Featured Posts
Home » மதங்கள் ஆய்வு » விமர்சனம் விளக்கம் » ஷேக் முஹம்மத் அல்கஸ்ஸாலி விமர்சிக்கப்பட வேண்டிவர்களில் ஒருவர் (பாகம்-1)

ஷேக் முஹம்மத் அல்கஸ்ஸாலி விமர்சிக்கப்பட வேண்டிவர்களில் ஒருவர் (பாகம்-1)

– அபூ நதா
முஹம்மத் அல்கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் எகிப்து மண் பெற்றெடுத்த சிறந்த சிந்தனையாளர். முஸ்லிம் உலகில் இஸ்லாத்தின் எதிரிகளால் மேற்கொள்ளப்படும் சதிகளை பேனாமுனையில் எதிர்கொண்டவர், இஸ்லாமிய உம்மத்தின் அங்கமாக அனைவரையும் மதிக்க வேண்டும் என்ற கருத்தைக் கொண்ட அவர் வழிகெட்ட ஷீஆக்களையும் இணைத்துப்பார்க்க வேண்டும் என கருத்துக் கூறியவர். ஆனால் ஹதீஸ் துறையில் சாதாரண அறிவு அற்றவர்.

அதனால்தான் அவர் தனது السنة البوية بين أهل الحديث وأهل الفقه என்ற நூலில் பெரும் தவறிழைத்திருக்கின்றார். ஹதீஸ்கலை அறிஞர்களையும் விஞ்சிய சிந்தனையாளராக தன்னை அறிமுகப்படுத்திய அவர், தரம் கெட்ட வார்த்தைகளால் தாறுமாறாக விமர்சிக்கின்றார்.

இவரது சிந்தனைகளை முழுமையாக உட்கொண்டவர்கள் பலர் நம்நாட்டில் காணப்படுகின்றார்கள். இவர்களும் இவரை கண்மூடித்தனமாகப் பின்பற்றி ஸலஃபி சிந்தனையாளர்கள் மீது கொட்டிவிடுவது மாத்திரமின்றி, தமது சரக்குகளைப் போல இறக்குமதி செய்கின்றனர்.

யாரைப் பாவம் என்பது? ஷேக் முஹம்மது கஸ்ஸாலி அவர்களையா? அல்லது செம்மறி ஆடுகள் போல அவரது சிந்தனையை உள்வாங்கிக் கொண்ட ஷேக்குகளையா? என்று தெரியவில்லை. இனி ஷேக் முஹம்மத் அல்கஸ்ஸாலி அவர்களின் வீராய்ப்பு வசனங்கள் பக்கமும், அவரது அநவீரக சிந்தனைகள் பக்கம்; கவனத்தை திருப்புவோம்.

மாற்றுக் கருத்துள்ள மக்களை விமர்சிக்கும் போது பண்பாடுகள் பேணப்பபட வேண்டும் என்று தனது நூல்களில் கருத்துக் கூறும் ஷேக் அவர்கள் விமர்சனம் செய்த வார்த்தைகளைக் கொஞ்சம் கவனியுங்கள்.

(( بصرهم بالقرآن كليل )) குர்ஆனைப் பற்றிய அவர்களது பார்வை குறைபாடானது.
(( فتيان سوء)) தீய இளைஞர்கள்- கெட்ட தலைமுறை-
(( إنهم محجوبون عن الانتباه لألفاظ القرآن)) குர்ஆனிய சொற்கள் பற்றி உணர்வதற்கு கண்கெட்டுப்போனவர்கள்
(( أصحاب الفكر السطحي)) மேலாட்டமான சிந்;தனையாளர்கள். (புல்லுருவிகள்)
(( الشاغبون)) குழப்பவாதிகள்
((القاصرون)) குறை செய்தவர்கள்
(( الجهلة)) அறிவீனர்கள்

இவைகள் யாருக்கு சூட்டப்பட்ட பெயர் தெரியுமா? நவீன காலத்தில் குர்ஆன், சுன்னாவைப் பின்பற்ற வேண்டும் என்று பிரச்சாரம் செய்யும் மக்களுக்கு? இவர்களுடன் இதனை அவர் நிறுத்திக் கொண்டாரா? என்றால் இல்லை. பெரும் பெரும் இமாம்களை நோக்கியும் தனது சொல் அம்புகளை ஏவிக்காயப்படுத்தி இருக்கின்றார் அதுதுதான் புதினம்.

மூஸா நபி (அலை) அவர்கள் மலக்குல் மவ்த்தின் கன்னத்தில் அடித்தது பற்றிய செய்தி புகாரி, முஸ்லிமில் இடம் பெறுகின்றது. அதனை முஃதஸிலாக்கள்தாம் வரலாற்றில் மறுத்தவர்கள். அவ்வப்போது இமாம்கள் அக்கருத்தினை மறுத்துரைத்தார்கள். அந்த மறுப்புரை பற்றிய தனது பார்வையை வெளியிடும் ஷேக் அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகின்றார்கள்.

அது பற்றி நவீன கால ஹதீஸ் ஆய்வாளர்களில் ஒருவரான ஷேக் அபூஇஸ்ஹாக் அல் ஹுவைனி (எகிப்து) அவர்கள் கருத்துத் தெரவிக்கையில் இவ்வாறு குறிப்பிடுகின்றார்கள்.

உஸ்தாத் அவர்கள் இந்தப் போக்கை ஆரம்பகால சிறந்த இமாம்களுடனும்தான் கடைப்பிடித்துள்ளார். இமாம்களான புகாரி, முஸ்லிம் அறிவிக்கின்ற மூஸா நபி (அலை) மலக்குல் மவ்த் பற்றிய விவகாரத்தைப் பற்றிப் பேசுகின்ற போது: معلول அது குறை காணப்பட்ட செய்தி எனக்குறிப்பிட்டு தனது வாதத்தை முன்வைக்கின்ற போது: ஸாலிஹீன்கள் மரணத்தை வெறுப்பதில்லை. குறிப்பாக நபிமார்கள் எனக் குறிப்பிடும் அவர், இமாம்களான இப்னுகுஸைமா, மாஸிரி, அல்காளி இயாள், நவவி (ரஹ்) ஆகியோரின் பதில் பற்றி எடுத்தெழுதிய பின்னர்,

இந்த மறுப்புக்கள் யாவும் இடை குறைந்தவையாகும். அது கருத்தில் கொள்ள முடியாத அற்பமான மறுதலிப்பாகும். எனக் கூறிவிட்டு தனது மெத்தப்படித்த தனத்தை வெளியிடும் போது: இதன் குறைபாடு அதன் متن எனப்படும் மூலச் செய்தியில் இருக்கின்றது. அதை நன்கு கற்றவர்களே கண்டறிந்து கொள்வார்கள், ஆனால் அது சாதாரண சிந்தனையாளர்கள் (புல்லுருவிகளான சுன்னாவாதிகள் மீது) மறைந்தே இருக்கும் என்கிறார்.

இவர் தன்னை ஹதீஸ்கலை அறிஞர்களை விட சிறந்த அறிஞராக காட்டியதன் விளைவுதான் நம்பகமான இமாம்கள் ஏற்றுக் கொண்ட ஸஹீஹான இந்தச் செய்தியை மறுத்துரைக்க வைத்தது என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சமாகும்.

தொடர்ந்தும் இதற்கு மறுப்பை வெளியிடும் இஸ்ஹாக் அல்ஹுவைனி அவர்கள் அந்த محققون என உஸ்தாத் அவர்கள் குறிப்பிடுவது யாரை? 300 ற்கும் மேற்பட்ட புகாரி, முஸ்லிமின் விரிவுரையாளர்களையா? அவர்கள் யாரும் ஹதீஸின் متن மூலப்பகுதியில் குறைபாடுகள் பற்றி சுட்டிக்காட்டவில்லையே என்கிறார்.

அப்படியானால் உஸ்தாத் கஸ்ஸாலி அவர்கள்தாம் நவீன உலகில் இந்த சர்ச்சையைக் கிளப்பியவர்கள் போல தெரிகின்றது. தேவையற்ற பிரச்சினையயை தோற்றுவிப்பவர்கள் பட்டியலில் இவரும் ஒருவரோ என எண்ணத்தோன்றுகின்றது. அவர்களின் கூற்றை ஆய்வின்றி ஏற்றுக் கொள்ளும் இலங்கை வாழ் நம் சகோதரர்கள் இது பற்றி சிந்திப்பார்கள?

(இன்ஷா அல்லாஹ் தொடரும்).

5 comments

  1. ஹதீஸ் என்றால் என்ன? ஹதீஸ் கலை என்றால் என்ன?…is that something like archeology the art of history?…what is the role of “art” with “hadhees”?..I could not understand.

  2. هذا الموضوع أحسن

  3. very good! Brother! the self appointed leaders of tamilnadu created a confusion among people of sunnah! “reject the authenticated hadhees when it is against to quran” is not a new concept. by your article we can clearly know such fithna created by whom and how it was created. jazakallahu khairan shiek! May Allah
    pour His Rahamah on You!

  4. முஹம்மத அல் கஸ்ஸாலியால் எழுதப்பட்ட சர்ச்சைக்குரிய நூலை தமிழில் மொழிபெயர்த்தவர்கள் இது போன்ற நூலகள் இப்போது ரொம்ப முக்கியம்தானா என்பதை நன்றாக சிந்திக்கவேண்டும்!.

  5. இந்த நூலில் சஹாபாக்களை விமர்சிக்கின்ற போக்கு மிக சாதாரணமாக காணப்படுகிறது!.
    ஹப்பாப்(ரழி) நோய்வாய்ப்பட்டிருந்த போது உலகப் பொருட்களை அபசகுணமாகவே பார்த்தார். இதன் காரணமாகவே அவர் அப்படிச் சொன்னார் என்றே அவரது மேற்குறிப்பிட்ட கூற்றை நோக்கவேண்டியுள்ளது. (பக்கம்: 128).. இங்கு ஹப்பாப் (ரலி) என்ற சஹாபியே நபி (சல்) அவர்கள் மீது பொய் சொன்னார்!.. என்று முட்டாள்தனமாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
    சீயாக்களின் சிந்தனைக்கு இது போன்ற நூல்களும்,கருத்துக்களும் பலம் சேர்க்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *