Featured Posts
Home » இஸ்லாம் » தடுக்கப்பட்டவை » பித்அத் » மஸ்ஜிதுந் நபவியில் நபிகளார் (ஸல்) அடக்கம் செய்யப்பட்டார்களா?

மஸ்ஜிதுந் நபவியில் நபிகளார் (ஸல்) அடக்கம் செய்யப்பட்டார்களா?

-எம்.எஸ்.எம். இம்தியாஸ் ஸலபி
“மஸ்ஜிதுகள் அனைத்தும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானது எனவே அல்லாஹ்வுடன் எவரையும் அழைக்காதீர்கள். (72:18) என அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். அல்லாஹ்வுக்குச் சொந்தமான மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும். அவனுக்கே சுஜூத் செய்யவேண்டும். அவனிடமே சரணடைய வேண்டும். அல்லாஹ்வுக்குச் சொந்தமான வணக்கங்களில் வேறு எவரையும் கூட்டுச் சேர்க்கக் கூடாது.

“துஆ என்பது வணக்கமாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் திர்மிதி) அந்த வணக்கத்தை செய்யக்கூடிய எண்ணத்திலும் இடத்திலும் தொழக்கூடிய மஸ்ஜிதிலும் அல்லாஹ் அல்லாதவர்களை அழைக்கவோ பிரார்திக்வோ கூடாது. மரணித்தவர்களை அடக்கம் செய்யவோ கூடாது.

அல்லாஹ்வை வணங்குமிடத்தில் மரணித்தவர்களை ஏன் அடக்கம் செய்யவேண்டும்?
மகான்கள் என்பவர்களின் கப்றுகள் மஸ்ஜிதில் அமைப்பதினால் அல்லாஹ்வுக்குப் போட்டியாக அவனது வணக்கத்திற்குப் போட்டியாக அந்த மகானை வைத்ததாக ஆகிவிடும். அல்லாஹ்வுக்குரிய அதே வணக்கம், கண்ணியம் தான் மகானுக்குக்கும் உள்ளது என்றாகிவிடும். இந்த பாவத்தை விட்டும் அல்லாஹ் நம்மை காப்பானாக! எனவே அல்லாஹ் வேறு, மகான் வேறு என் அடிப்படையில் மஸ்ஜிதையும் கப்றையும் வேறுப்படுத்த வேண்டும்.

தங்களது நபிமார்களின் கப்ருகளை மஸ்ஜிதுகளாக எடுத்துக் கொண்ட யூத கிறிஸ்தவர்களை அல்லாஹ் சபிப்பானாக என நபி (ஸல்) அவர்கள் கண்டித்திருக்கிறார்கள். (நூல் புகாரி) என்றிருக்கும்போது மகான்கள் அவ்லியாக்கள் என்பவர்களின் கப்ருகளை மஸ்ஜிதுகளாக ஆக்கலாமா? அல்லது மஸ்ஜிதுகளுக்குள் அவர்களுடைய கப்ருகளை வைக்கலாமா? என்பதை சிந்தியுங்கள்.

பள்ளிவாசலுக்குள் அதன் எல்லைக்குள் யாருடைய கப்ரும் இருக்கக்கூடாது. கப்ருகள் உள்ள இடத்தில் தொழவும் கூடாது. இன்றும் சில பள்ளிவாசல்களில் கிப்லாவுக்கு பக்கத்திலும் கிப்லாவை நோக்கியும் கப்ருகள் இருப்பதை காண முடிகிறது. இதனையும் நபியவர்கள் கண்டித்தார்கள்.

கப்ருகளை நோக்கித் தொழாதீர்கள். கப்ருகளில் உட்காராதீர்கள். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூமர்ஸத் (நூல்: முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் வன்மையாக கண்டித்த இச்செயலைப் பற்றி முஸ்லிம்களில் பெரும்பாலானோர் கவனமில்லாமல் இருக்கிறார்கள். எனவே கப்ருகள் மஸ்ஜிதுகளாக்கப்பட்டுள்ள இடங்களில் தொழுகை நடத்துவதை இபாதத்தில் ஈடுபடுவதை அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டுள்ள முஸ்லிம் செய்ய மாட்டான்.

தொழுகை உட்பட அனைத்து வணக்கங்களும் அல்லாஹ்க்கு மட்டுமே சொந்தமானது. தூய்மையான அந்த வணக்கத்தில் மாசு கற்பிக்கப்படக் கூடிய செயல்களை தூரப்படுத்தவேண்டும்.

மகான்களை அவ்லியாக்களை நாம் மதிக்கவேண்டும். மதிக்கிறோம் என்ற பெயரில் அல்லாஹ்வை வணங்கும் இடங்களில் (மஸ்ஜிதுகளில்) அவர்களுடைய கப்ருகளை கட்டிவைப்பதும் அதற்கு சுஜூதுகள் செய்வதும் ஹராமாகும்.

அல்லாஹ்வுக்காக கட்டப்பட்ட “மஸ்ஜிதுல் ஹராம்” எனும் கஃபாவில் 360 சிலைகளை வைத்து அந்த மக்கள் வணக்கம் செலுத்தியபோது அதனை கண்டித்து நபி (ஸல்) அவர்கள் பிரசாரம் செய்தார்கள். 13 வருட காலம் மக்காவில் இந்த (தவ்ஹீத்) பிரசாரத்தை மேற்கொண்டபோது அவர்களால் கஃபாவிலிருந்து சிலைகளை அகற்றுவதற்குரிய சக்தி இருக்கவில்லை. என்றாலும் பத்து வருடங்கள் கழித்து மக்கா வெற்றியின் போது அந்த சிலைகளை கஃபாவிலிருந்து அகற்றி சுத்தப்படுத்தி விட்டுத்தான் கஃபாவிற்குள் நுழைந்து தொழுதார்கள். இந்த சிலைகள் அந்த மக்கள் கண்ணியப்படுத்திய நல்லவர்களாவர்கள் மகான்கள் ஆவர்.

“நபி (ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) வந்த போது கஃபாவில் சிலைகள் இருந்ததால் உள்ளே நுழையமறுத்து அவற்றை அப்புறப்படுத்துமாறு கட்டளையிட்டார்கள். உடனே அவை அப்புறப்படுத்தப்பட்டன. அச்சிலைகளில் (குறிபார்ப்பதற்குரிய) அம்புகளை கையில் தாங்கியவாறு இப்றாஹீம் (அலை) இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் உருவங்களும் இருந்தன. அவற்றையும் வெளியேற்றினார்கள். (இவ்விரு நபிமார்களுக்கும் சிலை கட்டியதற்காக) அல்லாஹ் இவர்களை அழிப்பானாக! இவ்விரு (நபிமார்களு)ம் அம்புகள் மூலமாகக் குறி பார்ப்பவர்களாக ஒருபோதும் இருந்ததில்லை என்பதை இதைச் செய்தவர்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள்”, என்று கூறிவிட்டு நபியவர்கள் கஃபாவிற்குள் நுழைந்தார்கள். அதன் ஓரங்ளில் நின்று தக்பீர் சொன்னார்கள். அதில் தொழவில்லை. அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல் புகாரி(1601)

தவ்ஹீதை போதிக்க வந்த நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்குவதற்காக புனித கஃபாவை (மஸ்ஜிதை) கட்டினார்கள். அந்த கஃபாவிற்குள் அவர்களது சமூகமே இப்றாஹீம் நபிக்கும் இஸ்மாயில் நபிக்கும் சிலைகளை கட்டி வணக்கம் செலுத்தி வந்தனர். இக்காரியத்தை அல்லாஹ்வும் அவனது தூதரும் அனுமதிக்கவில்லை. கட்டப்பட்ட சிலை கூட அப்புறப்படுத்தப்பட்டு கஃபா சுத்தப்படுத்தப்பட்டது என்றால் அவ்லியாக்கள் என கூறப்படுபவரகள் அடங்கப்பட்ட இடங்களை மஸ்திஜ்களாக எடுக்கமுடியுமா? பள்ளிவாசலுக்குள் கப்ருகள் கட்டமுடியுமா? அல்லது கப்ருகள் உள்ள மஸஜித்களில் தொழலாமா? என்பதை சிந்தியுங்கள்.

யூத நஸாராகள் நபிமார்களின் கப்றுகளை மஸஜித்களாக எடுத்து வணக்கம் புரிந்தது சாபத்திற்குரிய காரியங்கள் என நபியவர்கள் கண்டித்தார்களே தவிர சரி காணவில்லை. நபிமாரகளை விட மிகப் பெரிய மகான்கள் உண்டா? அவர்கள் பெயரால் உண்டான கப்று வணக்கம் சாபத்திற்குரியதென்றால் மற்றவர்களின் நிலையை கேட்கவும் வேண்டுமா?

இப்படி சொல்லும்போது கப்ரு வணக்கம் புரிபவர்கள் அதை ஆதரிப்பவர்கள் ஒரு ஆதாரத்தை காட்டுவார்கள். பள்ளிவாசலில் கப்ருகள் கட்டக் கூடாது என்றால் கப்ரு உள்ள பள்ளியில் தொழக் கூடாது என்றால் மதீனாவில் மஸ்ஜிதுந் நபவியில் நபி (ஸல்) அவர்களின் கப்ரு பள்ளிவாசலுக்குள் தானே இருக்கிறது. அந்த நிலையில் தான் மக்கள் தொழுகிறார்கள். இது கூடும் என்றால் அவ்லியாக்களின் கப்ருகள் உள்ள பள்ளியிலும் தொழலாம் தானே என்று கூறுகிறார்கள்.

இவர்கள் நபிமார்களை சாதாரண மக்களினது அந்தஸ்திற்கு இறக்கி இவர்கள் நம்பும் அவ்லியாக்களை உயர்வாக்கி இப்படி கேட்கிறார்கள்.

கப்ருகள் கட்டக்கூடாது கப்ரு கட்டப் பட்டதில் தொழக்கூடாது. பள்ளிவாசலுக்குள் கப்ரு இருக்கக் கூடாது என்று ஹதீஸ்கள் மூலம் ஆதாரங்களை முன்வைத்த பிறகும் கூட அவர்கள் இப்படி வாதம் புரிகிறார்கள். இவர்கள் செய்கின்ற தவறான காரியங்களை நியாயப்படுத்த முனைகிறார்களே தவிர சத்தியத்தை பின்பற்ற முனையவில்லை என்பது தெளிவாகிறது.

நபி (ஸல்) அவர்கள் கப்ரு கட்டுவதை வன்மையாக கண்டித்திருக்கும் போது கப்ருகளை மஸ்ஜிதுகளாக ஆக்கியது லஃனத்திற்குரிய காரியம் என்று எச்சரித்திருக்கும்போது அதற்கு மாற்றமாக எனது கப்ரை பள்ளிவாசலுக்குள் வையுங்கள். பள்ளிவாசலும் என்பது கப்ரும் ஒன்றாக இருக்க வேண்டும். அந்த நிலையில் மக்கள் வந்து தொழ வேண்டும் என்று கூறுவார்களா?

“யாஅல்லாஹ்! எனது கப்ரை விழா கொண்டாடக் கூடிய இடமாக ஆக்காதே! யாஅல்லாஹ் எனது கப்ரை வணங்கப்படக் கூடியதாக ஆக்காதே! என்று தான் நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். நபியவர்களின் இந்தப் பிரார்த்தனைக்கும் எச்சரிக்கைக்கும் ஏற்றார்போல் தான் ஸஹாபாக்கள் நடந்து கொண்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மரணித்த போது அவர்களுடைய ஜனாஸாவை மஸ்ஜிதுந் நபவிக்குள் சஹாபாக்கள் அடக்கம் செய்யவில்லை. அவர்களுடைய வீட்டுக்குள்ளேதான் அடக்கம் செயதார்கள் என்பதை முதலில் புரிய வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் மரணித்தபோது அவர்களை எங்கே அடக்கம் செய்வது என்று ஸஹாபாக்கள் கருத்து வேறுபாடு கொண்டபோது “நபிமார்கள் மரணித்த இடத்தில் அடக்கம் செய்யப்பட வேண்டும்” என்ற ஹதீஸை அபூபக்கர் (ரலி) நினைவு படுத்தினார்கள். உடனே ஸஹாபாக்கள் நபி (ஸல்) அவர்கள் மரணித்த இடமான ஆயிஷா (ரலி) அவர்களுடைய வீட்டுக்குள்ளேயே குழிதோன்றி நல்லடக்கம் செய்தார்கள்.

நபியவர்களின் வீடு மஸ்ஜிதுந் நபவிக்கு பக்கத்திலேயே இருந்தது. மஸ்ஜிதுந் நபவியும் நபியவர்களின் வீடும் ஒரே சுவராக இருந்தது. வீட்டுக்குள்ளிருந்து எட்டிப் பார்த்தால் பள்ளியில் என்ன நடக்கிறது என்று தெரிந்துவிடும். ஸஹாபாக்கள் ஒரு போதும் பள்ளிக்குள் நபியவர்களை அடக்கம் செய்யவில்லை.

அபூபக்கர் (ரலி) உமர் (ரலி) ஆகியோர் மரணித்தபோது நபி (ஸல்) அவர்களது கப்ருக்கு பக்கத்தில் அடக்கம் செய்யப்பட்டார்கள். இம்மூவரும் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் அந்த இடம் நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களுடன் வாழ்ந்த வீடாகும். அந்த வீடு மஸ்ஜிதின் எல்லைக்குள் வந்தபோதும் கூட அதனை வேறுபடுத்தி வேலி போட்டு சுவர் கட்டி மறைத்து வைத்தார்கள். இன்றும் கூடஅந்த வீட்டை வேறு படுத்திதான் வைத்துள்ளார்கள் என்பதை மதீனாவுக்குச் சென்றவர்கள் அறிந்திருப்பார்கள்.

உமர் (ரலி) அவர்கள் மரணத்தருவாயிலில் இருந்தபோது- தான் மரணித்தால் நபியவர்களின் கப்ருக்கு பக்கத்தில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என விரும்பி அதற்காக ஆயிஷா (ரலி) அவர்களின் அனுமதியை கேட்டு வருமாறு தனது மகன் இப்னு உமர்(ரலி) யை ஆயிஷா (ரலி)யிடம் அனுப்பி வைத்தார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் அந்த இடத்தை தனக்கென்று வைத்ததாகவும் அமீருல் முஃமினின் உமர்(ரலி) அவர்களுக்காக அந்த இடத்தை விட்டு தருவதாகவும் கூறினாரகள். (நூல்: புகாரி)

நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) வீட்டில் அடக்கம் செய்யப்பட்டதனாலேயே உமர் (ரலி) அனுமதி வேண்டினாரகள். பள்ளி வாசலாக இருந்தால் ஏன் அனுமதி கோரவேண்டும்.?

அபூபக்கர் (ரலி) உமர் (ரலி) உஸ்மான் (ரலி) அலி (ரலி) ஆகியோர்களது ஆட்சிக் காலங்களில் மஸ்ஜிதுந் நபவி வேறாகவும் நபியவர்கள் அடக்கம் செய்யப்பட்ட வீடு வேறாகவும்தான் இருந்தது. அதாவது நபி (ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கும் போது எப்படி இருந்ததோ அப்படித்தான் இருந்தது. கால ஓட்டத்தில் மஸ்ஜிதை விரிவாக்கம் செய்யப்பட வேண்டிய நிலை வந்த போது ஆட்சித் தலைவர் மர்வானுடைய காலத்தில் நபி (ஸல்) அவர்கள் அடக்கம் செய்யப்பட்டிருந்த அந்த வீடும் அதனை அண்டியப் பகுதிகளும் சேர்த்து மஸ்ஜிதுக்குள் வந்தது.

பள்ளி விஸ்தரிப்பின் போது இந்த வேலையை செய்யவேண்டிய அவசியம் இருந்ததாக அன்று கருதப்பட்டது.

கப்று வணக்கத்தை ஊக்கு விக்க நபியவர்களினதோ சஹாபாக்களினதோ கப்றுகளை பள்ளிவாசலுக்குள் கொண்டு வரவில்லை.

நபி (ஸல்) அவர்களுடைய கப்ரு அபூபக்கர் (ரலி) உமர் (ரலி) ஆகியோரது கப்ருகள் உள்ள அந்த வீடு மஸ்ஜிதுக்குள் வந்துள்ளது என்பதை காட்டி மஸ்ஜிதுக்குள் கப்ருகள் இருக்கக் கூடாது அந்த கப்ருகளை தோன்றி ஜனாஸாக்களை வெளியில் எடுத்து வேறு இடத்தில் அடக்கம் செய்யவேண்டும் என கூற முடியாது. கூடாது. அப்படி செய்ய வேண்டும் என்று எந்த முஸ்லிமும் சொல்லவும் மாட்டான். முனையவும் மாட்டான்.

ஒரு வாதத்திற்காக அபூபக்கர்(ரலி) உமர் (ரலி) ஆகியோர்களது கப்ருகளை தோன்றி ஜனாஸாக்களை வேறு இடத்தில் அடக்கம் செய்தாலும் நபி (ஸல்)அவர்களது கப்ரை தோன்றி வேறு இடத்தில் அடக்கம் பண்ண முடியாது. “நபிமார்கள் மரணித்த இடத்தில்தான் அடக்கம் செய்யப்பட வேண்டும்” என்ற ஹதீஸுக்கு ஏற்ப நபியவர்களின் கப்ரை அகற்ற நினைப்பது பெரும்பாவமாகும்.

மஸ்ஜிதுன் நபவியின் இந்த உண்மையான வரலாற்றை அறியாமல் கப்ருவணக்கம் புரிபவர்கள் தங்களது அபிமானத்திற்குரியவர்களின் கப்ருகளை பள்ளியினுள் கட்டி வைப்பதற்கும் அந்த இடங்களில் தொழுவதற்கும் பூஜிப்பதற்கும் நபி (ஸல்) அவர்களது கப்ரை ஆதாரம் காட்டி பேசுவதும் நபி (ஸல்) அவர்களுக்குச் சமமாக அந்த மகான்களை கணிப்பதும் மாபெரும் தவறாகும்.

இது எல்லாவற்றையும் விட நபியவர்களினதும் சஹாபாக்களினதும் கப்ருகளுடன் இன்றுள்ள கப்றுகளை ஒப்பிட்டு பேசுவதற்கு ஈமானுள்ள ஒரு மனிதன் முனைவானா? யாருடைய கப்றை எவருடைய கப்ருடன் ஒப்பிடுவது என்ற விவஸ்தை இல்லையா?

இப்றாஹீம் நபிக்கு கஃபாவில் சிலை கட்டபட்டது தானே, ஏன் அவ்லியாவுக்கு பள்ளியில் சிலை வைக்கக்கூடாது என்று இனிவரும் காலங்களில் இவர்கள் கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த நிலையில் தான் இவர்களுடைய போக்கு போய்கொண்டிருக்கிறது.

எனவே மேலேயுள்ள ஹதீஸ்களின் பிரகாரம் கப்ருகள் கட்டக் கூடாது கப்ருகள் உள்ள இடங்களை மஸ்ஜிதுகளாக எடுக்கவும் கூடாது தொழவும் கூடாது என்பதை புரிந்து கொள்வோமாக!

23 comments

  1. மிகவும் அருமையான கட்டுரை . எத்தனை எழுதியும் சிலர் இன்னும் திருந்தாமல் இருப்பபது மிகவும் வேதனை.
    ‘நன்றி Jazakkallahu Hairan

  2. இந்தியாவின் முதல் பள்ளியான கேரளா மாநிலம் கொடுங்ஙல்லூர் என்ற இடத்திலுள்ள சேரமான் பெருமான் அரசர் கட்டிய பள்ளியிலும் (முன் ஜனாதிபதி அப்துல்கலாம் பதவியிலிருந்த போது வருகை தந்த பள்ளி அது ) அங்கும் பள்ளிக்கு மத்தியிலாக இரண்டு கப்ருகள் உள்ளன..

  3. Asfahan Shaheed

    First i want to say thanx.(yathakallahu hair).good article for those who are reading Tamil.ALLAH will help to you more and more to service islam.Assalamu Alikkum

  4. ASSALAMU ALAIKKUM VA-RAHMATHULLAH.
    Really a very good and very much needed article. May Allah
    give this writer of this article more strength and knowledge to write more such articles. MAY ALLAH SHOWERED HIS BLESSINGS ON THE WRITER AS WELL AS THOSE WHO READ THIS ARTICLE.

  5. அஸ்ஸலாமு அலைக்கும் வர்ஹ

    தெளிவு பெறவேண்டி ஒரு கேள்வி. நான் தொழுகின்ற பள்ளியில் கிப்லா திசையில் பல கபருக்கள் உள்ளது.
    அதைப்போல மற்றும் ஒரு பள்ளியில் ஒரே ஒரு கப்று கிப்லா பகுதியில் உள்ளது. தொழுகின்ற
    இடத்திற்கும் கபருகளுக்கும் இடையில் ஜன்னல் வைத்த சுவர் உள்ளது. அதுமட்டும் அல்லாமல்
    இங்கோ கப்ருக்கு விழாகளோ அல்லது சந்தன கூடுகளோ நடப்பது இல்லை. இப்படி பட்ட பள்ளிகளில் தொழலாமா ? என்பதை அறிந்தவர்கள் தெரிவிக்கவும் .

    சலாம்
    ASIF

  6. SADDAM HUSSAIN

    Here in Ice House Mosque the Owner of that mosque his name hafiz ahmed khan. Here Some People were asking Dua by standing infront of his Kabar. Masha allah very perfect essay. Alhamdhulillah…!

  7. கப்ருகளை நோக்கித் தொழாதீர்கள். கப்ருகளில் உட்காராதீர்கள். என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூமர்ஸத் (நூல்: முஸ்லிம்)

    இந்த ஹதீஸை ஆதாரமாக கொண்டு ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்)அவர்கள் மற்றும் இமாம் நாசிருந்தீன் அல்பானி (ரஹ்) ஒரு பள்ளியின் கிப்லாவுக்கு முன் பக்கத்திலோ, பின்பக்கதிலோ,வலப்பக்கமோ, இடப்பக்கமோ கப்ரு இருந்தால் அப்பள்ளியில் தொழக்கூடாது என்று மார்க்க தீர்ப்பு அளித்துள்ளனர் மேலும் கூடுதலான தகவலுக்கு fa தாவா இப்னு தைமிய்யா மற்றும் இமாம் நாசிருந்தீன் அல்பானி அவர்களின் தஹ்தீரு சாஜித் மின் இத்தி காதில் குபூரில் மசாஜித் என்ற நூற்களை பார்வையிடவும்

  8. فقال صلى الله عليه وسلم :
    لا تجلسوا على القبور و لا تصلوا إليها – رواه مسلم ( 3 / 62 ) وأبو داود ( 1 / 71 ) والنسائي ( 1 / 124 ) والترمذي ( 2 / 154 ) والطحاوي في ” شرح
    شيخ الإسلام ابن تيمية رحمه الله فقد سئل رحمه الله بما نصه :
    هل تصح الصلاة على المسجد إذا كان فيه قبر والناس تجتمع فيه لصلاتي الجماعة والجمعة أم لا ؟ وهل يمهد القبر أو يعمل عليه حاجز أو حائط ؟ فأجاب :
    الحمدلله اتفق الأئمة أنه لا يبنى مسجد على قبر لأن النبي صلى الله عليه وسلم قال :
    إن من كان قبلكم كانوا يتخذون القبور مساجد ألا فلا تتخذوا القبور مساجد فإني أنهاكم عن ذلك ” . وأنه لا يجوز دفن ميت في مسجد فإن كان المسجد قبل الدفن غير إما بتسوية القبر وإما بنبشه إن كان جديدا وإن كان المسجد بني على بعد القبر فإما أن يزال المسجد وإما تزال صورة القبر فالمسجد الذي على القبر لا يصلى فيه فرض ولا نفل فإنه منهي عنه ” كذا في الفتاوى له ( 1 / 107 / 2 / 192 )

  9. M.H.M.THASLEEM

    thanks for all Really a very good and very much

  10. இம்தியாஸ் ஸலபி

    5வதாக கருத்து பதிந்திருக்கும் சகோ. ஆஸிப் அவர்களுக்கான பதில்
    வ அலைக்கும் ஸலாம்

    பள்ளிவாசலுக்குள் அல்லது பள்ளிவாசலின் கிப்லாவுக்கு முன்பாக கப்று இருக்குமாக இருந்தால் அங்கு தொழுவதை தவிர்ப்பதே சரியானதாகும். அல்லாஹ்-வை வணங்கும் இடத்தில் இன்னுமொருவர் அடக்கம் பண்ணப்படவும் கூடாது அடக்கம் பண்ணப்பட்டவரின் கப்று உள்ள இடத்தில் தொழவும் கூடாது.

    கப்றை பள்ளிவாசலுடன் இணைக்காமல் கப்று வணக்கத்திற்கு வழியில்லாத வகையில் பள்ளிவாசல் இருந்தால் மட்டுமே தொழவேண்டும்.

    பள்ளிவாசலுக்கும் கப்றுக்குமிடையில் ஜன்னல் வைத்த சுவர் இருந்தால் கப்று வணக்கத்திற்கு சாத்தியமுண்டு. ஈமானிய பலஹீனமுள்ளவர் அந்த வணக்கத்தில் விழ நிறைய இடமுண்டு. கப்று வணக்கத்திற்கு இடமில்லாத வகையில் ஜன்னலும் இல்லாமல் சுவர் முழுமையாக இருந்து பள்ளியும் கப்ரும் தனித்திருக்க வேண்டும். அல்லாஹூஅஹ்லம்.

    இம்தியாஸ் ஸலபி

  11. M.A.Ahamed Zacky

    மரியாதைக்குரிய மௌலவி அவர்களே, கீழ் வரும் சில சந்தேகங்களுக்கு தெளிவு வேன்டுகிறேன்.
    1) மஸ்ஜிதுன் நபவி என்பதன் கருத்து யாது?
    2) தற்போதுள்ள மஸ்ஜிதுன் நபவியில் நீங்கள் குறிப்பிட்டுள்ள நபிகளாரின் வீட்டுக்கு ஜன்னல், கதவு இருக்கிறதா?
    3) அந்த வீட்டை முன்னோக்கியோ அல்லது வலம் இடமாக்கியோ இன்று மஸ்ஜிதுன் நபவியில் தொழுகை நடாத்தப்படுகிறதா?
    4) மஸ்ஜிதுன் நபவியை விசாலமாக்கும் வேலையின்போது நீங்கள் குறிப்பிட்டபடி ஆட்சித் தலைவர் மர்வான் அன்று செய்தது தவறா? ஆமாயின் அத்தவறை இற்றைவரை திருத்துநதற்கு நடவடிக்கை எடுக்கபடமலிருப்பது ஏன்?

  12. அஸ்ஸலாமு அலைக்கும்

    சகோதரர் இம்தியாஸ் ஸலபி அவர்களுக்கு,

    இந்த தலைப்பை விட முக்கியாமான ஒரு விஷயம் பற்றி இதற்க்கு முன் நான் சில கருத்துக்கள் வைத்தேன்.

    மறுமையில் அல்லாஹ்வை காண்பது பற்றி கோவை அய்யூப் என்பவர் பேசும் அந்த தலைப்பின் கீழ் வைத்தேன் .

    அதை தாங்கள் பார்த்தீர்களா? அந்த வீடியோ வையும் என்னுடைய கருத்தையும் பார்த்தீர்களா?

    சுல்தான்

  13. M H RAHMAN.AYANGUDI

    தெளிவு பெறவேண்டி ஹதீஸை மிகவும் அருமையான கட்டுரை. எத்தனை எழுதியும் சிலர் இன்னும் திருந்தாமல் இருப்பபது மிகவும் வேதனை.

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

  14. M.A.Ahamed Zacky

    அன்புள்ள மௌலவி அவர்களே,

    என்னுடைய கேள்விகளுக்கான பதில்களை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்.

    நன்றி.

  15. Assalamu alikum varah….

    alhamdulillah.
    It is very important and good one.every people want read this, Allah save us from sirk.

    Assalamu alikum varah…

  16. கேள்வி கேட்டவர்:. M.A.Ahamed Zacky
    சகோதரரே! உங்கள் விமர்சனம் கண்டதும் இதனை எழுதுகிறேன்.

    1. மஸ்ஜிதுன் நபவி என்றால் நபி(ஸல்) அவர்களின் பள்ளிவாசல் என பொருளாகும்.

    2. ஆம். இதற்கான ஆதாரம் புகாரியில் தொழுகையுடைய பாடத்ததில் காணலாம்.

    3. இமாம்களான நவவி (ரஹ்) இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்)அவர்கள் இது குறித்து அளித்திருக்கும் பின் வரும் பதிலை முன்வைக்கிறேன்.

    ‘மண்ணறையை எல்லைமீறி கண்ணியப்படுத்துதல், அதனால் ஏற்படும் குழப்பம்; போன்றதை அஞ்சியே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனது கப்ரையும், பிறரின் கப்ரையும் பள்ளியாக எடுக்கக் கூடாது என தடுத்திருக்கிறார்கள், சென்ற சமுதாயத்தவரில் ஏற்பட்டது போல் சிலவேளை ‘குஃப்ர்’ நிராகரிப்பின் பக்கமும் இது இட்டுச்செல்லாம், முஸ்லிம்கள் அதிகமான போது (மதிப்புக்குரிய) ஸஹாபாக்களும், தாபியீன்களும் (சங்கைமிக்க) அல்லாஹ்வின் தூதரின் பள்ளியை விஸ்தரிக்க வேண்டிய தேவை ஏற்பட்ட போது உம்முஹாத்துல் முஃமினீன்களின் அறைகளும் அந்த விஸ்தரிப்பில் உள்ளடங்கியது. அதில் அல்லாஹ்வின் தூதரின் (புனித) அடக்கஸ்தலமும், அவர்களின் இருதோழர்களான அபூபக்கர் (ரழி), உமர் (ரழி) ஆகியோரின் அடக்கஸ்தலங்களும் அமைந்திருக்கும் அன்னை ஆயிஷா (ரழி) அவர்களின் அறையும் ஒன்றாகும். நபி (ஸல்) அவர்களின் அடக்கஸ்தலத்தை சூழ வட்டவடிவில் பள்ளிக்கு தென்படாதவிதமாக நீண்ட சுவர் எழுப்பப்பட்டது, அங்கு பொது மக்கள் தொழுவார்கள் (இருப்பினும்) மார்க்கத்தில் எச்சரிக்கப்பட்டது தவிர்க்கப்பட்டு விடும். இதன் பின்னரும் அதன் இரு வடமுனைகளிலும் இரு சுவர்களை எழுப்பினார்கள், கப்ரை முன்னோக்காதிருக்க அவற்றின் இரு முனையும் (ஒன்றுடன் ஒன்று) படும்படியாக அவ்விரு சுவர்களையும் திருப்பியும் வைத்தனர், இதற்காகத்தான் ஹதீஸில் ‘இந்த எச்சரிக்கை இல்லாதிருப்பின் அவர்களின் கப்று வெளிப்படுத்தப்பட்டிருக்கும் எனினும் அது பள்ளியாக மாற்றப்பட்டுவிடுமோ என அவர்கள் அஞ்சியுள்ளார்கள்’ இவ்வாறு அறிஞர்கள் கூறியுள்ளார்கள். (அல்லாஹ்வே சரியானதுபற்றி நன்கு அறிந்தவன்). என இமாம் நவவி (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். (ஷரஹ் ஸஹீஹ் முஸ்லிம். பாகம்: 2- பக்கம் 225)

    ‘மஸ்ஜிதுன் நபவி’.. விஸ்தரிக்கப்பட்ட போது (தொழும்) ஒருவர் கிப்லாவை முன்னோக்குவதுடன், கப்ரை முன்னோக்காதவாறு அன்னை அவர்களின் அறை முக்கோண வடிவில் அமைக்கப்பட்டிருந்தது’ என விளக்குகிறார்கள். (ஃபத்ஹுல்பாரி. பாகம் 4. பக்கம்: 390)

    4.ஆட்சி தலைவர் மஸ்ஜித் விஸ்தரிப்பு கருதி அன்று செய்த வேளை மக்கள் நலன் கருதியாக இருந்திருக்கலாம் எனினும் கப்று வணக்கத்திற்கு இடம் தராத வகையில் தான் அந்த விஸ்தரிப்பு நடந்துள்ளது .மேலேயுள்ள இரு இமாம்களின் விளக்கத்தில் மேலதிக விளக்கமுள்ளதை நீங்கள் கவனிக்கலாம். அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

  17. கேள்வி கேட்டவர். Thoobaah

    சகோதரரே! நான் அதை (நீங்கள் குறிப்பிட்ட அந்த வீடியோ மற்றும் உங்கள் கருத்தை) பார்க்கவில்லை.

    ஜஸாகல்லாஹு கைர்.

  18. இப்றாஹீம் நபிக்கு கஃபாவில் சிலை கட்டபட்டது தானே, ஏன் அவ்லியாவுக்கு பள்ளியில் சிலை வைக்கக்கூடாது என்று இனிவரும் காலங்களில் இவர்கள் கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

    kaabavil silai vaithathathu muslimkala arivudan katturai ezhuthavum

  19. evvalavu pesura neenkal nabi(sal) kabru ulla pakuthiyil ulla masjid edikka vendiyathu thana unkalal mudiyuma?

  20. ஒரு வாதத்திற்காக அபூபக்கர்(ரலி) உமர் (ரலி) ஆகியோர்களது கப்ருகளை தோன்றி ஜனாஸாக்களை வேறு இடத்தில் அடக்கம் செய்தாலும் நபி (ஸல்)அவர்களது கப்ரை தோன்றி வேறு இடத்தில் அடக்கம் பண்ண முடியாது. “நபிமார்கள் மரணித்த இடத்தில்தான் அடக்கம் செய்யப்பட வேண்டும்” என்ற ஹதீஸுக்கு ஏற்ப நபியவர்களின் கப்ரை அகற்ற நினைப்பது பெரும்பாவமாகும்.

    உங்களை யாரு கபுரை அகற்ற சொன்னது, பேசாம கபுறு பின்னாடி உள்ள பள்ளிய இடிச்சா போதுமே தேவை இல்லாமல் எதுவும் கட்டுரையில் எழுத வேண்டாம்

  21. இப்றாஹீம் நபிக்கு கஃபாவில் சிலை கட்டபட்டது தானே, ஏன் அவ்லியாவுக்கு பள்ளியில் சிலை வைக்கக்கூடாது என்று இனிவரும் காலங்களில் இவர்கள் கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

    காபாவில் சிலை வைத்தது முஸ்லிம்களா?

  22. Masha allah very beautiful artical and it is use full for all muslims jazakallahu khairu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *