Featured Posts
Home » இஸ்லாம் » அல்குர்ஆன் » அல்குர்ஆனின் போதனை உயிருடன் உள்ளவனுக்கா? மரணித்தவனுக்கா?

அல்குர்ஆனின் போதனை உயிருடன் உள்ளவனுக்கா? மரணித்தவனுக்கா?

-உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி

இவருக்கு (முஹம்மத் நபிக்கு) கவிதையை நாம் கற்றுக் கொடுக்கவில்லை. (அது) அவருக்கு தேவையுமில்லை. இது அறிவுரையும் தெளிவான குர்ஆனும் தவிர வேறில்லை.

உயிருடன் உள்ளவரை எச்சரிப்பதற்காகவும் (நம்மை) நிராகரிப்போருக்கு எதிரான கட்டளை உறுதியாவதற்காகவும் (இதை அருளினோம்) (சூரா யாஸீன்: 69-70).

கண்ணியமும் மகத்துவமுமிக்க அல்லாஹ்வின் இந்த வார்த்தைகள் மிகவும் தெளிவானது. உயிருடன் நடமாடிக் கொண்டு (வாழ்ந்து கொண்டு) இருப்பவனுக்கு வழிகாட்டியாக அருளப்பட்டதுதான் இக் குர்ஆன்.

அல் குர்ஆன் 23 வருடங்கள் நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது. மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் மக்கள் சந்திக்கின்ற பிரச்சனைகளுக்கு தீர்வாகவும் அருளப்பட்டது. குடும்ப வாழ்க்கை சமூக வாழ்க்கை தனிமனித வாழ்க்கை அரசியல் பொருளாதாரம் என்று ஒவ்வொரு துறைக்கும் தெளிவுரையாக அல்குர்ஆன் அருளபட்டது. பூரணமான வாழ்க்கை திட்டத்திற்கு; வழிகாட்டியாக அருளப்பட்ட இக்குர்ஆனை உயிரோடு நடமாடுகின்ற மனிதனுக்கு ஓதிகாட்டி வழிநடாத்த வேண்டும். அப்போது அவனது வாழ்க்கை இறை திருப்;திக்கு உட்பட்டதாக அமையும்.

மனிதன் வாழ்வதற்கான அறிவுரைகள் மிகத் தெளிவாக குர்ஆனில் சொல்லப்பட்டி ருக்கிறது. அல்லாஹ்வின் கட்டளைகளை மீறி நடப்பவனுக்கு ஏற்படும் அபாயங்கள் பற்றியும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. எனவே எக்காரணம் கொண்டும் மனிதன் அல்லாஹ்வின் அறிவுரைகள், போதனைகள் வழிகாட்டிகள் நிறைந்த இக் குர்ஆனை ஒதுக்கி விட்டு வாழ முடியாது. அவனுடைய முழுமையான வாழ்வும் இக்குர்ஆனின் போதனைகளுக்கேற் பவே அமைய வேண்டும்.

மனிதனுடைய விருப்பு வெறுப்புகளுக்கு முன்னுரிமை வழங்குவதை விட அவனை படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ்வின் வெறுப்பு விருப்புகளுக்குத்தான் முதலிடம் வழங்க வேண்டும்.

அல்லாஹ்வை கடவுளாக இறைவனாக ஏற்றுக் கொண்டால் அந்த அல்லாஹ்வின் உத்தரவுகளுக்கே அடிபணிய வேண்டும். எனவே மனிதன் குர்ஆனை விட்டு ஒதுங்கி வாழ முடியாது.

உயிருடன் உள்ளவனுக்குத்தான் இக் குர்ஆன் அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறதே தவிர மரணித்தவனுக்கு உபதேசிக்க வில்லை. மரணத்துக்கு முன்னால் திருந்தி நல்லவனாக வாழ வேண்டும் என்று பணிக்கிறதே தவிர மரணத்துக்கு பின்னால் அவனுக்கு ஓதிக்காட்ட வேண்டும் என்று பணிக்கவில்லை.

மரணத்திற்குப் பின், அவன் எப்படி வாழ்ந்தான்? குர்ஆனின் போதனை படி நடந்தானா? நபிகளாரின் வழிமுறைப்படி வாழ்ந்தானா? என்ற கேள்விகளுக்குதான் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டியவனாக உள்ளான்.

மண்ணறையில் (கப்ரில்) வைக்கப்பட்டவுடன் இரண்டு மலக்குகள் வந்து கேள்வி கேட்பார்கள். உனது ரப்பு யார்? உனது மார்க்கம் எது? உனக்கு அனுப்பப்பட்ட நபி யார்? என்று மூன்று கேள்விகள் கேட்கப் படும். இக்கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டுமானால் திருமறை குர்ஆனை ஓதி படித்து அதன்படி நடந்தால்தான் சாத்தியமாகும்.

இந்த மூன்று கேள்விகளுக்கும் பிறகு மற்றொரு கேள்வியுமுண்டு. அதுதான் அல்லாஹ்தான் ரப்பு, இஸ்லாம்தான் மார்க்கம், முஹம்மத் நபி தான் அனுப்பப்பட்ட தூதர் என்பதை எப்படி அறிந்து கொண் டாய்? என்று மலக்குகள் கேட்பார்கள்.

‘நான் குர்ஆனை நம்பினேன் படித்தேன்’ என்று (நல்லவனாக வாழ்ந்தவன்) பதில் சொல்வான் என்பதை நபியவர்கள் விளக்கப் படுத்துகிறார்கள்.

குர்ஆன் படி வாழ்ந்தால் தான் மலக்கு களின் நான்காவது கேள்விக்கு உரிய பதில் வழங்க முடியும் என்பதை ஹதீஸ் தெளிவு படுத்துகிறது.

குர்ஆன் போதனைப்படியும் நபிகளாரின் ஸுன்னா படியும் வாழாமல் தான் நினைத்த படி வாழ்ந்து விட்டுப் போனால் தப்ப முடியாது. மையத்தை அடக்கிய பின் தலை மாட்டில் ஒருவர் குந்திக் கொண்டு தல்கீன் எனும் பெயரில் கேள்வி பதில் அடிப்படையில் பாடம் சொல்லித் தருவதாலும் வெற்றி பெற முடியாது. அவரவர் வாழ்ந்த முறைப்படிதான் அந்த கப்ரில் பதில் சொல்ல வேண்டி வரும். நன்மை தீமைக்கான கூலிகளைப் பெறமுடி யும். (தல்கீன் ஓதும் முறை நபிகளார் காட் டிய வழிமுறையல்ல).

உயிருடன் உள்ளவருக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய வந்த குர்ஆனை வாழ் ந்து மரணிக்கின்றவனுக்கு ஓதி முடிக்கின்ற சோகமான காட்சியை பார்க்கிறோம். அதிலும் குறிப்பாக யாசீன் சூராவை ஓதி வருகிறார்கள். உயிருடன் உள்ளவரை எச்சரிப்பதற்காகவும் நிராகரிப்போருக்கு எதிரான கட்டளை உறுதியாவதற்காகவும்; அருளப்பட்ட தாக கூறப்படும்; அதே யாசீன் சூராவின் வசனத்தை மரணித்தவருக்கு முன்னால் ஓதிக் கொண்டிருக்கிறார்கள். 3, 7, 15, 30, 40, 60 என்று நாட்களை ஒதுக்கியும் வருடத்திற்கு ஒரு முறை என்று கணக்கு பார்த்து கத்தம் கொடுப்பதற்கும் இந்த யாஸீன் சூரவையே ஓதுகிறார்கள். ஆனால் நபி (ஸல) அவர்கள் எந்த சஹாபியின் மரண வீட்டுக்கும் போய் இவ்வாறு ஓதியதுமில்லை கத்தம் சாப்பிட்டதுமில்லை. என்பதை இவர்கள் தெரிந்து கொள்ள வில்லை.

உயிருடன் உள்ளோரும் மரணித்த வரும் சமமாக மாட்டார்கள் (35:22) என்று அல்லாஹ் கூறுகிறான்.

உயிருடன் உள்ளவனுக்கு ஓதிக் காட்டி போதனை செய்யக் கடமைப்பட்டவர்கள் அப்படி செய்யாமல் உயிரற்ற சிந்திக்க திரனற்ற எழுந்து நடக்க சக்தியற்ற மையத்துக்கு முன்னால் இந்த வசனத்தை (குர் ஆனை) ஓதிக் காட்டுகிறார்கள். கொஞ்சம் சிந்திக்கக் கூடாதா?

அல்லாஹ்வின் கட்டளைகளை போத னைகளை எடுத்து நடக்காத பல சமூகத்த வர்கள் அழிக்கப்பட்ட வரலாற்றை அல்லாஹ் சூராதுல் கமர் எனும் 55ஆவது அத்தியா யத்தில் தெளிவுபடுத்துகிறான்.

இந்த ஒவ்வொரு சமுதாயத்தவர்களுக்கும் நபிமார்கள் அனுப்பப்பட்டார்கள். நபிமார் களுடைய வழிகாட்டல்களை அலட்சியப் படுத்தி வாழ்ந்ததன் காரணமாகவே இவர் கள் தண்டிக்கப்பட்டார்கள் என்று அல்லாஹ் விபராமாக தெளிவுபடுத்திய பின் ‘இக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கி யுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா? என இந்த உம்மைத்தைப் பார்த்து அல்லாஹ் கேட்கிறான்.

இந்த அத்தியாயத்தில் நான்கு இடங்களில் இக்கேள்விகளை திரும்பத் திரும்ப கேட்கிறான். (54:17,22,32,40)

அல்லாஹ்வின் வழிகாட்டல் அடங்கிய போதனைகளை நபிமார்கள் சொல்லிக் காட்டியபோது அதனை ஏற்று பின்பற்றாத வர்கள் அழிக்கப்பட்டார்கள். இந்த அழிவிலி ருந்து முஸ்லிம்கள் படிப்பினை பெறுவதற் காகவும், முன்னைய நபிமார்களின் சமூக மக்களுக்கு வந்த அழிவு முஹம்மத் நபியின் சமூகத்தாருக்கு ஏற்படக் கூடாது என்பதற் காகவுமே ”அல்குர்ஆனை விளங்குவதற் காக எளிதாக்கியுள்ளோம், படிப்பினை பெறுவோர் உண்டா? என அல்லாஹ் கேட்கிறான்.

அல்குர்ஆனை விளங்கி பின்பற்றாவிட்டால் இந்தச் சமூகமும் அழிக்கப்படும் என்ற செய்திதான் எச்சரிக்கையாகச் சொல்லப் பட்டுள்ளது. எனவே உயிருடன் உள்ள ஒவ்வொருவரும் இக்குர்ஆனை ஏற்று விளங்கி செயல்படுவதைத் தவிர தண்டனை யிலிருந்து தப்புவதற்கு வேறு வழியில்லை.

(குறிப்பு: மவ்தானவர்களுக்கு யாசீன் ஓத வேண்டும் என்று பல செய்திகள் உள்ளன. அதனாலேயே ஓதுகிறோம் என சிலர் கூறுகிறார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் அப்படி சொன்னதாகச் செய்த தாக ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் எதுவு மில்லை. மவ்தாகியவர்களுக்கு குர்ஆன் ஓத ஆர்வம் காட்டுபவர்கள் உயிருடன் இருக்கும்போது ஓதி விளங்கி செயல்பட ஏன் அவசரம் காட்டக் கூடாது?)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *