Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » திருட்டு குற்றத்துக்கு தண்டனை வழங்கும் வரையறை.

திருட்டு குற்றத்துக்கு தண்டனை வழங்கும் வரையறை.

1097. கால் தீனாரை (பொற்காசு) திருடியவரின் கை வெட்டப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி 6790 ஆயிஷா (ரலி).

1098. நபி (ஸல்) அவர்கள் மூன்று திர்ஹங்கள் (வெள்ளிக் காசுகள்) விலை மதிப்புள்ள தோல் கேடயத்திற்காக (அதைத் திருடியவரின் கரத்தை)த் துண்டித்தார்கள்.
புஹாரி : 6797 இப்னு உமர் (ரலி).

1099. அல்லாஹ்வின் சாபம் திருடன் மீது ஏற்படட்டும்! அவன் (விலை மதிப்புள்ள) தலைக்கவசத்தைத் திருடுகிறான்; அதனால் அவனுடைய கை வெட்டப்படுகிறது. (விலை மலிவான) கயிற்றையும் அவன் திருடுகிறான்; அதனாலும் அவனுடைய கை துண்டிக்கப்படுகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி :6783 அபூஹுரைரா (ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *