Featured Posts
Home » பொதுவானவை » நிகழ்வுகள் » மோடியின் வெற்றியும் அதில் மகிழ்பவர்களும்

மோடியின் வெற்றியும் அதில் மகிழ்பவர்களும்

குஜராத் தேர்தலில் மீண்டும் நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பற்றி பலரும் பதிவிட்டுள்ளனர். அவற்றில் சிறந்தப் பதிவாக கருதப்படுகிற நண்பன் ஷாஜியின் பதிவுக்கும், பனிமலரின் பதிவுக்கும் நானளித்த பின்னூட்டம் இது:

ஜனநாயகம் என்பது பணபலமும் படைபலமும் தான், சாமானியனுக்கு அதில் பங்கில்லையோ என்று எண்ண வைத்தது மோடியின் தேர்தல் வெற்றி.

எல்லோருமே எதிர்பார்த்த ‘இந்த வெற்றி’யில் புளகாகிதமடைந்து பதிவிடுபவர்களும் நாம் ‘எதிர்பார்த்தவர்கள்’ தான்.100க்கு 41 பேர் (விருப்புவெறுப்பு, பயம், விரக்தி, அலட்சியம் போன்ற) பல காரணங்களால் வாக்களிக்காமலே இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கக் கூடும்.

வாக்களித்த 59ம் சிதற 59ல் பெரும்பான்மை, நிச்சயம்30%க்கு குறைவான வாக்குகளைப் பெற்றவரே வென்றதாகச் சொல்வது முறையான ஜனநாயகமா?கொலை, கொள்ளைக்காரர்கள், சினிமாகவர்ச்சி ஆகியன வெல்வதாகத்தெரிவது இதனால் தான்.(இதற்காகத்தான் தேர்தல் அமைப்பை மாற்றியமைக்கச் சொல்கிறோம்).அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் அமைப்பை மாற்றியமைத்தால், மோடிகள் தங்களுக்குண்டான 30% கும் குறைவான குண்டர்களுடன் தோல்வியையே தழுவ வேண்டியிருந்திருக்கும்.

கடும்குற்றவாளியாக தண்டனை பெறவேண்டியவர்கள் முதலமைச்சராகவும்,உள்துறை அமைச்சராகவும் ஆவது நம் தேசத்தின் சாபக்கேடு ஆகும்.ஆ.வி ஆசிரியரை சிறைக்கு அனுப்பக் காரணமாயிருந்த கருத்துப்படத்தின் வரிகளில் ஜேப்படி, பிக்பாக்கெட் என்றிருந்தவற்றில் மட்டும் இனப்படுகொலைக்காரன், ஆலய இடிப்புக்காரன் என்று மாற்றிப் படிக்கும் நிலை நம் தாய்த்திருநாட்டில் உண்மையாகி வருவது நேர்மையுள்ள எவருக்கும் உவப்பாக இருக்க முடியாது.

மோடி செய்த இனப்படுகொலைகளை தவறிச்செய்த ஒன்றாக கருத இடமேயில்லை. தவறிச்செய்திருந்தால், குறைந்தபட்சம் உதட்டளவு மன்னிப்பாவது கேட்கப்பட்டிருக்கும். ஆனால் இங்கோ அந்தப்படுகொலைகளுக்காக ஒரு மிருகப் பெருமிதமே வெளிப்பட்டது. எனவே தயவுசெய்து பாலாக்கள் //தவறு தவறு தான்// என்று சொதப்பாமல், கொலைகாரர்களையும் தெரிந்தே எடுக்கும் ஜனநாயக ஓட்டைகளை அடைக்கும் வழிகளை யோசிக்கட்டும்.

மோடியாக இருந்தாலும், ஹெச்.கே.எல். பகத்தாக இருந்தாலும், நாம் சொல்வதெல்லாம் முதலில் குற்றங்களுக்கான உரிய தண்டனையையோ அல்லது பாதிக்கப்பட்டவர்களின் மானசீக மன்னிப்பையோ பெறவேண்டும். அதன்பிறகே, தேர்தல் களம் காணமுடியும் என்று சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும். அப்படி செய்தால் தான் ஜனநாயகம் அதன் பொருளை இழக்காதிருக்கும்.

8 comments

  1. வெத்து வேட்டு

    only terrorists muslims who now know they cannot touch Modi are furious at Modi’s victory…

  2. வெத்து வேட்டு

    கலவரத்தை …கலவரத்தால் எதிர்ப்பது…ஆயுதம் எடுப்பவனுக்கு பதிl ஆயுதம் ….அமைதி காப்பவனுக்கு பதில் அஹிம்சை…இதுதான் கொள்கை.

  3. சுட்டுவிரல்

    வாங்க மிஸ்டர் வெத்துவேட்டு,
    உங்க பேரு மாதிரியே உங்க கருத்தும் இருக்கறதாலே ஒண்ணும் சொல்றதுக்கில்லே….
    வேற எடம் பாருங்க!

  4. நண்பன்

    சுட்டுவிரல்,

    தனிப்பதிவாகவும் செய்ததற்கு பாராட்டுகள்.

    தொடர்ந்து எழுதுங்கள்.

    வாழ்த்துகள்

    அன்புடன்

    நண்பன்

  5. இறை நேசன்

    //வாக்களித்த 59ம் சிதற 59ல் பெரும்பான்மை, நிச்சயம்30%க்கு குறைவான வாக்குகளைப் பெற்றவரே வென்றதாகச் சொல்வது முறையான ஜனநாயகமா?கொலை, கொள்ளைக்காரர்கள், சினிமாகவர்ச்சி ஆகியன வெல்வதாகத்தெரிவது இதனால் தான்.(இதற்காகத்தான் தேர்தல் அமைப்பை மாற்றியமைக்கச் சொல்கிறோம்).அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் அமைப்பை மாற்றியமைத்தால், மோடிகள் தங்களுக்குண்டான 30% கும் குறைவான குண்டர்களுடன் தோல்வியையே தழுவ வேண்டியிருந்திருக்கும்.//

    நூற்றுக்கு நூறு சத்தியமான வார்த்தைகள்!

    மனிச மாமிசத்தை உண்டு வாழும் மோடி கும்பலின் 30% ஆதரவு வெற்றியைக் கொண்டாடும் பாலா & டோண்டு குழுவினர் தன்னைத் தானே மெச்சிக் கொள்ளட்டும்.

    அடக்கி வைக்கப்படுபவன் எந்நாளும் அடங்கியே போவான் என கனவு காண வேண்டாம்.

    அநியாயமாக மக்களைக் காவு வாங்கும் கூட்டமும் அதற்கு காவடி தூக்கி புளகாங்கிதப்பட்டுக் கொள்ளும் கூட்டமும் நீண்ட நாட்களுக்கு அதே மகிழ்ச்சியுடன் உலா வர முடியாது.

    தங்களுக்கான இறுதி முடிவை தாங்களே நிச்சயித்துக் கொண்டு அலையும் இரத்த வெறிப் பிடித்த கூட்டம்.

    இறை நேசன்

  6. சுட்டுவிரல்

    நண்பன்,
    உங்கள் ஊக்கத்திற்கு நன்றி.

    இறைநேசன்,
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  7. இது மௌனமா இல்லை மரணமா
    என்று தெரியவில்லை.
    வார்த்தைகள் மட்டும் தான் செத்துப் போனதா
    இல்லை செயல்கள் கூட செத்துப் போனதா
    என்றும் புரியவில்லை..

    வயிற்றில் சுரக்கும் அமிலம் எரிக்க சோறில்லாமல்
    இங்கே குடல்கள் எரிந்து சாம்பலாகிறது..
    கொலைகளின் வெற்றிப் பெருமிதம்
    முகத்தில் அறைந்த நரகலாய் நாறுகிறது..
    சுவர்களற்ற வெளியில் குளிரும் கூட அலைகிறது
    உயிர்கள் தேடி..
    குளிரின் ஓய்வுக்குக் காத்திருக்கிறான்
    சூரியன்..
    விதைத்த விதைகளோ தாம்புக்கயிறுகளாய் முளைக்கிறது
    அறுத்ததை விற்றால் பூச்சி மருந்தே மிஞ்சுகிறது

    உண்டது மட்டுமல்ல கண்டதும் கூட மலமாய்க்
    கழிகிறது..
    தெரிக்கும் இரத்தத்துளிகளில் ஓவிய நளினம்
    தேடும் கண்கள்..
    ஓலங்களின் ஒலியில் சிம்பொனி தேடும்
    காதுகள்..
    பிணங்களின் நாற்றத்துக்குப் பழகிப் போன
    நாசிகள்..

    உடல் இயங்கிக் கொண்டுதானிருக்கிறது..
    உணர்வுகள்…..?

  8. ஆங்கில ஊடகங்களை குஜராத் தேர்தல் என்னும் கண்கட்டு வித்தை அடைத்துக் கொண்டு பல வண்ண ஜாலங்களை நிகழ்த்திக் காட்டிக் கொண்டிருக்கிறது. தற்சமயம் எந்த நடிகையின் படுக்கையறை சமாச்சாரங்களையும் விட ‘சுவாரசியமான’ பல காட்சிகளை இந்தத் தேர்தல் தன்னுள் கொண்டிருப்பதால் ஊடகங்கள் இதை ஒரு திருவிழாவுக்கு ஒப்பாக கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. மேடையில் ஜாலக்காரன் தனது அங்க அசைவுகளில் மக்களைக்
    கட்டிப் போட்டு விட்டு லாவகமாக தனது சித்து வேலையைக் காட்டுவது போல, இந்த ஊடகங்கள் உண்மையான நிலைமையை பார்க்கவிடாமல் நமது கண்ணில் மண்ணைத் தூவுகிறார்கள்.

    இந்தத் தேர்தல்களில் யார் வெல்லப்போகிறார்கள் என்பது பல அரங்க உரையாடல்கள் மூலம் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தல்களில் ஒருவேளை காங்கிரஸ் கூட வெல்லக்கூடும். அப்படி ஏதாவது ஒரு அதிசயம் நிகழ்ந்தால் இரண்டு காரணங்களை ஊடகப் புலிகள் முன்வைக்கும் வாய்ப்பு இருக்கிறது – 1) இந்துத்துவம் தோற்கடிக்கப்பட்டு விட்டது 2) குஜராத்திகள் இதைவிட வேகமான வளர்ச்சியை கோருகிறார்கள்… ஒரு வேளை பார’தீய’ சனதா வென்றால் – 1) இந்துத்துவம் வென்றது 2) குஜராத்திகள் கடந்த அய்ந்து ஆண்டுகள் மோடி செயல்படுத்திய வளர்ச்சித் திட்டங்களால் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.

    இந்த ஊடக விவாதங்களில் கேள்விக்கப்பாற்பட்டதாக மோடி குஜராத்தில் செயல்படுத்திய ‘வளர்ச்சித்’ திட்டங்களை முன்வைக்கிறார்கள். அப்படி குஜராத் என்ன தான் வளர்ந்து விட்டது? மாநில அரசே ஒப்புக்கொண்ட தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 500 ஆனால் “பல்வேறு காரணங்களுக்காக” உயிரை மாய்த்துக் கொண்டவர்களின் எண்ணிக்கையோ 6,055 ( http://in.news.yahoo.com/071011/32/6lu61.html ) இதற்கெல்லாம் காரணம் புதிய பொருளாதாரக் கொள்கைகளும், அதன் விளைவாக விளை பொருட்களுக்கு விலைகிடைக்காததும் முடிவில்
    கடன் சுமை என்னும் மீள முடியாத வலையில் சிக்கிக் கொள்வதும் தான்.குஜராத், இந்தியாவில் தரகு முதலாளிகளின் சூரையாட்டத்திற்கான ஒரு இடமாகவே இருக்கிறது. உழைக்கும் மக்களோ நாட்டின் பிற மாநிலங்களைவிட மிக அதிகமாகவே சுரண்டப்படுகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பே கூட்டுறவு வங்கிகள் நாசமாகிப் போனதால் சிறு தொழில்கள் ஆதரிப்பார் இன்றி நலிவடைந்து வருகிறது. கடற்கரையோரங்கள் இரால் பண்ணைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு மீன் பிடித் தொழில் பாதிக்கப்பட்டிருக்கிறது.

    ஆனால் இதையெல்லாம் வெளிப்படையாக பேச முடியாத சிக்கலில்
    காங்கிரசு இருக்கிறது. மன்மோகன் சிங்கோ மோடியின் இந்தப் பிரச்சாரத்துக்கு மறைமுகமாக வலு சேர்க்கும் விதத்தில் “குஜராதின் வளர்ச்சிக்கு மோடி மட்டுமே உரிமை கொண்டாடி விட முடியாது” என்று வெட்கம் கெட்டத்தனமாக பேசுகிறார்.

    (http://timesofindia.indiatimes.com/India/Gujarat_doesnt_owe_its_growth_to_

    Modi_alone_PM/articleshow/2615710.cms)ஒருவேளை மோடியின் வளர்ச்சிப் பிரச்சாரத்தைப் அம்பலப்படுத்தி காங்கிரசு பேசியிருந்தால் அது சேம் சைடு கோல் ஆகியிருக்கும். ஏனெனில் நாட்டின் பிற பகுதிகள் எப்படி “வளர்கிறதோ” அப்படித்தான் குஜராத்தும் “வளர்கிறது”. உண்மையில் .

    காங்கிரசு – பாஜக இடையே பொருளாதாரக் கொள்கையில் எந்த வேறுபாடும் கிடையாது. இருவரும் உலகவங்கியின் தாசர்கள். இருவரும் வளர்ச்சி என்பது விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கை உயர்வதற்கு ஏற்ப உயரும் புள்ளிகள் என்று மனப்பூர்வமாக நம்புகிறவர்கள். இந்த விசயத்தில் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாகத் தான் நடந்து கொள்ள முடியும். இந்த அம்சத்தில் இருவருக்கும் முக்கியமான முரண்பாடுகள் கிடையாது. இப்படியாக குஜராத்தில் ஏற்பட்டுள்ள “வளர்ச்சி” பற்றி இருவருமாக மாறி மாறி பேசிக்கொண்டிருந்தால் மக்களே ஒரு கட்டத்தில் காறித் துப்பி இருவரையுமே தூக்கி அரபிக் கடலில்
    எறிந்திருப்பார்கள்.

    எனவே சமயம் பார்த்து காத்துக் கிடந்த மோடி, சோனியா சாதரணமாக “மரண வியாபாரிகள்” என்று சொன்னவுடன் ( பிற்பாடு தேர்தல் கமிசன்
    இதற்கு சம்மன் அனுப்பிய போது சோனிய அப்படியே பல்டியடித்து விட்டார்) தனது பிரியமான இந்துவெறிப் பிரச்சாரத்தை துவங்கி, மத்திய வர்க்க இந்துக்களிடையே ஏற்கனவே ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் இந்து வெறியின் சார்ஜ் இறங்காமல் பார்த்துக் கொண்டார்.

    காங்கிரசுக்கு இருக்கும் ஒரு முக்கியமான பிரச்சினை அதன் போலி மதச்சார்பற்ற முகமூடி. தேசிய அளவில் தான் ஒரு மதச்சார்பற்ற
    கட்சி என்று வேசம் கட்டியாக வேண்டிய நெருக்கடியில் அந்தக் கட்சி இருக்கிறபடியால் அதன் மைய்யக் கமிட்டித் தலைவர்கள் தமது பிரச்சாரக் கூட்டங்களில் மோடியை எதிர்த்தும், இந்துத்துவத்தை “எதிர்த்தும்” பேசியாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆனால் அதே நேரம் அக்கட்சியின் குஜராத் மாநிலக் கமிட்டிக்கோ இந்துத்துவத்தை எதிர்த்து லேசாக செருமக் கூட தயாராக இல்லை. ஏறக்குறைய ‘பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்’ என்பது தான் காங்கிரசின் பாணி அரசியல்; ஒரு பக்கம் முஸ்லிம் ஓட்டுக்களும் தேவை – அதே நேரம் இந்துத்துவத்துக்கு எந்த பங்கமும் வந்துவிடக் கூடாது.

    காந்தியால் பண்படுத்தப்பட்ட நிலமான குஜராத்தில் பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ் கும்பல் பல பத்தாண்டுகளாக பொறுமையாக தமது பாணியிலான இந்துத்துவத்தை விதைத்திருக்கிறார்கள். இது அந்த விதைப்பின் அறுப்புக்காலம். யார் அறுப்பது என்பதே இந்த இப்போதைக்கு இருவருக்குமிடையேயான போட்டியாக இருக்கிறது. காங்கிரசு பல ஆண்டுகளாக இந்துத்துவ கும்பலின் இந்த வேலையை அடிமட்ட அளவில் எதிர்க்கும் அரசியலை செய்யவில்லை. அப்படிச் செய்வது அதன் திட்டத்திலும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் காங்கிரசுக்கு இந்துத்துவத்தை எப்படிச் செயல்படுத்துவது என்பதில் வேண்டுமானால் மாறுபட்ட கருத்து இருக்கலாம்.. ஆனால் நிச்சயமாக எதிர்க்க வேண்டும் என்கிற திட்டம் இல்லை.

    காங்கிரசின் இந்த இக்கட்டை மிகச்சரியாக புரிந்து வைத்திருக்கும் மோடியோ அடித்து விளையாடுகிறார். குஜராத்தி கவுரவமே காங்கிரசின்
    “மரண வியாபாரி” பேச்சால் அழிந்து போய் விட்டதாக ஆரம்பித்த மோடி, தொடர்ந்து சோராபுத்தீன் படுகொலையை பகிரங்கமாக ஒரு
    தேர்தல் பிரச்சார மேடையில் வைத்து நியாயப்படுத்தும் அளவுக்கும் போய் விட்டார். இந்த கொலை வழக்கு உச்சா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அங்கே குஜராத் மாநில அரசே, “இது ஒரு திட்டமிட்ட படுகொலை” என்று ஒப்புக்கொண்டு எதிர்தரப்பாக போலீசு அதிகாரி
    வன்சாராவை நிறுத்தி வாதாடி வருகிறது. இப்போது மோடியின் இந்தப் பேச்சால், உண்மையில் வன்சாராவும் மோடியும் எதிர் எதிர் தரப்பில்
    அல்ல – ஒரே பக்கத்தில் தான் நிற்கிறார்கள் என்று தெள்ளத்தெளிவாக புரிந்து விட்டது.

    இந்த இடத்தில் நாம் ஒன்றை கவனிக்க வேண்டும் – ராமனை கேள்வி கேட்ட கருணாநிதி விசயத்தில் பொச்சில் நெருப்புப் பிடித்தமாதிரி துள்ளிக்குதித்த உச்சா நீதிமன்றம், மோடி விவகாரத்திலோ கமுக்கமாக இருக்கிறது. இத்தனைக்கும் சோராபுத்தீனைக் கொன்றவனை திட்டம் தீட்டிக் கொடுத்தவன் விசாரிக்கிறான் என்பது வெட்ட வெளிச்சமாகி விட்ட பின்னும் மோடியை எதிர்த்து வாயைத் திறக்காமல் கப்-சிப் என்று பொத்திக் கொண்டு நிற்கிறது உச்சாநிதீ மன்றம். தேர்தல் கமிசனர் கோபாலஸ்வாமியோ ( நெற்றியில் நாமம்!) மோடியின் பேச்சுக்களை தொலைக் காட்சியில் தான் பார்த்தேன் – இன்னும் எழுத்துப்பூர்வமான புகார் எதுவும் வரவில்லை என்கிறார். பார்ப்பனிய சார்பு கொண்ட அரசு இயந்திரங்கள் இருக்கும் வரை மோடி போன்ற கள்ளனே காப்பானாகவும் வலம் வர எந்தத் தடையும் இல்லை!

    தேர்தலில் வெற்றி பெற எந்த அளவுக்கும் இறங்கிப் போக தயாராக இருக்கும் காங்கிரசு, பா.ஜ.காவில் சீட்டு மறுக்கப்பட்டவர்களைத் தேடிப்
    பிடித்து தங்கள் கட்சி சார்பாக போட்டியிடுமாறு சீட்டு வழங்கியிருக்கிறார்கள். இதில் கொள்கையோ லட்சியமோ ஒரு மசிரும் இல்லை; ஒரே நோக்கம் பதவி – அதற்கு இந்துத்துவம் ஒரு பாதையானால் அதிலும் பயனிக்க காங்கிரசு தயாராகவே இருக்கிறது. எனவே காங்கிரசின் வெற்றி என்பது எந்தவிதத்திலும் இந்துத்துவத்தின் தோல்வியாகிவிடாது. காங்கிரசுக்கு இந்துத்துவத்தை எப்படி அமுல்படுத்துவது என்பதில் வேண்டுமானால் கருத்து வேறுபாடு இருக்கலாம் ஆனால் நிச்சயமாக அதனோடு எந்த முரண்பாடும் கிடையாது.

    மொத்தத்தில் காங்கிரசோ பா.ஜ.கவோ யார் வென்றாலும் அந்த வெற்றி உலகவங்கியின் வெற்றியாகவும், இந்துத்துவத்தின் வெற்றியாகவுமே இருக்கும். அங்கே மனித பண்பும், மனித நேயமும், மதச்சார்பற்ற அரசியலும் சர்வ நிச்சயமாக தோற்கடிக்கப்படப் போகிறது. கண்ணுக்கெட்டிய தொலைவில் குஜராத்தின் விடியல் தென்படவில்லை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *