Featured Posts
Home » இஸ்லாம் » அறிவுரைகள் » அழிந்து போகும் கந்தூரிகளும் உயிர்ப்பிக்கத் துடிக்கும் மௌலவிகளும்

அழிந்து போகும் கந்தூரிகளும் உயிர்ப்பிக்கத் துடிக்கும் மௌலவிகளும்

அல்லாஹ்வின் மார்க்கமும் மௌலவிகளின் விளக்கமும் தொடர்..

அல்லாஹ்வின் மார்க்கமாகிய புனித இஸ்லாத்தைக் கற்றவர்கள்தாம் ஸஹாபாக்கள், தாபியீன்கள், அவர்களின் வழித்தோன்றலில் வந்த இமாம்கள். இவர்கள் இஸ்லாத்தை சரியான அடிப்படையில் மக்கள் மன்றத்தில் முன்வைத்து அதற்காக பல இன்னல்களையும் அனுபவித்தார்கள். இவர்கள், ‘லாயிலாஹ’ இல்லல்லாஹ்’ என்ற சத்தியக்கலிமாவையும், அது வேண்டி நிற்கும் பொருளையும் சரிக்குச் சரியாக விளங்கி மக்களை அதன் பக்கம் அழைத்தவர்கள். அதற்காகவே தமது உயிர்களையும் நீத்தவர்கள்,

சத்தியத்தை அசத்தியமாக்கி, பித்அத் (மார்க்கத்தில் புதியவை) களை நபிவழியாக்கி, உண்மையை மறைத்து, அபூலஹப் கொள்கையை அஹ்லுஸ்ஸுன்னாவினறது கொள்கை எனப்பிரகடணப்படுத்தி, மண்ணறைகளில் மண்டியிட்டுப் பிரார்த்தித்து, வயிறு வளர்த்தவர்கள் அல்லர் அந்த உத்தமர்கள். இதற்கு அவர்கள் எழுதிய நூல்களும், போதித்த போதனைகளும் காலத்தால் அழியாச் சான்றுகளாகும்.

கந்தூரி என்பது என்ன? மரணித்தவர்களை கடவுள் நிலைக்குக் கொண்டு சென்று, பள்ளிவாயில்களை உட்சவம், திருவிழாக்கள் கொண்டாடி, பொதுமக்களை வருடத்தில் ஒரு முறை இஸ்லாத்தின் பெயரால் இவைக்கத் தூண்டும் செயலே கந்தூரி.

இதனை இஸ்லாமிய அறிஞர் பெருமக்கள் என்றும் ஆதரிக்கவில்லை. ஷீஆக்களில் வழித்தோன்றல்களே செத்துப்போகும் இந்த மூடப்பழக்கத்தை உயிர்ப்பிக்க களம் இறங்கி காப்பாற்றத் துடிக்கின்றனர்.

கந்தூரி பலவிதம்

இந்தக் கந்தூரி பலவிதம். புகாரி, முஸ்லிம் போன்ற ஹதீஸ் கிரந்தங்களை அரபியில் குறிப்பிட்ட மாதங்கள் வாசித்து அதை விளங்காது, மக்களுக்கு விளக்காது தமாம் செய்து ஆடு, மாடுகளை அறுத்து மக்களை அழைத்து கந்தூரி கொடுத்தல், புர்தா, மௌலிது, ராதிபுகள் போன்ற அரபுப் பாடல்கள்பாடி, அதை தமாம் செய்து, அதற்காக கந்தூரி நடத்துதல், அல்லது குறிப்பிட்ட சில மகான்களின் புகழ் மலையைப்பாடி கொடிகள் ஏற்றி, அவர்கள் பேரில் கால்நடைகளை அறுத்துப்பலியிட்டு நார்ஸா விநியோகித்தல்,

இப்படி பல வடிவங்களில் அரங்கேற்றப்படும் இந்தக்கந்தூரிகள் மொத்தத்தில் அவை அனைத்தும் அல்லாஹ் அல்லாதவர்களைப் புகழ்ந்தும், பாடியும், அவனது தன்மைகைளை மரணித்து மண்ணோடு மண்ணாவிட்ட மகான்களுக்கு வழங்கியும்தான் அவை நடத்தேறுகின்றன.

சில வேளை கந்தூரி கொடுப்பவர் யார் பேரில், எதன் பேரில் கொடுக்கின்றாரோ அந்தக் கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள நபிமொழிகள் அவர்களின் இவ்வாறான செயற்பாடுகளை அனுமதிக்காது என்பதை இவர்கள் அறியாதவர்களாக இருப்பதுதான் இவர்களின் அறிவின் உச்ச நிலை!

புகாரியையும், முஸ்லிமையும் அரபியில் வாசித்து தமாம் செய்வார்கள், அவற்றை ஓதிமுடித்து, கந்தூரி கொடுப்பவர்களிடம் மரணித்தவர் பெயரில் மண்ணறைகள் கட்டுவதையும், அவற்றில் விழாக்கல் நடாத்துவதையும் எச்சரிக்கின்ற, தடை செய்கின்ற பல நபிமொழிகள் வந்துள்ளனவே என்றால் மேலும், கீழுமாக விழிப்பார்கள்,

இது நமது பரம்பரையான பழக்கம், வழக்கம், இதை நாம் தொன்று தொட்டு செய்து வருகின்றோம், புதிதாக நீங்கள்தான் சொல்கின்றீர்கள் என்று மக்கா காபிர்களின் வழிநின்று உளரும் இந்தக் கூட்டம் 1400 வருடங்களுக்கு முன் நபி (ஸல்) அவர்களால் தடை செய்யப்பட்ட இது போன்ற ஷிர்க்கான காரியங்கைள தவ்ஹீத்வாதிகள்தான் உலகில் முதலாவது தடை செய்வது போல போர்கொடி தொடுப்பார்கள்.

சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் மகான்கள் என்று இவர்களாக எண்ணிக் கொண்டிருக்கும் சில மனிதர்களை அரபியில் புகழ்வதால் மழை வருமாம்! பலாய், முஸீபத்துக்கள்தான் நீங்குமாம் என்றெல்லாம் கதை அளக்கும் இந்தக் கும்பலுக்கும் அறியாமையால் தலதாவில் புத்தரின் பல்லை காட்சிப்படுத்துவதால் மழை பெய்யும், சுபீட்சம் பெறும் என்று நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கும், இடையில் என்ன வித்தியாசம் என்று யோசித்துப் பாருங்கள்.

ஒரு ஆச்சரியம் என்ன வென்றால் புத்த பெருமானின் பேரில் நேர்ச்சையை அனுமதிக்காத இந்த புத்தி ஜீவிகள் (?) மரணித்த மகான்கள் பெயரில் இந்த அனாச்சாரங்களை அரங்கேற்றி அதனால் பலாய், முஸீபத்துக்களும் நீங்கும் என மக்களுக்கு தத்துவமும் போதிக்கின்றனர்.

பிரித் ஓதும் மதகுருமார்களா ? அல்லது கூலிப்படைகளா?

இந்த அனாச்சாரங்களை அல்லாஹ்வின் மாளிகைகளில் அரங்கேற்றும் இவர்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை என்ற அமைப்பின் அடையாள அட்டைகளும் விநியோகிக்கப்பட்டுள்ளது என்பதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்!!!

ஏழு ஆண்டுகள் கம்யூனிஸத்தை அரபி மத்ரஸாவில் படிப்பவனுக்கும் உலமா சபை இனிவரும் காலங்களில் ஆள் அடையாள அட்டை வழங்கும் சிந்தனையை விஸ்தரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை எனக் கூறும் அளவு அதன் அண்மைக்கால நடவடிக்கைகள் நமக்கு கட்டியம் கூறுகின்றன.

அவ்வாறான ஒரு நிலையை அ.இ.ஜ.உ. சபை அண்மைக்காலமாக எட்டி விட்டதாகவே அதன் ‘பகிரங்க அறிவித்தல்’ என்ற பழைய தமிழில் எழுதப்பட்டுள்ள அந்த அறிவித்தல் இதற்கு ஒரு சான்றாகும்.

அதில், யாமுஹ்யுத்தீன் எனக் கூறி அழைப்பவனுக்கும், யாஅல்லாஹ் என்று கூறி அழைப்பபவனுக்கும் சமத்துவமான அந்தஸ்தை வழங்கி கௌரவித்திருக்கின்றது. சபாஷ் பாரட்டப்பட வேண்டிய பரஸ்பரமான அணுகுமுறை, நம்மைப் பொறுத்தவரை அவ்வறிவித்தல் ஒரு ஜனநாயக நாட்டில் வாழும் பல்லின மக்களின் உரிமைகள் பற்றி விபரிக்கும் உறுப்புரிமை போன்றே தெரிகின்றது.

அல்குர்ஆனில் அல்லாஹ் கல்விமான்கள் பற்றி புகழ்ந்து கூறுகின்றான்.

إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ

அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு அஞ்சுபவர்கள் ஆலிம்கள்தாம். (பாதிர்: வச: 28),

கற்றவர்களும், கல்லாதவர்களும் சமமாகுவார்களா ? (ஸுமர்: 09), என மற்றுமோர் இடத்தில் கேள்வி எழுப்புகின்றான். இது வெல்லாம் கற்றவர்கள் அல்லாஹ்வை அதிகம் அஞ்சுபவர்களாக இருப்பார்கள் என்பதற்காகே இவ்வாறு கூறியுள்ளான்.

உண்மையான அறிஞர்களின் தகைமை பற்றிக் குறிப்பிடுகின்ற போது ஒரு சட்டத்தை அகழ்ந்தெடுக்கும் திறைமை உடையவர்கள் என்று (பார்க்க: அந்நிஸா. வச: 82 ல் ) பிரஸ்தாபித்துள்ளான்.

உங்களுக்கு முன்சென்ற சமூகத்தவரில் அறிஞர்கள் இருந்து அவர்கள் (மக்களை) தீமையில் இருந்தும் தடுத்திருக்க வேண்டாமா? அவர்களில் நாம் காப்பாற்றிய ஒரு சிலரைத் தவிர வேறு எவரும் (அவ்வாறு செய்யவில்லை). (ஹுத்:116) என்று குறப்பிட்டு தீமைகளைத் தடுக்கின்றவர்களாக அறிஞர்கள் இருக்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றான்.

இது போன்ற இன்னும் பல வசனங்கள் உண்மையான அறிஞர்களின் பண்புகள் பற்றிக் குறிப்பிடும் எதனையும் நமது நாட்டில் வாழும் மௌலவிகளில் (விதிவிலக்காக உள்ளவர்களைத் தவிர) ஏனெய ஒருவருக்குக் கூட எந்தக் காலத்திலும் பொருந்தும் எனக் கூற முடியாத அளவு இவர்களின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன.

இதனால் ஆலிம் என்ற வார்த்தைப் பிரயோகத்தை விட இவர்களுக்கு மௌலவி என்ற சொற்பிரயோகம் பொருத்தமின்றிப் பொருத்தமாகத் தெரிகின்றது.

இவர்கள் பலரின் நிலை யூத, கிரிஸ்தவ மதத்தில் உள்ள பாதிரிகளின் நிலையை ஒத்தே இருக்கின்றது. அவர்கள் என்ன அடிப்படையைக் கொண்டு மக்களை வழி கெடுத்தார்களோ அதே நிலைதான் நம்மைப் பொறுத்தவரை இவர்களிடமும் தெரிகின்றது.

சத்தியத்தைச் சொல்லாது மறைப்பது, மக்களின் சொத்துக்களை தவறான வழியில் உண்பது, மார்க்கத்தைத் திரித்துக் கூறுவது, பெரியார்கள் பெயரில் அளவு கடந்த பாசம் போன்ற இன்னோரென் பண்புகள்தான் யூத, கிரிஸ்தவர்களை வழி புரளச் செய்தது. அந்தக்காரணிகள் அனைத்தும் இவர்களிடமும் காணப்படுகின்றது.

சுருக்கமாகச் சொன்னால் மார்க்கம் பற்றி சாதாரண பொது மக்களிடம் காணப்படும் அடிப்படை அறிவு கூட இல்லாத இந்த மௌலவிகள் சில வேளை கியாமத் நாளின் அடையாளங்களாக கூட இருக்கவும் வாய்ப்பிருக்கின்றது.

ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் மறுமைக்கு முன்னர் நிகழவிருக்கும் பல நிகழ்வுகள் பற்றிக் குறிப்பிடுகின்றார்கள். ஒரு சந்தர்ப்பத்தில்,

………. وينطق فِيهَا ஃ الرويبضة . قيل : وَمَا الرويبضة ؟ قَالَ : الْمَرْء التافه يتَكَلَّم فِي أَمر الْعَامَّة
ابن ماجه، المعجم الطبراني، مسند أحمد

‘ருவைபிழா பேசும்’ என்று குறிப்பிட்டார்கள். அப்போது நபித்தோழர்கள் ருவைபிழா என்றால் என்ன என்று கேட்டார்கள். ‘மார்க்க விபரம் பற்றி தெளிவான அறிவில்லாத ஒருவன் பாரிய விடயங்கள் பற்றிப் பேசுவது என விளக்கினார்கள். (நூல்: இப்னுமாஜா, முஃஜம் தபரானி, முஸ்னத் அஹ்மத்).

இது எவ்வளவு உண்மை என்று பாருங்கள். இமாம்களின் நூற்களைச் சரியாகப்படிக்காத, மார்க்கத்தில் ஆளமான அறிவில்லாத உலமா சபையின் அடையாள அட்டை மௌலவிகளால் சமூகம் எவ்வளவு பெரும் நெருக்கடியை எதிர்நோக்குகின்றது என்பதை சிந்தியுங்கள்.

இவர்கள் நல்லடியார்கள் பெயரில் அரங்கேற்றும் அநாச்சாரங்களுக்கு அளவுதான் உண்டுமா? இவர்கள் வார்த்தையில் சுன்னிக்களாக நம்பிக்கையிலும், நடத்தையிலும் ஷீஆக்களாகவும், அபூஜஹ்ல், உத்பாக்களாகவும் இருக்கின்றனர்.

மத்ஹபு, மத்ஹபு என்று கதறிக் கொண்டு, மக்களை வழிகெடுக்கின்ற இந்தக் கும்பல் இலங்கை நாட்டில் தாம் பெரும்பாலும் சாந்திருக்கின்ற ஷாபி மத்ஹபையாவது கொஞ்சம் அணுகி பத்வாக்களைப் படிக்கலாம் அல்லவா?

அதனையாவது ஒரு முன்னுதாரணமாக இவர்கள் எடுத்திருந்தால் நிச்சயம் விமோசனம் பெற்றிருப்பர், அதுதான் இல்லையே! அதில் கூறப்பட்டுள்ள பத்வாவைப் பாருங்கள்.

‘அல்லாஹ் அல்லாதோருக்காக அறுத்துப் பலியிடுபவனை அல்லாஹ் சபிப்பானாக’ என நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தி முஸ்லிம் என்ற கிரந்தத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு விளக்கமளிக்கும் இமாம் நவவி (ரஹ்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்.

وَأَمَّا الذَّبْح لِغَيْرِ اللَّه فَالْمُرَاد بِهِ أَنْ يَذْبَح بِاسْمِ غَيْر اللَّه تَعَالَى كَمَنْ ذَبَحَ لِلصَّنَمِ أَوْ الصَّلِيب أَوْ لِمُوسَى أَوْ لِعِيسَى صَلَّى اللَّه عَلَيْهِمَا أَوْ لِلْكَعْبَةِ وَنَحْو ذَلِكَ ، فَكُلّ هَذَا حَرَام ، وَلَا تَحِلّ هَذِهِ الذَّبِيحَة ، سَوَاء كَانَ الذَّابِح مُسْلِمًا أَوْ نَصْرَانِيًّا أَوْ يَهُودِيًّا ، نَصَّ عَلَيْهِ الشَّافِعِيّ ، وَاتَّفَقَ عَلَيْهِ أَصْحَابنَا ، فَإِنْ قَصَدَ مَعَ ذَلِكَ تَعْظِيم الْمَذْبُوح لَهُ غَيْر اللَّه تَعَالَى وَالْعِبَادَة لَهُ كَانَ ذَلِكَ كُفْرًا ، فَإِنْ كَانَ الذَّابِح مُسْلِمًا قَبْل ذَلِكَ صَارَ بِالذَّبْحِ مُرْتَدًّا
شرح النووي على مسلم

‘அல்லாஹ் அல்லாதோருக்காக அறுத்தல் என்பதன் நோக்கம் என்னவெனில் சிலைக்காக, அல்லது சிலுவைக்காக, அல்லது மூஸா (அலை), அல்லது ஈஸா (அலை) ஆகியோருக்காக, அல்லது கஃபாவிற்காக, அல்லது அதல்லாதவற்றிற்காக அறுத்துப்பலியிடுபவன் (செயல்) போன்றதாகும். இவை அனைத்தும் ஹராமாகும். அறுப்பவன் முஸ்லிமாகவோ, அல்லது கிரிஸ்தவனாகவோ, அல்லது யூதனாகவோ இருந்தாலும் அந்தப்பலிப்பிராணி ஹலாலாகாது. இதையே ஷாஃபி (ரஹ்) அவர்கள் உறுதியாகக் குறிப்பிட்டுள்ளார்கள், இக்கருத்திலேயே நமது தோழர்களும் ஏகமனதாக இருக்கின்றனர். அத்துடன் அல்லாஹ் அல்லாது யாருக்காக அறுக்கப்படுப்படுகின்றதோ அவரை கண்ணியப்படுத்துவதையும், அவருக்கு வழிப்படுவதையும் அவர் நோக்கமாகக் கொள்வாரானால் அது ‘குஃப்ர்’ எனும் நிராகரிப்பாகிவிடும், அறுப்பவன் முஸ்லிமாக இருப்பின் அறுத்த காரணத்தால் அவன் ‘முர்தத்’ எனும் மதம் மாறியவனாக மாறிவிடுகின்றான். (பார்க்க: ஷரஹ் ஸஹீஹ் முஸ்லிம்: பாகம் -6 பக்கம்: 475)

இவ்வளவு கடுமையான நிலைப்பாட்டைக் கொண்ட தமது மத்ஹபின் தீர்ப்பை முதுகுக்குப்பின் தூக்கி எறிந்த ஷாஃபி மத்ஹப் ஆலிம்கள் என்ன நினைப்பில் பெரியார்கள், மற்றும் அவ்லியாக்கள் பேரில் இவ்வாறான அனாச்சாரங்களை அரங்கேற்றுகின்றனரோ தெரியவில்லை.

கனவின் வெளிப்பாடு மார்க்கமாகுமா?

பெரியார்கள், மகான்கள் என்போர் பேரில் கோவில்களில் நடை பெறும் எட்சவமும் தோற்றுவிடும் அளவு மங்களகரமான முறையில் கந்தூரி நடத்தும் இவர்கள் எல்லா கந்தூரிக்கும் கனவை ஒரு துரும்பாக வைக்கின்றார்கள். புர்தாக் கந்தூரியாகட்டும், மற்ற நிகழ்வுகளாகட்டும் கனவே முதலிடம் வகிக்கும் கனவைப் பிரதானப் படுத்தி மார்க்க சட்டம் பெறலாமா என்றால் முடியாது என்பதே மார்க்கத்தின் தீர்ப்பும், அவர்கள் சார்ந்து நிற்கின்ற மத்ஹபின் தீர்ப்பும்

பெரியார்கள் பேரில் கட்டப்பட்டுள்ள தர்ஹாக்கள் தீய கனவின் வெளிப்பாடாகவே உருவாக்கப்பட்டிருக்கின்றன. மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்த இது ஒரு சாத்வீக வழியிலான அணுமுறை என்றே கூற வேண்டும். இது திவாலாகிப் போன பணவைப்பு முறை போன்றதாகும். இதில் இடப்படும் பணத்திற்கு தர்ஹாக் காவலர்களே நிர்வாகிகளாகும்.

மரணித்த எங்கள் தந்தை கப்று, தர்ஹாக் கட்டச் சொன்னார், சந்தனக் கூடு எடுக்கச் சொன்னார், விழா கொண்டாடச் சொன்னார் என்றால் உடனே அதை நிறைவேற்றி தயாராகிவிடும் இவர்கள் இது தீய கனவு என முடிவு செய்வதில்லை.

எனது அத்தா அல்லது தந்தை என்னைக் கிணற்றில் விழச் சொன்னார் என்றால் அவர்கள் அதை நிறைவேற்றத் தயாராக இல்லை. ஏன் இது கெட்ட கனவு என்று முடிவு செய்யும் திறன் இருக்கின்றது.

நபி (ஸல்) அவர்களின் மரணத்தின் பின்னால் கனவில் கண்டோம் என்பதற்காக அதன் மூலம் மார்க்கத்தை உறுதி செய்ய முடியுமா என்றால் முடியாது என ஷாபி மத்ஹபின் அறிஞரான இமாம் நவவி (ரஹ்) அவர்கள் பின்வருமாறு தீர்ப்புக் கூறியுள்ளார்கள்.

قال النووي رحمه الله: …… لَا يَجُوز إِثْبَات حُكْم شَرْعِيّ بِهِ لِأَنَّ حَالَة النَّوْم لَيْسَتْ حَالَةَ ضَبْطٍ وَتَحْقِيقٍ لِمَا يَسْمَعُهُ الرَّائِي ، وَقَدْ اِتَّفَقُوا عَلَى أَنَّ مِنْ شَرْطِ مَنْ تُقْبَلُ رِوَايَتُهُ وَشَهَادَتُهُ أَنْ يَكُون مُتَيَقِّظًا لَا مُغَفَّلًا وَلَا سَيِّئَ الْحِفْظِ وَلَا كَثِيرَ الْخَطَأِ وَلَا مُخْتَلَّ الضَّبْطِ ، وَالنَّائِم لَيْسَ بِهَذِهِ الصِّفَة فَلَمْ تُقْبَلْ رِوَايَتُهُ لِاخْتِلَالِ ضَبْطِهِ
مقدمة شرح النووي على مسلم

உறக்கத்தின் நிலையில் கனவு காண்பவர் அதனை உறுதி செய்து, சரியான முறைப்படி கூறமுடியாததால் கனவால் மார்க்க சட்டத்தை நிலைப்படுத்த முடியாது. ஒருவரின் சாட்சியம் ஏற்கப்பட அவர், விழிப்புணர்வுள்ளவராகவும், அபார மறதிக்கு உட்படாதவராகவும், மனனத்தில் குறைவில்லாதவராகவும், அதிமதிகம் தவறிழைக்காதவராகவும், ஞாபகம் குன்றிடாதவராகவும் இருத்தல் வேண்டும். (அப்போதுதான் அவரது சாட்சியம் ஏற்றுக் கொள்ளப்படும்) இதில் அறிஞர்கள் ஒருதித்தி கருத்தில் உள்ளனர். உறக்கத்தில் இருப்பவன் இந்த நிலையில் கிடையாது. அவனது ஞாகபத்தன்மையில் குறைவு இருக்கும். ஆகவே அவனது அறிவிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் குறிப்பிடுகிறார்கள். (பார்க்க: ஷரஹ்முஸ்லிம்).

அப்படியானால் உத்பி என்ற விலாசமற்ற கிராமவாசி, நபி (ஸல்) அவர்களின் மண்ணறையில் மன்றாடியதற்காக தனது பாவம் மன்னிக்கப்பட்டதாகக் குறிப்பிடும் கனவை இந்த அடிப்படையிலாவது ஏற்றுக் கொள்ள முடியுமா என நீங்களே சிந்தியுங்கள். இந்த அடிப்படையை புர்தாவிற்கும் பொருந்தும் அது பற்றியும் கவனியுங்கள்.

புர்தா என்றால் என்ன?

‘புர்தா’ என்றால் மேல்போர்வை என்று பொருள்படும். பூஸரி என்ற எகிப்து நாட்டுக் கவிஞர் நோய்ப்பட்டிருந்த போது நபி (ஸல்) அவர்களைப் புகழ்ந்து பாடிய கவிதைகளைச் செவிமடுத்த நபி (ஸல்) அவர்கள், அதனை சரிகண்டதால் அவர்களின் மேனியில் இருந்து அவர்களது போர்வையை இவர்மீது போர்த்திவிட்டதாகவும், அதனால் அவரது தீராத பிணி நீங்கியதாகவும் பொய்யான சரித்திரத்தைப் பின்னணியாகக் கொண்டதே இந்த புர்தா.

அரபுப் பாடல்கள் குர்ஆனைப் போன்றதா?

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஸஹாபாக்கள் ஒட்டகத்தை விரைந்தோடச் செய்ய, காபிர்களுக்கு மறுக்கூற, போர்களத்தில் உட்சாகத்துடன் செயல்பட திருமண நிகழ்வுகள் எனப் பல சந்தர்ப்பங்களில் பாடல்கள் பாடி மகிழந்திருக்கின்றார்கள். அதை பள்ளியில் அமர்ந்து, குறித்த நாளொன்றை ஏற்படுத்தி நபி (ஸல்) அவர்களின் காலத்தி பின் ஓதி பரகத் வேண்டியதில்லை.

மட்டுமின்றி, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உலகில் இருபத்திமூன்று வருடங்கள் நபியாக இருந்து, தனது பணியில் எவ்வித குறைவும் செய்யாது மரணித்தார்கள், அவர்கள் கனவில் தோன்றி மார்க்கத்தைச் சொல்லிக்கொடுத்தார் என்றோ, அல்லது அவர்களின் போதiயில் இன்னும் மீதி இருக்கிறதோ நம்புபவன் முஸ்லிமாக இருக்கவே முடியாது.

தனது தோழர்களை அரபா வெளியில் ஒன்று சேர்த்த நபி (ஸல்) அவர்கள் ‘மறுமையில் என்னைப் பற்றி அல்லாஹ்வினால் வினப்படுவீர்கள். அதற்கு என்னபதில் அளிப்பீர்கள் எனக்கேட்டார்கள். அங்கு சமூகம்தந்த அனைத்து மக்களும் நீங்கள் தூதுத்துவத்தை சரியாக எடுத்துவைத்தீர்கள் எனக் கூறுவோம் எனக் கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை சாட்சியாக்கும் முகமாக தனது ஆட்காட்டி விரலை நீட்டி, பின்னர் அதை மக்கள் பக்கமாகக்காட்டி ‘அல்லாஹ்வே நீ சாட்சியாக இரு! ‘அல்லாஹ்வே நீ சாட்சியாக இரு! ‘அல்லாஹ்வே நீ சாட்சியாக இரு! எனக் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்). இதன் மூலம் எவ்வளவு பெரிய உண்மைகள் இருப்பதை

புர்தாவில் காணப்படுபவை என்ன?

நாகூர் ஹனீபா என்பவர் பாடி உள்ள தமிழில் பாடிய இஸ்லாமிய கீதங்களில் மார்க்கத்தில் ஹரமாக்கப்பட்ட இசையும், ஷிர்க்கும் இணைந்துள்ளது போன்று இதில் இணைவைப்பும், பொய்யும் கலந்திருக்கின்றது. மக்கள் இவற்றை பரகத் வேண்டி ஓதித் தமாம் செய்யும் வழக்கம் சவக்குழிக்குச் செல்லும் நிலையை எட்டியுள்ள நிலையில், அதை வலிந்து உயிர்ப்பிக்கும் ஊர்களும், வெட்கம் கெட்ட மௌலவிகளும், மக்களும் இல்லாமல் இல்லை.

ஷிர்க்குடன் தொடர்புடைய ஓரிரு வரிகளை அதிலிருந்து இங்கு மாதிரிக்காக எடுத்தெழுகின்றோம். எனவே பரவசம் கொள்ளாது படியுங்கள். சிந்தியுங்கள், திருந்துங்கள். சீர்பெறுங்கள். அதை ஓதுவதால் பரகத் அதிகரிக்கும் என குருட்டுத்தத்துவம் பேசி மக்களை வழிகெடுக்காதீர்கள்.

1- يا أكرم الخلق ما لي من ألوذ به

سواك عند حلول الحادث العَمِمِ

பொருள்: படைப்புக்களில் சங்கையானவரே! பெரும் துன்பமான நிகழ்வுகள் ஏற்படும் போது, பாதுகாப்புத் தேட உங்களைத் தவிர வேறு யாரிடமும் செல்ல எனக்கென்ன நேர்ந்ததது!

மறுப்பு: இருபத்தி மூன்று ஆண்டுகள் நபி (ஸல்) அவர்கள் போதித்த போதனையை அப்படியே தகர்த்தெறியும் வரிகளா இல்லையா என்று கொஞ்சம் சிந்தியுங்கள்.

நிர்க்கதியான நிலையில் இருப்பவன் தன்னை அழைக்கின்ற போது அவனுக்கு பதில் அளித்து, கஷ்டத்தை அகற்றி, உங்களை பூமியின் வழித்தோன்றல்களாக ஆக்குபவன் யார்? அல்லாஹ்வுடன் வேறு கடவுளர் உண்டா? நீங்கள் குறைவாகவே சிந்திக்கின்றீர்கள். (அத்:அந்நம்ல். வசனம்:62) என்ற அல்லாஹ்வின் வசனத்திற்கும், இன்னும் பல அல்குர்ஆனிய வசனங்களுக்கும் இது நேர்முரணானதாக இல்லையா?

2- فإن من جودك الدنيا وضرتها + ومن علومك علم اللوح والقلم

(நபியே!) இந்த உலகும், மறுமையும் உமது கொடையில் உள்ளதாகும். லவ்ஹுல் மஹ்பூழினதும், எழுதுகோலான போனாவினதும் அறிவு உமது ஞானங்களில் இருந்தும் உள்ளதாகும்.

மறுப்பு: ‘லவ்ஹுல் மஹ்பூழ்’ என்றால் பாதுகாக்கப்பட்ட பலகை என்பது பொருள். இதில் உலகில் நடக்கும் சகல நிகழ்வுகளையும் அல்லாஹ் பதிவு செய்து வைத்துள்ளான். இது அவனது அபரிமிதமான அறிவின் வெளிப்பாட்டால் அவன் ஏற்படுத்தியாகும்.

இதற்கும் நபி (ஸல்) அவர்களின் அறிவு ஞானத்திற்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை என்பதை சிறுபிள்ளைக்கும் கூட தெரியும். இந்தப் பாடல்களை ஏதோ நபி (ஸல்) அவர்கள் கனவில் தோன்றி அங்கீரத்திதாக நினைத்துக் கொண்டு அவைகளைத் தமாமும் செய்து கந்தூரியும் நடத்தும் மார்க்க அறிவற்ற மௌலவிகள் இது பற்றி கொஞ்சம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

-அபூநதா

9 comments

  1. neengal enna than elithinalum shiek abdullah matrrum thajudeen kanjuki enbavarkalai thirathmudiyathu

  2. Masha Allah. very good explanation. may Allah shower his rahmath upon you. continue your way

  3. salaam to you , Sheik..
    மிக அவசியமான கட்டுரை விளக்கம்……. இதை இந்த உலமா சபை படிக்குமா ??

  4. இறை அச்சத்தை ஏட்படுதும் பயான்கள் மாத்திரம் ஒரு பகுதியில் தகுக்கப்பட்டால் என்ன? பலர் விமர்சனங்களை பார்ப்பதில் நேரத்தை செலவிட விரும்புவதில்லை. புதிதாக கொள்கையை விளங்கி வரும் சகோதர்களுக்கும் பயனுள்ளதக அமயலாம். அல்லாஹ் அஹ்லம்.

  5. Dear

    I have doubt bcoz, in all over the world there are reciting this especially in Arab countries except Saudi.

    So all our doing Shirk.?????????????????????????////

    Thanks

    Mohamed

  6. jazakallahu hair, barakallahu feeka

  7. jazakumullah.good explanation.i wish continue this way.

  8. good news for all Muslim party

  9. மாஷா அல்லாஹ்
    சிறந்த கட்டுரை, தெளிவான விளக்கங்கள்

    ACJU தலைவர் நிச்சயம் இறைவனிடம் பதில் சொல்லியாக வேண்டும்.

    சர்வ வல்லமையுள்ள இறைவன் அல்லாஹுத் தஆலா அனைவருக்கும் ஹிதாயத்தைக் கொடுப்பானாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *