Featured Posts
Home » சட்டங்கள் » ஜனாஸா » பெண்கள் ஜனாஸாத் தொழுகையில் கலந்து கொள்ள முடியுமா?

பெண்கள் ஜனாஸாத் தொழுகையில் கலந்து கொள்ள முடியுமா?

-உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி
பொதுவாக இன்றைய எமது சமூக சூழலில் பெண்கள் பள்ளிவாசலோடு உள்ள தொடர்பை நிறுத்திக் கொண்டார்கள். ரமழான் மாத காலத்தில் மட்டும் பள்ளிக்கு வந்து தொழுகையில் கலந்து கொள்கிறார்கள். ஏனைய சந்தர்ப்பங்களில் ஐவேளை தொழுகைக்கு பள்ளிவாசலுக்கு வருவதில்லை. இதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் பெண்கள் பள்ளிக்கு வரக்கூடாது என்ற தடையேதும் நபியவர்கள் விதிக்கவில்லை என்பதை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நாட்டுப் புறங்களை விட கிராமப் புறங்களில் பெண்கள் பள்ளிக்கு வந்து தொழுகையில் ஈடுபடக் கூடிய அமைதியான சூழல் இருக்கிறது. எனவே அப்பகுதி மக்கள் இது பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் ஐவேளை தொழுகைக்கும் பள்ளிவாசலில் வந்து கலந்து கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன. அதுபோல் ஜனாஸாத் தொழு கையிலும் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு பின்வரும் செய்தி ஆதாரமாக அமைந்துள்ளது.

ஸஃத் இப்னு அபீவக்காஸ் (ரலி) மரண மடைந்த போது நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் தாங்களும் அவருக்காக ஜனாஸா தொழுகையை தொழுவதற்கு அவரது ஜனாஸாவை பள்ளிக்கு கொண்டு வருமாறு அவரது குடும்பத்தாரிடம் சொல்லி அனுப்பினார்கள். அவர்களது குடும்பத்தாரும் அவ்வாறே செய்தனர். தொழுகையின் போது அவர்களின் (நபியவர்களின்) அறைக்கு நேராக ஜனாஸா வைக்கப்பட்டது. அவர்களும் ஜனாஸா தொழுகையை தொழுதனர். தொழுகை முடிந்தபின் (பள்ளி யில்) உட்காரும் திண்டுகளுக்கு அருகிலுள்ள வாசல் வழியாக ஜனாஸா வெளியே கொண்டுவரப்பட்டது.

நிச்சயமாக இச்செயலை மக்கள் குறையாக கண்டு பள்ளிவாசலுக்குள் ஜனாஸாவை கொண்டு சென்றிருக்கக் கூடாது என்றும் கூறுவதாக ஆயிஷா (ரலி) அவர்களுக்கு செய்தி எட்டியது. அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் “தங்களுக்கு தெரியாத விஷயத்தில் குறை காண்பதில் மக்கள் எவ்வளவு அவசரப்படுகிறார்கள். ஸஹ்ல் பின் பைலா (ரலி) அவர்களுக்கும் அவரது சகோதரர் சுஹைல் (ரலி)க்கும் நபி (ஸல்) அவர்கள் பள்ளியிலே தவிர வேறு எங்கும் ஜனாஸா தொழுகை நடத்தவில்லை என்று சொல்லிக் காட்டினார்கள். (அறிவிப் பவர் அப்பாத் இப்னு ஜுபைர் (ரலி) நூல் முஸ்லிம் (973)

பெண்கள் ஜனாஸாத் தொழுகையில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டாலும் ஜனாஸாவை பின்தொடர்ந்து செல்ல அனு மதிக்கப்படவில்லை. “ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்ல (பெண்களாகிய) நாங்கள் நபி (ஸல்) அவர்களால் தடுக்கப்பட்டிருந்தோம். ஆனால் வன்மையாக தடுக்கப் படவில்லை” என உம்மு அதிய்யா (ரலி) அறிவிக்கிறார்கள். நூல்: புகாரி (1278)

5 comments

  1. girls pray in her home s better & as well as it s save for them. All of u knw the current generation’s activities. So, keep ur sister, sister in law,etc., savely. Teach our culture 2 them properly…. Allow our girls to reach the school studies & then send them 2 learn our religious studies… Pls avoid the grilsinvolved in TNTJ & TMMK & also someother meetings… They ask them 2 attend the meeting 2 prove their mass. But its not our culture.

  2. //நாட்டுப் புறங்களை விட கிராமப் புறங்களில் பெண்கள் பள்ளிக்கு வந்து தொழுகையில் ஈடுபடக் கூடிய அமைதியான சூழல் இருக்கிறது. எனவே அப்பகுதி மக்கள் இது பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். //

    அஸ்ஸலாமு அழைக்கும்

    கனம் உஸ்தாத் இம்தியாஸ் ஷலபி அவர்களுக்கு ,நீங்கள் மேலே குறிப்பிட்ட இந்த வசனத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்வது ,பெண்கள் பள்ளிக்கு வருவதை கட்டுபடுத்த வேண்டுமா அல்லது ……..தயவு செய்து சற்று விளக்கபடுத்த்வும்,

  3. கட்டுப்படுத்தவேண்டும் என கூறவில்லை. பெண்கள் ஜமாஅத் தொழுகையில் ஈடுபடுவதற்கான பாதுகாப்பானதாக அமைதியாக சூழல் கிராமங்களில் உண்டு எனவே அவர்கள் தொழுகையில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தவேண்டும் என்கிறேன். அதனால் தானே அவர்களுக்கான அனுமதியை இங்கு குறிப்பிட்டுள்ளேன். ஜஸாகல்லாஹு கைரா

  4. The above is useful and convincing, jazakallah

  5. பெண்கள் தொழுகை வைக்கலாமா?!? ஜனாஸா தொழுகை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *