்கங்கள் குறையுள்ளவை.

நேரம்
ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகைக்கு பின் அறுக்க வேண்டும்
யார் தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அது உழ்ஹிய்யாவாக ஆகாது அவர் தன் குடும்பத்தின் தேவைக்காக அறுத்ததாகவே கணக்கிடப்படும்.
யார் தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அவர் இன்னும் ஒரு முறை குர்பாணி கொடுக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் – புகாரி, முஸ்லிம்

யார் (பெருநாள்) தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அது அவரின் குடும்பத்தேவைக்காக அறுத்ததாக கணக்கிட்டுக்கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

அறுக்கும் முறை

– ஆடு மாடுகளை படுக்கவைத்து ஒருக்கணித்து அறுக்க வேண்டும் (முஸ்லிம்)

– ஒட்டகத்தை நிற்கவைத்து அறுபடும் நரம்புகள் வெட்டப்படும் அளவுக்கு அறுக்கும் கருவியால் கீறிவிடவேண்டும். (முஸ்லிம்)

– அறுக்கும் போது பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும். (புகாரி)

உழ்ஹிய்யா கொடுக்கப்பட்ட பிராணிகளை பயன்படுத்தும் முறை
உழ்ஹிய்யா கொடுக்கப்பட்ட பிராணிகளின் முடிகளையோ தோல்களையோ மாமிசங்களையோ அறுத்தவருக்கு கூலியாக கொடுக்கக்கூடாது.
குர்பானி கொடுப்பதற்கான ஒட்டகங்களை மேற்பார்வை செய்வதற்கு என்னை நபி (ஸல்) அவர்கள் நியமித்தார்கள் அவைகளின் மாமிசம் தோல் ஆகியவற்றை தர்மமாகவே கொடுக்க வேண்டும் என்றும் அவற்றில் எதையும் அறுப்பவருக்கு கூலியாக கொடுக்கக்கூடாது என்றும் கூறினார்கள் அறுப்பதற்குரிய கூலியை நாங்கள் தனியாகவே கொடுப்போம் என அலி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
ஆதாரம்:- புகாரி, முஸ்லிம்

உழ்ஹிய்யா கொடுப்பவர் செய்யக் கூடாதவைகள்
துல் ஹஜ் மாதம் பிறந்ததும் உழ்ஹிய்யா கொடுக்க நாடியவர் தன்னுடைய முடி மற்றும் நகத்திலிருந்து எதையும் அகற்றக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள்.
ஆதாரம்:- முஸ்லிம்

குறிப்பு:– இத்தடை உழ்ஹிய்யா கொடுப்பவருக்கு மாத்திரம்தான் அவரின் குடும்பத்தினருக்கு அல்ல.

(Re-published on 23/08/2017)
(Re-published on 24/09/2014)
(Re-published on 01/10/2013)
(Re-published on 15/10/2012)

23 comments

  1. may ALLAH BLESS YOU

  2. YOU MENTIONED THAT DURING 9TH DAY TILL 13TH DAY ASR BUT FOR THIS NO PROFF OF HADIDH MENTIONED ALSO THE WORDING ALSO NOT MENTIONED i.e. HOW TO SAY. KINDLY CLARIFY THIS.

    MAY ALMIGHTY ALLAH BLESS IN THIS WORLD AND THE WORLD HEREAFTER.

  3. good guideness, thankyou

  4. jasakallah khairan

  5. JAZAKALLAHU KAIRA, BARAKALLAHU FEEKA.

  6. jazakhallahu khair.. can add more informations about the importance of those 10 days !!

  7. அஸ்ஸலாமு அலைகும் வரஹ்…
    குர்பானிப் பிராணியின் வயது பற்றி ஏதும் குறிப்பிடப் படவில்லையே? ஹதீஸில் குறிப்பிடப்படும் “முஸின்னா” பருவம் என்பது எதைக் குறிக்கிறது? விளக்கத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.வஸ்ஸலாம்

  8. ulhiya கொடுப்பது pattiya மேலும் தஹவல் அனுப்பி வையுங்கள்

  9. As-Salaamu’Alaikum Wa-Rahmatullaahi Wa-Barakaatuh
    and Jazak Allaah Khair
    very useful..

  10. Muhammed Abdullah

    Assalamu Alaikkum(Varh…..)

    Masha Allah! Very nice.Kindly add more information

  11. alhamdulillah

  12. may peace macy and blessing of allah be on all of yoy. its very interesting. but din’t write about age of animals. pleas rewrite it. i’m expedting it.

  13. MasaAllah

    Useful for all Real Tawheed brothers.

  14. good guidence thank you

  15. ali akbar savalakadai

    jasakallahu kair

  16. Jazakallahu Khairan

  17. masha allah.. this is my first visit.. hear after i will be a regular visitor to your website insha allah.. your website is most helpful for people who want to live according to quran and sahih hadeedh (sunnah). go ahead …………
    may allah bless you ever….

  18. அஸ்ஸலாமு அலைக்கும்
    உல்ஹியா கொடுப்பவருக்கு மட்டும் நகம்,முடிகளை வெட்ட கூடாது என்றால் குர்பான் கொடுப்பது ஒரு குடும்பத்தினருக்கு ஒன்று என்று தானே கொடுக்கின்றோம் அப்பொழுது ( பருவ வயதை அடையாதவர்கள் தவிர்த்து ,ஆணுக்கும், பெண்ணுக்கும் )அனைவருக்கும் தானே அந்த சட்டம்! இதை சற்று விளக்கவும் .

  19. ஹஜ்பெருநாள் உழ்ஹிய்யா சம்பந்தமான அனைத்து ஹதீத் மற்றும் குர்ஆன் வசங்களை முழுமையாக வெளியிடவும்.புகாரி முஸ்லிம் என்று சுருக்குவது வேண்டாம்.

  20. அரபா நோன்பு எப்போது ஹாஜிகள் அரபா வில் கூடும் நாளா இல்ல பிறை 9 இல் வைப்பதா

  21. Jazakallahu Khairan

  22. Al hamdulillah very nice article may Allah help us to follow and guide us in the straight path…

  23. Assalamu alaikkum.kuraban koduppavar naham mudihal kalayyakkoodazu endral.jumma thinaththanrum kooda meesey thadi kaththariththal ponra seyalhal koodaza?thayavu seyzu therinthavarhal kooravum.Assalamu alaikkum

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *